நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இங்கு அமீரகத்தில் வெயில்னா வெயில், இதுவரை ”வரலாறு காணாத” வெயில். வீட்டில், ஆஃபிஸில் ஏஸியில் இருப்பவர்களுக்குப் பரவாயில்லை. வெளியே வேலை செய்பவர்களுக்குத்தான் சிரமம்.
இவ்வளவு வெயிலில் நோன்பு ஏன் என்ற கேள்வி வரும். இஸ்லாமிய வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது என்பதால், காலநிலை ஒவ்வொரு மாதத்திற்கும் வருடாவருடம் வேறுபடும். அதாவது சூரியனை அடிப்படையாக கொண்ட ஆங்கில வருடத்தில் டிஸம்பர் என்றால் எல்லா வருடமும் (இந்தியா, வளைகுடா நாடுகளில்) குளிர்தான். ஆனால், சந்திர வருடத்தில் அப்படியல்ல. சுழற்சி முறையில் எல்லா மாதங்களுமே வெயில், பனி, குளிர் என்று எல்லா காலநிலைகளிலும் வரும். உதாரணமாக 1994-ல் ரமலான் மாதம் ஃபிப்ரவரியில் வந்தது. அடுத்தடுத்த வருடங்களில், அது அப்படியே ஜனவரி, டிஸம்பர் என்று பின்னோக்கி முன்னேறி இந்த வருடம் ஜூலையில். இனி 2027-ல் மறுபடியும் ஃபிப்ரவரிக்கு வரும். அதாவது சராசரியாக 33 வருடங்கள் தொடர்ந்து நோன்பு வைக்கும் ஒருவர், கடுங்குளிரிலும் நோன்பு வைத்திருப்பார்; சுடும் வெயிலிலும் நோற்றிருப்பார்!!
17-ஜூலை-2012 தேதியிட்ட அவள் விகடனில் நெட்-டாக்ஸ் பகுதியில் ”வலைப்பூவரசி” யாக என் வலைப்பூ வந்தது இன்ப அதிர்ச்சி எனக்கு!! நண்பர்கள் பலரும் மெயிலிலும், பதிவிலும் வாழ்த்தியிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. எனக்கும் இதைச் சாத்தியப்படுத்தித் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்!!
நடிகர் விவேக் ஒரு படத்தில் கையில், ஊதிய பலூன்களை உடம்பில் அங்கங்கு மறைத்துவைத்துக் கொண்டு “muscles” என்று ஊரை ஏமாற்றுவார். அதுபோல, “இண்ஸ்டண்ட் மஸில்ஸ்” கிடைக்க ஒரு இலகு வழி இருக்கிறதாம். Macrolane என்ற ஒருவகை ஜெல்லை தேவையான இடங்களில் இஞ்ஜெக்ஷன் போட்டால் போதுமாம், ஒரு வருஷத்துக்கு 6-பேக், 8-பேக் வச்சு போஸ் கொடுக்கலாம். விலையும் ரொம்ப சீப்தான், ஒரு கோர்ஸ் ஒன்றரை லட்சத்திலிருந்து ஆரம்பிக்குது. இது இன்னும் நம்மூருக்கு வரலையோ?
புகைப்படக் கலை தொடங்கிய காலத்திய இந்தியாவைப் புகைப்படங்களில் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். அவ்வப்போது எங்கேனும் ஓரிரண்டு புகைப்படங்கள் காணக்கிடைக்கும். இப்போது இதற்கென்றே ஒரு தளம் பார்த்தேன், “http://www.indianmemoryproject.com”. வாசகர்கள் தம்மிடம் இருக்கும் அரிய புகைப்படங்களை மட்டுமல்லாது, அதையொட்டிய சம்பவங்களையும் இதில் பகிர்வதுதான் இதன் சிறப்பு. அந்தக் கால அனுபவங்களை வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
இன்றைய க்ளோபல் வார்மிங் காலத்தில், ஆனானப்பட்ட அமெரிக்காவையும் வறட்சி விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் கோடைக்காலமான தற்போது, பெரும்பகுதி வரண்டுபோய், நல்ல நீர்வளம் உள்ள இடங்கள்கூட இப்போது தண்ணீரில்லாமல் காய்ந்து கிடக்கிறதாம். அமெரிக்காவின் அநேக அலுவலக வளாகம், வீடுகளிலும் உள்ள புல்வெளிகள் பாதிக்கப்பட்டு, தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. அதனால் “aesthetic view" பாதிக்கப்படுவதாலும், புல்வெளியைக் கவனிக்காமல் விட்டால் அரசு அபராதம் விதிக்கும் என்பதாலும், அதன்மீது ஒருவித ஆர்கானிக் பச்சைநிற பெயிண்ட் அடித்துப் ‘பச்சைபசேலென்று’ காட்டுகிறார்கள்.
பெண்களின்மீதான ஆஸிட் அட்டாக்குகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு இந்தியாவும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இன்னுமொரு சம்பவம். சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் குற்றவாளிகள் பெயில் பெற்று சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஜார்கண்டைச் சேர்ந்த சோனாலி முகர்ஜி இன்னும் தவித்துக் கொண்டிருப்பதால், தனக்கு அரசு உரிய சிகிச்சைக்கு ஆவண செய்யவேண்டும் அல்லது கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
1999 முதல் 2010 வரை 150 பேர் (ஆவணப்படுத்தாதது எத்தனையோ) வரை பாதிக்கப்பட்டுள்ள, இந்த ஆஸிட் வீச்சு சம்பவங்கள் தொடர ஒரு முக்கியக் காரணம், இக்குற்றம் சட்டரீதியாக இன்னும் ’படுகாயம் விளைவிப்பது’ (grevious hurt) என்ற சாதாரண நிலைக்குற்றமாகக் கருதப்படுவதே. சமூக ஆர்வலர்களின் முயற்சியால், இதை தண்டனைக்குரிய பெருங்குற்றமாக வகைப்படுத்த, தற்போது மந்திரிசபை நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், சந்தையில் கறிகாய் வாங்குவதைப்போல, ஐம்பது ரூபாய்க்கு ஆஸிடும் வாங்க முடிகின்ற நிலையும் மாறவேண்டும்.

-=-=-=-=-=-=-=-=-=-=-
17-ஜூலை-2012 தேதியிட்ட அவள் விகடனில் நெட்-டாக்ஸ் பகுதியில் ”வலைப்பூவரசி” யாக என் வலைப்பூ வந்தது இன்ப அதிர்ச்சி எனக்கு!! நண்பர்கள் பலரும் மெயிலிலும், பதிவிலும் வாழ்த்தியிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. எனக்கும் இதைச் சாத்தியப்படுத்தித் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்!!
-=-=-=-=-=-=-=-=-=-=-
![]() |
www.khaleejtimes.com |
-=-=-=-=-=-=-=-=-=-=-
புகைப்படக் கலை தொடங்கிய காலத்திய இந்தியாவைப் புகைப்படங்களில் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். அவ்வப்போது எங்கேனும் ஓரிரண்டு புகைப்படங்கள் காணக்கிடைக்கும். இப்போது இதற்கென்றே ஒரு தளம் பார்த்தேன், “http://www.indianmemoryproject.com”. வாசகர்கள் தம்மிடம் இருக்கும் அரிய புகைப்படங்களை மட்டுமல்லாது, அதையொட்டிய சம்பவங்களையும் இதில் பகிர்வதுதான் இதன் சிறப்பு. அந்தக் கால அனுபவங்களை வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
-=-=-=-=-=-=-=-=-=-=-
![]() |
சுவத்துக்குப் பெயிண்ட் அடிப்பாங்க; கல்லுக்குப் பெயிண்ட் அடிப்பாங்க; புல்லுக்குமா பெயிண்ட்??!! |
இன்றைய க்ளோபல் வார்மிங் காலத்தில், ஆனானப்பட்ட அமெரிக்காவையும் வறட்சி விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் கோடைக்காலமான தற்போது, பெரும்பகுதி வரண்டுபோய், நல்ல நீர்வளம் உள்ள இடங்கள்கூட இப்போது தண்ணீரில்லாமல் காய்ந்து கிடக்கிறதாம். அமெரிக்காவின் அநேக அலுவலக வளாகம், வீடுகளிலும் உள்ள புல்வெளிகள் பாதிக்கப்பட்டு, தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. அதனால் “aesthetic view" பாதிக்கப்படுவதாலும், புல்வெளியைக் கவனிக்காமல் விட்டால் அரசு அபராதம் விதிக்கும் என்பதாலும், அதன்மீது ஒருவித ஆர்கானிக் பச்சைநிற பெயிண்ட் அடித்துப் ‘பச்சைபசேலென்று’ காட்டுகிறார்கள்.
-=-=-=-=-=-=-=-=-=-=-
![]() |
Before |
![]() |
Now |

|
Tweet | |||