இந்தியா போகும்போது ரொம்பப் பயந்த (எல்லாரும் பயங்காட்டுன) விஷயம் மின்சாரத் தடை. கஷ்டத்தை எதிர்பார்த்தே போனதால், பெருங்கஷ்டமாத் தெரியலை. சமையலறையில் மட்டும் - கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- வியர்க்கத்தான் செய்கிறது. வீட்டில் இன்வர்ட்டர் இல்லை என்பதால் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டோம். ஆனால், அதுவும் கடைசி நாட்களில் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிவந்ததால் உயிர் ஊசலாடும் நிலைமைக்குப் போய்விட்டது.
![]() |
only4funny.blogspot.com |

இந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்!!
பாண்டிச்சேரி போயிருந்தேன். கரண்ட் கட் இல்லை; வியர்வை இல்லை... ஹூம், கொடுத்துவச்ச மக்கள்ஸ்.


அதேபோல பாரபட்சமில்லாமல் எல்லா மக்களிடமும் இருக்கும் கண்டிப்பாக இருக்கும் இன்னொரு பொருள் - டார்ச்!! வெளியே செல்லும் எல்லாரும் ஒரு சிறிய பென் டார்ச் கொண்டுசெல்லத் தவறுவதில்லை. ”எவரெடி” காலம் திரும்புகிறது!!

வெளிநாடுகளில் “ஒலி-ஒளி” காட்சிகளைப் பார்த்தபின், இது ரொம்ப சிம்பிளாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் பார்க்கலாம். காட்சிக்கேற்றபடி நகரும் ஒளி அமைப்புகள் வித்தியாசம். ஒலியோடு, ஒளியாலான உருவ அமைப்புகளும் இருந்திருந்தால் (animation போல) இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.
ஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால் |
இக்காட்சி நடப்பது நாயக்கர் அரண்மனையின் தர்பார் ஹாலில். அருகிலேயே உள்ள அரண்மனையையும் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், மாலை ஐந்து மணி வரை மட்டுமே அதற்கு அனுமதி. ஒலி-ஒளி காட்சிகள் 7 மணிக்குத் துவங்கும்.
மேலதிகத் தகவலுக்கு: http://www.maduraidirectory.com/palace/sl.php

என்னவரிடம் இதைச் சொன்னபோது, “இதுக்கே இப்படியா? அபுதாபியின் கோடைக்குமுன் இது ஒன்றுமேயில்லை. எப்படியோ எங்க (ஆண்களின்) கஷ்டம் புரிஞ்சாச் சரி” என்றார். அபுதாபி சம்மரில் காரினுள் இதுபோல அனலாக இருக்கும். ஸ்டீரிங்கைக் கூடத் தொடமுடியாது. ஏஸியை ஆன் செய்தாலும், கார் குளிர வெகுநேரம் எடுக்கும்.

மேலே படத்தில் இருப்பது அயினிச் சக்கை. இது பலாப்பழ வகையைச் சேர்ந்தது. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு மினி பழாப்பழம் போலவே, ஆனால் ஆப்பிள் சைஸில் இருக்கும். பலாப்பழத்தின் “மைக்ரோ-மினி” வடிவம் என்றுகூடச் சொல்லலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.
ஜம்பக்கா(ய்), பார்க்க அழகாய் இருக்கிறது. முழுதாக அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். ஆனால், இனிப்பே இல்லாமல், துவர்ப்பாய் இருக்கும் என்பதால் தொடர்ந்து சாப்பிட ஆசை வராது. Looks deceive!! :-D
ஆங்கிலத்தில் Wax apple என்று பெயர். சில மனிதர்களைப் போல, தோற்றத்தில் ஜம்பமாக இருந்து, உள்ளே சுவையில்லாமல் இருப்பதால்தான் இதுக்கு “ஜம்பக்காய்” என்று பேர் வந்ததோ?

அதே கடையில், ஒரு நடுத்தரக் குடும்பம், நகைச்சீட்டில் சேர்ந்திருந்த பணத்திற்கு நகை வாங்க வந்திருந்தார்கள். நகைச்சீட்டில் உள்ள பணத்திற்கு ஏற்றபடி, ஒரு சிறிய வெள்ளி டம்ளர் தேர்ந்தெடுத்து பில் போடச் சொன்னார்கள். (ரூ. 2000+) உடன்வந்திருந்த மகளின் கல்யாணத்திற்காயிருக்கும்போல. அந்த மகளோ, “ரெண்டா வாங்கினாத்தான் என்னவாம்?” என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்!! அதுவல்ல விஷயம்.
நகைச்சீட்டு சேரும்போது செய்கூலி, சேதாரம் கிடையாது என்று சொன்னார்களாம். இப்போது எவ்வளவு நகை வாங்கினாலும் - தங்கமோ, வெள்ளியோ - எவ்வளவு வாங்கினாலும், அதில் 0.850 மில்லிகிராமுக்கு மட்டுமே செய்கூலி கிடையாது; மீதி நகைக்கு செய்கூலி உண்டு என்றார்கள்!! ஒரு கிராம் கூட இல்லை, வெறும் 0.850 மில்லிகிராம்!! அந்தக் குடும்பத்தலைவர் வெறுத்துப்போய் ஒன்றும் வாங்காமலே கிளம்பிவிட்டார். ஏப்ரல், மே கல்யாண சீஸன் என்பதால், கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருந்தது.

ஒரு ரயில்பயணத்தில், நடு இரவில் “குடிமகன்” ஒருவன் செய்த அலம்பலில் பயணிகள் எரிச்சலடைய, டி.டி.ஆர். அவரை அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து, ”இதுதான் உங்க இடம். இங்கேதான் இருக்கணும். வேற எங்கயும் போகக்கூடாது. சரியா?” என்று மிகப் பவ்யமாகப் பேசினார்!! அரசு ஊழியர், அதுவும் மத்திய அரசு ஊழியர் இவ்வளவு பணிவாகப் பேசியது ஆச்சர்யம்தான். ஆனாலும் ஒரு குடிகாரனிடம்போய் இந்தப் பணிவு தேவையா என்றும் கோபம் வந்தது. ஒருவேளை கோவப்பட்டிருந்தால் அவன் இன்னும் அதிகம் கலாட்டா செய்திருக்கலாம் என்று பொறுமையாப் பேசினாரோ என்னவோ.
அடுத்த ஸ்டேஷனில் வேறொருவர் வந்து அந்த குடிமகனின் சீட்டைத் தன் இடம் என்று சொல்ல, டிடிஆர் செக் செய்து பார்த்தால், குடிமகன் இருப்பது சரியான சீட் எண்தான்; ஆனால் ‘கம்பார்ட்மெண்ட்’ நம்பர்தான் வேறே!!

தமிழ்ப் பாடத்தில், கொடுக்கப்படும் தலைப்புக்குக் கவிதைகூட எழுதணுமாம். ரொம்பக் கடினமா இருக்குன்னு சொன்னாள். ஒரு பதிவரா இருந்துட்டு கவிதை எழுதத் தெரியலைன்னு சொல்றதைக் கேட்டுட்டுச் சும்மா இருக்க முடியுமா? கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”!!

துபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!” என்று சொன்னானாம். ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!!
|
Tweet | |||