Pages

பூ - புஷ்பம் - மலர் - ஃப்ளவர்





அந்த தம்பதியர் ஆவலோடு காத்திருந்தார்கள், தங்களுக்கு தாத்தா, பாட்டி என்ற மகிழ்ச்சியான பதவி உயர்வு தரக்கூடிய தம் பேரன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்க. முதல் குழந்தை ஆண் என்றால்தான் பெருமை, கௌரவம், அந்தஸ்து. இவையெல்லாம் தமக்கும் கிடைக்கப் போகும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.  முதலில் பெண் என்றால் ஊர்மக்களில் சிலரின் அவமான/எள்ளல் பார்வை தவிர்க்க முடியாது.

ஆனால், ஸ்கேன் வசதிகள் இல்லாத 70-களில் எப்படி பேரன்தான் என்று உறுதியாக இருந்தார்கள்? அந்தத் தம்பதியருக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. ஏனென்றால், பரம்பரை பரம்பரையா அந்தக் குடும்பத்தில் தலைப்பிள்ளை ஆண்தான். இப்ப மட்டும் மாறிடுமா என்ன? பெயர் கூட ரெடி. ஆமாம். பெயருக்கென்ன, இப்போப் போல நெட்டில் தேடி, யாரும் வைக்காத ஸ்டைலான புதுப்பேரா  தேடப்போறாங்க? பரம்பரை பரம்பரையா, முதல் ஆண்குழந்தைக்கு தாத்தாவின் தாத்தா பெயர்தான்.

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் வேரோடு அழித்து, இத்துப்போன பழைய வழக்கங்களையெல்லாம் அறுத்தெரிய, பெண்ணின் பெருமை சொல்ல, ஆணாதிக்கத்தை ஒழிக்க, அந்தப் புதுமைப்பெண் பூலோகத்தில் அவதரித்து பிறப்பிலேயே புரட்சி செய்தாள்!!

அவர்களுக்கு வருத்தம்தான் என்றாலும், தங்களை தாத்தா-பாட்டியாக்கியதால் பேத்தியை ஒதுக்கவில்லை. ஆனால், அந்த அதிர்ச்சியில் அவளுக்குப் பெயர் வைக்கத்தான் மறந்துவிட்டார்கள். அவளை, செல்லமாக குட்டிம்மா, பாப்பா என்பதுபோல ஒரு பெயரில் அழைத்து வந்தார்கள். அழைக்க ஏதோ ஒரு பெயர் இருந்ததால் யாரும் முறைப்படி பெயர் வைக்காதது பற்றி கவலைப்படவில்லை. அப்போவெல்லாம் பர்த் சர்டிஃபிகேட்டிலும் பெயர் தேவையில்லையே. மூன்று வயதானதும் பள்ளியில் சேர்க்க அழைத்துப் போனார்கள். பள்ளியில் பேரென்னவென்று கேட்டதன் பிறகே அஃபீஷியல் பெயர் வைக்காதது ஞாபகம் வந்து தாத்தா முழிக்க, ஆசிரியர் மீண்டும் அதட்ட, வேறு பெயர் யோசிக்க அவகாசம் இல்லாமல் போக, தம் தாத்தாவின் பெயரிலேயே ஒரு “ஆ” (a) (அகில்-அகிலா என்பதுபோல்) சேர்த்து பெண் பெயராக்கிச் சொன்னார்கள்.

நல்லவேளை அவர்கள் அந்தப் பெயரை அவளுக்கு வைத்தார்கள், இல்லையெனில் அதன்பிறகும் அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்ட வாய்ப்பு கிடைக்காது போயிருக்கும்.  அத்தோடு, அப்பெயரில் இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் அறிந்ததில்லை. ஆக, எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது!!

எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துது, அமீரகம் வரும்வரை. இங்கே வந்ததும் முதல் பெயரான ‘முஹம்மது’வும், இரண்டாவது பேரான ஆ-சேர்த்த ஆண் பெயரும்  போகுமிடமெல்லாம் விசித்திரப் பார்வைகளையும், கேள்விகளையும் சந்திக்க வைத்தது. அதிலும் கடைசில உள்ள அந்த 'a'-ய எல்லாருமே கரெக்டா மிஸ் பண்ணி கூப்பிட்டுட்டு, நான் போய் நின்னா“உன்ன யாரு கூப்பிட்டா”னு பாப்பாங்க. சரி, நாமதான் புரட்சிப் பெண்ணாச்சே, அப்ப நமக்கு எப்பவுமே எல்லாம் ஏறுக்குமாறாத்தானே இருக்கும், அதான் இப்படின்னு பொறுத்துப் போயிட்டே இருக்கேன்!!

ஸ்ஸப்ப்பா.. இதான்ப்பா அவளுக்கு பெத்தவங்க பேர் வச்ச கதை!! இனி அவளே அவளுக்குப் பேர் வச்சுகிட்ட கதையப் பாப்போம்!! (இனி யாராவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுவீங்க?)

கல்யாணம் ஆனதும், கொஞ்ச நாள் கழிச்சு என் ரங்க்ஸ், என் பேரில எந்த மாற்றமுமில்லாததைக் கவனிச்சு, “ஏன் நீ என் பேர உன் பேர்கூடச் சேத்து எழுதலை?”ன்னு (பாவமாக்) கேட்டார். அப்ப நான் கொடுத்த லெக்சர்லயும், கேட்ட கேள்விகளிலும் அரண்டுபோய், மன்னிப்பு கடிதம் கொடுக்கற லெவலுக்கு வந்துட்டார். ஹா.. ஹான்னு வெற்றிக் களிப்போட சிரிச்சேன், நானே எனக்கு வச்சுக்கப்போற ஆப்பு காத்திருக்கிறது தெரியாம.

அப்புறம் இ-மெயில் புழக்கத்திற்கு வந்துது. அப்புறம் சாட் தளங்கள் வந்தன. அதிலெல்லாம் நான் போறதில்லை. (நல்ல பொண்ணு + முன் ஜாக்கிரதை) அதனால எந்தப் புனைபெயருக்கும் அவசியமில்லை. அப்பத்தான், என் தங்கச்சிக்கு கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சுது. மூத்தப் பொண்ணு என்ற பொறுப்பான பதவியால மேட்ரிமோனியல் தளங்களில் மாப்பிள்ளை தேடும் பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சாங்க. அப்பத்தான் யோசிச்சேன் - அதுல என் பேரையும், ஊரையும் சொன்னா எங்க குடும்பத்த ஊர்ல ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ஸோ, பேரைச் சொல்லாம, மிஸஸ். ஹுஸைன்னு ரிஜிஸ்டர் செஞ்சேன். இப்ப ரங்ஸ்க்கு அடிச்சுது சான்ஸ், என்னை நக்கல் பண்ண. அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா!!

அப்புறம், அதே பெயரில் “அறுசுவை” என்ற தளத்தில் ஃபோரம்களில் உரையாடும்போது, மிஸஸ்.ஹுஸைன்னு டைப் பண்ண சிரமமா இருக்குன்னு சிலர் சொன்னதால, ஹுஸைனம்மாவா மாறினேன். அப்படியே வலைப்பூவிலும்!! பிளாக் மூலம் பழக்கமான சிலரிடம் என் பெயரை ஏற்கனவே சொல்லியிருந்தாலும், ஃபோனில் பேசும்போது என் பெயரைச் சொன்னால், “அது எந்த லூஸுப்பா?”ன்னு பேய்முழி முழிக்கிறது மறுமுனையில் உள்ள  எனக்கே தெரியுமளவு, ‘ஹுஸைனம்மா’வாத்தான் எல்லாருக்கும் பரிச்சயமாகியிருக்கிறேன்!!

இன்னொரு பெயரில் இருப்பது, எனது வலைப்பூ சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை, மெயில்கள், பின்னூட்ட ஃபாலோ-அப்கள் போன்றவற்றை, மற்ற இணைய நடவடிக்கைகள், மெயில்களிலிருந்து பிரித்து பரிபாலனம் செய்ய எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது.

எந்தப் பெயரானாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன். பெயருக்கொன்றாக என் கருத்துகள் மாறுவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சொலவடை உண்டு, “பூவுன்னும் சொல்லலாம்; புஷ்பம்னும் சொல்லலாம்; மலருன்னும் சொல்லலாம்; ஃப்ளவருன்னும் சொல்லலாம்". அதுபோல. 

Post Comment

41 comments:

அரபுத்தமிழன் said...

//எந்தப் பெயரானாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன். பெயருக்கொன்றாக என் கருத்துகள் மாறுவதில்லை.//

பூமி சுத்துறதே நமக்குத் தெரிய மாட்டேங்குது, நம்ம பேருக்குண்டான‌
அதிர்வு எங்க தெரியப் போவுது. 'பெயர் சொன்னால் போதும் தரம்
எளிதில் விளங்கும்' விளம்பரமல்ல நான் சொல்வது,
'பேரச் சொன்னாலே, சும்மா அதிருதுல்ல'ங்கிற வகையைச் சார்ந்தது.

முஹம்மது ஹுசைனம்மா என்றாலே தெரியுது உங்களின் ஆணீயம் :)))

அரபுத்தமிழன் said...

அ.இப்னுஜுபைர்,வழிப்போக்கன்,அபுதாபிகவி என்றெல்லாம் பெயர் வைத்துப்
பார்த்தேன். ஒன்றும் எழுதத் தோணல. உண்மைத்தமிழன் போல அரபுத்தமிழன்
என்று வைத்த பிறகு நிறைய எழுதி வருகிறேன் :)
இது நகைச்சுவைக்காக எழுதினாலும் உண்மையாகவும் இருக்குமோ என்ற‌
எண்ணமும் தோன்றுகிறது. அதற்காகத்தான் இழிவு தரக்கூடிய பெயர்களை
மாற்றுமாறு சில பதிவர்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

//அ.இப்னுஜுபைர்,வழிப்போக்கன்,அபுதாபிகவி என்றெல்லாம் பெயர் வைத்துப்
பார்த்தேன். ஒன்றும் எழுதத் தோணல. .. அரபுத்தமிழன்
என்று வைத்த பிறகு நிறைய எழுதி வருகிறேன் //

உங்க நேமாலஜிஸ்ட் (அ) நியூமராலஜிஸ்ட் யாருங்க? நல்ல பலன் இருக்குன்னு சொல்றீங்களே, நணர்களுக்குப் பரிந்துரைக்கலாமே!! ;-))))))))

அமுதா கிருஷ்ணா said...

தலைப்பு அருமை.எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..என்னிடம் இருக்கிறது..டச்சிங்..

கோமதி அரசு said...

//ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் வேரோடு அழித்து, இத்துப்போன பழைய வழக்கங்களையெல்லாம் அறுத்தெரிய, பெண்ணின் பெருமை சொல்ல, ஆணாதிக்கத்தை ஒழிக்க, அந்தப் புதுமைப்பெண் பூலோகத்தில் அவதரித்து பிறப்பிலேயே புரட்சி செய்தாள்!!//

புதுமைப்பெண் ஹீஸைனம்மா வாழ்க!

பெயர்க் காரணப்பதிவு அருமை.

கீழை ராஸா said...

//எந்தப் பெயரானாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன். பெயருக்கொன்றாக என் கருத்துகள் மாறுவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சொலவடை உண்டு, “பூவுன்னும் சொல்லலாம்; புஷ்பம்னும் சொல்லலாம்; மலருன்னும் சொல்லலாம்; ஃப்ளவருன்னும் சொல்லலாம்". அதுபோல. //

அருமை...

Thenammai Lakshmanan said...

இப்பத்தான் பூக்களை பத்தி எழுதினேன்..
ஆனால் இங்கே இருப்பது அழகுப் பூவாய் இருக்கு..:))

ஹுஸைனம்மா said...

நன்றி கீழை ராஸா!! ரொம்ப காலத்திற்குப் பின் வருகை புரிந்துள்ளீர்கள்.

அமுதா - நன்றி.

கோமதிக்கா - நன்றி.

தேனக்கா - அடிக்கடி நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம், இல்லே? Great people think alike!! :-))))

வெங்கட் நாகராஜ் said...

பெயர்க்காரணம் அருமை! எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் நல்ல மனதுடன் செய்யப்படும் செய்கைகளே பெயர் வாங்கித்தரும் என்பதை அழகாய் சொல்லி விட்டீர்கள் சகோ. வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

பெயர் காரணத்திற்கு வழக்கம் போல அதிரடியா ஒரு பதிவு

அசத்தல் சகோ.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இனி யாராவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுவீங்க//
ஐயோ பாவம்...உங்கள பத்தி தெரியாம கூப்ட்டு போட்டாங்....:))

ஆ...ஆ... அகிலா... அப்பாடா ஒரு வழியா உங்க பேரு கண்டுபிடிச்சாச்...:))

//நானே எனக்கு வச்சுக்கப்போற ஆப்பு காத்திருக்கிறது தெரியாம.//
அதாவது வரப்போகும் விபரீதத்தை அறியாமல்...இப்படி எனக்கு புரியராப்ல சொல்லுங்க அக்கா...:))

//மிஸஸ். ஹுஸைன்னு ரிஜிஸ்டர் செஞ்சேன்//
அதாவது அடிதடிக்கு வாய்ப்பு இருக்குங்கரப்ப உங்க ஊரை காப்பாத்திட்டு ரங்க்ஸ் பேரை போட்டுக்கறது... என்னா ஒரு வில்லத்தனம்? ஹ்ம்ம்...
(ஒரு கோச்சிங் க்ளாஸ் போடுங்க அக்கா... :))

//“பூவுன்னும் சொல்லலாம்; புஷ்பம்னும் சொல்லலாம்; மலருன்னும் சொல்லலாம்; ஃப்ளவருன்னும் சொல்லலாம்". அதுபோல//
அப்படி போடுங்க.... (ஒரு டவுட்... சினிமாவுக்கு வர்ற ஐடியா எதுனா இருக்கோ...ஏன் கேட்டேன்னா? கடைசீல பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்றீங்களே...அதான்...ஒகே மீ எஸ்கேப்...:)))

ஜெய்லானி said...

பேர்ல என்ன இருக்கு..??? . இது பேர்களை பத்தி தெரியாதவங்க சொல்றது ..உங்களுக்கு புரியுமுன்னு நினைக்கிறேன் :-))

அருமையான விளக்கம் :-)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம்ஸ் டூ யூ... சகோ."பூ-பு-ம-ஃ"..!

என் அம்மா பெயர் ஆசிக்கம்மா...!

அதுபோல நீங்க ஹுஸைனோட அம்மா இல்லையா...???

தமிழ் உதயம் said...

பெயர் காரணம் அழகு.

Menaga Sathia said...

ம்ம் அதிரடியா இருக்கு..அதுசரி எல்லா சொன்னீங்க,உங்க முழுப்பெயர் என்னன்னு சொல்லவேயில்லையே....

ஸாதிகா said...

//எந்தப் பெயரானாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன்.// ஹுசைனம்மா நீங்கள் இப்படி சொன்னாலும் உங்களுக்கே நாளைப்பின்னே உங்கள் பெயர் மறந்து விடும்.அந்தளவுக்கு ஹுசைனம்மா வில் ஐக்கியமாகிட்டிங்க.உங்கள் உண்மை பெயர் தெரிந்த எனக்கு கூட பல தடவை உங்கள் பெயர் ஞாபகம் வருவதே இல்லை,ஹுசைனம்மா தான் ஞாபகத்தில் இருக்கின்றது.

நிலாமதி said...

எந்த பெண்ணிலும் இல்லாத் ஒரு துணிச்சல். பெயர் வைத்த் கதை . பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

கடைசிவரை உண்மையான பேரை சொல்லாமலேயே சமாளிச்சிட்டீங்க:-))))))

இமா க்றிஸ் said...

;) எப்படி யார் யார் எவ்விதமாய்க் கேட்பினும் ஹுசைனம்மா ஹுசைனம்மாவே. ;)))

பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது. ;))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் வேரோடு அழித்து, இத்துப்போன பழைய வழக்கங்களையெல்லாம் அறுத்தெரிய, பெண்ணின் பெருமை சொல்ல, ஆணாதிக்கத்தை ஒழிக்க, அந்தப் புதுமைப்பெண் பூலோகத்தில் அவதரித்து பிறப்பிலேயே புரட்சி செய்தாள்!!// இங்கயே புரிஞ்சிடுச்சுங்க ஹூசைனம்மா.. அந்த வீராங்கன யாருன்னு :)

//தம் தாத்தாவின் பெயரிலேயே ஒரு “ஆ” (a) (அகில்-அகிலா என்பதுபோல்) சேர்த்து பெண் பெயராக்கிச் சொன்னார்கள்.// அந்தக் காலத்து தாத்ஸ்..

//நல்லவேளை அவர்கள் அந்தப் பெயரை அவளுக்கு வைத்தார்கள், இல்லையெனில் அதன்பிறகும் அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்ட வாய்ப்பு கிடைக்காது போயிருக்கும். // இல்லாட்டி அந்தப் பொண்ணு பேரு பாப்பா தான், காலா காலத்துக்கும் :)

//அப்ப நான் கொடுத்த லெக்சர்லயும், கேட்ட கேள்விகளிலும் அரண்டுபோய், மன்னிப்பு கடிதம் கொடுக்கற லெவலுக்கு வந்துட்டார்.// :))

Prathap Kumar S. said...

அப்பாடா...இந்த வராலாற்று குறிப்புக்கள் இப்பவாச்சும் வெளில வந்துச்சே...இனி சுனாமி வந்தா கூட நிம்மதியா போயிடலாம்...:))
இன்றைய செய்தி நாளைய வரலாறு:))

Pranavam Ravikumar said...

நல்லாருக்கு..பகிர்விக்கு நன்றி!

அஸ்மா said...

சலாம் ஹுஸைனம்மா! உங்க பெயர்க் காரணம் நல்லா இருக்கு. நல்லவேளை எங்க பாட்டன்மார் எங்களுக்கு பெயர் வைக்கல :)) பெற்றவங்க இஷ்டம்னு பெருந்தன்மையா விட்ட என் பாட்டன்மார்கள் வாழ்க!(சுவர்க்கத்தில்):-)

அறுசுவையில் நீங்க 'மிஸஸ்.ஹுஸைன்'ன்னு வந்ததும் உங்க கணவர் பெயர் ஹுஸைனோ என்று உங்களிடம் கேட்டேன். அதற்கு ஆமான்னு அழகா சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க :) ஞாபகம் இருக்குதா? அதற்கு பிறகு தோண்டி துருவக்கூடான்னு விட்டுட்டேன் :) இப்போ நீங்க கொடுத்திருக்கும் க்ளூவில் உங்க பெயர் புரிஞ்சிடுச்சு. ஆனா சரியா தப்பான்னு நீங்கதான் சொல்லணும். "முஹம்மது ஹுஸைனா". சரியா? தப்புன்னு சொன்னாலும் இனி கண்டுபிடிக்காம விடமாட்டேன் :))

vanathy said...

அது எந்த லூஸுப்பா?”ன்னு பேய்முழி முழிக்கிறது மறுமுனையில் உள்ள எனக்கே தெரியுமளவு,//

அப்படி என்ன தான் பெயர் சூட்டினாங்கப்பா???
நல்ல பதிவு.

GEETHA ACHAL said...

சரி...கடைசி வரைக்கு உங்க பெயரினை சொல்லவே இல்லையே...எப்படி இப்படி எல்லாம்...இது எல்லாம் உங்களால் மட்டுமே முடியும்..

ADHI VENKAT said...

கடைசி வரைக்கும் ஒரிஜினாலான பெயர் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தோம். சொல்லவே இல்லையே!

Geetha6 said...

மிகவும் intresting ஆக இருக்கு.

Vijiskitchencreations said...

நானும் கடைசிவரை படித்து ம்.ஹூம் உங்க பேரை மட்டும் சொல்லாம்லே எஸ்கேப்.

இங்கு இருக்கும் ஒரு வெள்ளைகார அசசோசியயன்ஸில் ஒரு பெரியவர் சொன்னாங்க அது ஏன் தெரியல்லை நிறைய்ய பேரி அமெரிக்கர்களை தவித மற்ற எல்லாரும் பேரை சொலலும் போது சத்தம் குறைந்து சொல்கிறார்கள். முதலில் நம் பேரை நல்ல சத்தமா தான் சொல்லனும் என்று அவர் பேச்சை பேச ஆரம்பித்தாம். We are proud to say our own name ஒன்று சொல்லி கொள்ள விரும்பறேன். இங்கு அமெரிகாவில் முதல் சொல்வது அவங்க அவங்க பேரை நல்ல சத்தமா கௌரமா சொல்லுவாங்க, சொல்லனும் அது தான் இங்குள்ள வழக்கம்.
இது எனக்கு நினைவு வந்தது அதனால் இது எழுத தோன்றியது.உங்க பேரை கேடக நானும் வெயிட்டிங்கில் இருக்கேன்,

Anisha Yunus said...

//“பூவுன்னும் சொல்லலாம்; புஷ்பம்னும் சொல்லலாம்; மலருன்னும் சொல்லலாம்; ஃப்ளவருன்னும் சொல்லலாம்". அதுபோல. //

அடா....அடா...அடா...என்ன ஒரு தன்னடக்கம். எனனியவே மிஞ்சிருவீங்க போலவே... அம்புட்டு பல்பு வாங்கியும் இவ்ளோ ஸ்ட்ராங்கா நிக்கிறீங்க. ஹ்ம்ம்...!!! :)))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

உங்க பெயர் முஹம்மது அகிலா தானே,

அப்பாடா ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டேன், ஆனால் பெயரை பத்தி பதிவு எழுதுறேனு சொல்லி பேரே சொல்லாம பதிவு எழுதுவதுக்கும் ஒரு தைரியம் வேனும், ஆனால் திட்டும் போது உங்க பேரே இதுல அடிபடாது, பாவம் ஹுஸைனோட பேர் தான் அடிபடும்

இப்படிக்கு ரங்ஸ் சங்கத்தின் துபை கிளை

ஹுஸைனம்மா said...

வெங்கட் நாகராஜ் - நன்றி

அக்பர் - நன்றி

அப்பாவி தங்ஸ் ( நாந்தான் உங்ககிட்ட ட்யூஷன் எடுக்கணும்!!)

ஜெய்லானி - நன்றி

ஆஷிக் (ஸலாம் ) - நன்றி

ஹுஸைனம்மா said...

தமிழ் உதயம் - நன்றி

மேனகா - நன்றி

ஸாதிகாக்கா - //பெயர் தெரிந்த எனக்கு கூட பல தடவை உங்கள் பெயர் ஞாபகம் வருவதே இல்லை// அதேதான்க்கா...

நிலாமதி - நன்றி

அமைதிச்சாரல் - நன்றி

ஹுஸைனம்மா said...

இமா - ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே... :-)))) //எப்படி யார் யார் எவ்விதமாய்க் கேட்பினும்// கொண்ட கொள்கையில் அவ்ளோ உறுதியாய் இருக்கோம், அதான்!! ;-))))

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - //இல்லாட்டி அந்தப் பொண்ணு பேரு பாப்பா தான், காலா காலத்துக்கும்// ஓ, அப்படி புரிஞ்சுகிட்டீங்களா? நான் சொல்ல வந்தது, நாங்க நாலும் பொண்ணுதான்னு... (புரியுது.. புரியுது..)

ஹுஸைனம்மா said...

பிரதாப் - எனக்கு ஒரே ஒரு பயம்தான். “நல்லார் ஒருவர் உளரேல்...” என்பதுபோல நீங்க இருக்கறதுனாலேயே சுனாமி இங்கயும் வந்துடக்கூடாதேன்னுதான். நானும் இங்க பக்கத்துலதானே இருக்கேன்!!

ஹுஸைனம்மா said...

கொச்சு ரவி - நன்றி

அஸ்மாக்கா - ஸலாம். ம்ஹூம்.. அது இல்ல என் பேர்!! ஹுஸைன் பானு, ஹுஸைன் ஃபாத்திமான்னு நிறைய பேர் உண்டு எங்கூர்ல, ஆனா ஹுஸைனா... கேள்விப்பட்டது இல்லை.. நீங்க எனக்கு மெயில் பண்ணுங்களேன்.. பேசலாம்.. அப்புறம், என் ஹஸ், பையன் ரெண்டு பேருமே ஹுஸைந்தான், அதனால் ரெண்டுமே (மிஸஸ் & அம்மா) கரெக்ட்தான்க்கா..

வானதி - நன்றி

கீதா - நன்றி

ஹுஸைனம்மா said...

விஜி - நேரில சொல்லும்போது சத்தமாத்தான் சொல்லுவேன் விஜி. (பெரிய தொண்டை எனக்கு!!)

அன்னு - ஏன் பல்பையெல்லாம் இப்ப ஞாபகப்படுத்திகிட்டு?

அபுநிஹான் - //திட்டும் போது பாவம் ஹுஸைனோட பேர் தான் அடிபடும்// நீங்க ஒரு ஆள்தான் கரெக்டா பாயிண்டைப் புடிச்சிட்டீங்க!!

நட்புடன் ஜமால் said...

வேறு யாரையோ சொல்வது போல் அழகாக சொல்லி வந்து கொண்டிருக்கையில்

//ஆக, எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது!!//

தன்னிலைக்கு வந்துட்டீங்க ...

உங்க பெயரத்தான் தெளிவா சொல்லிட்டீங்களா, புரியலைன்னு எல்லாரும் சொல்றாங்க

இராஜராஜேஸ்வரி said...

பெயரில் என்ன இருக்கிறது?/
பெயரில்தான் எல்லாமே இருக்கிறது.
பெயர்க்காரணம் பற்றிய பெரிய புராணமே அல்லவா பெரிதாக நடந்து கொண்டிருக்கிறது?

Thenammai Lakshmanan said...

தேனக்கா - அடிக்கடி நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம், இல்லே? Great people think alike!! :-))))

hahahah super chellam..:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கூப்பிடுங்கப்பா கூப்பிடுங்கப்பா..
புரட்சிப்புயலை அடிக்கடி இப்படி பதிவு போடவச்சா பல உண்மைகள் வெளிய வருது பாருங்க :)