பிடித்தவர்: ஜெயலலிதா (சோனியா என்று எழுதியிருந்தேன்; தமிழர் என்ற விதி காரணமாக மாற்றிவிட்டேன்.)
பிடிக்காதவர்: திருமாவளவன்
2. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி (இந்த வயசிலயும் உழைக்கிறாரே..)
பிடிக்காதவர்: ராமதாஸ் (மகனின் அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்ததால்)
3. தொழில் நிறுவனம்
பிடித்தது: ETA (UAE) (தமிழரால் நடத்தப்படும் நிறுவனம்)
பிடிக்காதது: டாஸ்மாக்
4. பதிவுலகம்
பிடித்தது: மாறுபட்ட பார்வைகள் (அட, இப்படியும் இருக்கலாமோ...)
பிடிக்காதது: கவிதை, பின்நவீனத்துவம் என்று (எனக்கு) புரியாத பாஷையில் எழுதப்பட்டவை
வியப்பது: சாராயம் குடிப்பதை ஏதோ குளிப்பது, தூங்குவது போன்ற அன்றாடச் செயலாகச் சிலர் செய்வதும், அதைச் சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் பிரஸ்தாபிப்பதும்
5. விஞ்ஞானி:
பிடித்தவர்: அப்துல் கலாம் (விஞ்ஞானிகள் என்றால் வெகுஜனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பிம்பத்தை உடைத்ததற்காக)
பிடிக்காதவர்: வாலி (பெண்கள் சமைஞ்சது எப்படி என்பது போன்ற உடற்கூறு இயல் ஆராய்ச்சி செய்பவர்)
6. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி
பிடிக்காதவர்: அஞ்சு ஜார்ஜ் (மலையாளியான அவர் எதற்கு தமிழக அரசிடமிருந்து 25 லட்சம் நிதியுதவி பெற்றார்? கொடுத்த நம்மளைச் சொல்லணும்)
7. பொதுஇடப் பண்பு
பிடித்தது: பார்த்ததும் சிரிக்கும் சின்னக் குழந்தைகள் (மட்டும்)
பிடிக்காதது: சிகரெட் புகையும், பிடிப்பவர்களும்
8. உணவு:
பிடித்தது: தண்ணீர் ஊற்றிய பழைய சாத்தில் தயிர் சேர்த்துச் சாப்பிடுவது. இங்கே செய்து பார்த்தா அந்த டேஸ்ட் வரவே மாட்டேங்குது :-(
பிடிக்காதது: ஹராம் என்று விலக்கப்பட்டவை மட்டும்; வேறெதையும் கழிப்பதில்லை, சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அறிந்தபிறகு.
போங்கப்பா, இதுக்குமேல லிஸ்ட் போட முடியல. சினிமாவைப் பொறுத்த வரை நான் பிடித்தவர், பிடிக்காதவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. பிடிக்கலையா, சேனல் மாத்தி போயிட்டேயிருப்பேன். அவ்வளவுதான்.
என்னை அழைத்தவர் அ.மு. செய்யது.
நான் (நம்பி) அழைப்பவர்கள்:
சுமஜ்லா (இவரது பிளாக்தான் நான் முதலில் பார்த்தது)
புதுகைத் தென்றல்
இப்படிக்கு நிஜாம்
ஒண்ணுமில்லை ச்சும்மா
(இவ்வளவுக்கப்புறம் கூப்பிட்டவங்க வருவாங்கங்கிறீங்க, பாப்போம்!!)
|
Tweet | |||
38 comments:
//உன் அட்ரஸ் சொல்லு.//
நான் அபுதாபில இருக்கேன்.
தமிழ் இனத்தின் துரோகி !!!!.உன் முழு அட்ரஸ் சொல்லுடா
ஹுசைனம்மா,
இது என்ன விளையாட்டு, சே,
சேகர், குறைந்த பட்ச கண்ணியமாவது கடைபிடியுங்கள். உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க பல வழிகள் இருக்கிறது.
தெரியும் இனி என்னையும் திட்டி எழுதுவீர்கள். ஆனால் பதிவுலகில் இது நல்லதில்லை.
@tsekar - ஏண்டா ஒரு பொம்பளைக்கிட்ட அட்ரஸ் கேக்குறியே..பொட்டப் பயலாடா நீ??
தமிழ்நாட்டுல வீராவேசமா பேசும் திருமா அங்க கொடியவன் ராஜபக்சேவிடம் பம்மிபம்மி நின்னதைதான் எல்லா சாட்டிலைட் டீ.வியும் படம்போட்டு உலகத்துக்கே காட்டுச்சே.
இந்தமாதிரி முதுகில் குத்தும் இன துரோகிகளைவிட நேரடியாக நம் நெஞ்சில் குத்திய சோனியாவே மேல்டா நாயே.
சேகர்,
உங்கள் எதிர்ப்பைக் கண்ணியமற்ற வார்த்தைகளில் தெரிவிப்பதால் உங்கள் பின்னுட்டங்களை நீக்குகிறேன்.
//நான் இனத்துக்காக ஊயிரையும் தருவேன் .நான் ஆம்பிளை டா.// அப்படியா, இப்போ இலங்கையிலத்தான் இருக்கீங்களா? சந்தோஷம்.
ஹுஸைனம்மா,
ஒன்ரை புரிந்து கொள்ளுங்கள் !திருமா உண்மை தமிழன்.அவரை பற்றி தெரிந்து கொள்ள
http://www.thiruma.in/2009/10/blog-post_16.html
திருமா பற்றி சொல்ல தமிழகத்தில் யாருக்கும் அருகதி இல்ல.முத்துக்குமார் கடைசியாக சொன்னது "என் சாவை"-
"அண்ணன் பிரபாகரனுக்கும் ,திருமவளவனக்கும் சொல்லுங்கள்"
சேகர்,
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு. நீங்களும் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லாருமே எல்லாவிதத்திலும் நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களும் இல்லை.
எனது சொந்த விருப்பு, வெறுப்புகள் இவை. அவற்றிற்குரிய காரணங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாத நிலையில் என்னையும் தமிழர்களின் எதிரி என்று நீங்களாக முடிவெடுத்து விட்டீர்கள்.
வருகைக்கு நன்றி.
1. பிடித்தவர் பிடிக்காதவர் தமிழராக இருக்கவேண்டும் என்பது விதி.
2. பிடித்தவர் பிடிக்காதவர் என்பது தான் விளையாட்டு, பிடித்தது பிடிக்காதது என்று போகிறது.
நான் உங்க பேரை எழுதிட்டு வந்து பார்த்தா செய்யது முந்திட்டார்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தராசு.
Comment moderate pannunga லாத்தா
\\வியப்பது: சாராயம் குடிப்பதை ஏதோ குளிப்பது, தூங்குவது போன்ற அன்றாடச் செயலாகச் சிலர் செய்வதும், அதைச் சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் பிரஸ்தாபிப்பதும்\\
சரியா சொன்னிங்க. எனக்கும் அது தான் விளங்கல.. ஹ்ம்ம்..
\\பிடிக்காதவர்: அஞ்சு ஜார்ஜ் (மலையாளியான அவர் எதற்கு தமிழக அரசிடமிருந்து 25 லட்சம் நிதியுதவி பெற்றார்? கொடுத்த நம்மளைச் சொல்லணும்)\\
அப்படி சொல்லக்கூடாது... அப்போ நாமளும் racist ஆகிடுவோம்.. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!
//வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!//
ஆனா நாமதான் தமிழ்நாட்டை விட்டு வெளியே போயிடுவோம்.
//பீர் | Peer Says:
05/11/09 12:09
1. பிடித்தவர் பிடிக்காதவர் தமிழராக இருக்கவேண்டும் என்பது விதி.//
மறந்துட்டேன் (அந்த அளவுக்கு சோனியா எனக்குப் பிடிக்கும்), மாத்திடுறேன். (தமிழ்நாட்டுல தலைவர்களுக்கா பஞ்சம்?)
//பீர் | Peer Says:
05/11/09 12:32
//வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!//
ஆனா நாமதான் தமிழ்நாட்டை விட்டு வெளியே போயிடுவோம்.
//
பீர், அப்படில்லாம் சொல்லக்கூடாது. அப்புறம் நாமளும், பால் தாக்கரேவும் ஒண்ணாயிடுவோம்.
லாத்தா, கமெண்ட் மாட்ரேஷன் மிகவும் அவசியம்.முதலில் அதைச் செய்யுங்க.
அரசியல் வாதியாக
"பிடிக்காதவர்: திருமாவளவன்" விளக்கம்?
நான் அறிந்தவரில் , திருமா-பெஸ்ட் .இன்றும் அவர் பெற்றோர் மண்குடிசையில் .தமிழ் ஈழ விரும்பி .
ஜெயா -தேர்தல்காக தமிழ் ஈழ விரும்பி.பல உழல் புரிந்தவர் .-டான்சி உழல் இன்னும் பல
திருமாவளவன்-பிடிக்காதவர்-விளக்குக
//பீர் | Peer Says:
05/11/09 12:09
2. பிடித்தவர் பிடிக்காதவர் என்பது தான் விளையாட்டு, பிடித்தது பிடிக்காதது என்று போகிறது.//
காரணம், பிடித்தவர், பிடிக்காதவர் என்ற லிஸ்டில் மேற்கொண்டு எழுத சினிமாவைத் தவிர ஒன்றும் இல்லை. சினிமாவில் (நடிகர், இயக்குனர், பாடகர்) எனக்குப் பிடித்தவர்களும் நிறைய இருக்கிறார்கள். அதைவிடப் பிடிக்காதவர்களும் நிறைய இருக்கிறார்கள். அதனால் விட்டுவிட்டேன்.
தவிர, விதிகளைத் தளர்த்திகொள்ளலாம் என்ற விதி இருந்ததே, அதனால் பிடித்தது, பிடிக்காததுகளாக மாற்றிக் கொண்டேன்.
//நான் உங்க பேரை எழுதிட்டு வந்து பார்த்தா செய்யது முந்திட்டார்.//
நன்றி பீர்!!
//எம்.எம்.அப்துல்லா Says:
05/11/09 13:37
லாத்தா, கமெண்ட் மாட்ரேஷன் மிகவும் அவசியம்.முதலில் அதைச் செய்யுங்க.//
வாங்க அப்துல்லா. செய்துட்டேன், நன்றி.
//sharma, Says:
05/11/09 13:49
திருமாவளவன்-பிடிக்காதவர்-விளக்குக//
ஆசிரியரா வேலை பாக்குறீங்களோ?
நான் முன்பே சொன்ன மாதிரி, எல்லாரும் நல்லவரும் இல்லை; கெட்டவரும் இல்லை. அந்த வகையில் திருமாவின் எளிமை பிடிக்கும். ஆனால் அதை மட்டும் வைத்து என்ன செய்வது/ செய்தார்?
ஜெயலலிதாவிடம் எளிமை இல்லை.ஊழல் செய்தார்.உண்மைதான். ஆனால் தைரியம், தன்னம்பிக்கை இருக்கிறது. அது எனக்குப் பிடித்திருக்கிறது.
என் பதிவில சொன்ன மாதிரி,நீங்க உண்மையிலே பிரபல பதிவர் ஆயிட்டீங்க
ஹூஸைனம்மா..
பாருங்க அனானி கமெண்ட்டெல்லாம்..ம்ஹூம்..நடத்துங்க !!!!
திருமாவளவன்-SC அதனால் உங்களுக்கு பிடிக்கவில்லை
ஹிட்லர் -வீரன் ,தன்னம்பிக்கை திலகம்.அதற்காக அவர் நல்லவரா ?
ஜெயலலிதா-தன்னம்பிக்கை திலகம். என்ன நல்லது பண்ணினார் ?
திருமாவளவன் என்ன நல்லது பண்ணவில்லை?
திருமா -ஜெயாவை வீட தைரியம், தன்னம்பிக்கை மிகுந்தவர்.
உங்களுக்கு திருமாவை பற்றி தெரியவில்லை அல்லது அவர் மீது தனிப்பட்ட கோபம்.
திருமா-சாதிய வன்கொடுமைகளை எதிர்பவர் !!
!
அடித்தால், திருப்பி அடிப்பவர் !
அரசியவாதியாக உங்களுக்கு பிடிக்காதவர்-ஏன் ? சரியான பதில் உங்களிடம் இல்லை
.
//sharma Says:
05/11/09 14:41
அரசியவாதியாக உங்களுக்கு பிடிக்காதவர்-ஏன் ? சரியான பதில் உங்களிடம் இல்லை//
நல்லது. நன்றி கண்டுபிடிப்பிற்கு.
//அ.மு.செய்யது Says:
05/11/09 14:40
என் பதிவில சொன்ன மாதிரி,நீங்க உண்மையிலே பிரபல பதிவர் ஆயிட்டீங்க ஹூஸைனம்மா..
பாருங்க அனானி கமெண்ட்டெல்லாம்..ம்ஹூம்..நடத்துங்க !!!!//
செய்யது,
அப்பவே கேட்டேன் என்னை ஏன் கோத்து விடுறீங்கன்னு, இப்பப் பாருங்க. எல்லாம் உங்களால..
:-))))))))))))
//சென்ஷி Says:
05/11/09 16:19
:-))))))))))))//
வாங்க சென்ஷி. எதுக்கு இவ்ளோ சிரிப்பு, நான் படுற பாட்டைப் பாத்தா?
இந்தப் பதிவுல மாட்டாம இருக்கணும்னு நினைச்சேன்.
ஏன்னா பல கேள்விகளுக்கு பதில் தெரியாது இல்லை கிடையாது.
சரி பதிவு போடறேன்.
:)))))))
//புதுகைத் தென்றல் Says:
05/11/09 16:26
சரி பதிவு போடறேன்.
:)))))))//
நன்றி அக்கா துணைக்கு வர சம்மதிச்சதுக்கு!!
பதிவு போட்டாச்சு
// குடும்பத் தலைவர்
பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி (இந்த வயசிலயும் உழைக்கிறாரே..)
பிடிக்காதவர்: ராமதாஸ் (மகனின் அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்ததால்)//
ஹா ஹா ஹா. ரசித்த பதில்
//பிடிக்காதது: ஹராம் என்று விலக்கப்பட்டவை மட்டும்; வேறெதையும் கழிப்பதில்லை, சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அறிந்தபிறகு.//
நல்ல பதில்
//S.A. நவாஸுதீன் Says:
08/11/09 16:05
// குடும்பத் தலைவர்
பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி (இந்த வயசிலயும் உழைக்கிறாரே..)
பிடிக்காதவர்: ராமதாஸ் (மகனின் அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்ததால்)//
ஹா ஹா ஹா. ரசித்த பதில்//
நவாஸ், நீங்க ஒருத்தராவது இதக் கண்டுகிட்டீங்க, அப்பாடா.
//S.A. நவாஸுதீன் Says:
08/11/09 16:07
//பிடிக்காதது: ஹராம் என்று விலக்கப்பட்டவை மட்டும்; வேறெதையும் கழிப்பதில்லை, சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அறிந்தபிறகு.//
நல்ல பதில்//
நவாஸ், எங்க நீங்க எனக்கு கவிதை பிடிக்கலைன்னு சொன்னதுக்கு சண்டைக்கு வருவீங்களோன்னு நினைச்சேன். நல்லவேளை.
நாங்க வருவோமுல்ல சண்டைக்கு அப்ப நாங்க எழுதுற கவிதை
ஓ கவிதையின்னு கிறுக்கிறோமோ,,
ஹுசைன்னம்மா, அபுதாபி வந்து சண்டைபோடுவேன்..
கலக்குறீங்க...
இங்கு வந்து பாருங்க நாங்களும் சொல்லியிருக்கோம்
http://niroodai.blogspot.com/
//அன்புடன் மலிக்கா Says:
08/11/09 19:28
ஹுசைன்னம்மா, அபுதாபி வந்து சண்டைபோடுவேன்..
//
வருகைக்கு நன்றி மலிக்கா. கவிதைகளைப் புரிந்து கொள்ளும் அளவு எனக்குப் புலமை இல்லை என்பதுதான் உண்மை!!
சண்டை போட்டாலும் பரவாயில்லை, அபுதாபி வாங்க.
//இங்கு வந்து பாருங்க நாங்களும் சொல்லியிருக்கோம் http://niroodai.blogspot.com///
அதெல்லாம் நீங்க சொல்லாமலே நாங்க பாத்துகிட்டுதானிருக்கோம்!!
என்னப்பா இது.. இவங்களே வாங்க வந்து உங்கள் விருப்பு வெருப்புகளை சொல்லுங்கன்னு எழுத சொல்றாங்க.. எழுதுனா ஏன் இவரு ..ஏன் அவருன்னு.. எப்பூபூடீனு.. பதில் சொல்லி நேரம் செலவிடாதீர்கள் ஹுஸனம்மா..
//தொழில் நிறுவனம்
பிடித்தது: ETA (UAE) (தமிழரால் நடத்தப்படும் நிறுவனம்)//
நிருவனம் எப்படி இருந்தாலும் நானும் இங்கு ஐந்து வருடம் குப்பை கொட்டினோம்ல...!!!
//Rithu`s Dad Says:
10/11/09 11:36
என்னப்பா இது.. இவங்களே வாங்க வந்து உங்கள் விருப்பு வெருப்புகளை சொல்லுங்கன்னு எழுத சொல்றாங்க.. எழுதுனா ஏன் இவரு ..ஏன் அவருன்னு.. எப்பூபூடீனு.. பதில் சொல்லி நேரம் செலவிடாதீர்கள் ஹுஸனம்மா..//
அதானே, கூப்பிட்டு கொடை கொடுக்கற மதிரியில்ல இருக்கு!!
//தொழில் நிறுவனம்
பிடித்தது: ETA (UAE) (தமிழரால் நடத்தப்படும் நிறுவனம்)
நிருவனம் எப்படி இருந்தாலும் நானும் இங்கு ஐந்து வருடம் குப்பை கொட்டினோம்ல...!!!//
ஆமாம், துபாய் வரும் கனவு காணும் பெரும்பாலான இளைஞர்களுக்கு முதல் வாய்ப்பைத் தருவது.
வருகைக்கு நன்றி, ரீத்து அப்பா. ரீத்து & ரீத்து அம்மா நலமா?
இயல்பா பதில் சொல்லி இருக்கீங்க
நல்வாழ்த்துகல் ஹூஸைனம்மா
Post a Comment