Pages

டிரங்குப் பொட்டி - 5






இந்த வருஷத்து முதல் பதிவே நம்ம டிரேட் மார்க் டிரங்குப் பொட்டிப் பதிவு போட்டு நம்ம brand-ஐ எல்லார் மனசிலயும் இன்னும் ஆழமாப் பதிய வழி பண்ணியாச்சு!! இனிமே அல்ட்ராமாடர்னா ஒரு புது மாடல் பிரீஃப் கேஸைப் பாத்தாக்கூட நம்ம டிரங்குப் பொட்டிதான் ஞாபகம் வரும்!! நம்ம பாரம்பரிய கலாச்சாரத்தை மறக்காம இருக்க ஏதோ என்னாலான ஒரு எளிய சேவை!!

^*^*^*^*^*^*^*^*^*^*^*


ஒரு ரெண்டு மூணு வாரம் முன்னாடி கையில மருதாணி போடறதுக்காக பக்கத்தில ஒரு ஹென்னா சலூனுக்குப் போயிருந்தேன். அங்கேயிருந்த பாகிஸ்தானி பியூட்டிஷியன் பொண்ணு எனக்கு மருதாணி வரைஞ்சுகிட்டே, எனக்கடுத்துப் போடறதுக்காகக் காத்துக்கிட்டிருந்த இன்னும் இரண்டு பாகிஸ்தானி பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  எனக்கு உருது ஸ்டேஷன் சரியாகக் கிடைக்காது என்பதால் பேசாமல் கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். அரசியல், குண்டுவெடிப்பு, வேலை, குடும்பம் என்று நடந்துகொண்டிருந்த பேச்சு, யெஸ், அதேதான், நீங்க நினைச்ச மாதிரியே தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் போனது. ஹிந்தி சீரியல்களும் பார்க்கிறார்கள் என்று அவர்கள் பேச்சில் தெரிந்துகொண்டேன். அதில் ஒருவர், தான் சிலகாலம் பார்க்காம முடியாமல் போன ஒரு தொடரின் கதையைக் கேட்க, இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார். 

“ரஞ்சனாவின் தங்கை, அக்காவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த நினைக்கிறாள். இத்தனைக்கும் ரஞ்சனாதான் தன் தங்கையைத் தன் பணக்காரக் கொழுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தாள்.”

“அது எப்படி?”

“ரஞ்சனா தன் கல்யாணத்தின் போதே மாமியாரிடம் அப்படி கண்டிஷன் போட்டிருந்தாள். அதற்குச் சம்மதித்ததால்தான் அந்தப் பைத்தியத்தைக் கல்யாணம் செய்தாள்.”


அட, இந்தப் பைத்தியத்தைக் கல்யாணம் செய்றது தமிழ் சீரியல்களில் மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் அப்படித்தானா என்று நினைத்துக் கொண்டே அவர்களிடம் கேட்டேன், ”உங்க ஊர் சீரியலும் எங்க ஊர் சீரியல் மாதிரியே இருக்கே” என்று. சிரித்துக் கொண்டவர்கள் சொன்னார்கள், ”ஆனாலும் எங்க ஊர் சீரியல்கள் இந்திய சீரியல்கள் போல இழுவையாக இருக்காது. சீக்கிரம் முடித்துவிடுவார்கள்.  இந்திய சீரியல்களில் ஹீரோயின் பள்ளி மாணவியாக ஆரம்பித்து, பட்டப்படிப்பும் முடித்து, கல்யாணம் ஆகி, அம்மாவாகி, பாட்டி, கொள்ளுப் பாட்டியும் ஆனாலும் தொடர் முடியாது!! சீரியல் பார்க்கும் நாம் இறந்தாலும் இறப்போம், ஆனாலும் சீரியல் முடியாது” என்றவர்கள், ஒரு ஹிந்தி சீரியலில் (கும்கும் என்று பெயர் சொன்னதாக நினைவு) ஹீரோயினின் மறுபிறப்பும் நடந்துள்ளதாகச் சொன்னார்கள்!!

ம்ம், நாட்டுக்கு நாடு தொடர்-கதை!!

^*^*^*^*^*^*^*^*^*^*^*

இந்த  எஃப்.எம். ரேடியோக்களில், பாட்டு வேணும்னு கேக்கிறவங்க, இந்தப் பாட்டை யாருக்கு “டெடிகேட்” செய்றீங்கன்னு ஆர்.ஜே. கேட்டவுடனே, ஒரு லிஸ்ட் அடுக்குவாங்க பாருங்க.... கலா, மாலா, ராதா, கீதா, ராம், லக்‌ஷ்மன், சாதிக், பாஷா, சம்பத்து, சாலமன்,.....இப்படி ஒரு இருவது, முப்பது பேரைச் சொல்லி, இவங்களுக்கெல்லாம் இந்தப் பாட்டை டெடிகேட் செய்றேன் - அப்படின்னு எதோ பாட்டன், முப்பாடன் சொத்தையே அவங்க பேருக்கு எழுதி வச்சுட்ட மாதிரி பெருமையோடச் சொல்லுவாங்க பாருங்க...


அதென்னத்த “டெடிகேஷன்”? இவங்களுக்கு மட்டுந்தான் இந்தப் பாட்டு டெடிகேட்டட்னா, மத்தவங்கள்லாம் காதை மூடிக்கணுமா இல்லை ரேடியோவை ஆஃப் பண்ணிடனுமா? அவங்க மேல அவ்வளவு அன்புன்னா, காசு அல்லது உழைப்பு போட்டு வேற உருப்படியா எதையாவது கொடுக்கலாமே? பைசா செலவில்லாமே ஒரு உருப்படாத பாட்டைப் போடச்சொல்லித்தான் அன்பை வெளிப்படுத்தணுமா? 


இந்த டெடிகேஷன் என்பது, ஆர்.ஜே.க்கள் நேயர் கேக்கிற பாட்டை ஆன் - ஏர்லயே தேடிக் கண்டுபிடிக்கறதுக்காக நேரத்தைக் கடத்தக் கண்டுபிடிச்ச ஒரு டெக்னிக்!! அந்த காலத்துல சிலோன் ரேடியோல, “பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் அம்மா, அப்பா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, மாமா, மாமி, பெரியப்பா, சித்தப்பா, ......” சொல்றது ஞாபகம் வருது. அப்பவும் அது கேக்கக் கடுப்பாத்தான் இருந்துது!!


^*^*^*^*^*^*^*^*^*^*^*

ஆஃபிஸ்லயும், ஷாப்பிங் மால்களிலும்  சிலர் “டங் டங்” என்று தரை அதிர நடப்பதைப் பார்த்தால் எரிச்சலாக வரும். அதுவும் ஆஃபிஸில் அமைதியான சூழலைக் கிழித்துக் கொண்டு, டொம் டொம் என்று நடப்பது கேட்க நாராசமாக இருக்கும்.  நம் தலையும் சேர்ந்து அதிர்வது போலிருக்கும். 

^*^*^*^*^*^*^*^*^*^*^*
விஜயின் வேட்டைக்காரனை வழக்கம்போல எல்லாரும் கிழித்து, தோரணம் கட்டித் தொங்கவிட்டுவிட்டார்கள். விஜய் படம் இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு ஃபார்முலா இருக்கிறதென்று தெரிந்தும், அதைப் போய்ப் பார்த்துவிட்டு, புலம்புபவர்களைப் பார்த்தா, வேலியில போற ஓணான கதைதான் நினைவுக்கு வருது.


விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?

Post Comment

25 comments:

கிளியனூர் இஸ்மத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

SUFFIX said...

//ஹீரோயினின் மறுபிறப்பும் நடந்துள்ளதாகச் சொன்னார்கள்!! //

மறுபடியும் முதல்லே இருந்தா....

Anonymous said...

\\விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?\\

அது சரி!

SUFFIX said...

//அதென்னத்த “டெடிகேஷன்”?''

அதானே சரியா கேட்டீங்க!! எதுக்குன்னு எனக்கும் புரியல.

SUFFIX said...

//ஆஃபிஸ்ல சிலர் “டங் டங்"//

ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்தா யாருக்கு தான் கோபம் வராது? நியாயமான ஆதங்கம்.

SUFFIX said...

//என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?//

ஆகா, அடுத்தது ரெடியாயிட்டு இருக்குங்களா?

ஷாகுல் said...

டிரங்கு பெட்ட்டிய திறந்தாச்சா?

அந்த பாக்கிஸ்தானி சீரியல் மாதிரியே தமிழ்ல சீரியல் வந்த மாதிரி ஞாபகம்.

//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?//

அதுவும் சரிதான்.

தராசு said...

விஜய் படம்னா ஆளாளுக்கு கருத்து கந்தசாமியாகறாங்கப்பா.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

SUFFIX said...
//ஹீரோயினின் மறுபிறப்பும் நடந்துள்ளதாகச் சொன்னார்கள்!! //

மறுபடியும் முதல்லே இருந்தா....

நான் சொல்லனும்னு இருந்தேன். நீங்க சொல்லிட்டீங்களா. சரிதான்

நான் ரிப்பீட்டிக்கிறேன்

அ.மு.செய்யது said...

ந‌ம்ம விவ‌த் பார‌தியில ஸ்டேன்ட‌ர்டா ஒரு நால‌ஞ்சி பேரு வ‌ரும் பாத்திருக்கீங்க‌ளா ??

அடையாள‌ம்ப‌ட்டு ஆசிர்வாத‌ம்..க‌முதி லியாகத் அலிகான்..இவ‌ங்க‌ல்லாம் கிட்ட‌த்த‌ட்ட‌
நாப்ப‌த்த‌ஞ்சி வ‌ருமாவா பாட்டு விரும்பி கேட்டிட்ருக்காய்ங்க‌ ??

சென்ஷி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

☀நான் ஆதவன்☀ said...

//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?//

ஹி ஹி ...அதானே?

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இடுகை ந்ல்லாவே இருந்திச்சி

நல்வாழ்த்துகள்

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஹுஸைனம்மா :)

Anonymous said...

சீரியல் பாக்கறது உலக அளவுல நடக்குதா :)

//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?//

ஏன் இப்படி சொல்லீட்டீங்க. விஜய் காதலுக்கு மரியாதை, கில்லின்னு நல்ல படத்துல நடிச்ச மாதிரி ஏதாச்சும் உங்க ப்ளாக்குலயும் நடக்கும் :)

Prathap Kumar S. said...

//ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்தா யாருக்கு தான் கோபம் வராது?//

சபாஷ்...சரியான கேள்வி..:-)உங்களுக்கு தூங்கனும்னா... வீட்டுக்குப்போய் தூங்குங்க...அதுக்குன்னு ஆபிஸ் வர்றவங்க பறந்தா வரமுடியும். நல்லாருக்கே...நியாயம் :-)

//விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?//
காமெடிக்கு சொன்னாலும் உண்மையை சொல்லிருக்கீங்க... உங்க நேர்மை புடிச்சிருக்கு:-)

ஸாதிகா said...

தங்கச்சி ஹுசைனம்மா,விடுமுறை எல்லாம் நல்லபடி முடிந்ததா?உங்கள் டிரங்கு பொட்டியை இந்த முறை நிரப்பும் பொழுது சூடான மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பதிவு போட்டீர்களா?எஃப் எம்மில் பாடல்கள் டெடிகேட் செய்வதைபற்றியும்,ஆஃபிஸிலும்,மாலிலும் சப்தமிட நடப்பதைப்பற்றியும் ஆவி பறக்க எழுதி இருந்தீர்களே! :-) :-)
கவனிக்கவும்:ஒன்றுக்கு இரண்டாக ஸ்மைலி போட்டு விட்டேன்.

Jaleela Kamal said...

ஹா ஹா அங்கும் (பாக்கிஸ்தானி) சீரியல பார்த்து கண்ணீர் வடிக்கும் கும்பல் இருக்கா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

உங்கள் டிரெங்கு பெட்டி பக்கம் வந்தாலே ஒரே கலகலப்பு தான் போங்க.
நாஸியா பதிவில் பழைய பிரியாணியான்னு சொன்னத நினைத்து நினைத்து சிரிகக் வச்சிட்டீங்க..

எம்.எம்.அப்துல்லா said...

புத்தாண்டு வாழ்த்துகள்

:)

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு

அன்புடன் மலிக்கா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். லேட்டான்னு கோவிச்சிக்கவேணாமுங்கோ..

டிரங்குபொட்டி சூப்பரப்பு..

http://fmailkka.blogspot.com/

இதையும் கொஞ்சம் பாருங்கள் ஹுசைன்னம்மா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சீரியல் பார்க்கும் நாம் இறந்தாலும் இறப்போம், ஆனாலும் சீரியல் முடியாது//

ஹா ஹா.. சரியாச் சொன்னீங்க ஹூசைனம்மா.. எங்கூருல மூணு நாலு பெருசுங்க கோலங்கள் சீரியல் முடிவு தெரியாமலே போயிச் சேந்துட்டாங்க :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா? //

எப்படிங்க இப்படி :)))))))))

ஹுஸைனம்மா said...

இஸ்மத் அண்ணே, நன்றி.

ஷஃபிக்ஸ் - //மறுபடியும் முதல்லே இருந்தா//... பாக்கிறவங்களுக்கு நல்ல மனோதிடம் வேண்டும்...
//ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்தா யாருக்கு தான் கோபம் வராது// - பாம்பின் கால் பாம்பறியும்...
//அடுத்தது ரெடியாயிட்டு இருக்குங்களா?// - நிச்சயமா!! எல்லாத்திலயும் ஒரு கை பாக்க வேண்டாமா?

நாஸியா - நன்றி.

ஷாஹுல் - நன்றி

தராசு - நான் விஜய்க்கு ஆதரவாத்தானே பேசுறேன்? எப்பவும் நான் சொல்லவர்றத தப்பாப் புரிஞ்சுக்கிறதுன்னே முடிவு போல!!

நவாஸ் - நன்றி. நல்லவேள நான் சீரியல்லாம் பாக்கிறதில்ல..

செய்யது - ஆமாம், அந்த பேரெல்லாம் கேட்கவே வித்தியாசமா இருக்கும்!!

சென்ஷி - நன்றி.

ஆதவன் - //ஹி ஹி ...அதானே?// எல்லாருக்கும் என்னா நக்கலு...

சீனா சார் - வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி சார். ரொம்ப நாளா என் பிளாக் பக்கம் வரலையேன்னு நினைச்சேன்.

தாரணி - நன்றி.

சின்னம்மிணிக்கா - //விஜய் காதலுக்கு மரியாதை, கில்லின்னு நல்ல படத்துல நடிச்ச மாதிரி ஏதாச்சும் உங்க ப்ளாக்குலயும் நடக்கும் // அதானே, அதிசயங்கள் அப்பப்போ நட்க்கவும் செய்யும் இல்லையா?? நீங்க ஒரு ஆள்தான் பாஸிடிவ்வா திங்க் பண்றீங்க!! அதுக்காகவே ஒரு கவித ரெடி பண்ணனும்..

பிரதாப் - பறந்தெல்லாம் வர வேண்டாம். இந்த பாபா படத்துல ரஜினியும், கில்லியில விஜயும் நடந்த மாதிர் “பொறி” பறக்க நடக்கவேணானுதான் சொல்றேன்.

அப்புறம், நாங்க எப்பவுமே நேர்மையானவங்கதான் தெரியுமா? உங்க பிளாக்குல என்னிக்காவது உங்களப் பாராட்டி ஒரு பின்னூட்டமாவது போட்டிருப்பேனா? அதிலயே தெரிஞ்சிருக்குமே என் நேர்மை!!

ஸாதிகாக்கா, நீங்க இஸ்மைலி போடலேன்னாலும் கோவமா எழுதமாட்டீங்கன்னு தெரியும். :-)

ஜலீலாக்கா - நன்றி. கவலைய மறக்க சிலருக்கு வேற வழி; நமக்கெல்லாம் பிளாக்!! இல்லையா அக்கா?

அப்துல்லாஹ் - நன்றி.

வேலன் அண்ணாச்சி - நன்றி அண்ணே.

மலிக்கா - நன்றி. லேட்டானதுக்கு கோவிக்கவெல்லாம் மாட்டேன். நமக்கு டைம் கிடைக்கிறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கும் தெரியும். (பின்னூட்டத்துக்குப் பதில் போட லேட்டானதுக்கு யாரும் கோவிக்காதீங்கோ!!)

எல் போர்ட் - பாவம்தான் அந்த பெரியவங்க!!

அமித்தம்மா - //எப்படிங்க இப்படி// - இதில என்ன அதிசயம்? சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும்!!