”ம்மா, வாப்பாவோட வாப்பா எங்கம்மா?”
ஆரம்பிச்சிட்டானா இன்றைய கேள்வி-பதில் பகுதியை? எரிச்சல் மண்டினாலும், பதில் சொன்னேன்.
“அவங்க அல்லாட்ட போயிட்டாங்க”
“ஏன் போனாங்க?”
“அவங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சி, அதான் போயிட்டாங்க.”
“வயசானா அல்லாட்ட போயிடணுமா?”
”ம்ம்.. ஆமா”
“அப்ப உங்க வாப்பா ஏன் இன்னும் அல்லாட்ட போகலை?”
சுர்ரென்று கோபம் மண்டையில் ஏறியது. நங் நங்கென்று அவன் தலையில் நாலு குட்டு வைக்கவேண்டும் என்று கை பரபரத்தது. ஆனால் அது உண்டாக்கக்கூடிய எதிர்மறை விளைவுகளும் உடனே நினைவில் வர, சற்றுப் பொறுமையானேன்.
“என் வாப்பாக்கு இன்னும் வயசாகலை.” உண்மை கலந்த பொய்!!
”எவ்ளோ வயசானா அல்லாட்டப் போகணும்?”
“80, 85 வயசாவது ஆகணும்.” வாப்பாவின் வயசை நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டே சொன்னேன். அடுத்து அதுகுறித்தும் கேள்விவருமோ?
“அப்ப வாப்பாவோட வாப்பாவுக்கும் 80 வயசு ஆனதுனாலத்தான் அல்லாட்ட போனாங்களா?”
“அது... வந்து...80 வயசு ஆகல... ஆனா ரொம்ப உடம்பு சரியில்லாம ஆயிடுச்சி; அதான் அல்லா கூப்பிட்டுகிட்டான்.”
இன்னும் வரக்கூடிய கேள்விகளை அனுமானித்துப் பயந்து அவனைத் திசைதிருப்பினேன். “டைரில கையெழுத்து வாங்கினியா? மேத்ஸ் டெஸ்ட் நோட் எடுத்து வச்சாச்சா?”.
சில மாதங்கள் கழித்து, என் பெற்றோர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது:
“பெரியாப்பா, நீங்க ஏன் இந்த மாத்திரைலாம் சாப்பிடுறீங்க?”
“அது எனக்கு வயசாயிடுச்சில்ல, அதான்.”
“வயசானா மாத்திரை சாப்பிடணுமா?”
“வயசாகும்போது உடம்பெல்லாம் அடிக்கடி சரியில்லாமப் போகும்.அதுக்குத்தான் மாத்திரை.”
“அப்ப உங்களுக்கும் இப்ப உடம்பு சரியில்லையா?”
“ஆமா, கொஞ்சம் சரியில்லை.”
“அப்ப எப்ப ரொம்ப உடம்பு சரியில்லாம ஆகும்?”
அவன் அடுத்து எங்கே வருவான் என்று புரிந்தது. “டேய், போய் உன் வேலையைப் பாரு. தொந்தரவு பண்ணாத.” என்று விரட்ட முனைய, வாப்பா, விடும்மா, சின்ன புள்ளதான, கேக்கட்டும் என்று என்னை அமைதிப்படுத்தி,“நீ சொல்லுப்பா”
“உம்மாதான் சொன்னா, 80 இயர்ஸ் ஆச்சுன்னா அல்லாட்ட போலாமாம். இல்லன்னா ரொம்ப உடம்பு சரியில்லாம ஆச்சுன்னாலும் போலாமாம்.”
“எல்லாருக்குமே ரொம்ப வயசானப்புறம் உடம்பு சரியில்லாமப் போகும். அப்போ அவங்களும் சின்ன பேபிமாதிரிதான். உக்கார, நடக்க ரொம்ப கஷ்டமாயிருக்கும். அதனாலத்தான் ஆண்டவன் அவங்களுக்கு கஷ்டம் வேணாம்னு, கூப்பிட்டு அவன்கிட்ட வச்சு பாத்துக்கிடுவான். புரியுதா?”
அவனுக்கு என்ன புரிந்ததென்று தெரியவில்லை. ஆனால் தொட்டுத் தொட்டு கேள்வியாய் கேட்டுத் துளைக்கும் அவன் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்தான். ஆனால் எனக்குப் புரிந்தது.
|
Tweet | |||
34 comments:
ஹையா நான்தான் பர்ஸ்ட்.
அக்கா,கேட்டது சின்னப்புள்ளைன்னாலும்,ஆழமான கேள்வி.
வயசானவங்களையும் குழந்தைகள் போலவே நாம கவனிச்சுக்கனும்னு சொல்லாம சொல்லிட்டிங்க சகோதரி.
அருமை.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!
ஒரு மாதிரி ஆக்கிட்டீங்களே! :(
பிள்ளைங்க கிட்ட எப்ப இம்மை, மறுமை, இறப்பு பத்தி கொஞ்ச கொஞ்சமா பேச ஆரம்பிக்கலாம்?
உங்க பையன் எப்படிங்க இவ்வளவு புத்திசாலியா இருக்கான், அப்பா மாதிரியோ? :-)
எனக்கும் புரிஞசுபோச்சு...வயதானவர்களை கவனிக்கும்னு சொல்றீங்க? டச்சிங்
அண்ணே நாஞ்சிலண்ணே,
அவங்க பையன் அவனோட அப்பா மாதிரி புத்திசாலிதாண்ணே, இல்லைண்ணா இவ்வளவு அறிவு பூர்வமாவா பேசுவான்.
//“எல்லாருக்குமே ரொம்ப வயசானப்புறம் உடம்பு சரியில்லாமப் போகும். அப்போ அவங்களும் சின்ன பேபிமாதிரிதான். உக்கார, நடக்க ரொம்ப கஷ்டமாயிருக்கும். அதனாலத்தான் ஆண்டவன் அவங்களுக்கு கஷ்டம் வேணாம்னு, கூப்பிட்டு அவன்கிட்ட வச்சு பாத்துக்கிடுவான். புரியுதா?”
//அருமையான,கருத்தாழமிக்க பதில் ஹுசைனம்மா.
நல்லா சொன்னீங்க...
“எல்லாருக்குமே ரொம்ப வயசானப்புறம் உடம்பு சரியில்லாமப் போகும். அப்போ அவங்களும் சின்ன பேபிமாதிரிதான். உக்கார, நடக்க ரொம்ப கஷ்டமாயிருக்கும். அதனாலத்தான் ஆண்டவன் அவங்களுக்கு கஷ்டம் வேணாம்னு, கூப்பிட்டு அவன்கிட்ட வச்சு பாத்துக்கிடுவான். புரியுதா?”//
புரிந்து தெளிய வேண்டியவர்களுக்கான அருமையான பதிவு. நன்றி ஹுசைனம்மா
///சுர்ரென்று கோபம் மண்டையில் ஏறியது. நங் நங்கென்று அவன் தலையில் நாலு குட்டு வைக்கவேண்டும் என்று கை பரபரத்தது.///
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடைவெளியை உண்டாக்குவதே இந்த கோப உணர்ச்சிதானே.
பிள்ளைகளோட கேள்விகளுக்குப் பொறுமையா பதில்சொல்வது ஒரு கலைதான் :)இந்த விஷயத்தில் நாம பல இடங்களில் தோற்றுத்தான்போய்விடுகிறோம்.
நம்மைவிட, தாத்தா பாட்டிகளிடம் பிள்ளைகள் நெருங்கிவிடுவதற்கு அவர்களின் பொறுமையான அணுகுமுறைதான் காரணமாகிறது.
Good Post
சுர்ரென்று கோபம் மண்டையில் ஏறியது. நங் நங்கென்று அவன் தலையில் நாலு குட்டு வைக்கவேண்டும் என்று கை பரபரத்தது. ஆனால் அது உண்டாக்கக்கூடிய எதிர்மறை விளைவுகளும் உடனே நினைவில் வர, சற்றுப் பொறுமையானேன். //
ஹாஹாஹா... ரசிச்சு வாசித்தேன் ஹுசைனம்மா.
குழந்தைகளை சமாளிக்கத் தெரியும் வித்தை யாருக்கும் கைகூடவில்லை.
சுர்ரென்று கோபம் மண்டையில் ஏறியது. நங் நங்கென்று அவன் தலையில் நாலு குட்டு வைக்கவேண்டும் என்று கை பரபரத்தது. ஆனால் அது உண்டாக்கக்கூடிய எதிர்மறை விளைவுகளும் உடனே நினைவில் வர, சற்றுப் பொறுமையானேன். //
அந்த பயம் இருந்தா சரி ;)))))))
கடைசி மெசேஜ் மிகவும் அருமை.
///சுர்ரென்று கோபம் மண்டையில் ஏறியது. நங் நங்கென்று அவன் தலையில் நாலு குட்டு வைக்கவேண்டும் என்று கை பரபரத்தது.///
பையன்கள் என்றாலே சுருன்னு தான் கோபம் வரும் பன்ற ஆட்டம் அப்ப்டி இருக்கும்.
நல்ல சரியான பகிர்வு, இப்ப உள்ள பிள்ளைகள் மிகவும் புத்திசாலிகள்.
என் டிப்ஸ் பகுதியும் படிங்க.
www.tips-jaleela.bologspot.com
ரொம்ப அழகாக சொல்லியிருக்கிங்க. நல்ல பதிவு.
இரண்டு விடயத்தை நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
இவற்றிற்குப் பொறுமை என்பது மிகவும் அவசியமானது.
“எல்லாருக்குமே ரொம்ப வயசானப்புறம் உடம்பு சரியில்லாமப் போகும். அப்போ அவங்களும் சின்ன பேபிமாதிரிதான். உக்கார, நடக்க ரொம்ப கஷ்டமாயிருக்கும். அதனாலத்தான் ஆண்டவன் அவங்களுக்கு கஷ்டம் வேணாம்னு, கூப்பிட்டு அவன்கிட்ட வச்சு பாத்துக்கிடுவான். புரியுதா?”..........என் தந்தையின் நினைவு வந்தது. மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்.
உங்கள் அப்பாவின் பதிலை கேட்டதும் அழுது விட்டேன்..என் தாய் தந்தையரும் நீங்கள் சொல்லும் பருவத்தில் தான் இருக்கிறார்கள்...அவருடைய பதில் அவருக்குள் இருக்கும் பயத்தையே காட்டுகிறது.அவருடைய பயத்தை தெளியவைக்க வேண்டிய விதத்தில் நடந்து கொள்ளும் அளவுக்கு இறைவன் நமக்கு பொறுமையைத் தருவானாக...
நல்ல பதிவு..
கடைசிலே நச் ட்விஸ்ட்
சூப்பர் தான் போங்க பசங்க!!
ஆஹா இப்பதான் பாட்டி கூட பயங்கர ஃபைட் போட்டுட்டு வந்தா இப்படி சொல்லறீங்களே. சரி விடுங்க. காலையில பாட்டிகிட்ட பழம் விட்டுடறேன்
விவரமான பையன் தான் ..
முதியவர்க்ளை கடைசி காலத்தில் தவிக்க விடக்கூடாது என்பதை அருமையாக சொல்லிருக்கீங்க ..
நேற்று என் தந்தையின் 79வது பிறந்தநாள்.
இந்த இடுகையை நான் படிக்காமலேயே இருந்திருக்கலாம்.
//அப்ப உங்க வாப்பா ஏன் இன்னும் அல்லாட்ட போகலை?”//
இடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்ன பண்ணுவீங்க.
நல்லா பல்ப் வாங்கியிருக்கீங்க :)
எடுத்து வைத்த கருத்து அருமை ஹூசைனம்மா, அந்த சின்னக் குழந்தையின் வினாவில் எவ்வளவு அர்த்தம் பொதிந்து இருக்கு!!
ஹ்ம்ம்.... கவிதையாய் ஒரு interview செஞ்ச புள்ளைய நன்கு நங்குன்னு கொட்டனும் போல இருந்துச்சுனு சொன்னதும்...
வேலைதேடி போகும் இளைஞனின் முதல் interview இல்... எங்கே பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்ருவாங்க்லோனு பயம் கலந்த கோவம் வெளிப்படுமே அதை காண முடிந்தது உங்கள் எழுத்தில்....
interviewer romba chamathuuu dhan.... அவருக்கு அன்பான ஒரு அணைப்பு....
ஹுசைனம்மா மிக அருமையான பகிர்வு
குழந்தைகளுக்கு புரியுற மாதிரி எல்லாத்தையும் சொல்லத்தான் வேண்டும்
எங்க நாநா(அம்மாவின் அப்பா)92 வயதிலும் பள்ளிவாசலில் வேலைச்செய்து இன்று வரையிலும் தன் செலவுகளை தானே பார்த்துக்கொள்கிறார். உங்கள் பதிவினை படித்த போது அவரது நினைவு வந்துவிட்டது.
you are tagged here
http://sandanamullai.blogspot.com/2010/01/blog-post_19.html
நல்லாருக்கு..
ஃபாத்திமா - முதலாவது வருகைக்கு நன்றி.
நவாஸ் - நன்றி.
நாஸியா - நன்றி.
//பிள்ளைங்க கிட்ட எப்ப இம்மை, மறுமை, இறப்பு பத்தி கொஞ்ச கொஞ்சமா பேச ஆரம்பிக்கலாம்?//
அதெல்லாம் அவங்களே கேட்கத் தொடங்கிடுவாங்க சரியான வயசுல!!
பிரதாப் - நன்றி. ஆமா, என் பிள்ளைங்க ரெண்டு பேருமே அப்பாவேதான்னு நான் ஒத்துக்குவேன்; திட்டறதுக்கும் வசதியா இருக்குமில்ல!!
தராசு - நன்றி. முந்தின பதில் உங்களுக்கும் சேத்துதான்!!
ஸாதிகா அக்கா - நன்றி.
அண்ணாமலை - நன்றி.
தென்றல் - நன்றி.
ஜெய்லானி - ஆமாங்க, சரியாச் சொன்னீங்க.
சுந்தரா - ஆமாம்.நன்றி.
ஷாஹுல் - நன்றி.
விக்னேஷ்வரி - இத்தன வருஷமாகியும் இன்னும் அந்தக்கலையில தேர்ச்சியடையலை.
அமித்தம்மா - வாங்க, நன்றி.
ஜலீலாக்கா - உங்க டிப்ஸும் பாத்தேன். நன்றி அக்கா.
மாதேவி - வாங்க, நன்றி.
ஃபாயிஸா - நன்றி.
சித்ரா - நன்றி வருகைக்கு.
என்றும் - எனக்குள்ளும் அவர்களைப் பொறுமையாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் காலம் இருக்கிறது. அதற்குள் தெளிந்துவிடுவேன் என்று நினைக்கிறேன், இறைவனருளால்.
அபூஅஃப்ஸர் - நன்றி.
அபி அப்பா - நன்றி வருகைக்கு. பசங்கதான் நிறைய பாடம் படிச்சுத் தர்றாங்க நமக்கு.
தாரணி - ஃபைட்டு பண்றதுக்குத்தானே பாட்டி நமக்கு!! அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாங்க.
அப்துல்லாஹ் - என்ன இப்படி சொல்லிட்டீங்க? அம்மா நல்லா இருக்காங்களா?
சின்ன அம்மணி - அதெல்லாம் (பல்பு) நமக்கு புதுசா என்ன?
ஷஃபிக்ஸ் - சின்னப் பிள்ளைங்க கேக்கறது பெரிசாத்தான் இருக்கு, கருத்தானாலும், பொருளானாலும்!!
அன்புத் தோழன் - புதுவரவு - வாங்க, நன்றி.
தேனக்கா - நன்றி அக்கா. சரியானபடி சொல்லணுமேன்னு ஒரு பயமும் வருது.
ஜீவன்பென்னி - வயசாயிடுச்சு, வேலை பாக்காதீங்கன்னு மட்டும் சொல்லிடக்கூடாது. நன்றி.
முல்லை - வாங்க.
வித்யா - வாங்க; நன்றி.
அம்மா நல்லா இருக்காங்களா?
//
அத்தா,அம்மா மற்றும் யாவரும் நலம் :)
பொறுமை, என்றும் அருமை!
மிக அருமையாகத் தங்கள் தந்தை பதில் சொல்லி இருக்கிறார்.
அதுதானே உண்மையும் கூட.அம்மாவோ அப்பாவோ கஷ்டப்பட்டால் பார்க்க சகிக்குமா. நல்லதொரு பதிவு ஹுசைனம்மா.
Post a Comment