அம்மாவிடம் தொலைபேசிக்கொண்டிருந்தேன். நலம் விசாரித்துவிட்டு அப்படியே மாத்திரை சாப்பிட்டியான்னு விஜாரிச்சு அதுக்கு நிச்சயம் “மறந்துட்டேன்” அல்லது “இப்பத்தான் டிஃபன் சாப்பிட்டு முடிச்சேன். மாத்திரை சாப்பிடத்தான் நிக்கிறேன்” என்றுதான் பதில்வரும்னு தெரியும். எப்படின்னு கேக்குறீங்களா? தாயைப் போலப் பிள்ளை..... ஹி.. ஹி.. . அதைச் சாக்கு வச்சு அம்மாவுக்கு ரெண்டு டோஸ் விடுறதும் (சின்ன வயசுல நாம வாங்கின டோஸுக்கெல்லாம் பழிக்குப் பழி வாங்கக் கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணலாமா..), அதை அப்படியே அம்மா இந்தக் காதில வாங்கி அந்தக் காதுவழியா விட்டுர்றதும் வழக்கம். (பிள்ளையைப் போலத் தாய்... ஹி..ஹி..) அப்படியே கொஞ்சம் ஊர், உறவு கதைகளும் பேசிக்குவோம்.
ஒருநாள் அம்மாகிட்ட, “சாச்சிகிட்டயெல்லாம் பேசினியா? அவங்க ஃபோன் பண்ணாங்களா? நல்லாருக்காங்களா?”ன்னு கேட்டேன். என்னைமாதிரியே அம்மாவும் மூத்தப் பொண்ணு வீட்ல. அம்மாவுக்கும் என்னைமாதிரியே மூணு தங்கச்சிகள். (நோ... நோ.. இதுல தாயைப் போல.. வை இழுக்கக் கூடாது. ஏன்னா அம்மாவீட்ல தம்பிகள், தங்கைகள்னு ஒரு ஃபுட்பால் டீமே உண்டு!!) அதுக்கு அம்மா, “எங்கே? எல்லாரையும் எப்பவும் நான்தான் கூப்பிட்டு பேசணும். அப்பிடியே நான் ஃபோன் பண்ணாலும் பேசமுடியாத அளவு பிஸியா இருக்காளுங்க. அதான் இந்த வாரம் ஃபோன் பண்ணலை” என்றார். எனக்கும் ஒரு விஷயம் புரியலை. எல்லா சித்தியும் பேரன், பேத்தி எடுத்து பாட்டியாகிட்டாலும், இப்பத்தான் படுபயங்கர பிஸியா இருக்காங்க!! சரி, பேக் டு த பாயிண்ட். இந்த சான்ஸையும் விடக்கூடாது என்று, அவசரமாக, “இங்கேயும் அப்படித்தான். நாந்தான் என் தங்கச்சிகளுக்கும் ஃபோன் பண்ணிப் பேசணும். அவங்களும் எப்பவும் பிஸிதான்” என்று சந்தோஷமா போட்டுக்குடுத்தேன்!!
அம்மா உடனே அடிச்சாங்களே பாக்கணும் ஒரு பல்டி, அந்த்த்த்தர்பல்டி!! “அவங்கள்லாம் சின்னப் பொண்ணுங்க. கையில் எல்லாருக்கும் சின்னப் புள்ளைங்க இருக்குது. அதனால ஃபோன் பண்ண முடியலையாயிருக்கும். நீதானே பெரியவ. நீதான் பொறுப்பா எல்லாரையும் பாத்துக்கணும்”!! ஆத்தீ, நல்லவேளை, உங்க வாப்பா - அதான் என் தாத்தா - மாவட்ட லெவலோட அரசியலை நிறுத்திக்கிட்டாங்கன்னு மனசுல நினைச்சுகிட்டேன். மாநில லெவல்ல போயிருந்தா, என்னென்ன சர்க்கஸ்லாம் பண்ண வேண்டியிருக்கும்!! இதையெல்லாம் அம்மாகிட்ட வாய்விட்டு சொல்லமுடியாதபடி இன்னும் ஒரு மரியாதை (ச்சே.. ச்சே.. பயம்லாம் இல்லை) இருக்குது.
சரி, நாந்தான் மூத்தது. என்னவர் கடைக்குட்டி. என் பக்கம்தான், “மூத்தவள்”ங்கிற பொறுப்பால நானே ஃபோன் பண்ணனும். அவர் பக்கம், அந்தப் பொறுப்பு, பருப்பெல்லாம் இல்லியே, ஜாலின்னு இருந்தா, அதுக்கும் குட்டு வைக்கிறாங்க. பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து நாங்க சின்னவங்கதான் ஃபோன் பண்ணிப் பேசணுமாம். அதுவும் வெளிநாட்டுல இருக்கவங்கதான் உள்ளூருக்கு ஃபோன் பண்ணனுமாம். அவ்வ்வ்வ்வ்.... எல்லா ஊருக்குக்கும் ஒரே ரூல்ஸா வக்கப்பிடாதா? ஆக, ரெண்டு பக்கமும் நாங்கதான் எல்லாருக்கும் ஃபோன் பண்ணனும். நல்ல நியாயம்!!
எல்லா வீட்லயுமே மூத்தப் பிள்ளைன்னா, ஒழுக்கம், பொறுப்பு, படிப்பு எல்லாம் அதிகமா இருக்கணும்கிற எதிர்பார்ப்பினால பொதுவாகவே அதிகக் கண்டிப்பு இருக்கும். அதக்கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, கடைசில உள்ள பிள்ளைகளுக்குக் கிடைக்கிற செல்லம் இருக்கே...ரெண்டு வருஷம் முன்னே அம்மாவும், நாங்க நாலுபேருமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தோம். அம்மா தன் பிளேட்ல இருந்த ஈரல் துண்டை எடுத்து, கடைக்குட்டி மகளிடம் கொடுத்தாங்க. கடைக்குட்டின்றதாலே இன்னும் செல்லமான்னு நாங்கல்லாம் கிண்டல் (மட்டும்) பண்ணிகிட்டோம்.

எங்கம்மா, அவங்க மாமியாருக்கு ஒரே மருமக. ஹை, இதென்ன புதுசா இருக்குன்னு கேட்டா. மாமியாருக்கு ஒரே மகன்; ஸோ, ஒரே மருமக. லாஜிக் கரெக்டா இருக்கா? அம்மாப்பாக்கு ஒரே புள்ளைன்னா, ரொம்பப் பாசமாவும் இருப்பாங்க. அதுகூட ஓகே. ஒரே புள்ளைங்கிறதால, ரொம்ப நல்ல்ல்ல்ல ஸ்கூல்லச் சேத்து விடுவாங்க. அங்க படுத்துற பாடு காணாதுன்னு, பாட்டு க்ளாஸ், டிராயிங் க்ளாஸ், கராத்தே க்ளாஸ், யூஸிமாஸ் (UCMAS), ட்யூஷன் க்ளாஸ் அதுஇதுன்னு அவங்க எல்லாக் கனவையும் அந்த ஒர்ரே புள்ளை மேலே திணிப்பாங்க. புள்ளைங்களுக்கு ஏண்டா ஒத்தையா வந்து சேந்தோம்னு இருக்கும்.
இதுவே ஒரே மருமகன்னா எப்படி இருக்கும்? நாலஞ்சு இருந்தா, ஒருத்திகிட்ட கொஞ்சமா கோவப்படலாம். அடுத்தவ கிட்ட, முந்தினவளை வெறுப்பேத்தறதுக்காகவாவது, கொஞ்சம் அன்பா இரு(க்கிற மாதிரி காட்டி)க்கலாம். ஆனா, ஒரே புள்ளையா பிறக்கறத விட கொடுமையானது, சிலரிடம் ஒரே மருமகளா போய் மாட்டிக்கிறது. அந்த வகையில எங்கம்மாவும் கொஞ்சம் பட்டுட்டாங்களா, அதுனால, தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகளும் படக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தாங்க.
எங்க நாலுபேருக்கும் வரன் பாக்கும்போது, ஒரே மகனா இருந்தா, முடியவே முடியாதுன்னு மறுத்துடுவாங்க. “டில்லிக்கே ராஜான்னாலும், ஒரே பையன்னா டாடாதான்”னுட்டாங்க. என் தங்கச்சிகளுக்கு மாப்பிள்ளை பாக்கும்போதுதான் நான் வெறுத்திட்டேன். கஷ்டப்பட்டு அலசி, அரிச்சு, வடிகட்டி யாரைக் கொண்டு நிறுத்தினாலும், இந்தக் காரணத்தைச் சொல்லி முடியாதுன்னுடுவாங்க. ஊர் உலகத்துல எல்லாரும், ஒரே மகனா இருக்கணும், சின்னக் குடும்பமா இருக்கணும்னு நினைக்கும்போது எங்கம்மா மட்டும் ஒரே மகனா இருக்ககூடாதுன்னு அடம் பிடிச்சது முரணாகத் தெரிஞ்சுது. அவங்ககிட்டயே ”வொய் மம்மி, வொய்?”னு கேட்டப்பதான், சிங்காரவேலன்ல கமலுக்கு அவங்கம்மா ஃப்ளாஷ்பேக் சொன்னாமாதிரி தன் கதையைச் சொல்லி “இளைய மருமக வந்தாத்தான், மூத்த மருமக அருமை தெரியும்”னு அருமையா, ஒரு வாக்குன்னாலும் திருவாக்காச் சொன்னாங்க.
சொன்னபடியே, தன் நாலு மகள்களுக்கும் பெரிய குடும்பங்களில் கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் தங்கச்சிங்க மூணு பேரும் அவங்கவங்க குடும்பத்துல மூத்த மருமகளுங்களா ஆகிட்டாங்க. அவங்க அருமை பெருமையெல்லாம் அடுத்த மருமக வரும்போது, அம்மா கணிச்ச மாதிரியே, இன்னும் அதிகமா நல்லாப் புரிஞ்சுடுச்சு.
என் அருமை தெரிஞ்சுதான்னுதானே கேக்கறீங்க?.... எங்க வீட்லயும், எனக்கு முன்னே உள்ள மூணு மருமகள்களோட அருமையை, நாலாவதா தி க்ரேட் நான் மருமகளா வந்ததுக்கப்புறம் என் மாமியார் ரொம்ப ரொம்ப நல்லாவே தெரிஞ்சுகிட்டாங்க. ஆனா, என் அருமை..... ஹூம்... எங்காத்துக்கார் கடைக்குட்டி!!
|
|
Tweet | |||