Pages

டிரங்குப் பொட்டி - 6





இந்த வருஷத்தின் முதல் பதிவா நம்ம பிராண்ட் நேம் டிரங்குப் பொட்டி பதிவு போட்டது; அதுக்கப்புறம் போடமுடியாத அளவு மெயின் மேட்டர்ஸ் நிறைய குமிஞ்சிடுச்சு; இப்பவும் கைவசம் நிறைய சமூகசீர்திருத்தக் கட்டுரைகள் இருக்கு, இருந்தாலும் நம்ம பாரம்பரியத்தை ஒரேடியா மறந்துரக்கூடாதுங்கிறதால, உங்களுக்காக இதோ புத்தம்புதிய, இல்லையில்லை, பழம்பெரும் தொன்மை வாய்ந்த டிரங்குப் பொட்டி!

#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

நம்ம மஹாராஷ்டிர சிங்கம் பால் தாக்கரே அவர்களைப் பற்றி சமீபகாலமா நிறைய நியூஸ் வருதே, என்னன்னு விசாரிச்சா, அவர் மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கே, மத்தவங்கள்லாம் வெளியே போங்கன்னு சொல்றாராமே, அதான் சேதின்னாங்க.  மராத்தியர்கள்னா யாருன்னேன்? இப்ப நான் மராத்தி மொழி படிச்சுட்டா வீர மராத்தி ஆகிடுவேனான்னு கேட்டேனுங்க. அப்பச் சொன்னாங்க, தமிழ் தெரிஞ்ச எல்லாரையுமா தமிழர்கள்னு சொல்றோம், தமிழ்நாட்டில பிறந்தாத்தான் தமிழர்கள் அப்படின்னாங்க. 

ஓ, அப்படின்னா மஹாராஷ்டிரத்துல பிறந்தாத்தான் மராத்தியர்கள், கரெக்டான்னேன். புரிஞ்சுதுல்ல, ஆளைவிடுன்னாங்க. இருங்க, இனிதானே முக்கியமான விஷயமே இருக்கு; பாலாசாகிப் தாக்கரே பிறந்தது மத்தியபிரதேசத்துலதானே?  மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கேன்னு சொல்ற இவர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி தன் வாக்கைக் காப்பாற்றுவாரா?ன்னு கேட்டேங்க, அதுக்கு “இந்தா நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு”ன்னு அனுப்பிட்டாங்கங்க!! நீங்க சொல்லுங்க நான் சொன்னது தப்பா? 

தம்பி நீ சொல்லேன், யக்கா நீ சொல்லேன்...


#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

அரசியல்வாதிகள் குறித்து இன்னொரு விஷயம் ரொம்ப வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்: அரசியலில் ஈடுபடுபவர்கள் மூளைக்கு அதிக வேலை கொடுத்து, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்; அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்களாம்.  உண்மைதானே, இயற்கையாக இறந்த அரசியல்வாதிகளில் திரு. ஜோதிபாசு உட்பட பலரும் நூறை எட்டிப் பிடிக்கும் வயதில்தானே மறைந்திருக்கிறார்கள். இப்பவும் திருவாளர்கள்: கருணாகரன், கருணாநிதி, தாக்கரே, வாஜ்பாய் ஆகியோரை வாழும் உதாரணங்களாகச் சொல்லலாமே. 

ஆனா என்ன ஒண்ணு, அந்தக் காலத்துல தேசிய ஒற்றுமை, நாட்டு மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம் பற்றி யோசிச்சு செயல்பட்டு சுறுசுறுப்பா இருந்தாங்க. 


ஸோ, மேட்டர் என்னான்னா,  நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா!!


#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

இந்த வாரம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான திருமதி. ஹிலாரி கிளிண்டன், இரானின் அணு ஆயுத பலத்தை ஒடுக்கும் விதமாய், அந்நாட்டின்மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் முயற்சிக்கு ஆதரவு திரட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். திங்கட்கிழமையன்று, கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவில் பலகலைக்கழக மாணவர்களோடு கலந்துரையாடினார். அதில் எல்லா மாணவர்களுமே அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு எதிராகவே கேள்வி எழுப்பியுள்ளனர்.  “அமெரிக்காவின் நட்புறவோடு இருக்கும் இஸ்ரேலுக்கு அணு ஆயுதம் வைத்திருக்க உரிமையுண்டென்றால், இரானுக்கு ஏன் அந்த உரிமை இல்லை?”, ”இந்தத் தடை ஏன் இரானுக்கு மட்டும்?”, என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது, காஸா பேச்சுவார்த்தை என்று சரமாரியாக வந்த கேள்விகள் அவரைத் திகைக்க வைத்தனவாம். ம்ம்ம், மாணவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!!

#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

தற்காப்புக்கு மிளகாய்ப்பொடி உபயோகிக்கலாம் என்று தெரியும். ஆனால், மிளகாய்ப்பொடி பாக்கெட்டைக் கைப்பையிலிருந்து எடுத்து, பிரித்து, கையில் எடுத்து தூவுவதற்குள் திருடன் ஓடிவிடக்கூடாதே!! அப்படியே தூவினாலும், எதிர்க்காற்றில் நம் கண்ணிலேயே விழுந்துவிட்டால் திருடனுக்கு இன்னும் கொண்டாட்டம் ஆகிவிடுமே! சரி, கரெக்டாக தூவி, திருடன் கண்ணிலேயே விழுந்து, அவனைப் பிடிச்சாச்சு என்றாலும், பின்னர் நம் கையும் எரியுமே? என்றெல்லாம் நினைத்திருந்தேன்.  

அதிரை எக்ஸ்பிரஸ் எனும் பதிவர் தற்காப்பு எனும் பதிவில் ஒரு சுவையான முறையைச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். ஜவ்வரிசியைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தலாமாம். எப்படி என்று போய்ப் பாருங்கள்.

#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

என்ன திடீர்னு தற்காப்பு ஆயுதங்கள் பத்தியெல்லாம் பேசிருக்கேனேன்னு யோசிக்கிறீங்களா, பின்ன, உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்? அதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!


Post Comment

38 comments:

☀நான் ஆதவன்☀ said...

//உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்.//

ஹலோ யாருங்க ...ஹூஸைனம்மாவா..அப்படி யாரையும் தெரியாதே. ராங் நம்பர்ங்க

Thamiz Priyan said...

டிரங்க பெட்டிக்குள் சுறுசுறுன்னு காரமா இருக்கு... :-)

SUFFIX said...

டிரெங்குப் பெட்டி இந்த தடவை ரொம்ப கணமா இருக்கு!! 'தாக்கரே பிறந்தது மத்தியபிரதேசத்துலதானே?' அப்படியா? அவரே மறந்திருப்பாரோ:)

Chitra said...

என்ன திடீர்னு தற்காப்பு ஆயுதங்கள் பத்தியெல்லாம் பேசிருக்கேனேன்னு யோசிக்கிறீங்களா, பின்ன, உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்? அதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

............ நீங்கள் எழுதிய இடுகைகளுள் மிக சிறந்தவற்றில் இது ஒன்று. அந்த நக்கல் எழுத்து நடை................. !!!!!! Awesome!

ஜெய்லானி said...

///ஸோ, மேட்டர் என்னான்னா, நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா!!///

நா கட்சி ஆரம்பிச்சா கொள்கை பரப்பு செயலாலராக நீங்க வருவீங்களா??( அப்படியே 10 ஓட்டில் ஜெயிச்சி ஒருவேளை நா முதலமைச்சரானால் துனை முதலமைச்சர் போஸ்ட் உங்களுக்குதான். இப்ப ஓக்கே வா??)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. ஒரே அரசியல் வாடை அடிக்குது..

தாக்ரே அப்பயிருந்தே இப்படித்தான் பேசிட்டு இருந்திருக்கார் போல?

ஈரான் வச்சிருக்கறது சரியா தப்பா? எனக்கு விடை தெரியல இதுக்கு..

இப்பத்தான் இங்க ஒரு பொண்ணோட சாவிக்கொத்துல பாத்தன்.. பெப்பர் ஸ்ப்ரே கோர்த்து வச்சிருந்தா.. இங்கயெல்லாம் துப்பாக்கி வச்சிருக்காங்களே.. அதையெடுத்து அடிச்சிட்டு ஓடறதுக்குள்ள சுட்டுட மாட்டாங்க????

pudugaithendral said...

கலக்கிட்டீங்க.அதுவும் பால்தாக்கரே மேட்டர் டக்கர்.

எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.

Thenammai Lakshmanan said...

//ஸோ, மேட்டர் என்னான்னா, நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா!!
//

உள் நாட்டிலிருந்து உலக அரசியல் வரை சுப்பர் பஞ்ச் ஹுசைனம்மா.. கலக்குங்க ..நான் இருக்கேன் உங்க கூட எப்பவும் ...

ஸாதிகா said...

சட்டியில் போட்ட கடுகு மாதிரி டிரங்கு பொட்டியை படபட வென்று தாளித்து இருக்கிறீர்கள்.

ஜவ்வரிசி மேட்டர் புதிதாக உள்ளது.சமீபத்தில் சென்னையில் ஸ்ப்ரே ஒன்றினை தயாரித்து இருக்கின்றார்கள்.எதிராளி முகத்தில் சர்..என்று ஸ்ப்ரே செய்தால் அம்பேல் தான்.இந்த ஸ்ப்ரே காவல் நிலையத்தில் மட்டுமே கிடைக்குமாம்.இது பத்திரிகையில் படித்த செய்தி.நமக்கு எல்லாம் அந்த ஸ்ப்ரேக்கு தேவை இருக்காது.நாம்தான் டெரர் காட்டி விடுவோம் இல்லையா?(ஹுசைனம்மா.இந்த "நாம்தான்" உங்களையும் சேர்த்துதான்.சரிதானே?)

நாஸியா said...

Spicy petti

அ.மு.செய்யது said...

நீங்க எழுதுற ரேஞ்சுக்கு ஜெட் பிரிவு பாதுகாப்பு தான் உங்களுக்கு தேவைப்படும்னு நினைக்கிறேன்...

பாத்து சூதானமா இருந்துக்கன்ங்க..!!!

Prathap Kumar S. said...

//உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்.//

ஹலோ யாரு... தாக்கரேயா... என்னது ஹுசைனம்மா அட்ரஸ் வேணுமா...? ஆட்டோவாட வாங்க நான் லொக்கேஷன் மேப்பே தர்றேன்... அப்படியே ஒபாமாகிட்டயும் சொல்லிருங்க...

கண்ணா.. said...

அமீரகத்துக்கு ஆட்டோ அனுப்ப முடியாதுங்கற தைரியம்..............

ம்...நடத்துங்க.........நடத்துங்க.......

தராசு said...

எங்க இருந்தா என்ன, அங்கயும் ஆட்டோ அனுப்பப் போறாங்க, பாத்து சூதனமா இருங்கம்மா

சென்ஷி said...

ஆஹா... வெயில் காலம் வந்துடுச்சுன்னு டிரங்கு பொட்டி இம்புட்டு சூடாகிடுச்சா..

தாக்கரே மேட்டர் அருமை.. :)

ஹுசைனம்மாவுக்காக, அமீரகத்துக்கு ஆட்டோல வர்றவங்களுக்கு ஷார்ஜாவுல டீ பார்ட்டி தரலாம்ன்னு இருக்கோம்.

டவுசர் பாண்டி said...

//எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்? //

இன்னா , இன்னா பேஜாரு ஆவப் போவுதோ ? எல்லாமே கரீக்ட்டா கேக்குறாங்க ? இது மேரி (கரீக்டா) பேசக் கூடாதுன்னு , பிரியலயே !! யார்னா எட்து , சொல்லுங்கப்பா !!

malar said...

டிரங்கு பொட்டி என்றவுடன் எதோ அந்த காலதில் கல்யாணவீடுகளில் மாபிள்ளைவீடுகளில் இருந்து பெண் வீட்டுக்கு கொடுக்கும் சமாச்சாரமோ என்று நினைதேன்....


’’நம்ம மஹாராஷ்டிர சிங்கம் பால் தாக்கரே அவர்களைப் பற்றி சமீபகாலமா ’’’’

மனிசனுகு கிழடு தட்டி வருசமாச்சு துடிகுறையவில்லை.

’’’அதிரை எக்ஸ்பிரஸ் எனும் பதிவர் தற்காப்பு ’’
பார்தேன் நல்ல பதிவு.....

பாத்திமா ஜொஹ்ரா said...

//“அமெரிக்காவின் நட்புறவோடு இருக்கும் இஸ்ரேலுக்கு அணு ஆயுதம் வைத்திருக்க உரிமையுண்டென்றால், இரானுக்கு ஏன் அந்த உரிமை இல்லை?”, ”இந்தத் தடை ஏன் இரானுக்கு மட்டும்?”, என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது, காஸா பேச்சுவார்த்தை என்று சரமாரியாக வந்த கேள்விகள் அவரைத் திகைக்க வைத்தனவாம். ம்ம்ம், மாணவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!!//

அர்த்தமுள்ள கேள்விகள்

வல்லிசிம்ஹன் said...

டிரன்க் பெட்டின்னு ஆசையா வந்தனே. அனலில்லா பறக்குது. :)
சும்மா தூள் கிளப்பி இருக்கீங்க ஹுசைனம்மா.!கரெக்டா கெள்வி. யார் பதில் சொல்லப் போறாங்க:(

Starjan (ஸ்டார்ஜன்) said...

டிரங்கு பொட்டியில நிறைய இருக்கு போல ..

அம்பிகா said...

//உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்.//

சூப்பருங்க.

Abu Khadijah said...

பெட்டிய தூக்கவே முடியலே, சரியான வைட்டுங்க, கவலைப்படாதிங்க உங்க பாதுகாப்புக்கு உங்க ரெண்டு பசங்க கிட்டயும் தண்ணி துப்பாக்கிய கொடுத்துடலாம்.

ரொம்ப நன்றியம்ம என்னுடைய வலைப்பதிவை இங்கு அறிமுக படுத்தியதற்கு,

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பால் தாக்ரே பிறந்த ஊர் விஷயமா உங்களுக்கு ஒரு மைல் அனுப்பியிருக்கிறேன், செக் பன்னுங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

உள்நாடு டூ உலக அரசியல் //

கலக்கறீங்க மேடம்.

ஆகியோரை வாழும் உதாரணங்களாகச் சொல்லலாமே. //

சில அரசியல் ஆதாயங்களுக்காக போற உயிரை புடிச்சிவெச்சிட்டு உக்காந்துட்டிருக்காங்கன்னுல்ல நான் நெனச்சிக்கிட்டிருந்தேன். :)))))))))

எம்.எம்.அப்துல்லா said...

//ஸோ, மேட்டர் என்னான்னா, நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா!!

//

குதிச்சா மட்டும் போதாது. யோசிக்கணுமே :))

சமீபகாலமாக நா உங்க
எழுத்துக்கு தீவிர வாசகனாயிட்டேன்.மெருகேறிக்கிட்டே போகுது :)

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னம்மா. சூடாயிருக்கு டிரங்குபெட்டி..

பயப்புடவேண்டாம் பூனைப்படை யானைப்படை வேணுமுன்னா அனுப்பிவைக்கவா?

ஹுஸைனம்மா said...

ஆதவன் - நன்றிங்க; ஆபத்து காலத்துல உங்களை நமபலாமா வேண்டாமான்னு தெரிஞ்சுகிட்டேன்! ;-)))

தமிழ்ப்பிரியன் - நன்றிங்க.

ஷஃபிக்ஸ் - வெயிட்டான பார்ட்டி நாங்க!!

சித்ரா - நன்றி சித்ரா. உங்களை மிஞ்ச முடியுமா!!

ஜெய்லானி - கொ.ப.சே வா இருக்கிறேன்; ஆனா நாந்தான் முதலமைச்சர். டீலா?

எல் போர்ட் - துப்பாக்கிய விட ஸ்ப்ரே விரைவா பயன் தரும், சரியா பயன்படுத்தினா!! டைமிங்தான் இதில முக்கியம்.

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - நன்றிங்க. நீங்கள்லாம் இருக்கீங்கங்கற தைரியம்தான்.

தேனக்கா - கூடவே இருப்பேன்னு சொல்ற மனசு வரணுமே, சந்தோஷம் & நன்றி அக்கா.

ஸாதிகாக்கா - ஹி.. ஹி.. நானும் டெரர்னாலும், சீனியர் முன்னாடி கொஞ்சம் பணிவாத்தான் இருப்போம். :-))

நாஸியா - ஸ்பைசி சாப்பிடத்தானே பிடிக்கும் இப்போ!! ;-))

செய்யது - “இஜ்ஜட்” பிரிவு பாதுகாப்பு தெரியும், அதென்ன “ஜெட்” பிரிவு? இண்டர்நேஷனல் பிரபலங்களுக்கானதா? ;-))))

பிரதாப் - நாஞ்சிலார்னு சொல்லாம சொல்றீங்க!!

கண்ணா - நம்மூருக்காவது ஆட்டோ!! இங்கே தண்ணி லாரிய விட மோசமான டிரக்கெல்லாம் இருக்கே, பயம் இருக்கத்தான் செய்யுது!!

ஹுஸைனம்மா said...

தராசு - என்னா அக்கறை உங்களுக்கு எம்மேல, நன்றிண்ணே!!

சென்ஷி - எப்பா, கண்ணக்கட்டுதே, சென்ஷியா இவ்வளவு பெரிய பின்னூ எழுதிருக்கது?? ஆனா, டீ பார்ட்டி படிச்சு தெளிவாகிட்டேன்!!

பாண்டியண்ணே - இன்னாத்தன்னே எட்து சொல்லச் சொல்றீன்கோ? மைக்கையா கையில எட்து பேசச் சொல்றீங்கோ? :-)

மலர் - ஆமா, அந்தக் காலத்துல எங்க ஊர்ல பெண்ணுக்கு “டிரங்குப் பொட்டி”லதான் பெண்ணுக்கு சீர் கொடுப்பாங்க மாமியர்!!

ஃபாத்திமா - கேள்விக்கேத்த பதிலத்தான் காணோம், இல்லியா?

வல்லிம்மா - வாங்கம்மா. அனல் பறக்குதா, குளிர்க்கு இதமா இருக்குமே! (இங்க குளிர் இப்ப) :-)

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - வாங்க. ஆமா, இன்னும்கூட நிறைய் கேள்விகள் இருக்கு

அம்பிகா - நன்றி அம்பிகா.

அதிரை எக்ஸ். - நான் பேசுன விஷயத்துக்கு சம்பந்தமா வந்துது, அதான் சொன்னேன். நன்றிங்க.

அமித்தம்மா - அதேதான், அந்தக்காலத்துல தேச ஒற்றுமை பத்தி சிந்திச்சு ஆயுசு கூடுச்சு; இந்தக் காலத்துல குடும்ப ஒற்றுமை... அதென்னது மேடமா, ஏங்க, ஏன்? :-(

அப்துல்லா - யோசிக்கவா விஷயமிருக்காது - எந்த ஏரியாவை எப்படி வளைக்கலாம், இளவ்ரசர்களுக்கு எப்படி பங்குபோடலாம்...

ரொம்ப நன்றி அப்துல்லா, பாராட்டுக்கு. எழுத்தில சீனியர்கிட்ட இதக் கேட்கும்போது சந்தோஷமா இருக்கு.

மலிக்கா - ஏங்க ஜூ வச்சிருக்கீங்களா, யானை அனுப்பட்டுமான்னெல்லாம் கேகுறீங்க? ;-)

Menaga Sathia said...

டிரங்குப் பெட்டி மேட்டர்லாம் சூப்பர்ர் ஹூசைனம்மா!!அப்பப்ப டிரங்கு பெட்டியை திறந்துவிடுங்க...

ஷாகுல் said...

//ஸோ, மேட்டர் என்னான்னா, நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா!!//

cost of politics ரொம்ப அதிகமா ஆகிடுச்சி. நம்ம பட்ஜெட் தாங்காது. //உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்.//
ஸ்ஸப்பா முடியல.

ஷாகுல் said...

ஒரு தாக்ரேவுக்கு ஊட்டில ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்காம்.

அன்புத்தோழன் said...

//உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே//

எப்பா!!! இவ்ளோ சின்ன வயசுல என்ன ஒரு அரசியல் ஞானம்....புல்லரிக்குது ஹுஸைனம்மா....

அன்புத்தோழன் said...

//நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா//

நீங்க தைரியமா எலக்சன்ல நில்லுங்க , நான் ஒட்டு போடறேன் உங்களுக்கு.....ஹா ஹா நூறு வருஷம் வாழ்னுமில்ல....?? ;-)

அன்புத்தோழன் said...

//எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்.//

ஹே ஹே அரசியல்ல இதுலாம் சாதரணமப்பா....

(இருந்தும் ஹுஸைனம்மா உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு.... ;-) ,கீப் இட் அப்....)

பாத்திமா ஜொஹ்ரா said...

உள்ளதை உள்ளது படி சொல்லி-அசத்திவிட்டீர்கள்.

Anonymous said...

அரசியல்ல குதிக்கறதா. அவ்வளவு நாள் எல்லாரோட வயித்தெரிச்சலை கட்டிக்கிட்டு உயிர் வாழறதுக்கா :)

ஹுஸைனம்மா said...

வாங்க மேனகா, நன்றி.

ஷாஹுல் - Cost of politics அதிகம்னாலும், அதில வர்ற returnsம் அதிகம்தானே!! ;-)) நம்மளப் போல சாமான்ய ஆட்களால, ஊட்டியில் கெஸ்ட் ஹவுஸ் வாங்க முடியுமா சொல்லுங்க?

அன்புத்தோழன் - //இவ்ளோ சின்ன வயசுல என்ன ஒரு அரசியல் ஞானம்// அக்கான்னு கூப்பிடற என்னைவிட சீனியர் பதிவர்கள் மத்தியில, எனக்கு சின்னவயசுதான்னு நீங்களாவது புரிஞ்சுகிட்டீங்களே நன்றி!!

ஃபாத்திமா - வாங்க, நன்றி கருத்துக்கு.

சின்னம்மிணிக்கா - அடுத்தவங்க வயித்தரிச்சலைக் கட்டிக்ககூடாதுன்னு நாம பயப்படறோம்; ஆனா பாருங்க, அப்படி லட்சக்கணக்கானவ்ர்களோட வவுத்தெரிச்சலக் கட்டிகிட்டு இந்த அரசியல்வாதிங்க நல்லாத்தானே இருக்காங்க?