மூணு வருஷம் முன்னாடி யாஸ் தீவுல, அதாங்க இந்த ஃபார்முலா 1 ரேஸ் நடந்துதே, அங்க ஒரு கன்சல்டண்ட்ல வேலை பாத்துக்கிட்டிருந்தேன். அங்க போக வர சரியான போக்குவரத்து வசதி கிடையாதுங்கிறதுனால, என்னை அங்க வேலை பாத்துகிட்டிருந்த, எங்க வீட்டு ஏரியாவில இருந்த ஒருத்தர்கூட அவர் காரிலயே வரச் சொன்னாங்க. அதுவரைக்கும் தனியா வந்திட்டிருந்த அவருக்கு, இதில ரொம்ப கோவம். ஆனா, மேனேஜ்மெண்ட் சொன்னதுனால அவரால மறுக்கவும் முடியல.
ஒரே ஆஃபிஸ்னுதான் பேரு, வரும்போது, போகும்போதும் எனகிட்ட பேச மாட்டாரு, ஆஃபிஸ்ல பாத்தாலும் பேச மாட்டாரு. உர்ருன்னு இருப்பார். எனக்கு ஒரே ஆச்சரியம். இவரென்ன எனக்குன்னா தனியா வண்டி ஓட்டி வர்றாரு, இவர் வரும்போது நானும் கூட வர்றேன், அதுக்கேன் இவருக்கு இவ்வளவு எரிச்சல்னு.
எங்க ரங்ஸ்கிட்டயும் சொல்லிட்டிருந்தேன் அவரைப்பத்தி. அப்பத்தான் அந்த ரகசியம் தெரியவந்துச்சு. ”நீ சைட் (site) ஆஃபிஸ்ல வேலை பாக்கிறே. கரெக்ட டைமுக்குப் போய், கரெக்ட் டைமுக்கு வரணும். அவருக்கு சைட்ல வேலை. ஆஃபிஸ்லருந்து யாராவது ஃபோன் பண்ணா சைட்ல இருக்கேன்னு சொல்லலாம்; சைட்லருந்து கூப்பிட்டா ஆஃபிஸ்லன்னு சொல்லிக்கலாம். அப்படி இருந்தவருக்கு உன்னைக் கூடச் சேத்துவிட்டா கோவம் வராதா?”. அப்பத்தான் புரிஞ்சுது, இந்த சைட் இஞ்சினியர்களின் மகிமை!! இதுவும் ஒருவிதத்துல “Work from home" தான் போல!!
இப்படியே ரெண்டு மாசம் போச்சு; அதோட எங்க ரங்ஸும் அதே ஆஃபிஸ்ல வேலைக்குச் சேந்துட்டார். எனக்கு ஒரே சந்தோஷம், அப்பாடா, இனி அந்த சிடுமூஞ்சி கூட வரவேண்டாம்னு!! (ரெண்டு பேரும் ஒரே நேரத்துலதான் இண்டர்வியூ போனோம். விஸா காரணங்களால அவர் சேர லேட்டாயிடுச்சு.)
முதநாள் அவரக் கையப்பிடிச்சு கூட்டிக் கொண்டுப்போய் (புதுசுல்ல) அவரோட R.E. (Resident engineer) கிட்ட விட்டு, என் வூட்டுக்கா(ர)ர் அப்படின்னு அறிமுகப்படுத்தி, நல்லா பாத்துக்கோங்கன்னு ஒரு வேண்டுகோளும் வச்சிட்டு வந்து என் சீட்டுல உக்காந்து வேலையப் பாத்துட்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு டாகுமெண்ட்ஸ் ரூமுக்குப் போயிட்டு வந்துப் பாத்தா, எனக்கு எதிர இருந்த கேபின் சீட்ல என்னவர்!! அவர்ட்ட கேட்டதுக்கு, இந்த சீட் மட்டுந்தான் காலியா இருந்ததால, ஆர்.இ. இங்க இருக்கச் சொன்னதாச் சொன்னார். அதாவது எனக்கு நேரெதிரேதான் அவரோட சீட் இனிமே!! எனக்கு ரொம்ப சந்தோஷமாருந்துச்சு, எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும் அப்படின்னு நினைச்சுகிட்டே, என் வேலையப் பாத்துகிட்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு, அந்தப் பக்கமா வந்த அவரோட ஆர்.இ. எதிரெதிரே இருந்த எங்களைப் பாத்தார். அவரோட முகமே மாறிப்போச்சு!! உடனே என்னவர்ட்ட போய், “I am sorry Hussain. Had I known that this is your wife's seat, I would not have seated you here. I am really sorry. Soon I'll arrange another place for you" அப்படின்னு வருத்தத்தோட ஆயிரம் ஸாரி சொல்லிட்டுப் போனார்!! சொன்னமாதிரியே அடுத்த நாளே என் கண்ணுக்கெட்டாத தூரத்தில ஒரு இடத்தில அவர உக்காத்தி வச்சுட்டு, ”Now you are safe!!" அப்படின்னும் சொல்லிட்டுப் போனாராம்!!
எனக்கோ வருத்தம். ஆர்.இ.ட்டப் போய், ஏன் இப்படிப் பண்ணீங்கன்னு கேட்டா, “பின்ன ஆஃபிஸ்லத்தான் நாங்க ஆம்பிளைங்க நிம்மதியா இருக்கமுடியும். இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?”ன்னு சொன்னார் பாவி மனுஷன்!!
அதுக்கப்புறம் ஒவ்வொருத்தரா விஷயம் தெரிஞ்சு,ஆண்களா இருந்தா, பரிதாபமாப் பாத்து “அடப்பாவமே!!"ன்னு அவர்ட்ட சொல்வாங்க. அதுவே பெண்கள்னா, என்கிட்ட “நீ கொடுத்து வச்சவ”ன்னு பொறாமையோட சொல்வாங்க. அதுலருந்து புதுசா யார்கிட்டயும் நான் அவர்தான் என் ரங்க்ஸ்னு சொல்லவே மாட்டேன்.
ஒருநாள் அவரோட டீம்ல உள்ளவர் என்கிட்டச் சொன்னார், ஹுஸைனுக்கு இப்பல்லாம் உன்மேல உள்ள பயம் குறைஞ்சிடுச்சின்னார். அது எப்படி இவருக்குத் தெரியும்னு யோசிச்சுட்டு, அவர்ட்டயே கேட்டேன். “முன்னெல்லாம் 3131க்கு ஃபோன் பண்ணுவேன்னு சொன்னா உடனே நம்ம வேலையையும் சேத்து செஞ்சு தந்துருவாப்ல. இப்பல்லாம் கண்டுக்கிறதில்ல”ன்னாப்ல. அது என்ன 3131ன்னு முழிச்சேன். “உன்னோட ஃபோன் எக்ஸ்டென்ஷன் நம்பர்தான் அது. அதுதான் எங்களுக்கு 100 மாதிரி”ன்னாரு!!
ஒருமுறை ஒரு காண்ட்ராக்டரின் இஞ்சினியர் என்னிடம் வந்து, “மேடம், சார்ட்ட எங்க கம்பெனியோட மெட்டீரியல் சப்மிஷன் ஒண்ணு அப்ரூவலுக்கு கொடுத்தா, சார் மறுபடி மறுபடி ரீ-சப்மிட் பண்ணவைக்கிறார். நீங்க கொஞ்சம் சார்ட்ட அப்ரூவ் பண்ணச் சொல்லுங்க”ன்னார். நான் அவர்ட்ட சொன்னேன், “நீங்க மறுபடி மறுபடி சப்மிட் பண்றதைப் பாத்து அவரே ஒருவேளை அப்ரூவ் பண்ணிடலாம்னு நெனச்சிருப்பாரு. நான் போய்ச் சொன்னேன்னா ஒரேயடியா ரிஜெக்ட் பண்ணிடுவார், பரவாயில்லியா”ன்னு கேட்டேன். ச்சே, குடும்ப ரகசியத்தைக் காக்கணுன்னு நெனச்சாலும் முடியமாட்டேங்குது!!
அதுக்கப்புறம், ஆஃபிஸ் ரொம்ப தூரம்கிறதாலயும், மற்றும் சில காரணங்களினாலும் (அவரில்லை) வேற வேலை தேட ஆரம்பிச்சு, எனக்கு இந்த வேலை கிடைச்சு வந்தாச்சு. அவருக்கு அவ்ளோ சந்தோஷம்!!
|
Tweet | |||
36 comments:
:))
//எனக்கு இந்த வேலை கிடைச்சு வந்தாச்சு. அவருக்கு அவ்ளோ சந்தோஷம்!!//
ஆமா, இருக்காதா பின்ன, மனுஷன் எவ்வளவு கொடுமைய அனுபவிச்சிருக்காரு, ரங்ஸ் எல்லாரும் வந்து பக்கத்துல நின்னு ஆதரவு கொடுங்கப்பா.....
// “உன்னோட ஃபோன் எக்ஸ்டென்ஷன் நம்பர்தான் அது. அதுதான் எங்களுக்கு 100 மாதிரி”ன்னாரு//
பயங்கர காமெடி
:))
சுவாரஸ்யமா இருக்கு..
// ”Now you are safe!!"//
இது சிக்ஸருங்க. :-)).
ரசனையான பதிவு,..
'''ஆஃபிஸ்லத்தான் நாங்க ஆம்பிளைங்க நிம்மதியா இருக்கமுடியும்''''
திருவாசகம்லா சொல்லி இருக்கிறார்.
;-))))))
\\\\“பின்ன ஆஃபிஸ்லத்தான் நாங்க ஆம்பிளைங்க நிம்மதியா இருக்கமுடியும். இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?\\
உண்மைதானே.. ;-))
/// “உன்னோட ஃபோன் எக்ஸ்டென்ஷன் நம்பர்தான் அது. அதுதான் எங்களுக்கு 100 மாதிரி”ன்னாரு//
நீங்க ஒரு டெரர்தான் போங்க. தமிழ்நாட்டுல தைரியசாலிங்களே நாகர்கோவில்காரங்கதான், அவங்களேயே பயப்படவச்சுட்டீங்க.
//“பின்ன ஆஃபிஸ்லத்தான் நாங்க ஆம்பிளைங்க நிம்மதியா இருக்கமுடியும். இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?”ன்னு சொன்னார் பாவி மனுஷன்!//
நெத்தியடி... பாசக்கார மனுஷன்...
செம காமெடி...
:-)))))
//அதுதான் எங்களுக்கு 100 மாதிரி”ன்னாரு!!//
என்ன கொடுமை இது ஹுசைனம்மா :)
//இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?”//
வாஸ்தவம் தான ??
எனக்கு நேரெதிரேதான் அவரோட சீட் இனிமே!! எனக்கு ரொம்ப சந்தோஷமாருந்துச்சு //
மூணு வருஷமா எனக்கும் அப்படித்தான். ரொம்ப போரடிக்குதுங்க.
என் வேலையப் பாத்துகிட்டிருந்தேன். //
நிஜமாவே சொல்லுங்க, வேலையைப் பார்த்தீங்களா, அவரைப் பார்த்தீங்களா ;)
”Now you are safe!!" அப்படின்னும் சொல்லிட்டுப் போனாராம்!! //
ஹாஹாஹா....
நல்லாருந்ததுங்க உங்க அனுபவம்.
மற்றும் சில காரணங்களினாலும் (அவரில்லை)//
நானே நம்பாட்டி எப்படி. நம்பிட்டேன்பா.
பதிவு ரொம்ப ரசிக்கும்படி இருந்துச்சு
”Now you are safe!!" அப்படின்னும் சொல்லிட்டுப் போனாராம்!! //
haahaaaaaaaaa :))))
now he is very very safe ;)
//// ”Now you are safe!!" அப்படின்னும் சொல்லிட்டுப் போனாராம்!!////
ஹா ஹா ஹா. ஆர்.இ படு புத்திசாலி.
//இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?//
ஒரு ஆம்பிளையின் மனசு இன்னொரு ஆம்பிளைக்கு தானே தெரியும்.
//Now you are safe!!" அப்படின்னும் சொல்லிட்டுப் போனாராம்!!//
ஆஃபிஸ்ல மட்டும் சேஃப்ட்டி செஞ்சு கொடுத்தா போதுமா...
அனுபவம் புதுமை
//பின்ன ஆஃபிஸ்லத்தான் நாங்க ஆம்பிளைங்க நிம்மதியா இருக்கமுடியும். இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?”ன்னு சொன்னார் பாவி மனுஷன்!//
சரியாத்தானே சொல்லிருக்காரு.
/////SUFFIX said...
இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?//
ஒரு ஆம்பிளையின் மனசு இன்னொரு ஆம்பிளைக்கு தானே தெரியும்.
/////
ஹா ஹா ஹா. ஷஃபி, கலக்கிட்டீங்க போங்க.
I DO NOT LIKE YOUR BLOG
//பின்ன ஆஃபிஸ்லத்தான் நாங்க ஆம்பிளைங்க நிம்மதியா இருக்கமுடியும்.//
வாஸ்தவம்தான்
ஹுஸைனாம்மா என்னத்த சொல்ரது,
ரொம்ப சூப்பர் பதிவு போங்க, காமடி, சுவாரஸ்யம் கலந்த பதிவு.
உண்மையில் ரொம்ப ரசித்து படித்தேன்.
//இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?// ஹா ஹா
உங்கள் ரங்ஸ் இப்ப ரொம்ப நிம்மதியா வேல பார்ப்பார்...
முத்தக்கா - நன்றி.
தராசு - நன்றி.
கண்ணா - நன்றி.
அண்ணாமலை சார் - நன்றி.
அமைதிச்சாரல் - நன்றி.
ஜோதி - நன்றி.
மலர் - நன்றி.
தமிழ்ப்பிரியன் - நன்றி.
பிரதாப் - நாகர்கோவில்காரங்க தைரியமானவங்களா? அப்படியா? ஏன் காமெடி பண்றீங்க? எங்கூர் மாதிரி போலீஸ்காரரையே அதுவும் அமைச்சர் கண்முன்னாடியே வெட்டுனதெல்லாம் உண்டா உங்க ஊர்ல? பொய் சொல்றதுக்கும் அளவு வேணாமா?
சத்யா - நன்றி.
சின்னம்மிணி - நன்றி.
செய்யது - நன்றி.
அமித்தம்மா - நன்றி.
நவாஸ் - அந்த ஆர்.இ.க்கு இவர் செல்லப்பிள்ளை ஆகிட்டார் கொஞ்ச நாள்ல!!
விக்னேஷ்வரி:
//நிஜமாவே சொல்லுங்க, வேலையைப் பார்த்தீங்களா, அவரைப் பார்த்தீங்களா//
ஹி..ஹி.. மொத நாள்ங்கிறதால அவரத்தான் அதிகமாப் பாத்துகிட்டிருந்தேன்; ஆனா உங்களப்போல மூணுவருஷம்னா கொஞ்சம் போர்தான்!! ;-)
தென்றல்: கணவன் மனைவி ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கிறதுல சாதகங்களைவிட பாதகங்கள்தான் அதிகம். அதெல்லாம் ஒரு பதிவே போடறதுக்கு மேட்டர் இருக்கு!!
ஷஃபி - உங்களுக்கு வீட்ல சேஃப்டி வேணுன்னா, அதுக்கு நீங்க ஒழுங்கா கை, வாயக்கட்டி சொன்ன பேச்சு கேட்டு இருந்தாலே போதும்!!
ஃபாத்திமா - நன்றி.
ஷாஹுல் - ம்ம், சரியாத்தான் சொல்லிருப்பாரு!!
ரவுஸ் - என்ன பிடிக்கலைன்னு சொல்லுங்க; மாத்திக்கலாம்னு தோணுச்சுன்னா மாத்திக்கிறேன். நன்றி கருத்துக்கு.
அபுஅஃப்ஸர் - நண்றி!!
ஜலீலாக்கா - நன்றி அக்கா
ரசனையான சுவாரசியமான பதிவு :)
ஹஹ்ஹஹ்ஹா! ரொம்ப நாள் பின்னே என் எழுத்தை நானே படிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்! குட்! நல்லாஎழுதறீங்க ஹுஸைனம்மா!
நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?
ஒண்ணுமே புரியல உலகத்திலே....
“உன்னோட ஃபோன் எக்ஸ்டென்ஷன் நம்பர்தான் அது. அதுதான் எங்களுக்கு 100 மாதிரி”ன்னாரு"
நல்லா கமெடியா எழுதி எல்லாரையும் ஒரு கமெடி ஷோவுக்கு கூட்டிட்டு போனிங்க. பாவம் ரங்க்ஸ் தப்பிச்சுட்டாரு.
Post a Comment