எனது ஃபேஸ்புக் பதிவுகள் இங்கும் இற்றைப்படுத்திக் கொள்வதற்காக....
வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும். ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க. தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
October 22, 2013

பதிவில் ஹிட்ஸ், ஓட்டுகள், கமெண்டுகள் குறைகிறதா?
ஃபேஸ்புக்கில் லைக்ஸ், ஷேர்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லையா?
பத்திரிகை சர்குலேஷன் ஏறணுமா...
டிவியின் டிஆர்பி ரேட்டிங் இறங்கிட்டே போகுதா....
உடனே நீங்கள் அலசிப் பிழிந்து காயப் போட வேண்டிய சப்ஜெக்டுகளில் முக்கியமானவை:
பர்தா, இஸ்லாமியத் தீவிரவாதம் (மட்டும்), சாதீ, சாமியார் மற்றும் பெண்ணியம்!!
வெற்றிக்கு நான் கேரண்டி!! —

இந்தப்
படத்தை இன்னும் பார்க்கவில்லையென்றாலும், இணையத்தில் இதன் விமர்சனங்களைப்
பார்த்தபோது எனக்கும் இதுவே தோன்றியது. தன் தகுதிக்கு மீறி செலவு
செய்தால்தான் நல்ல தந்தையா??
பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்கள் நல்ல பெற்றோர் என்பதற்கான வரைவிலக்கணத்தை இப்படித் தவறாகத்தான் கொடுக்கின்றன. வருத்தமானது.
//எந்த லாஜிக்கும் பார்க்க கூடாது வெறும் பொழுது போனா சரி என்பதெல்லாம் வெகுஜன மசாலா சினிமாக்களுக்கு ஒத்து வரலாம் ஆனால் இப்படம் அந்த வகையை சார்ந்தது இல்லை..//
உண்மை.

படித்ததில் ரசித்தது:
”ராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறி வருகிறது : ராம.கோபாலன் குற்றச்சாட்டு”
அப்புறம் என்ன?ஆப்பிள் செடியை நட்டு முளைக்குதான்னு பார்க்க வேண்டியதுதானே?
- Ayub
(விகடன் வாசகர் பின்னூட்டம்)
ஃப்ரிட்ஜில் மாவு ஸ்டாக் இருக்கும்போது, ஒரு அலாதியான மனநிம்மதி கிடைக்கும் பாருங்க! பீரோ நிறைய தங்கம் ஸ்டாக் இருந்தாக்கூட அந்த சந்தோஷம் கிடைக்காது. —

”அவங்க வாழ்க்கை; அவங்க இஷ்டம்” என்று சொல்லி, #தனிமனித_சுதந்திரத்தைச்
சுட்டிக்காட்டி நாசூக்காக விலகிக் கொள்வதன்மூலம், அவர்மீதான -
அதன்தொடர்ச்சியாக சமூகத்தின்மீதான - நம் பொறுப்பை உதறித்தள்ளி
விடுகிறேன்(றோம்). பிறகு சமூகம் கெட்டுவிட்டது என்றும் புலம்பிக்
கொள்கிறேன்(றோம்). — feeling guilty.
மாற்றுத்திறனாளிகள்
அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் பரிவோடு அட்ஜஸ்ட் பண்ணி
அன்போடு உதவி செய்து நடந்து கொள்வது போல... தயவு செய்து குடிகாரர்கள்
விஷயத்தில் பரிவோ அன்போ காட்டவே காட்டாதீர்கள்..!
ஒரு விபத்து ஏற்படுகிறது. அங்கே ஓட்டுனர் குடித்து இருந்தால், அவரை ஒன்றுமே சொல்வதில்லை நாம். ஆனால், அதுவே... குடிக்காதவர் கவனக்குறைவு காரணம் என்றால்... மொத்த கூட்டமும் சேர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுக்கிறோம்.
அதேபோல... ஒருவர் குடித்து விட்டு ரோட்டில் நடந்துவந்தால்... ஒதுக்கி ஓட்டுகிறோம். ஆனால்... அதுவே, குடிக்காத ஒருவர் ஏதோ சிந்தனையில் தவறான கவனத்தில் குறுக்கே வந்து விட்டால்... "சாவுகிராக்கி, என் வண்டியாடா கிடைச்சுது..." என்பதில் ஆரம்பித்து... கீழே இறங்கி அடி பின்னி டின் கட்டி விடுகிறோம்.
குடிக்காமல் இருந்தால்தான் தவறா..? குடித்திருந்தால் மன்னிப்பா..?
http://pinnoottavaathi.blogspot.com/2013/11/blog-post_10.html

இந்தியாவில் பெரும்பாலான ஆறுகளுக்கு #பெண்களின்_பெயர்கள்
சூட்டப்பட்டுள்ளன! ஆறுகளையும் களங்கப்படுத்தலாம், சூறையாடலாம்,
பராமரிக்கத் தேவையில்லை, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கலாம், சுரண்டலாம்,
சுயலாபத்திற்காகப் பிழிந்தெடுக்கலாம், வீணாக்கலாம், கொள்ளையடிக்கலாம்,
பழிக்கலாம், பழுதுபடுத்தலாம்..... #இதையும் கேட்பாரில்லை, தண்டிப்பாரில்லை!!
ஆனால், திடீரென ஒருநாள் அதே ஆறுகள் ஆழிகளாகப் பொங்கும்; கூடவே கொடுங்காற்று, ஆழிச்சுழல்கள், சுழற்காற்றுகளையும், புயல்கள், சூறாவளிகளையும் கொண்டுவரும்!!
இவையும் #பெண்களின்_பெயர்களைத்தான் தாங்கி வருகின்றன!! — feeling Stormy.

”ஏற்கெனவே கொலைபாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? #ஆண்டவன்_நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு'' என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.
--- ஜூனியர் விகடனில் ஆனந்த் சர்மா, கொல்லப்பட்ட சங்கர்ராமனின் மகன்.
#ஆண்டவன்_நீதிமனறம்!! — feeling hopeful.
--- ஜூனியர் விகடனில் ஆனந்த் சர்மா, கொல்லப்பட்ட சங்கர்ராமனின் மகன்.
#ஆண்டவன்_நீதிமனறம்!! — feeling hopeful.
சுமார்
25-28 வருடங்களுக்குமுன், என் அம்மாவை வெகுநாட்களுக்குப் பின் சந்திக்கும்
தோழி ஒருவர், ”உனக்கு நாலும் பொண்ணுதானா? ஆம்பளைப் புள்ளை
பொறக்கவேயில்லியா அல்லது பொறந்து இறந்துடுச்சா?”
ஒரு மாதம் முன்பு, புதிதாக அறிமுகமான ஒரு தோழி என்னிடம்: “ரெண்டுமே ஆம்பளப் பசங்கதானா? பொண்ணு பொறக்கவேயில்லியா? அல்லது பிறந்து இறந்துடுச்சா?”
என் எதிர்காலம் குறித்து பயம் வருகிறதே எனக்கு.... அவ்வ்வ்வ்....
காலச்சக்கரம் சுழல்கிறது!! — feeling wonderful.

இந்தியாவின் கலாசார உயரடுக்கின் பெண் வெறுப்பு (கவிதா பானோட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
//கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள். //
//....மேற்குலகில் ஆனது போல் பெண்களுக்கு இன்னொரு சிறையாகத் தான் முடியும். - அது இன்னும் ஆபத்தான சிறை, ஏனெனில் அங்கு பெண்கள் தாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.//
http://deepaneha.blogspot.ae/
"அல்லாஹ்வுடைய
மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க
வேண்டும். ... ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு
மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு
அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!
எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை." - பல்பீர் சிங் என்ற முஹம்மது
அமீர்!!
|
Tweet | |||