இந்த ஆசிரியரின் இன்னொரு புத்தகத்தை முன்பு வாசித்தபோது, எடுத்த கையோடு முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது. ஆனாலும், இந்தப் புத்தகம் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் கதை என்பதால், ஒரு பத்து நிமிஷ time-filling-காக வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்ம்ம்ம்பி எடுத்தேன்... ஆனால்... ஒரு ஆங்கில ஆக்ஷன் படம் பார்க்கும் விறுவிறுப்புடன் விழிவிரித்து வாசித்து முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது.
இந்த வீர வரலாற்றை விவரிக்கும் புத்தகம்தான், நாவலர் ஏ.எம்.யூஸுஃப் அவர்கள் எழுதிய “இப்பி ஃபக்கீர்”!! இவர்களின் வீரத்திற்குச் சான்றாக ஒரே ஒரு தகவலைப் பகிர்கிறேன்... ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குகளைக் கொள்ளையடித்துச் செல்லும் இவர்கள், “உங்கள் துப்பாக்கிகள் எங்கள் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பயிற்சி அளிக்கத்தான் பிரயோஜனம்” என்று எள்ளலாகச் சொல்லிச் செல்வார்கள்!! அது உண்மையே என்று அவர்களின் கையில் இருக்கும் அதிநவீன ஆயுதங்கள் சாட்சியளிக்கும்.
கீழே வைத்தது புத்தகத்தை மட்டும்தான். புத்தகம் தந்த பிரமிப்புகளும், நினைவுகளும், உணர்வுகளும் விட்டு விலகவே இல்லை. இதன் தொடர்ச்சியாக இன்னொரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆம்!!
”அகண்ட பாரதமாக” இருந்த இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்களால், கடைசி வரை தன் ஆளுகைக்குக் கொண்டு வரவே முடியாதது, (இன்றைய பாகிஸ்தானின்) வடமேற்கு எல்லை மாகாணமான வஜீரிஸ்தானை!! இந்தத் தோல்வியை அன்றைய இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே ஆட்சியாளர்களால் அவமானத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர்!!
”அகண்ட பாரதமாக” இருந்த இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்களால், கடைசி வரை தன் ஆளுகைக்குக் கொண்டு வரவே முடியாதது, (இன்றைய பாகிஸ்தானின்) வடமேற்கு எல்லை மாகாணமான வஜீரிஸ்தானை!! இந்தத் தோல்வியை அன்றைய இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே ஆட்சியாளர்களால் அவமானத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர்!!
இந்த வீர வரலாற்றை விவரிக்கும் புத்தகம்தான், நாவலர் ஏ.எம்.யூஸுஃப் அவர்கள் எழுதிய “இப்பி ஃபக்கீர்”!! இவர்களின் வீரத்திற்குச் சான்றாக ஒரே ஒரு தகவலைப் பகிர்கிறேன்... ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குகளைக் கொள்ளையடித்துச் செல்லும் இவர்கள், “உங்கள் துப்பாக்கிகள் எங்கள் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பயிற்சி அளிக்கத்தான் பிரயோஜனம்” என்று எள்ளலாகச் சொல்லிச் செல்வார்கள்!! அது உண்மையே என்று அவர்களின் கையில் இருக்கும் அதிநவீன ஆயுதங்கள் சாட்சியளிக்கும்.
தங்களால் கட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை என்று உணர்ந்துமே, வீராப்பிற்காக 18 முறை அப்பிராந்தியத்தினர் மீது தாக்குதல் நடத்தியும், ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இத்தாக்குதல்களில் ஒன்றை முன்நின்று நடத்தியவர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமர் ஆன “வின்ஸ்டன் சர்ச்சில்” ஆவார்.
கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை பல நாடுகளில் தங்கள் ஆட்சியை நடத்தி, “சூரியன் அஸ்தமிக்காத ஆட்சி” என்று பெருமை பாராட்டிக் கொண்டவர்களால் இந்த மாகாணத்தில் மட்டும், இந்தியாவிற்கு விடுதலையளித்த 1947 வரை சூரியோதயத்தைக் காணவே முடியவில்லை.இதைத் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை வாசித்து முடித்ததும், அதே பகுதியைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ”கான் அப்துல் கஃபார் கான்” - அவரது காந்தீயக் கொள்கைகளின் காரணமாக “எல்லை காந்தி” என்று அழைக்கப்பட்டவர் - இவரின் வரலாற்றை வாசிக்கும் ஆவல் மிகைத்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இரு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன இவரைப் பற்றி. ஒன்று ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு - இதன் பதிப்பகம் குறித்த தகவல்கள் இல்லாமையால் கிட்டவில்லை, இன்னொன்று தமிழில் எழுதப்பட்ட சிறு வரலாற்று ஏடு. இப்புத்தகம் கைக்கு வரக் காத்திருக்கிறேன்.
இப்பி ஃபக்கீரின் வரலாறு ஏன் கஃபார் கானை நினைவுபடுத்தியது எனக்கு? காரணம், நோக்கம் ஒன்று என்றாலும், இருவேறு பாதைகளில் பயணித்த இருவரின் இரு வேறு குணங்கள்!! இப்பி ஃபக்கீர் என்றழைக்கப்பட்ட குலாம் மிர்ஸா கான், வீரதீரச் செயல்களால் கவர்கிறார் என்றால், எல்லை காந்தி அஹிம்சையில் மிகுந்தவர். இந்தியாவைப் பிரிக்கவே கூடாது என்று தீவிரமாக எதிர்த்தவர். தங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் அலல்து தனிநாடாகவேனும் அறிவிக்க வேண்டுமெனக் கோரியவர்; பிரிக்கப்பட்ட பாகிஸ்தானின் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்; அதன் காரணமாக சிறையில் 12 ஆண்டுகளுக்கு மேல் அடைக்கப்பட்டவர்.
இப்பி ஃபக்கிர், முதலில் ஜின்னாவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டாலும், பின்னர் அதுவும் பிரிட்டிஷின் பிரதிபலிப்பாய் இருந்ததால், எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினர் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஒன்றாக இணைந்து போராடியது போல தகவல்கள் கிடைக்கவில்லை. இருவரும் சந்திருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை.

இவையெல்லாம் வலையில் வாசித்து அறிந்தவையே. பள்ளியில் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இருவரைப் பற்றியுமே படித்ததில்லை!! என் தலைமுறையாவது பரவாயில்லை.... ஆனால், இனிவரும் தலைமுறையோ பாவம்... மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்களையெல்லாம் வீரர்கள் என்று படிக்க வேண்டிய பரிதாபம்!!
For Further reading:
https://www.facebook.com/JanPalwasha/posts/197213384034930:0
http://www.khyber.org/publications/021-025/faqiripi.shtml
http://pakteahouse.net/2016/01/26/bacha-khan-faqir-of-ipi-and-the-afghanistan-angle/
reg. Ghaffar Khan:
https://www.youtube.com/watch?v=mcY1QHlRHlo
http://www.thefrontiergandhi.com/excerpts.html
The Frontier Gandhi: Badshah Khan, A Torch for Peace
https://www.youtube.com/watch?v=0fSnlTFsPf8

|
Tweet | |||
2 comments:
என்ன செய்ய!
பொய்யாக புனையப்பட்ட வரலாற்றை படித்து பரிட்சை எழுதுவது தான்
இனி எங்கள் தலைமுறையினரின் விதி போலிருக்கு!!
Nice write up akka. I too like reading historical fiction, ippa time thaan kaanom. To be honest, book eduthu vecha sahana'va deal'la vittuduvenu bayandhutte not reading big volumes these days
Post a Comment