கி.பி. 570-ம் ஆண்டு... முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்...
சவூதி அரேபியா அருகில் உள்ள நாடான ஏமென், அபிஸீனிய மன்னரின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. அபிஸீனிய மன்னரின் பிரதிநிதியாக அதை அரசாண்டுகொண்டிருந்தான் அபிஸீனியாவைச் சேர்ந்த “அப்ரஹா அல் அஷ்ரம்” எனும் ஆளுநர்.
அரேபியர்கள் மக்காவில் உள்ள கஃபாவை வணங்குவது அவன் கவனத்திற்கு வந்தது. அவர்களின் வழிபாட்டு முறையை மாற்ற நினைத்த அவன், ஏமெனின் தலைநகரான “சனா”வில் கஃபாவைவிடப் பெரியதும், அழகானதுமான ஆலயம் ஒன்றைக் கட்டினான். வெள்ளைநிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அதற்கு “குலைஸ்” என்று பெயரிட்டான். அதன் உட்புறம் தங்கம் மற்றும் வெள்ளியாலும் இழைக்கப்பட்டிருந்தது. வெளிப்புறம் தந்தத்தால் அழகுபடுத்தப்பட்டிருந்தது.
இத்தனை பேரழகும், கலைநயமும் கொண்டு கட்டப்பட்ட ஆலயம் நிச்சயம் மக்களைக் கவரும்; ஆலயத்தில் கூட்டம் அலைமோதும் என்று நம்பினான். ஆனால் அரேபியர்களின் கவனம் கஃபாவை விட்டு இதன்பால் திரும்பவில்லை. அப்ரஹா பல்வேறு கட்டளைகள் பிறப்பித்தும் யாரும் செவிமடுக்கவில்லை. கஃபாவை விடுத்து, குலைஸ் ஆலயத்திற்கே அனைவரும் புனிதப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிட்டான்.
ஆனால் யாரும் அப்ரஹாவின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை. கஃபாவையே நாடிச் சென்றனர். இது அப்ரஹாவைப் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது. கோபம் தலைக்கேறியதில் தன்னிலை இழந்த அவன், கஃபாவை இடித்து அழித்தொழிப்பது என்று முடிவெடுத்தான்.
பெரும் யானைப்படையைத் திரட்டிக்கொண்டு மக்கா நகரை நோக்கிப் படையெடுத்தான். மக்காவின் எல்லையில் இருந்துகொண்டு, சில படைவீரர்களை அனுப்பி மக்கத்துவாசிகளின் படைபலம் மற்றும் நிலவரங்களை உளவறிந்து வரப் பணித்தான்.
மக்கா நகரில் “குறைஷ்” எனும் இனத்தவர்களே பெரும்பான்மையாக இருந்தனர். மக்கா நகரின் தலைவராக இருந்தவர் “அப்துல் முத்தலிப்” என்பவர். இவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பாட்டனார்.
இதற்கிடையே அப்ரஹாவினால் உளவறிய அனுப்பப்பட்ட படைவீரர்கள், செல்லும் வழியில் தென்பட்ட ஒரு ஒட்டகக் கூட்டத்தைச் சிறைபிடித்து வந்தனர். அவர்களிடம் விபரங்களை கேட்டறிந்துகொண்டவன், குறைஷ்களின் தலைவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருமாறு பணித்தான்.
அவ்வாறு அழைத்துவரப்பட்ட அப்துல் முத்தலிப் அவர்களின் கண்ணியமான தோற்றத்தினால், தன்னையுமறியாமல் எழுந்துநின்று வரவேற்றவன், அவரிடம் தான் படையெடுத்து வந்த நோக்கத்தைக் கூறினான். கஃபாவை அழிப்பதே தன் நோக்கம் என்றும், அதில் மக்கத்து மக்கள் இடைபடாதிருந்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேராதென்றும் கூறினான். பின்னர் அவரிடம் அப்ரஹா, “ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்க, அதற்கவர் தன் ஒட்டகங்களை அவனது படையினர் பிடித்து வந்துவிட்டதாகவும், அவற்றைத் திரும்பத் தரவேண்டுமென்றும் கேட்டார்.
அவரது பதிலைக் கேட்ட அப்ரஹா திகைத்து நின்றான். இவர்களது இறைஇல்லத்தை இடிக்க பெரும்படையுடன் வந்து நிற்கும் தன்னிடம், தயவுசெய்து இறை இல்லத்தை இடிக்காதே என்று கண்ணீர் விட்டுக் கதறி கெஞ்சுவாரோ அல்லது முடிந்தால் எம்படைகளை வென்றுப்பார் என்று சவால் விடப்போகிறாரோ என்று ஆவலுடன் நின்றால், சம்பந்தமே இல்லாமல் ஒட்டகங்களைத் தா, போதும் என்கிறாரே என்று குழம்பி நின்றான்.
அவரிடமே கேட்டான், “உம் இறைஇல்லத்தைவிட ஒட்டகங்கள் பெரிதாகிப் போனதோ உமக்கு?” என்று. அப்துல் முத்தலிப் பதிலுரைத்தார் “ஒட்டகங்களுக்கு உரிமையாளன் நான். அவற்றைப் பாதுகாப்பது என் கடமை. இறை இல்லத்தின் உரிமையாளன் அதைப் பாதுகாத்துக் கொள்வான்!!”.
இதன் தொடர்ச்சி இங்கே...
இதன் தொடர்ச்சி இங்கே...
|
Tweet | |||
25 comments:
கொடியோன் அப்ரகார் இடம் இருந்து இறைஇல்லம் "கஹ்பதுல்லாஹ்" ஆண்டவனின் துணையால் காக்கப்பட்டதை விரிவாக விளக்கி இருக்கிறீர்கள் சகோதரி.
அருமையான் பதிவு.
அருமையான வரலாற்றை சொல்லிருக்கீங்க ...
மீண்டும் நினைவுபடுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோதரி.
ஒவ்வொரு முறை கஃபாவின் அருகில் நிற்கும்போதும், எத்தனை எத்தனை இயற்கை,அரசியல்,ஆன்மீகப் புயல்களையெல்லாம் கடந்து இந்த இல்லம் இன்றும் இருக்கின்றது என்ற நினைப்பில் உடலெல்லாம் சிலிர்க்கும்.
மிகவும் அழகான பதிவு சில தெரியாத விஷயங்களை தெரிந்துக்கொண்டேன் நன்றி
வரலாறு - சூப்பர்.
அருமையான வரலாற்று நிகழ்வு. கஃபாவிற்கெதிரான சூழ்ச்சியை ஒவ்வொரு முறையும் அவன் முறியடித்திருக்கிறான்.
யானைப்படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? - 105:01,02.
நல்லப்பதிவு
பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி
வஸ்ஸலாம்
அதுக்கப்புறம் என்னாச்சு... கஃபா மேல அப்ரஹா தாக்குதல் நடத்த முயற்சித்தானா?
ஏன் அறைகுறையா சொல்றீங்க...சொல்றதை முழுசாத்தான் சொல்லுங்க, நாங்களும் தெரிஞசுக்கொள்வோமுல்ல...
எழுத்து நடை அழகாக இருக்கிறது.ஆனால் முக்கியமான வரலாற்று செய்தியை சொல்லாமல் பட்டென்று முடித்து விட்டீர்களே!((அதன் பின் போரில் அவன் யானை படையை அழித்து இறைஇல்லம் "கஹ்பதுல்லாஹ்"வை அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.யானையையே பார்திராத அரபியர்கள் அதனை யானை ஆண்டு என்று வரலாற்றில் தொடர்ந்தும் வருகிறார்கள்.))இதனை உங்கள் அழகான எழுத்து நடையில் தொடர்ந்து எழுதுங்கள்..இன்ஷா அல்லாஹ்
வரலாறு அருமை ஹுசசைனம்மா...!
அப்டியே மீதியையும் சொல்லலாமே...!
சில காரணங்களுக்காக சிறுவயதில் ஒரு இரண்டு வருடம் தந்தையின் இசுலாமிய
நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன்..(வாசுதேவநல்லூர்)
அப்போ கேட்ட நியாபகம்....
மிகவும் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள், தொடருங்கள்
// “ஒட்டகங்களுக்கு உரிமையாளன் நான். அவற்றைப் பாதுகாப்பது என் கடமை. இறை இல்லத்தின் உரிமையாளன் அதைப் பாதுகாத்துக் கொள்வான்!!”. //
ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
மிக்க நன்றி...
நீங்கள் கூறிய விஷயத்தை இது வரை நான் படித்தது இல்லை... ரொம்ப அழகாக எழுதியிருக்கின்றீர்கள்... நன்றி.
அபுல்பசர் - நன்றி.
ஸ்டார்ஜன் - நன்றி.
நவாஸ்- நன்றி.
அப்துல்லாஹ் - நன்றி.
ஃபாயிஸா - நன்றி.
தராசு- நன்றி.
பீர்- நன்றி.
ராஜவம்சம்- நன்றி.
பிரதாப் - சொல்றேன், சொல்றேன்.
ஜெய்லானி- நன்றி.
ஜலீலாக்கா- நன்றி.
லெமூரியன் - முடிவையும் சொல்றேன்.
ராகவன் சார் - இதேதான் நான் சொல்ல வந்தது. யாருமே அதைச் சொல்லலியே, தெளிவா எழுதலையோன்னு நினைச்சுகிட்டிருந்தேன். சரியா சொல்லிட்டீங்க சார். நன்றி.
மிக அழகான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.
தொடர்க!!!
நல்ல கதை. எத்தைகைய சூழ்னிலையிலும் நபி ஸ்ல் அவர்களின் பொறுமையான, பொறுப்பான பதில் மிகவும் ஆச்சரியம். தொடர்ந்து எழுதுங்கள் நன்றி. இன்ஷா அல்லாஹ்
நன்றி அக்பர், சுதாகர் & எல் போர்ட்.
சுதாகர் சார், இச்சம்பவத்தில் வருபவர் நபி (ஸல்) அவர்களல்ல; அவர்களின் பாட்டனார்!! :-))
தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
தெளிவா ரொம்ப எளிமையா எழுதியிருக்கீங்க...தொடருங்கள் !!!
அடுத்த பதிவையும் படிச்சிட்டு வர்ரேன்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Masha allah !!!
Nice narraition.Thanks for the info.Also saw the next part.
Came to this post from the youtube video on 1618 posted by Peer.
I second Raghavan Anna as "Maratha Vechevan Thanni Oothuvan".
Sorry for engilipeesh.
@Abdulla
//ஒவ்வொரு முறை கஃபாவின் அருகில் நிற்கும்போதும், எத்தனை எத்தனை இயற்கை,அரசியல்,ஆன்மீகப் புயல்களையெல்லாம் கடந்து இந்த இல்லம் இன்றும் இருக்கின்றது என்ற நினைப்பில் உடலெல்லாம் சிலிர்க்கும்// Appo Abdulla annan Hajiar-a ?? Solleve illa.Ethanai murai poi irukeenga?
Anputan
Singai Nathan
அக்கா,குர் ஆன் கூறும் உண்மை சம்பவத்தை,அழகுபட சொல்லியுள்ளீர்கள்.இன்னும் இது போல் குர் ஆன் கூறும் சம்பவங்களை எதிர்பார்க்கிறேன்,அக்கா.
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.
நல்லா எழுதியிருக்கீங்க ஹுசைனம்மா, அடுத்த இடுககையையும் படிச்சுட்டு வந்துடுறேன்.
//Appo Abdulla annan Hajiar-a ?? Solleve illa.Ethanai murai poi irukeenga?
//
இறை அருளால் இதுவரை நான்குமுறை.. ஒவ்வொரு வருடமும் தொடர வேண்டுதல்.
செய்யது - நன்றி.
சிங்கை நாதன் - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. அப்ப என் பிளாக்குக்கு வந்துட்டுத்தான் இருக்கீங்க இல்ல? சந்தோஷம்!!
ஃபாத்திமா - நன்றி. இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.
ஷஃபி - நன்றி.
அப்துல்லாஹ் - நாலு முறை ஹஜ்ஜா? மாஷா அல்லாஹ்.
Post a Comment