Pages

வலைக்காதல் வலை

google.com

சானியா என்றாலே சர்ச்சைதான் போல!! ஷோயப்பை திருமணம் செய்வதாக அறிவித்தார், தொடங்கிவிட்டன சர்ச்சைகள். இம்முறை அவரை விட்டுவிட்டு, ஷோயப் - ஆயிஷா சித்திக் குறித்த விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

அவர்களுக்குத் திருமணம் நடந்ததா,  இல்லையா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை. திருமணம் நடந்த அத்தாட்சியாக நிக்காஹ் பத்திரம், பரிசளிக்கப்பட்ட  ‘மேன் ஆஃப் த மேட்ச்’ விருது, கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை, ஹைதை தாஜ் ஹோட்டலில் தங்கியதற்குச் சாட்சிகள் என்று ஆயிஷா தன் தரப்பை விளக்கி, காவல்துறையிடமும் வழக்குப் பதிந்ததில், காவல்துறை ஷோயபின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்யுமளவு நடந்துகொண்டிருக்கிறது. நல்ல முடிவுகள் வரட்டும். 

இந்தப் பிரச்னை தொடங்கியது எதை வைத்து? ஷோயப், ஆயிஷா இருவரும் நெட் வழி பழகி, படங்கள் பரிமாறி, பின் திருமணம் செய்தனர் என்று சொல்லுகின்றனர். ஷோயப் சொல்லும் குற்றச்சாட்டு, எனக்கு வேறு பெண்ணின் படத்தைக் காட்டி ஏமாற்றி விட்டனர் என்று. ஆயிஷாவோ, நான் குண்டாக இருப்பதால்தான் என்னை வெறுக்கிறார் என்கிறார். ஆக, அடிப்படை பிரச்னை, அழகுதான்!!

இந்தப் பிரச்னை சாமான்யர்களிலும் நிறைய பேருக்கு நடக்கிறதென்றாலும், இவர்கள் பிரபலமானவர்கள் என்பதால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நெட்டில் சாட்டிங் செய்வதும், புகைப்படங்கள் பரிமாறிக் கொள்வதும், பின் நேரே திருமணம். திருமண வாழ்வையும் நெட்டிலா பின்ன முடியும்? நேரிடையாகப் பிரச்னைகளைச் சந்திக்கும்போது கருத்துவேறுபாடுகள் வர, உடனே அதிரடித் திருமணம் போல அதிரடியாகப் பிரிவும்!!

மேலும், இக்காலத்தினர்களுக்கு, புற அழகுதான் அவசியமாக இருக்கிறது. வலையில் புகைப்படங்கள் பரிமாறி, இருவரும் அழகு என்றால்தான், நட்பு தொடர்கிறது. சிலர் அதற்கென்றே ஸ்பெஷலாக ஃபோட்டோ எடுத்து வைத்திருப்பார்கள். நேரில் பார்க்கும்போது ஏமாற்றம் வருமளவுக்கு!!

 நம் ஊர்களில் ஒரு கல்யாணம் என்றால் பெரியவர்கள் எவ்வளவு அலசுவார்கள், விசாரிப்பார்கள், வடிகட்டுவார்கள்? அதையெல்லாம் ஓல்ட் ஃபேஷன், இருமனம் இணைகையில் மற்றவர்கள் சம்மதமெதற்கு என்று புறந்தள்ளி அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலமாய்த் திருமணங்கள் நடக்கின்றன. (இப்பல்லாம் லிவிங் டுகெதர்தானாம்!!) 

அப்படியே பெரியவர்களிடம் பெண் பார்க்கும் பணியை ஒப்புவித்தாலும், இரண்டு நிபந்தனைகள் இட்டே பணிக்கின்றனர். பொண்ணு ”வெள்ளையா இருக்கணும், அழகா இருக்கணும்” என்று சாம்பிளுக்கு அப்போதைய  முண்ணனி நடிகையின் படத்தையும் கொடுத்துவிடுகின்றனர். (அந்நடிகையின் மேக்கப்பில்லாத படத்தை இவர்களிடம் கொடுக்கணும்!!)

இண்டர்நெட் வழி நட்பு கொண்டு, அந்நட்பை வளர்த்து, திருமணம் வரை வருவதெனும்போது, சில அடிப்படை விஷயங்களை மறந்துவிடுகின்றனர். நட்புறவு வேறு, திருமண வாழ்வு வேறு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.  வலைவழி தூரத்தில் இருக்கும் இருவர் நட்பாக இருக்கும்போது வராத பிரச்னைகள், இருவர் இணைந்து வாழும்போது வரும். பிரச்னைகளைப் புரிந்து, மனம்விட்டுப் பேசித் தீர்க்கும் முதிர்ச்சி வேண்டும்.

அழகை மட்டும் அடிப்படையாக் கொண்டு நடக்கும் திருமணங்கள், கரடுமுரடாகவே இருக்கக் காணலாம் பல நேரங்களில். இங்கே ஆயிஷா புகைப்படம் மாற்றிக் கொடுத்தாரென்றும், இருவர் இருந்த புகைப்படம் என்பதால் அவருடன் இருந்தவரைத்தான் ஆயிஷா என்று நினைத்தேன் என்று ஷோயபும், இல்லை என்னை நேரில் பார்த்து என் எடையைக் குறைக்கும்படி அறிவுரை கூறினார் என்று ஆயிஷாவும் மாறிமாறி குற்றாம்சாட்டிக் கொள்கிறார்கள். இதுவே இருவருமே அழகைப் பெரிதாக எண்ணாமல், அன்பை, குணத்தைப் பெரிதாக நினைத்திருந்தால் ஷோயப் ஆயிஷாவின் எடையை குறைவாக நினைப்பாரா? அல்லது ஆயிஷாதான் வேறு படத்தைக் காண்பித்திருப்பாரா?

ஆயிஷாவும், 2002ல் நடந்த திருமணத்தை விட்டு விலகாமல் ஏன் எட்டு வருடங்கள் காத்திருந்தாரோ? சானியாவும் அழகாக இல்லையென்றால் ஷோயப் விரும்பியிருக்க மாட்டாரோ? என்னென்னவோ கேள்விகள் எழுகின்றன. பதிலைத் தேடிக்கொண்டிராமல் பாடங்கள் படித்துக் கொள்வதே நல்லது.

இன்னொரு விஷயம், பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும், திருமணம்வரை, சிலர் 24 மணிநேரமும் சாட்டிங், செல்ஃபோன், எஸ்.எம்.எஸ். என்றிருக்கின்றனர். மேற்சொன்ன வலைக்காதலுக்குச் சற்றும் குறைவில்லாத, சொல்லப்போனால் இன்னும் அதிக ஆபத்துகள் கொண்டது இது. நமக்கென்று நிச்சயிக்கப்பட்டவர்தானே என்ற சுதந்திரத்தால், இப்படிப் பேசிப்பேசியே, திருமணத்திற்கு முன்பே (தம்பதிகள் அளவில் மட்டுமல்ல, குடும்ப அளவிலும்) கருத்துவேறுபாடு ஏற்பட்டு தடையான திருமணங்களும் உண்டு. அல்லது, இவ்வாறான தொடர்பேச்சுக்களால், ஒரு பிம்பம் எழுப்பப்பட்டு, திருமணத்திற்குப் பின்னும் அதே ரசனையை எதிர்பார்த்து, பிம்பம் உடைபட்டு, பிரிவு வரை சென்று பிழைத்த திருமணங்களும் உண்டு!! 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்.... 

(என்னவோ, இதை எழுதும்போது, சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும்,  (நான் பதிவெழுத வந்தபின் நடந்த) முதல் பதிவர் சந்திப்பின்போது எடுத்த படங்களைப் பதிவுகளில் பார்த்து நான் அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது).


Post Comment

100 comments:

அன்புடன் மலிக்கா said...

நான் தான் ஃபஸ்டா.
மிகச்சரியா சொல்லியிருக்கீங்க ஹுசைன்னம்மா.
இன்றைய தலைமுறையினர்மட்டுமல்ல எல்லோரும் சாட்டிங் சோட்டிங்கென எங்கோ போகிறது உலகம்.

எல்லாவற்றிக்கும் ஓர் வரையரை உண்டு.

அதுசரி முதல்சந்திப்பில் உங்களை அதர்சிக்குள்ளாக்கியது நானில்லையே!!!!!!!!பாவம் நான் பச்சபுள்ளை ஹுசைன்னம்மா

சிநேகிதன் அக்பர் said...

என்னத்தை சொல்ல.

நீங்கள் சொல்வது சரிதான். மனம் பார்த்து மணம் செய்ய வேண்டும்.

நாஸியா said...

ஒரு பக்கம் சானியாவ பார்த்தா பாவமா இருக்கு...

நேத்து சன் நியூஸில ஒரு காமெடி.. உபியில உள்ள ஏதோ ஒரு மதரசாவுல உள்ள உலமா, 'சானியா இந்தியாவின் சொத்து, இந்தியாவின் அது, இந்தியாவின் இது, அவர் பாகிஸ்தானிய முடிக்க கூடாது'ன்னு ஒரே கூச்சல்... சிரிப்பு தான் வந்துச்சு எனக்கு.. ஹிஹி..

Unknown said...

last paragraph. HA HA HA.

சாந்தி மாரியப்பன் said...

அளவுக்கு மீறிய சுதந்திரம் என்னிக்குமே ஆபத்துதான்.

Vidhoosh said...

:) சந்தோஷம். அருமையான பத்தி. வேறென்ன சொல்ல.?

கண்ணா.. said...

//அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்.... //

ம். சரிதான்....

எது அழகு? எது காதல்? என்ற புரிந்துணர்வு சிலரிடம் சரியாக இல்லை. அதுதான் பல பிரச்சினைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன்.

Ahamed irshad said...

ஷோயிப் பிரச்சனையில லேட்டஸ்ட் காமெடி: அந்தப் பொண்ணு ஆயிஷா மாலிக்கால கர்ப்பமாம், எங்கே போய் முடியப்போகுதோ........

சென்ஷி said...

//அந்நடிகையின் மேக்கப்பில்லாத படத்தை இவர்களிடம் கொடுக்கணும்!!//

LOL :)))

Vidhoosh said...

பத்தி எல்லாமே அருமை. மற்றபடி போட்டோக்களையோ எழுத்துக்களையோ வைத்து யாரையும் பற்றி முடிவெடுக்க முடியாது. அழகு என்பது ஒரு அளவுகோல் - ஒரு முதற்கட்ட selling skill / impression மட்டுமே. அதுவே கடைசி வரை காப்பாற்றும் என்று சொல்ல முடியாது. இங்கே சானியாவாகட்டும் எந்தப் பெண்ணும் ஆகட்டும், அவர் பொதுவில் வந்து விட்டால், போடும் உடை முதல் அழகு வரை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கும் உரிமை யாருக்கு வேண்டுமானாலும் வந்து விடுகிறது. சானியா பாவம், அவருக்கு திருமணம் கூட அல்லல். :( இவரது இப்போதைய திருமண முடிவும், முந்தைய முடிவும் அவர் சுய-முடிவு எடுக்கவியலாதவர் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. திறமையும், பணமும், புகழும், அழகும் மட்டும் ஒரு பெண்ணை வெற்றியாளார் ஆக்குவதில்லை என்பதற்கு சானியா உதாரணமாக ஆகி விடக்கூடாது பாவம்.

சென்ஷி said...

/இதை எழுதும்போது, சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும், (நான் பதிவெழுத வந்தபின் நடந்த) முதல் பதிவர் சந்திப்பின்போது எடுத்த படங்களைப் பதிவுகளில் பார்த்து நான் அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது). //

இதுக்குத்தான் நான் , நம்ம குரு நாகேஷ் போட்டோவை வச்சிருக்கேன். யாரும் ஏமாந்து போக மாட்டாங்கள்ல :-)))

சந்தனமுல்லை said...

லாஸ்ட் பாரா - :)))

அப்துல்மாலிக் said...

//நாஸியா said...

ஒரு பக்கம் சானியாவ பார்த்தா பாவமா இருக்கு...

நேத்து சன் நியூஸில ஒரு காமெடி.. உபியில உள்ள ஏதோ ஒரு மதரசாவுல உள்ள உலமா, 'சானியா இந்தியாவின் சொத்து, இந்தியாவின் அது, இந்தியாவின் இது, அவர் பாகிஸ்தானிய முடிக்க கூடாது'ன்னு ஒரே கூச்சல்... சிரிப்பு தான் வந்துச்சு எனக்கு.. ஹிஹி//

இன்னுமொரு பக்கம் பிஜேபீ காரர்கள் சானியாவை நாடுகடத்தவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களே கவனிக்கலியா

இதெல்லாம் அரசியல்லெ சகஜமப்பா

அப்துல்மாலிக் said...

//நாஸியா said...

ஒரு பக்கம் சானியாவ பார்த்தா பாவமா இருக்கு...

நேத்து சன் நியூஸில ஒரு காமெடி.. உபியில உள்ள ஏதோ ஒரு மதரசாவுல உள்ள உலமா, 'சானியா இந்தியாவின் சொத்து, இந்தியாவின் அது, இந்தியாவின் இது, அவர் பாகிஸ்தானிய முடிக்க கூடாது'ன்னு ஒரே கூச்சல்... சிரிப்பு தான் வந்துச்சு எனக்கு.. ஹிஹி//

இன்னுமொரு பக்கம் பிஜேபீ காரர்கள் சானியாவை நாடுகடத்தவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களே கவனிக்கலியா

இதெல்லாம் அரசியல்லெ சகஜமப்பா

அப்துல்மாலிக் said...

பிரபலமானவர்கள்தான் மேலும் பிரபலமாகிறார்கள்

//தூரத்தில் இருக்கும் இருவர் நட்பாக இருக்கும்போது வராத பிரச்னைகள், இருவர் இணைந்து வாழும்போது வரும்.//

சரிதான்..

Deepa said...

//என்னவோ, இதை எழுதும்போது, சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும், (நான் பதிவெழுத வந்தபின் நடந்த) முதல் பதிவர் சந்திப்பின்போது எடுத்த படங்களைப் பதிவுகளில் பார்த்து நான் அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது).//
:-))

ஹுஸைனம்மா said...

அட ஏங்க, இவ்ளோ பெரிசா ஒரு பதிவு எழுதிருக்கேன், அதைப்பத்தி ஒண்ணும் சொல்லாம, எல்லாரும் அந்தக் கடைசி பத்தி பத்தியே பேசுறீங்களே??!!

;-)))

அன்புத்தோழன் said...

கடைசி பத்தி.... ha ha ha :-))) But நாங்க உஷார்ல.... யாரையும் அதிர்ச்சுக்குள்ளாக்க மாட்டோம்ல.... How's it...

சென்ஷி said...

/Blogger ஹுஸைனம்மா said...

அட ஏங்க, இவ்ளோ பெரிசா ஒரு பதிவு எழுதிருக்கேன், அதைப்பத்தி ஒண்ணும் சொல்லாம, எல்லாரும் அந்தக் கடைசி பத்தி பத்தியே பேசுறீங்களே??!!
//

நீங்க குறிப்பா யாரைன்னு சொல்லி இருந்தா அவரைப் போட்டு கும்மியிருக்கலாம். நீங்க அதை சொல்லவே இல்லையே :)

அன்புத்தோழன் said...

//இன்னொரு விஷயம், பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும், திருமணம்வரை, சிலர் 24 மணிநேரமும் சாட்டிங், செல்ஃபோன், எஸ்.எம்.எஸ். என்றிருக்கின்றனர்//

உண்மையா நாங்க அப்புடி இல்ல ஹுஸைனம்மா.... சில exceptions இருக்க தான் செய்யுதுன்னு போட்டுருக்கலாம் ப்ராகட்ல(எங்களுக்காக).... ஏனா நாங்க ஆடிக்கு ஒரு வாட்டி அம்மாவாசைக்கு ஒரு வாட்டி தான் பேசுறோம்... என்ன செய்றது அம்முனி ஒரு கொள்கையோட தான் இருக்காக...

அம்பிகா said...

பதிவும், விதூஷ் ன் பின்னுட்டமும் அருமை.
\\சானியா பாவம், அவருக்கு திருமணம் கூட அல்லல். :( இவரது இப்போதைய திருமண முடிவும், முந்தைய முடிவும் அவர் சுய-முடிவு எடுக்கவியலாதவர் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. திறமையும், பணமும், புகழும், அழகும் மட்டும் ஒரு பெண்ணை வெற்றியாளார் ஆக்குவதில்லை என்பதற்கு சானியா உதாரணமாக ஆகி விடக்கூடாது பாவம்\\

இவரது நிச்சயதார்த்த கேன்சல் முடிவு, இப்போதைய திருமண அறிவிப்பு, எல்லாமே அதைதான் காட்டுகிறது.

அன்புத்தோழன் said...

//இருவருமே அழகைப் பெரிதாக எண்ணாமல், அன்பை, குணத்தைப் பெரிதாக நினைத்திருந்தால் ஷோயப் ஆயிஷாவின் எடையை குறைவாக நினைப்பாரா? அல்லது ஆயிஷாதான் வேறு படத்தைக் காண்பித்திருப்பாரா?//

Well Said, Please note this point your honor...

SUFFIX said...

இதுவே சானியா ஒரு அமேரிக்கரையோ, ஆஸ்திரேலியரையோ திருமணம் செய்யபோகிறேன் எனறு சொன்னால் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பி இருக்குமா? சிலர் பிரபலம் ஆவதற்கு இது ஒரு வாய்ப்பு. சானியா - Scapegoat!!

அன்புத்தோழன் said...

//சானியாவும் அழகாக இல்லையென்றால் ஷோயப் விரும்பியிருக்க மாட்டாரோ?//

இத சானியா யோசிச்சிருந்தா இந்த பிரச்சனையே வந்துருக்காது போல...

அன்புத்தோழன் said...

//நமக்கென்று நிச்சயிக்கப்பட்டவர்தானே என்ற சுதந்திரத்தால், இப்படிப் பேசிப்பேசியே//

இதுல ஒரு சின்ன டவுட்... அப்போ சுமார் ஒரு பதினைந்து வருடத்திற்குக் முன்பு 500 ரூபாய் வந்துட்டு இருந்த போன் பில் 5000 ரூபாய் ஆனது எப்படி ஹுஸைனம்மா.....?!?!?! ஹி ஹி ;-) மாட்னீங்களா....

Rithu`s Dad said...

பிரச்சனை என்று தெரிந்தாலே தள்ளிப் போவது தான் சாதரனமானவர்கள்...

பிரச்சனை என்று தெரிந்தால் ஓடிச்சென்று அதை தீர்த்து முடிப்பவர்களே வெற்றியாளர்கள்.. சானியா கண்டிப்பாக வெற்றியாளரே..

எல்லா மாற்றாங்களையும் எதிர்ப்பதும் சரியன்று.. நெட்டில் ஜோடிப்பொருத்தம் கூட.. ஏனென்றால் எல்லா பழயதும் தோற்றிருக்கிறது.. புதியதும் வென்றிருக்கிறது..

திருமணம் இருமணங்களின் சங்கமம் என்றால்.. எளிதாக பிரிந்துவிடக் கூடிய சாத்தியங்களும் அதிகமே..

என்று அது இரு குடும்பங்களின் சங்கமமாகவும் இருக்குமோ அன்று பிரிவிலும் சற்று கடிணம் தரும்..

எல்லாம் இருவரது சொந்த விருப்பு வெருப்பே.. அன்பு மட்டும் போதும் என்று இருக்க சந்தர்ப்பமும் சமூகமும் இல்லை...


சரி, இந்த சானியாவும் ஷோகைபும் எப்படி சந்தித்து பேசி பழகிகிட்டாங்க????!!!

சைவகொத்துப்பரோட்டா said...

பாத்தீங்களா!!! இந்த பிரச்சனையே
வேண்டாம்னுதான் நான் மிக்கி படத்தை
வச்சிட்டேன்.

ஆமா, என்னை அண்ணன் ஆக்கிடீங்களே அக்கா!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//(அந்நடிகையின் மேக்கப்பில்லாத படத்தை இவர்களிடம் கொடுக்கணும்!!)//

சூப்பரு

நாடோடி said...

//அடிப்படை பிரச்னை, அழகுதான்!!///
அழ‌கு என்ப‌த‌ற்கு அர்த்த‌ம் புரிந்து கொள்ள‌லில் தான் என்ப‌து என்னுடைய‌ க‌ருத்து..

settaikkaran said...

அப்பாடா! எனக்குப் பிரச்சினையில்லை. நான் என் புரோஃபைலில் போட்டிருப்பது மறைந்த நாகேஷ் படம். அதனால், என்னை யாரும் சீந்தப்போவதில்லை! :-)))

Prathap Kumar S. said...

சரி இப்ப என்னத்தான் சொல்ல வர்றீங்க.... கல்யாணம் பண்ணபோற யாருமே ஆணாலும் சரி பெண்ணாலும் சரி தனக்கு வரும் ஜோடி பார்க்க நல்லாயிருக்கனும் நினைக்கிறது தப்புஒண்ணும் இருக்கறதா தெரியலை... அது தப்பும் கிடையாது...

//சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும்//

நான் இந்த கூட்டத்துல கிடையாதுங்க...லேட்டஸ்ட் போட்டோத்தான் போட்டுருக்கேன் :))

Ananya Mahadevan said...

என்னுடைய தொடர் பதிவில் நான் சொல்ல நினைத்த பல விஷயங்களையும் கவர் பண்ணி இருக்கீங்க ஹூஸைனம்மா! தூள் கிளப்பி இருக்கீங்க.எங்கள் சமூகத்துல ரெட் காம்ளெக்‌ஷன் பொண்ணு தான் கேப்பாங்க! ஜூப்பரு! பாவம் சானியா பொண்ணு சதா சர்ச்சையில சிக்குது!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா எழுதி இருக்கீங்க ஆனா அந்த பொண்ணைப்பாத்தீங்களா ஆயிசா என்கிற மகா கொழுக்க் மொழுக்குன்னாலும் அழகோ அழகு.. அவளை அழகில்லன்னு சொல்லிட்டு என்னத்த சானியா அழகு..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு ஹூசைனம்மா!! ஊடகங்களில் காட்டப்படும் பிம்பம் நம்மை இப்படி ஆட்டிவைக்கிறது.

ஜெய்லானி said...

//அன்பை, குணத்தைப் பெரிதாக நினைத்திருந்தால் ஷோயப் ஆயிஷாவின் எடையை குறைவாக நினைப்பாரா? அல்லது ஆயிஷாதான் வேறு படத்தைக் காண்பித்திருப்பாரா?//

மில்லியன் டாலர் கேள்வி!!. உங்க புத்திசாலி தனத்துக்கு கண்டிப்பா என் அடுத்த பதிவுல பதில் கிடைக்கும்..>>

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையாக சொல்லிருக்கீங்க ஹூசைனம்மா..

அழகை பார்த்து காதல் வரக்கூடாது.. குணம் நல்லாருக்கா அப்படின்னுதான் பார்க்கனுமே தவிர போட்டோ சரியில்லை அழகா இல்லை. இதெல்லாம் சப்பை காரணம். சோயிப் தரப்போ இல்லை ஆயிஷா தரப்போ விட்டுக்கொடுத்து போயிருக்க வேண்டும். எனக்கென்னமோ தோணுது.., சோயிப் சானியாவின் அந்தஸ்து பண‌பலம், இதனைக் கொண்டு தானும் பிரபலமா ஆகணுமுன்னு நினைக்கிறார் போல. இல்லை விலைபோயிருக்கணும்.

துபாய் ராஜா said...

அருமையான கருத்துக்கள்.அழகான பதிவு.

//என்னவோ, இதை எழுதும்போது, சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும், (நான் பதிவெழுத வந்தபின் நடந்த) முதல் பதிவர் சந்திப்பின்போது எடுத்த படங்களைப் பதிவுகளில் பார்த்து நான் அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது).//

சிரிச்சு முடியலை. :)))))))))))

//ஹுஸைனம்மா said...
அட ஏங்க, இவ்ளோ பெரிசா ஒரு பதிவு எழுதிருக்கேன், அதைப்பத்தி ஒண்ணும் சொல்லாம, எல்லாரும் அந்தக் கடைசி பத்தி பத்தியே பேசுறீங்களே??!!

;-)))//

அதானே.. எம்புட்டு சீரியஸான பதிவு. எல்லாரும் சேர்ந்து இப்படி சிரிப்பு போலீஸ் ஆக்கிட்டிங்களே... :))

துபாய் ராஜா said...

சொல்ல மறந்துட்டேன். பதிவிற்கேற்ற படம் அருமை.

Chitra said...

உங்கள் கருத்துக்களை தெளிவாக சொல்லி, அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள்!

(என்னவோ, இதை எழுதும்போது, சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும், (நான் பதிவெழுத வந்தபின் நடந்த) முதல் பதிவர் சந்திப்பின்போது எடுத்த படங்களைப் பதிவுகளில் பார்த்து நான் அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது).

......ஹா,ஹா,ஹா,ஹா,....... சூப்பர்!

செந்தில் நாதன் Senthil Nathan said...

ஏனோ ஒரு சில பதில்களை தவிர யாரும் உங்களிடம் சண்டை போடவில்லை. ரெம்ப பயமோ உங்க மேல? :-)

சரி..ஒரு சில கேள்விகள்.

//இக்காலத்தினர்களுக்கு, புற அழகுதான் //
முன்னாடி மட்டும் என்ன? இருபது வருஷம் முன்னாடி பொண்ணு பார்க்க போறேன்னு ஒரு ஊர கிளப்பி போய், மக்கள் பண்ணுன அலும்புக்கு, இது பரவாயில்லை.

// சிலர் அதற்கென்றே ஸ்பெஷலாக ஃபோட்டோ எடுத்து வைத்திருப்பார்கள். நேரில் பார்க்கும்போது ஏமாற்றம் வருமளவுக்கு!!//
//பொண்ணு ”வெள்ளையா இருக்கணும், அழகா இருக்கணும்”//

இதுவும் புதுசு இல்லை. பழைய கதை தான்.

//வலைவழி தூரத்தில் இருக்கும் இருவர் நட்பாக இருக்கும்போது வராத பிரச்னைகள், இருவர் இணைந்து வாழும்போது வரும்.//

மிகவும் சரி!! ஆனால் பெரியவர்களால் மட்டும் இந்த மாதிரி பிரச்னை வராத திருமணம் செய்ய முடியுமா? அந்த திருமணத்தில் பிரச்னை வந்தால் fevicol போட்டு ஓட்ட பெரியவர்கள் வருவார்கள். இங்க அது இல்லை. அது மட்டுமே இங்கு வித்யாசம்!!

// சிலர் 24 மணிநேரமும் சாட்டிங், செல்ஃபோன், எஸ்.எம்.எஸ்.//

இது என்ன வம்பா போச்சு. என்னோட வாழ்க்கைல நான் செய்யும் முக்கிய முடிவு. அப்படி இருக்குறப்போ இது கூட செய்ய கூடாது என்பது சரியே அல்ல. அது வாழ்வை சரியாய் அமைத்துக்கொள்ள கடைசி வாய்ப்பு. அதை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

//அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்....//

எல்லாத்துக்கும் இந்த பழமொழிய இழுக்காதிங்க..இதுல மிஞ்சுறதுக்கு ஒன்னும் இல்ல.

புரிந்து கொள்விர்கள் என்ற நம்பிக்கையில்,
செந்தில் நாதன்

தேவன் மாயம் said...

ஆயிஷாவும், 2002ல் நடந்த திருமணத்தை விட்டு விலகாமல் ஏன் எட்டு வருடங்கள் காத்திருந்தாரோ? சானியாவும் அழகாக இல்லையென்றால் ஷோயப் விரும்பியிருக்க மாட்டாரோ? என்னென்னவோ கேள்விகள் எழுகின்றன. பதிலைத் தேடிக்கொண்டிராமல் பாடங்கள் படித்துக் கொள்வதே நல்லது.
///

உண்மைங்க!!

☀நான் ஆதவன்☀ said...

கடைசி பாரா யாருன்னு எனக்காவது சொல்லுங்களேன் :)))

அந்த ஆயிஷாவே அழகாத்தான் இருக்காங்க. முழு போட்டோவையும் போட்டிருந்தா குண்டா இருக்காங்களான்னு பார்த்திருக்கலாம் :)

ஸாதிகா said...

ஹுசைனம்மா நல்ல பதிவு.கடைசி பாரா வைப்பார்த்ததும் ரங்கமணிகள் அசந்து போய் இருப்பார்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதில் இருக்கும் தனிமனித தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.(ஹி,ஹி,,, கடைசி பாரா)

ராமலக்ஷ்மி said...

நல்லா சொல்லியிருக்கீங்க ஹுஸைனம்மா.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல பதிவு ஹுஸைனம்மா. ஒவ்வொரு கருத்தும் அழகா ஆழமா சொல்லிருக்கீங்க. எல்லாரும் சிந்திக்க வேண்டிய விஷயமிது.

"உழவன்" "Uzhavan" said...

பதிலைத் தேடிக்கொண்டிராமல் பாடங்கள் படித்துக் கொள்வதே நல்லது. //
நல்லாத்தான் சொல்லிருக்கீங்க.
அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது//
அதிர்ச்சி ஆகுற அளவுக்கு போட்டோ போட்டு ஏமாத்துறாங்களா :-)

malar said...

நல்ல பதிவு...

ஹுஸைனம்மா said...

என் இந்தப் பதிவில் வந்த நிறையப் பின்னூட்டங்களைக் காணோம்!! யாராவது பாத்தீங்களா? யார் எடுத்தாங்கன்னு தெரியுமா? :-((((

ப்ரியமுடன் வசந்த் said...

மவுசு டிசைன் ஷார்ப்பா பொருந்தியிருக்கு போஸ்ட்டுக்கு...

நாங்கலாம் அப்டேட்டட் போட்டோஸ்தான் வச்சுகிடுவோம்....

கண்ணா.. said...

ஆமாங்க .. நான் போட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பின்னூட்டத்தையும் காணோம்..

எனக்கு என்னமோ இந்த நாஞ்சில் பய மேலதான் சந்தேகமா இருக்கு...

சென்ஷி said...

:(

என்னோட பின்னூட்டத்தையும் காணோம்.

கண்ணா.. said...

//சென்ஷி said...
:(

என்னோட பின்னூட்டத்தையும் //

எலேய். சென்ஷி.. நீ வழக்கம் போல ஸ்மைலிய மட்டும் போடாம... வார்த்தையோட பின்னூட்டம் போடும் போதே உன் மேல எனக்கு லேசா டவுட் இருந்திச்சு...


இவனையும் ஜீப்புல ஏத்துங்க...

ஹுஸைனம்மா said...

முதலில் கமெண்ட் போட்ட மக்களே, பீதியடைய வேண்டாம்; குழப்பம் வேண்டாம்; கமெண்ட்டுகள் என் மெயிலில் இருக்கின்றன, ஆனால் மீள்-பப்ளிஷ் செய்ய முடியவில்லை; எரர் வருகிறது.

என்ன செய்யலாம் என்று அமைதியாக ஆலோசனை சொல்லவும். எதிரிகளின் சதிவேலையோ என்று ஐயமாக இருக்கிறது!!

ஆகவே, என் இனிய ரசிகப் பெருமக்களே!! கோபம் கொண்டு கலவரத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!!

சென்ஷி said...

//ஆகவே, என் இனிய ரசிகப் பெருமக்களே!! கோபம் கொண்டு கலவரத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!!//

அதெல்லாம் முடியாது.. எலே கண்ணா.. பஸ்ஸ கொளுத்துடா.. ஜிமெயில மூடுடா.. தமிழ்மணத்தை க்ளோஸ் செய்டா.. கம்ப்யுட்டரை ஆஃப் செஞ்சுட்டு தூங்குடா.. நாம இப்ப கலவரம் செய்யறோம்..

கண்ணா.. said...

//சென்ஷி said...


அதெல்லாம் முடியாது.. எலே கண்ணா.. பஸ்ஸ கொளுத்துடா.. ஜிமெயில மூடுடா.. தமிழ்மணத்தை க்ளோஸ் செய்டா.. கம்ப்யுட்டரை ஆஃப் செஞ்சுட்டு தூங்குடா.. நாம இப்ப கலவரம் செய்யறோம்.//

பாஸ்... தமிழிஷை விட்டுடீங்களே...

அதையும் சேர்த்துகோங்க.. இப்போ ஆபிஸ் டைம் முடிய போகுதே...இப்ப தூங்க சொன்னா எப்பிடி..???!!!

ஹுஸைனம்மா said...

//கம்ப்யுட்டரை ஆஃப் செஞ்சுட்டு தூங்குடா.. //

தம்பி!! அவ்வ்வ்வ்வ்வ்....

//இப்போ ஆபிஸ் டைம் முடிய போகுதே...இப்ப தூங்க சொன்னா எப்பிடி.//

கண்ணா ... நீயுமா.... ?

சரி,நான் இப்ப அபுதாபி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுக்கப்போறேன். கார்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். (வீட்டுக்குப் போறேன்ப்பா!!)

(அட, யாராவது நிஜமா ஹெல்ப் பண்ணுங்கப்பா!! அடுத்து பிளாக்குக்கு எதும் ஆயிடுமோன்னு பயமா இருக்கு!! என்ன செய்யணுன்னு மெயில் அனுப்புங்க hussainamma@gmail.com)

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா போட்டோ விஷய்த்துல‌ இதுல எல்லோரும் ஓடி வந்து உண்மைய சொல்றாங்க

Jaleela Kamal said...

நித்யானந்த பேச்சு மறைந்து இப்ப ஊரெங்கும் சானியா தான்...
எல்லோரும் சாட்டிங்கில் நெட்டில் திருமணத்தை முடித்து கொள்கிறார்கள், நேரில் பார்த்து இப்படி பீதியாகனுமா? அதுக்கு தான் அந்த காலத்தில் நல்ல முறையாக இங்கிருந்து நாலு பேர் அங்கு போய், அங்கு இருந்து நாலு பெர் இங்கு வந்து நல்ல கடைந்தெடுத்து முடிப்பாங்க.

இப்ப ரொமப் மாடர்ன் உலகமாக இல்லையா ஆகிவிட்டது.

Jaleela Kamal said...

//(என்னவோ, இதை எழுதும்போது, சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும், (நான் பதிவெழுத வந்தபின் நடந்த) முதல் பதிவர் சந்திப்பின்போது எடுத்த படங்களைப் பதிவுகளில் பார்த்து நான் அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது).//
ஹா ஹா பட்டுன்னு போட்டு உடைச்சீட்டீங்க ஹிஹி .

Jaleela Kamal said...

நாஞ்சிலாந்தா உடனே உண்மைய சொல்கிறார்,

Madumitha said...

தலைப்பே
செய்தியைச்
சொல்லிவிட்டதே.

சாந்தி மாரியப்பன் said...

ஹுஸைனம்மா.. என்னுடைய'கைக்கெட்டினது' பதிவிலும் நான் கொடுத்த பதில் பின்னூட்டங்களை காணவில்லை. ப்ளாக்கருக்கு ரொம்ப பசியோ!! சிலருடைய பதிவுகளும் திறக்க முடியாம அழிச்சாட்டியம் பண்ணுது.

http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_05.html

ரிஷபன் said...

சீரியஸான மேட்டர் படிச்சுட்டு பின்னூட்டம் பக்கம் வந்தா ஒரே சிரிப்பாணிதான் போங்க..

Prathap Kumar S. said...

என்னது கமெண்ட்லாம் காணுமா-???
அட்றா சக்கை...
எலே பசுபதி தவுசண்ட் வாலா வாங்கி கொளுத்துடா...கெடா வெட்டுடா சந்தோசத்தை கொண்டாடிடுவோம்...

நான் ப்ளாக்கே காணாம போகும்னு எதிர்பார்த்தேன்... அதுமட்டும் நடந்துச்சு திருவிழாவே கொண்டாடிமாட்டோம்...

Prathap Kumar S. said...

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது...பார்த்தீங்களா நாஞ்சில்பிரதாப்போட கமண்ட் மட்டும் எப்படி சோக்கா அப்படியேகீது...நாங்கயாரு...??

Prathap Kumar S. said...

இந்த சம்பவத்துக்கு காரணம் கண்ணா குளிக்காம வந்து கமண்ட் போட்டதுதான்னு பட்சி சொல்லுது... இனிமே கண்ணாவோட எந்த கமண்ட்யும் பப்ளிஷ் பண்ணாதீங்க...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. படம் பிடிச்சிருக்கு :))

பதிவு - நல்ல அறிவுரை தான்.. ஆனா எல்லாப் பிள்ளைகளும் ஏத்துக்க மாட்டாங்க.. :))

மத்தவங்களுக்கு இந்த மாதிரி சொல்ல நான் விருப்பப்படலைன்னாலும், தனிப்பட்ட ஆளா எனக்கு உங்க அறிவுரை பிடிச்சிருக்கு..

Vidhya Chandrasekaran said...

நல்ல கருத்துகள் மேடம்.

ஹுஸைனம்மா said...

ஹை, எல்லாக் கமெண்டும் திரும்பி வந்துட்டாங்க!! :-))

எல்லா கமெண்டும் எங்கப்பா போனீங்க என்னத் தவிக்க விட்டுட்டு!! எப்படியோ திரும்பி/ந்தி வந்துட்டீங்கள்ள, அதுவே போதும்!!

ஹுஸைனம்மா said...

மலிக்கா - வாங்க; அதிசயமா முதல்ல வந்திருக்கீங்க!! சந்தோஷம். உங்க முகத்தையே நான் பாக்கலையே அந்த சந்திப்பில, அப்புறம் எப்படி அதிர்ச்சியாகிறது?? ஆனா, நீங்க என்னைவிட சின்ன வயசுதான்னு சொல்லி அதிர்ச்சியாக்குனதத்தான் மறக்கமுடியல!!

அக்பர் - வாங்க; ஆமாம், குணத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்!!

நாஸியா - வாங்க; சிரிப்பு போலீஸ்??!!

சுரேஷ் - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல் - வாங்க; ஆமாம், எதிலும் கட்டுப்பாடு வேணும். நன்றிங்க.

விதூஷ் - வாங்க; நன்றி கருத்துக்கு. எனக்கென்னவோ சானியாதான் முடிவெடுக்கிறார், ஆனா ஆய்ந்து முடிவெடுகக்த் தெரியலையோன்னுதான் தோணுது; அவர் இழுத்த இழுப்பிற்கு பெற்றோரையும் வரவைக்கிறார் போல!!

இர்ஷாத் - ஆமா, அபார்ஷன் ஆகிடுச்சாம்!!

கண்ணா - ஆமாங்க, அந்த புரிந்துணர்வு அந்த வயசில ரொம்ப இருக்காதுங்கிறதால், பெரியவங்க ஆலோசனையும் கேட்டுக்கறது நல்லது!!

சென்ஷி - வாங்க; ஆ... எத்தனை கமெண்டு உங்ககிட்டருந்து!! நல்லவேளை வயசான நாகேஷ் படம் வச்சிருக்கீங்க, நேர்ல பாத்தாலும் அதிர்ச்சி இல்ல!!

//நீங்க குறிப்பா யாரைன்னு சொல்லி இருந்தா அவரைப் போட்டு கும்மியிருக்கலாம்//

ஒண்ணா ரெண்டா, சொல்ல?

ஹுஸைனம்மா said...

முல்லை - வாங்க; நீங்களும் அதிர்ச்சியானீங்க போல, அதான் கடைசி பாரா மட்டும் குறிப்பாச் சொல்றீங்க!!

அபு அஃப்ஸர் - ஆமா, சானியா நிலைதான் பரிதாபமா இருக்கு. ஆனா, தைரியமான பொண்ணுங்கிறதால சமாளிச்சு நிக்குறாப்புல. தேர்வு மீண்டும் தப்பாகிடக்கூடாதேன்னு இருக்கு.

தீபா - வாங்க; நீங்களுமா பாதிக்கப்பட்டீங்க முல்லை மாதிரி??

அன்புத் தோழன் - சின்னப் பையன், அதான் தைரியமா ஃபோட்டோ போட்டுட்டீங்க!! அப்றம், அந்த ஃபோன் பில், நீங்க நிச்சயம் கேப்பீங்கன்னு தெரியும், தெரிஞ்சேதான் எழுதினேன்!! அப்ப ஒன்லி எஸ்.டி.டி. தான்!! அதான் அவ்வளவு ஆகிடுச்சு; அதோட, எங்கம்மா சொன்னவுடனே திருந்திட்டோம்ல!!

அப்புறம், உங்க உட்-பி யோட சொந்தக்காரங்க வந்து போற இடத்துல, நீங்க ஆடிக்கொருதரந்தான் பேசுறீங்கங்கிறதைச் சொல்லி, மெஸேஜ் சொல்லிட்டீங்க போல!! விவரந்தான்!!

ஹுஸைனம்மா said...

அம்பிகா - வாங்க; முதல் நிச்சயதார்த்த கேன்ஸல் - மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு யோசிக்காம, தனக்கு ஒத்துவராதுன்னு புரிஞ்சு திருமணத்துக்கு முன்பே விலகுறதுக்கும் தைரியம் வேணுமே? என்ன சூழ்நிலையில விலகினாங்கன்னு தெரியல.

ஷஃபிக்ஸ் - ஆமா, சம்பந்தமே இல்லாம சிலர் இதில பிரச்னை பண்றது வேதனைதான்!!

ரீத்து அப்பா - ரொம்ப கழிச்சு வந்திருக்கீங்க, வாங்க!! நிச்சயமா, சானியா பிரச்னையைக் கண்டு ஓடி ஒளியாததற்கே பாராட்டணும்!! புது மாற்றங்களை முழுதும் எதிர்க்கவில்லை, இளமையின் வேகத்துடன், முதுமையின் விவேகமும் இணைந்தால் நல்ல முடிவு கிட்டுமே!!

வாழ்க்கையில் சொந்தபந்தங்களின் ஆதரவும், ஆசியும் இருப்பது நல்லது என்பது என் அனுபவம். இருக்கும்பட்சத்தில் இளைய தலைமுறையினர் சின்னச்சின்னப் பிரச்னைகளை முன்வைத்துப் பிரிதல் குறையும். இது எல்லாருக்கும் பொருந்தாது என்றாலும், அதிகபட்சம் நன்மையே தரும்.

அவங்க ரெண்டு பேரும் எப்படி சந்திச்சாங்கன்னு தெரியலியே ரீத்து அப்பா?

ஹுஸைனம்மா said...

சைவக்கொத்ஸ் - வாங்க; ஃபோட்டோ போடாததால, ஒரு அனுமானத்துல அண்ணன்னு சொன்னேன்; இப்ப தம்பின்னு மாத்திடலாம் பாஸ்!!

அப்பாவி தங்ஸ் - வாங்க; ஆமாங்க, மேக்கப் சரியா போட்டுகிட்டா எல்லாரும் அழகிதானுங்களே!!

நாடோடி - வாங்க; நிச்சயம் அந்த புரிதலில்தான் பிரச்னை.

சேட்டைக்காரன் - வாங்க. இதிலயும் சின்ன வயசு நாகேஷைத்தான் போட்டிருக்கீங்க பாருங்க!! நேர்ல பாக்கிறவங்க ஏமாறாம இருந்தாச் சரி!!

பிரதாப் - பார்க்க நல்லாருக்கணுன்னு நினைக்கிறது உங்க விருப்பம்; ஆனா அப்படி ஒருவர் நினைத்தபடி அழகா அல்லது நிறமா இல்லாத பெண்களை, பெண் பார்த்தல், அல்லது ஃபோட்டோ வாங்கிப் பார்த்துட்டு ரிஜக்ட் செய்யும்போது அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? அதெல்லாம் அனுபவிக்கிறவங்களுக்குத்தான் அந்த வருத்தம் தெரியும்.

ப்ரொஃபைல் ஃபோட்டோ - ஃபோட்டோ, கோட்டோவியம்னு, கமல் கொஞ்ச நாள் உங்க ப்ளாக்ல வாடகைக்கு இருந்தாரோ?

ஹுஸைனம்மா said...

அநன்யா - நன்றி அநன்யா. நானும் பட்டிருக்கேன் அந்த அவஸ்தையை. ஆனா டேமேஜ் ரொம்ப அதிகம் இல்ல.
//எங்கள் சமூகத்துல ரெட் காம்ளெக்‌ஷன் பொண்ணு தான் கேப்பாங்க//
இந்தப் பழக்கத்தை உங்க சமூகத்துக்கு மட்டும் சொந்தமாக்கிறதை நான் கண்டிக்கிறேன்!! எல்லா மக்களும், சாதி, மத வித்தியாசமில்லாம ஒன்றுபட்டு பின்பற்றுகிற பழக்கமில்லையா இது?? ;-))

முத்துலெட்சுமி அக்கா - வாங்கக்கா; ஆமாக்கா, ஆயிஷாவும் அழகாத்தான் இருக்கார். சானியாவும், அப்புறமா குண்டாகிட்டா என்ன பண்ணுவாரோ?

செந்தில்வேலன் - வாங்க; பின்னூட்டத்திற்கு நன்றி. ஊடகத்தின் பங்கு ‘அழகு’ எது என்பதில் அதிகம்.

ஜெய்லானி - வாங்க; மில்லியன் டாலர் கேள்விக்குப் பதில் சொல்லுங்க சீக்கிரம்!!

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - நன்றி. ஆமா, ரெண்டு தரப்புல ஒருத்தர் விட்டுக்கொடுத்தோ, அல்லது அப்பவே பேசித் தீர்த்தோ இருக்கலாம்.

துபாய் ராஜா - வாங்க; நன்றிங்க கருத்துக்கு. படம் இணையம் தந்தது. நீங்களே எடுத்துக் கொடுக்கிறீங்க பாருங்க, சிரிப்பு போலீஸ்னு!!

சித்ரா - வாங்க; நன்றி கருத்துக்கு.

ஹுஸைனம்மா said...

செந்தில்நாதன் - வாங்க;
//ரெம்ப பயமோ உங்க மேல?//
இங்க அடிச்சுருக்க கும்மியப் பாத்துமா உங்களுக்கு இப்படித் தோணுது?

/பொண்ணு பார்க்க போறேன்னு ஒரு ஊர கிளப்பி போய், மக்கள் பண்ணுன அலும்புக்கு//

அதுவும் சரியான முறை இல்லை என்பதை மக்கள் புரிந்து, நிறையக் குறைத்து விட்டார்கள்.
ஆனா நீங்க சொல்லுங்க, பொண்ணு அழகில்லை என்ற காரணத்திற்காக ரிஜெக்ட் செய்யப்பட்ட பெண்கள் எந்தக் காலத்தில் அதிகம்? அப்பவா, இப்பவா?

முன்காலத்தில் நிறைய பெண்களுக்கு அம்மை வந்து, முகம் முழுதும் தழும்பாக இருக்கும்; ஆனால் அந்தக் காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட பெண்கள் அரிதாகத்தான் இருக்கும். நல்லவேளை பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது இப்ப. இல்லையென்றால்??

//பெரியவர்களால் மட்டும் இந்த மாதிரி பிரச்னை வராத திருமணம் செய்ய முடியுமா? அந்த திருமணத்தில் பிரச்னை வந்தால் fevicol போட்டு ஓட்ட பெரியவர்கள் வருவார்கள். இங்க அது இல்லை. அது மட்டுமே இங்கு வித்யாசம்!//

அதுதான் பெரிய இழப்பு. அனுபவித்தவர்கள் அறிவார்கள். (மூட்டி விடவும் சில பெரியவர்கள் உண்டு, மறுக்கவில்லை).

//// சிலர் 24 மணிநேரமும் சாட்டிங், செல்ஃபோன், எஸ்.எம்.எஸ்.//
இது என்ன வம்பா போச்சு. என்னோட வாழ்க்கைல நான் செய்யும் முக்கிய முடிவு. அப்படி இருக்குறப்போ இது கூட செய்ய கூடாது என்பது சரியே அல்ல. அது வாழ்வை சரியாய் அமைத்துக்கொள்ள கடைசி வாய்ப்பு. அதை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.////

யாரும் பறிக்கவில்லை உங்கள் உரிமையை!! அளவோடு செய்வதே நல்லது என்றுதான் சொல்கிறேன். இப்பவே எல்லாம் பேசிமுடிச்சுட்டா, அப்புறம் பேச ஒண்ணும் இருக்காது, சண்டைதான் போடத்தோணும்!!

//அது வாழ்வை சரியாய் அமைத்துக்கொள்ள கடைசி வாய்ப்பு//

இடைவிடாத பேச்சு, சிலசமயம் வாழ்வை சரிக்கவும் செய்யும்.

எல்லாம் சரி, உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? அப்படியா?

ஹுஸைனம்மா said...

தேவன்மாயம் - வாங்க டாக்டர்; நன்றி கருத்துக்கு.

ஆதவன் - வாங்க; கிட்டத்தட்ட ஃபோட்டோ வச்சிருக்கிற எல்லா பதிவர்களுக்கும்தான் அந்தப் பாரா!! இதில சிலர், பத்தாங்கிளாஸ் ஹால்டிக்கட் ஃபோட்டோவைக்கூட வச்சிருக்காங்க, என்னச் சொல்ல!!

ஸாதிகாக்கா - வாங்கக்கா; நன்றிக்கா.

சுரேஷ் (பழனி) - வாங்க டாக்டர்; நன்றி கருத்துக்கு. உண்மையைச் சொன்னா, தனிமனிதத் தாக்குதலா?

ராமலக்‌ஷ்மி அக்கா - நன்றி அக்கா.

விக்னேஷ்வரி - வாங்க; நீண்ட இடைவெளி இல்லையா? நன்றி கருத்துக்கு.

ஹுஸைனம்மா said...

உழவன் - வாங்க; நன்றிங்க. கொஞ்சமாத்தான் அதிர்ச்சியானேன்.. :-))

மலர் - வாங்கக்கா; நன்றிக்கா.

வசந்த் - வாங்க, முதல் முறை இல்லையா? நன்றி. படம் எனக்கும் ரொம்பப் பிடிச்சுருந்துது; நான் வரையலை!! :-))
நீங்க நல்லவர், அதான் அப்டேட்டட் ஃபோட்டோ!!

ஜலீலாக்கா - வாங்கக்கா. நன்றிக்கா கருத்துக்கு.

மதுமிதா - வாங்க; நன்றி, தலைப்பைக் கவனித்துப் பாராட்டியதற்கு. கவிஞர் அல்லவா, அதான்!!

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல் - ஆமா, தானாப் போயிட்டு, தானா வந்துடுச்சு காணாமப் போனதெல்லாம். உங்களுக்கும் கிடைச்சுதா?

ரிஷபன் - வாங்க; நன்றி. என்ன செய்ய, நான் எவ்வளவு சீரியஸா பேசினாலும், நம்ம தம்பிங்க கலாய்ச்சுடறாங்க.

எல் போர்ட் - வாங்க; நன்றி. நம்ம அனுபவத்தச் சொல்றோம்; எடுத்துக்கிறதும், விடறதும் அவங்கவங்க இஷ்டம் இல்லையா?

ஹுஸைனம்மா said...

வித்யா - வாங்க; நன்றி. என்ன மேடமாக்கிட்டீங்க? பிரின்ஸிபால் ஃபீலிங் வருது :-)))

பிரதாப் - பிளாக் காணாமப் போனாலும் அசர மாட்டோம்ல; இப்படி எவ்ளோ பேரைப் பாத்திருக்கோம்!!

சென்ஷி, கண்ணா, பிரதாப் - நன்றி உங்களின் கலகலப்பான கமெண்டுகளுக்கு; பிளாக்கரில் பிரச்னை வருவதாகத் தெரிந்தால் முன்கூட்டியே தெரிவியுங்கள்.

pudugaithendral said...

சானியா திருமணம் ரொம்ப பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்வு வரும்வரை கல்யாணத்தை தள்ளிப்போடுங்கன்னு சொந்தக்காரங்க எல்லாம் சொன்னாலும் ஏற்பாடுகள் நடக்குது. அப்படி என்ன அவசரமோ?

சாட்டிங்கில் பழகி பேசி திருமணமாகி ரொம்பவே அவதிப்பட்ட குடும்பத்தை எனக்குத் தெரியும்.

என்னத்த சொல்ல... அருமையான பதிவுன்னு மட்டும் சொல்லிக்கறேன்.

ஹுஸைனம்மா said...

வாங்க தென்றல். நன்றி கருத்துக்கு.

லேட்டஸ்ட் நியூஸ்படி, ஷோயப் விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டுட்டதால, ஆயிஷாவும் வழக்கை வாபஸ் வாங்க சம்மதிச்சுட்டாராம்.

/சாட்டிங்கில் பழகி பேசி திருமணமாகி ரொம்பவே அவதிப்பட்ட குடும்பத்தை//

எனக்குத் தெரிஞ்சு ஒரு கல்யாணம் நின்னே போயிருக்கு!!

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

ஸ்ரீராம். said...

இந்த நெட் காதல் அனுபவத்தில் எனக்குத் தெரிந்த நண்பரின் அனுபவம் கண்டு நொந்து போனேன். அந்த விஷயங்களில் நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி. சானியாவுக்கு என்ன கட்டாயமோ இவ்வளவு பிரச்னைகள் நடுவிலும் மாலிக்கை திருமணம் முடிக்க..?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஆக, அடிப்படை பிரச்னை, அழகுதான்!!//

இது இன்னிக்கி நேத்து இல்லைங்க புராண இதிகாச காலத்துல இருந்தே அழகு தான் அடிப்படை பிரச்சனை. நல்ல பதிவு

கோமதி அரசு said...

நல்ல பதிவு ஹீஸைனம்மா.

ஆயிஸா பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது.

சானியாவின் திருமணத்திற்கு தடையில்லை.

முழுமைப் பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூடவரும் என்ற பாடல்
போல் மனம் ஒன்றி வாழட்டும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹூசைனம்மா உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

அபி அப்பா said...

//என் இந்தப் பதிவில் வந்த நிறையப் பின்னூட்டங்களைக் காணோம்!! யாராவது பாத்தீங்களா? யார் எடுத்தாங்கன்னு தெரியுமா? :-((((

\\\

nan avan illai husainamma!

athallaam nan dubai vanthu pinna thaan.

Jokes apart! pathivu super!

My days(Gops) said...

//இவர்கள் பிரபலமானவர்கள் என்பதால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது//

வெளிய வரனும்ங்கறதுக்காக தான் இவங்க பிரபல படுத்தி இருக்காங்க

ஹுஸைனம்மா said...

அக்பர் - நன்றிங்க விருதுக்கு;

ஸ்ரீராம் - வாங்க; நன்றி கருத்துக்கு. சானியாக்கு எதுவும் கட்டாயமா இல்லை உண்மைக் காதலான்னு தெரியலை. எதுவார்ந்தாலும் இனி பொறுப்பா இருந்தாச் சரி, இல்லையா?

அப்பாவி தங்கமணி - வாங்க; அழகுப் பிரச்னை புராண காலத்திலயேவா? எந்தக் கதைன்னு கொஞ்சம் ஞாபகப் படுத்த முடியுமா? நன்றி கருத்துக்கு.

கோமதி அக்கா - ரொம்ப நாளா காணோமே உங்களை? வாங்க, நன்றி கருத்துக்கு. ஆமாம், மனம் ஒன்றி வாழவேண்டும்.

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - இன்னிக்கு எழுதலாம்னு நினைச்சேன்; முடியலை; ரெண்டு, மூணு நாள்ல எழுதிடுறேன், இன்ஷா அல்லாஹ். சரியா? அழைப்புக்கு ரொம்ப நன்றி.

ஜெய்லானி - வாங்க; நன்றி. விருதுதான் விடையா? நன்றி ஜெய்லானி விருதுக்கு. உங்க விருதையும், அக்பரின் விருதையும் ஃப்ரேம் பண்ணக் கொடுத்திருக்கேன், ரெண்டு நாள்ல மாட்டிருவேன், சரியா?

அபி அப்பா - வாங்க சார்; ரொம்ப நாள் கழிச்சு பாக்கிறேன் உங்களை. ரொம்ப நன்றி வருகைக்கும், பாராட்டுக்கும். எப்ப வர்றீங்க ஷார்ஜாவுக்கு? லாஆஆஅங் லீவ் இன்னும் முடியலையா?

மை டேஸ் (கோப்ஸ்) - வாங்க முதல் மற்றும் தொடரப் போகும் வருகைக்கு. கருத்து புரியல. அவங்களேதான் பிரச்னையைப் பிரபலப் படுத்துனாங்கன்னு சொல்றீங்களா? எப்படியோ, பிரச்னை முடிஞ்சு, நல்லது தொடங்கினா சரி. நன்றிங்க.

Muniappan Pakkangal said...

Saaniyaava vachu aarambuchu nalla Discussion.Kadaisila kalakkeetunga.

Thenammai Lakshmanan said...

கடைசியா பதிவர் சந்திப்பு போட்டோ பற்றி சூப்பர் பன்ச் கொடுத்தீங்க ஹுசைனம்மா...அருமை

ஜீவன்பென்னி said...

என்னோட ப்ரொபைல்ல படமே இல்லங்க.

சானியா மேட்டரு மாதிரி நிறைய நடந்திருக்கு. என்ன பிரபலம்கிறதால அத வச்சு எல்லாரும் விளம்பரம் தேடிக்குறாங்க.

கல்யாணம் நிச்சயமானதற்கு பிறகு பெண்ணுடன் அதிகமாக பேசுவது என்னைப் பொறுத்த வரையில் சரி என்று தொன்றவில்லை. இதை என் நண்பர்களுக்கும் சொல்வதுண்டு. போன்லயே காதலாகி சசிந்துருகின்னு ஆன பின்னாடி, திருமணத்திற்கு முன்னாடி பையனுக்கோ இல்ல அந்த பெண்ணுக்கோ ஏதொ ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுச்சுன்னா. அதன் பிறகு இருவருடைய வாழ்க்கையும் எண்ணவாகும். இந்த எண்ணமும் ஒருவர் மேல் வைத்திருக்கக்கூடிய பிரியத்தின் அக்கரையுடன் கூடிய அன்பின் வெளிப்பாடு.

அன்புடன் மலிக்கா said...

07/04/2010 12:33

ஹுஸைனம்மா said...
மலிக்கா - வாங்க; அதிசயமா முதல்ல வந்திருக்கீங்க!! சந்தோஷம். உங்க முகத்தையே நான் பாக்கலையே அந்த சந்திப்பில, அப்புறம் எப்படி அதிர்ச்சியாகிறது?? ஆனா, நீங்க என்னைவிட சின்ன வயசுதான்னு சொல்லி அதிர்ச்சியாக்குனதத்தான் மறக்கமுடியல!!//

உண்மையச்சொன்னா அதிர்ச்சியாகத்தான் இருக்கும் ஹுசைனம்மா. ஹார்ட்டெல்லாம் நல்லாதானேயிருக்கு லப்டெப்ன்னுதானே அடிக்குது லாப்டெப்ன்னு அடிக்கலையே ஹி ஹி/

கத சொல்லச்சொன்னாங்கன்னு சொல்லிகீறேன் வந்து பாருங்க

கவிதன் said...

//பதிலைத் தேடிக்கொண்டிராமல் பாடங்கள் படித்துக் கொள்வதே நல்லது.// சரியா சொன்னீங்க .....

சமூக அக்கறையுடனான நல்ல பகிர்வு..... பாவம் சானியா....! கல்யாணத்திற்கு பிறகு ரொம்ப சாப்பிடாம இருக்கணும்.

இராஜராஜேஸ்வரி said...

(அந்நடிகையின் மேக்கப்பில்லாத படத்தை இவர்களிடம் கொடுக்கணும்!!
)Well said...