போன பதிவில் சர்தார்ஜி பற்றி எழுதும்போதுதான் யோசித்துப் பார்த்தேன், சர்தார்ஜிகள் ஏன் டர்பன் அணிகிறார்கள்? தெரியவில்லை! அவர்களின் சில பழக்கவழக்கங்கள் அறிந்திருந்த போதிலும், அவர்களின் டர்பன் பற்றி எனக்கு எந்த விபரங்களும், தெரியவில்லை.
முந்தைய ஆஃபிஸில் என்னோடு வேலைபார்த்த சர்தாரிடம் கூட அதுகுறித்து எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. சிங் என்றால் டர்பன் அணிவார்கள்; அல்லது டர்பன் அணிபவர்கள் எல்லாம் சிங் என்றே மனதில் பதிந்திருந்ததால் இதுவரை காரணம் குறித்து யோசிக்கவில்லை. அறியாததை அறிந்துகொள்வதுதானே அறிவுள்ளவர்களுக்கு அழகு!! அறிந்து கொண்டதை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

சீக்கிய மதம் தோற்றுவிக்கப்பட்ட 15ம் நூற்றாண்டு சமயத்தில் தலைப்பாகை என்பது அரசக்குடும்பத்தினரும், பணக்காரர்களும், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும் மட்டுமே அணியக்கூடிய ஒன்றாக இருந்தது. (பழைய படங்கள் சிலவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்). அவ்வகைப் பேதங்களைத் தவிர்த்து, எல்லோரும் சமமே என்ற உணர்வினைத் தோற்றுவிக்கும் முகமாக, சீக்கிய குருவால் தலைப்பாகை சீக்கியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.
ஒரு சீக்கியரின் அடையாளம் எனப்படுவன: தலைப்பாகை, இயற்கையான உருவம், ”கன்கா” என்ற மரச்சீப்பு, மணிக்கட்டில் அணியப்படும் ”கரா” என்ற இரும்பு வளையம், மற்றும் “கிர்பான்” எனப்படும் குறுவாள். இவை அனைத்தும் அணிந்திருப்பவரே ஒரு முழுமையான சீக்கியராவார்.
கிர்பான் (Kirpan) தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், தான் இறைவனுக்கு அடிமை என்றுணர்த்த கராவும் (Kara), தலைப்பாகை மற்றும் கன்கா (Kanka) இவ்விரண்டும் தலைமுடியை ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சீக்கியர் தமக்கு இறைவன் தந்த இயற்கையான உருவத்தோடு ஒன்றி வாழவேண்டும் என்று வலியுறுத்தவே, தலைமுடி, தாடியை வெட்டுவதும், சீர்படுத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கத்தைப் பேணவும் உதவும் என்பதாக வலியுறுத்தப்படுகிறது.
தலைமுடியை உச்சியில் சேர்த்து கொண்டையாகப் போட்டு, அதன்மீது தலைப்பாகை அணிவர். இது “ரிஷி முடி” என்று அழைக்கப்படும். முனிவர்களின் கொண்டை மனக்கண்ணில் வருகிறதா? இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கமும் உண்டு. உச்சியில் போடும் கொண்டையும், அதன் மேல் இறுக்கமாகக் கட்டப்படும் தலைப்பாகையும் தலையில் உள்ள சக்திப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்தி, தெளிவான மனநிலையையும் கொடுத்து, மற்றவர்களின் கெட்ட எண்ணங்களிலிருந்தும் (negative thoughts) அணிபவரைக் காத்து, மனதை ஒருமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இத்தலைப்பாகையானது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அணிவது கட்டாயம். பெண்கள் முடியை, தலையின் பின்பக்கம் கொண்டையிட்டு தலைப்பாகை அணிந்து அதன்மேல் தமது துப்பட்டாவை முக்காடாக இடுவர்.
தலைப்பாகைத் துணிக்கு வெண்மை, கருநீலம், குங்கும நிறம் ஆகியவை அதிகம் விரும்பப்படும் நிறங்கள். தலைப்பாகை அணியும் இவர்களால் ஹெல்மெட் அணிய முடியாது என்பதால், அதிலிருந்தும் சிறப்பு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இராணுவம் உட்பட மற்றுள்ள எல்லாப் பணியிடங்களிலும், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் டர்பன் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலவிதங்களில் அணியப்பட்டாலும், டர்பன் அணிவதைத் தம் இனத்தின் அடையாளமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர் இவர்கள். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்ட இவர்கள், மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர்கள். ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் இவர்கள், பெரும்பாலும் இருபாலருக்கும் பெயர்களில்கூட வித்தியாசம் காட்டுவதில்லை. துணைப் பெயர்களான “சிங்” (சிங்கம்), “கௌர்” (இளவரசி) கொண்டே அறியமுடியும்.
Source: www.sikhnet.com; www.sikhiwiki.org; www.sikhchic.com; www.sikhwomen.com

|
Tweet | |||
26 comments:
good to read as infomration ..
படங்கள் அனைத்தும் அழகு...
ரொம்ப நாளாக இப்படி டர்பன் அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கு,ஆனால் ஏனென்று தெரியாது.
ஒரு முறை பஞ்சாப்பில் வேலை செய்துகொண்டிருக்கும் போது சாலையில் வந்துகொண்டிருந்த ஒருவர் இதே மாதிரி விளக்கத்தை என்னிடம் சொன்னார்.
உங்களுக்கு சீக்கிரமே டாக்டர் பட்டம் கிடைத்துவிடும்.தெளிவான பதிவு.
நல்ல தகவல் ஹுசைனம்மா.அறியாதததை அறியத்தந்து இருக்கின்றீர்கள்.நன்றி
தகவல்களுக்கு நன்றி!
எனக்கு அவங்கள பத்தி ஆச்சரியமான விஷயம் என்னன்னா, தமிழ் நாட்டுல இருக்குற சர்தார்ஜிக்கள் நம்மள போலவே நல்லா தமிழ் பேசுவாங்க..
சென்னையில ஜெனெரல் பேட்டர்ஸன் ரோடுன்னு ஒரு இடம் இருக்கு. அங்க ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் புதுசா கிடைக்கும். அங்க முழுக்க முழுக்க சர்தார்ஜிங்க தான்.. 'நிம்பல்கி நிக்குறான், நம்பல்கி நடக்குறான்'ன்னு பேசாம, சாதாரணமா பேசுவாங்களாம்
ஓய்...பல்லே பல்லே...ஜி
போனப்பதிவுல சர்தார்களை கலாய்த்தற்கு இந்த பதிவை போட்டு பிராயச்சித்தம் தேடியதால் நீங்கள் சர்தார்ஜிகளால் மன்னிக்கப்படுகிறீர்கள்... :-)
பல்லே பல்லே பதிவு சூப்பரப்பூ..
ஹுசைன்னமா. http://niroodai.blogspot.com/2010/01/blog-post_28.html வந்து பாருங்கோ
//மற்றவர்களின் கெட்ட எண்ணங்களிலிருந்தும் அணிபவரைக் காத்து,மனதை ஒருமுகபடுத்துவதாகக் கூற்பப்படுகிறது //
நல்ல செய்திதந்த உங்களுக்கு நன்றி.
அருமையான பதிவு ஹுஸைனம்மா.
//ஒரு சீக்கியர் தமக்கு இறைவன் தந்த இயற்கையான உருவத்தோடு ஒன்றி வாழவேண்டும் என்று வலியுறுத்தவே, தலைமுடி, தாடியை வெட்டுவதும், சீர்படுத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கத்தைப் பேணவும் உதவும் என்பதாக வலியுறுத்தப்படுகிறது.
//
Please review this information. When I was working in Delhi I heard a different information from some of the Sikh brothers, "The Sikhs are warriors created to protect their religion and the people, since they are warrior they don’t want to shave their hair (he explained me a information I forgot, they don’t remove any hair from their body). The above information is verbal not from any source.
Also there is another gentleman who is non-Sikh told me that they are descendants of "dhin-e-ilahi"(Mogul emperor Akbar's religion) again these are all verbal information.
நல்ல தகவல்.
நல்ல தகவல்.
கலக்கிட்டேள் போங்கோ! :)
தகவல்களுக்கு நன்றி!
ஹ்ம்ம். நிறைவான பகிர்வு.
தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். பகுத் அச்சா ஜீ..
ஹ்ம்ம்.... போன பதிவுல கலாய்ச்சதுக்காக தானே இந்த ஐஸ்.... நல்லாவிக்றீங்க sorry sorry நல்லா வைக்றீங்க ஐஸ்.... ஹி ஹி... electionla நிக்கபோரீங்கலா ஹுசைனம்மா... கண்டிப்பா சர்தார்ஜிக்கள் ஒட்டு எல்லாம் உங்களுக்கு தான்...
டர்பன் இல்லாம தலைக்கு குளிச்சு முடி காய வைக்கற மாதிரி என்கிட்ட ஒரு போட்டோ இருக்கு (நண்பரோடது) அனுப்பவா? :))
இன்னொன்னும் சொல்லனும்.. குடும்ப பாசம் அதிகம் இவங்களுக்கு..
வழக்கம்போல குட்
ஓஹ்! தூசி
கீ ஹாலே
ஷங்கா ...
-------------------
நிறைய புதிய விடயங்கள் தெரிந்து கொண்டேன் - நன்று - நன்றி.
சர்தார்ஜிகளின் தலைபாகை பற்ற் நலல் விலாவாரி சொல்லிட்டீங்க.
என் பையன் சர்தார்ஜி என்றாலே கை மேலே தூக்கி கொண்டு ஒரு விரலை நீட்டி கொண்டு ஹோ ஜாய்கே பல்லே பல்லே என்பான்.
நாஸியா ஆமாம் சென்னையில் உள்ள சர்தார்ஜிகள்,
நம்ளல் நிம்பள் சிரிப்பு தான் இருந்தாலும் கழடப்பட்டு தமிழ எப்படியாவது பேசனும் என்று பேசுகிறார்களே.
ஹுஸைனம்மா கலக்குறீங்க அருமையான புதிய பகிர்வு நல்லா இருக்கு நானும் டெல்லியில் இருந்தேன் ஆனா டர்பன் பத்தி அதிகம் யோசித்தது இல்ல அதையே சிறப்பான பதிவாக்கிட்டீங்க உண்மையிலேயே டாக்டர் பட்டம் கொடுக்கலாம்
வெள்ளிநிலா
சங்கவி
வடுவூர் குமார்
ஜெய்லானி
ஸாதிகாக்கா
நாஸியா
பிரதாப்
மலிக்கா
கோமதி அக்கா
சரவணக்குமார்
அனானி (அது ஒரு பெரிய வரலாறு. நான் சுருக்கமாக எழுதிருக்கேன்)
விஜி (கிச்சன்)
ஆதவன்
ஃபாத்திமா
நவாஸ்
ஷஃபி
அன்புத்தோழன்
எல் போர்ட்
ஷாஹுல்
ஜமால்
ஜலீலாக்கா
தேனம்மை அக்கா
வருகை தந்து, பின்னூட்டம் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. புதிதாகத் தெரிந்துகொண்ட தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்ததால் பகிர்ந்துகொண்டேன். அனைவருக்கும் மீண்டும் நன்றி.
சர்தார்ஜிகளின் தலைப்பாகை பற்ரி நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன். அருமையான பதிவு
போன பதிவுக்கு பதில் பதிவா?
நிறைய விஷயங்கள் தொகுத்து அளித்துள்ளீர்கள்.
:-}}}]
Post a Comment