பதிவுக்குள்ளாற டீப்பாப் போறதுக்கு முன்னாடி, ஒரு பொது அறிவுக் கேள்வி: இலங்கையின் தலைநகர் எது? என்னா நக்கல் சிரிப்பு? (சரியான) பதிலச் சொலுங்கப்பு.
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
உலகக் கோப்பை க்ரிக்கெட் போட்டி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது, எங்கப் பாத்தாலும் கிரிக்கெட் மயம்!! வீட்டிலே டிவி இல்லேன்னாக் கூட, நெட்டைப் பிடிச்சுகிட்டு பாக்க உக்காந்துட்டாங்க அப்பாவும், புள்ளையும். ஒரு வழியா உலகக் கோப்பை முடிஞ்சுது, ஹப்பாடான்னு மூச்சுவிட நினைச்சா, அடுத்த நாளே ஐபிஎல் தொடங்கிடுச்சாம்ல. அதே கதை தொடருது.
ஆனாலும், பாகிஸ்தான், இலங்கை ரெண்டு எதிரி நாடுகளையும் ஜெயிச்சுட்டோம்னு சந்தோசமாத்தான் இருக்கு. இந்தியாவில் பாகிஸ்தான் செய்யும் தீவிரவாதம், ஈழத் தமிழர்கள், மீனவர்கள் படுகொலை எல்லாத்துக்கும் சேத்துவச்சு பழி வாங்கிட்டோம்ல!! இனி தகராறு பண்ணுவீங்க? அதே மாதிரி ஐபிஎல்லிலும், நம்ம சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸையும், டஸ்கர்ஸையும் தோக்கடிச்சுட்டா, தண்ணி தராததுக்கு தண்ணிகாட்டுன மாதிரி ஆகும். செஞ்சிடுங்கப்பா.
உலகக் கோப்பை ஜெயிச்சதுக்கு, வீரர்களுக்கு பரிசு மழை பொழியுது. தனியாரோடு, மத்திய/மாநில அரசாங்கங்களும் சேந்து அள்ளியள்ளிக் கொடுக்கிறாங்க. ஏழைகளுக்கு இலவசம் கொடுக்கிறதையே எதிர்த்தோம். இத என்னச் சொல்ல?
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
வாப்பா, உம்மா வந்திருக்காங்க. வாப்பா, இந்தியாவின் லஞ்ச ஊழல் மகிமைகளைப் பற்றிச் சொன்னாங்க. லஞ்சம் வாங்குவதும், குடிப்பழக்கமும் குற்றம் என்கிற மனப்பான்மையே இல்லாதுபோய், அவை சகஜம் என்ற நிலை வந்துவிட்டதாம். லோக்பால் எந்த அளவு பலன் தரும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது. அம்மா விலைவாசி உயர்வைக் குறித்துப் புலம்புகிறார். பதிலுக்கு நானும், இங்குள்ள விலைவாசி, வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் என்று புலம்பினேன். பின்னே, நாம ஒண்ணும் புலம்பாம இருந்துட்டா நம்ம கௌரவம் என்னாகிறது?
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
பூகம்பம் வந்தால் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரியுமா? உடனே வெளியே ஓடிவர வேண்டும். முடியாத பட்சத்தில், கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் மறைந்துகொள்ள வேண்டும் என்றுதானே அறிந்திருக்கிறோம்? ஆனால், கட்டில்/மேஜை போன்றவை இடிந்து விழும் கட்டிடத்தினால் நொறுங்கிவிடுமே என்று நினைப்பதுண்டு. சமீபத்தில் வந்த ஃபார்வேர்ட் மெயிலில் பதில் கிடைத்தது.
பல நாடுகளிலும், பூகம்ப விபத்துகளில் மீட்புப் பணி செய்த ஒருவர் எழுதிய கட்டுரையில், ஒருபோதும் கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் ஒளியக்கூடாது. ஆனால், அவற்றை ஒட்டி, பக்கத்தில் கை, காலை மடக்கி (கருவில் உள்ள குழந்தையைப் போல்) படுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கட்டிடம் இடிந்து உயரமான பொருளின்மீது விழும்போது, அருகில் ஒரு வெற்றிடம் உருவாக்கப்படும். அது பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். படங்களைப் பாருங்கள், புரியும்.
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
|
Tweet | |||
36 comments:
வீட்டுக்காரரை நல்லாவே மிரட்டுறீங்க போலருக்கு
//பதிவுக்குள்ளாற டீப்பாப் போறதுக்கு முன்னாடி, ஒரு பொது அறிவுக் கேள்வி: இலங்கையின் தலைநகர் எது? என்னா நக்கல் சிரிப்பு? (சரியான) பதிலச் சொலுங்கப்பு.//
டெல்லி ஸாரி கொழுப்பு ஸாரி ஸாரி கொழும்பு...
அண்ணாச்சி பாவம்தான் போங்க...
//ஆமா, இலங்கை தலைநகரம் என்ன? கொழும்புவா? ஹூம்.. இப்படித்தான் நானும் என் பெரியவன்கிட்டச் சொல்லி மாட்டினேன். ”ஸ்ரீ ஜெயவர்த்தனபுரக் கோட்டை” தான் நிர்வாகத் தலைநகரமாம். கொழும்பு, வியாபாரத் தலைநகரம்தானாம். கரெக்டா?//
புது தகவலா இருக்கே....!!!
எக்கச்சக்க விஷயங்கள் ட்ரெங்குப்பெட்டியில்.. பூகம்பம் வந்தா என்ன செய்யணும்ங்கற விளக்கம் ரொம்பவே அருமையானதும் பயனுள்ளதும் கூட.
டிரங்குப் பெட்டி நல்ல பொருட்களால் நிரம்பி வழியுது.
//ஒரு வழியா உலகக் கோப்பை முடிஞ்சுது, ஹப்பாடான்னு மூச்சுவிட நினைச்சா, அடுத்த நாளே ஐபிஎல் தொடங்கிடுச்சாம்ல. அதே கதை தொடருது//
எனக்கும் அப்படித் தோன்றியதால், ஒரு பதிவு எழுதிட்டேன்.
**********************
என்னுடைய கிரிக்கெட் தொடர்பான பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படிக்க...
அளவுக்கு மீறினால்...?!
நன்றி.
//அம்மா விலைவாசி உயர்வைக் குறித்துப் புலம்புகிறார். பதிலுக்கு நானும், இங்குள்ள விலைவாசி, வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் என்று புலம்பினேன். பின்னே, நாம ஒண்ணும் புலம்பாம இருந்துட்டா நம்ம கௌரவம் என்னாகிறது?//
கெளரவம் ரொம்ப முக்கியம் சகோ
ஹா ஹா
ஜெயவர்தனபுர சரி. கொழும்பிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் தூரத்தில் இருக்கு. பார்லிமெண்ட் கூட அங்கதான்.
உங்களவரோட ஜீபீஎஸ் பத்தின கமெண்ட் சூப்பர். :))
ட்ரைவ் செய்யும்போது தூக்கம் வருதா ? அவ்.. ஹுசைனம்மா.. கவனிங்க..கவனிங்க..
ஒளிஞ்சுக்கற ஐடியாக்கு தேங்க்ஸ்..
உம்மா வாப்பா வந்து இருக்காங்களா ஐ ஜாலி தான்.
வழக்கம் போல் டிரெங்கு பெட்டியில் பல தகவல்கள்.
டிரங்குப்பெட்டில இவ்வளவு சாமான் இருந்தா கனக்காது...ஹெ ஹெ ஹே
நீங்க சொன்ன பூகம்ப விஷயத்தை நானும் யோசிச்சிருக்கேன்... கட்டில், மேஜைக்கடியில ஒளிஞ்சுகிட்டா நாம்தானே சப்பட்டையாகிவோம்னு. இப்ப புரிஞ்சிடுச்சு!! டாங்க்ஸ் :)
பையனுங்ககிட்ட பல்பு வாங்கலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதோ...ஹெ ஹெ
வாப்பா, உம்மாவுக்கு ஸலாம் சொல்லுங்க. திரும்ப இந்தியா போறதுக்குள்ள அவங்களுக்கும் பிளாக் கத்துக் கொடுத்திடுங்க. ஹெ ஹெ ஹே.... வாப்பா உம்மாவை வீட்டுல வெச்சுகிட்டு வலைப்பக்கம் வரவே கூடாது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பேசும்போது, ஜிபிஎஸ்ஸின், "turn left", turn right" என்ற பெண்குரல் கேட்டது. “வீட்டுக்குத் தினமும் வழக்கமா வர்ற வழிதானே, அப்புறம் ஏன் ஜிபிஎஸ்?”னு கேட்டதுக்கு வந்த பதில், “டிரைவ் பண்ணும்போது தூக்கம் வந்துது. அதான் அதை ஆன் பண்ணேன். அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”!!
........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா, ...செம லொள்ளு!
ஸ்ரீ ஜெயவர்த்தனபுரக் கோட்டை - இன்று ஒரு தகவல்.
நன்றி.
(டெல்லிதான் இலங்கையின் நிர்வாகத் தலைநகர் என்பதை சொன்னாலும் நம்பவா போறீங்க?)
//ஜிபிஎஸ்// ;))
enjoyed every bit of trunk(u) petti.
//வாப்பா, இந்தியாவின் லஞ்ச ஊழல் மகிமைகளைப் பற்றிச் சொன்னாங்க. //
ம்ம்.. வேலை ஆகணும்னா கொடுத்தா தப்பில்ல அப்படின்ற மென்டாளிட்டிக்கு மக்களும் வந்தாச்சு..
பூகம்பம் - வெற்றிடம் குறித்த தகவலுக்கு நன்றி.. ஆனா இப்ப வீட்டுல இருக்கிறதெல்லாமே மரச் சாமான் தான்.. எங்க போய் ஒளிய?
//என்னவர் ஆஃபிஸிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஃபோன் பண்ணினார். பேசும்போது, ஜிபிஎஸ்ஸின், "turn left", turn right" என்ற பெண்குரல் கேட்டது. “வீட்டுக்குத் தினமும் வழக்கமா வர்ற வழிதானே, அப்புறம் ஏன் ஜிபிஎஸ்?”னு கேட்டதுக்கு வந்த பதில், “டிரைவ் பண்ணும்போது தூக்கம் வந்துது. அதான் அதை ஆன் பண்ணேன். அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”!! //
போன் கூட அதுக்குதான் பண்ணியிருப்பார் போல :))
வாப்பா உம்மா வந்து இருக்காங்களா. ரொம்ப சந்தோஷம். நான் ரொம்ப விசாரித்தாகவும் சலாம் சொன்னதாகவும் சொல்லுங்க ஹுசைனம்மா.
பெட்டியில் ஒளிந்துள்ள விசயங்கள் படுசூப்பர்.
பல்பு வாங்குற நமக்கு புதுசா. ஹி ஹி
பையன்கிட்டா பல்ப் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள் (நான் என்ன புதுசாவா வாங்கிறன்னு கேட்கிறது புரியுது):)
இலங்கை - புதிய தகவல்
வாப்பாக்கும், உம்மாக்கும் ஸலாம் சொல்லுங்க.
//நாம ஒண்ணும் புலம்பாம இருந்துட்டா நம்ம கௌரவம் என்னாகிறது?//
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
//அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க? //
அப்படின்னா நீங்க திமுகாவா?? அவ்வ்வ்வ்
பூகம்ப மேட்டர் புதுசா இருக்கு சகோ
வழக்கம் போல் டிரங்கு பொட்டி சூப்பர்
மேஜை, மரச் சாமான்களுக்கு பக்கத்தில் உட்காரும் யோசனை பயனுள்ளது. ஜி பி எஸ்......சிரிப்பு. இந்திய நிலைமைகளை வாப்பா சொல்லித்தான் தெரிய வேண்டிய நிலையிலா இருக்கிறீர்கள்?
அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”!! //
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் பெற்றோர்க்கும் எங்கள் ஸலாம்.
தலைநகர தகவல்
பழைய பெட்டியில் புதிய தகவல்
குஜராத்தில் மின் வெட்டே இல்லையாம் ...
// “டிரைவ் பண்ணும்போது தூக்கம் வந்துது. அதான் அதை ஆன் பண்ணேன். அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”!! // ஹ்ம்ம்ம்ம்ம்...என்னத்தை சொல்ல?
SUPERB POST .
!"அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”
HA! HA! HA !
good post
ஹூஸைனம்மா,
நிஜமா சொல்லுங்க, சத்தியமா சொல்லுங்க அந்த ஜிபிஎஸ் மேட்டர் உண்மையா???
கொஞ்சம் நேரமாவது உன் குரல் இல்லாம வேற குரல் கேட்கலாமேன்னுதான் ஆன் பண்ணினேன்னுதான அயித்தான் சொன்னாரு, சும்மா டகால்டி விடாதீங்க.
இலங்கையின் தலைநகர் பற்றியது எனக்கும் புதிது..
நிறைய விசயங்களை கோர்த்து எழுதியிருக்கீங்க...
ஆஹா...4 மணி நேரம் தான் கரண்ட் கிடைக்குதா...அட கடவுளே...கொஞ்சம் நேரம் கரண்ட் இல்லாமல் இருந்தாலே கஷ்டம்..
ரொம்ப மிரட்டி வைத்து இருக்கின்றிங்க போல அவர...பாவம் தான்...
சித்ரா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு.
பதிவு சுவாரசியமாக இருந்தது.
super!
Nice Hussainamma,so many matters in a nutshell.Highly informative .
டிரங்குப்பெட்டியிலுள்ள விஷயங்கள் அனைத்துமே நல்லாயிருந்தது.
பூகம்பம் பற்றிய தகவலுக்கு நன்றிங்க.
வழக்கம் போல் அருமை
பீகார் இப்பொழுதுதான் முன்னேற்றப் பாதையில் நடக்க ஆரம்பித்துள்ளது. அதற்க்கு முன்னோட்டமாக யார் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றாலும் அவர்கள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை அரசு பறிமுதல் செய்து மக்களுக்கு நலத் திட்டங்கள் உருவாக உபயோகிக்கிறது .
கொஞ்சம் பொறுமையாக இருந்தால் அங்கு நிலை மாறும். அலுவலக விஷயமாக தினமும் பீகாரில் இருப்பவர்களிடம் பேசுகிறேன். நிலை மாறுகிறது என்பதுதான் அவர்கள் பதில்
அப்புறம், மாம்ஸ் பாவம் , இப்படியா மிரட்டி வைக்கிறது,,
கிரிக்கெட் , நாங்க எங்க வீட்டில் அனைவரயும் கிரிக்கெட் பாக்க வெச்சிட்டோம் . அதனால் மெகா எல்லாம் இல்லை இங்க
தலைநகரம் எனக்கும் புதிய தகவல்தான்
நன்றி
மோகன்
நாஞ்சில் மனோ
அமைதிச்சாரல்க்கா
அமைதி அப்பா
ஹைதர் அலி
புதுகைத்தென்றல்
முத்துலெட்சுமிக்கா (டிரைவிங்கில் கவனமாவே இருப்பார்க்கா அவர்)
ஜலீலாக்கா - ஊருக்குப் போயாச்சுக்கா அவங்க
அன்னு
சித்ரா
பீர் (பதிவுலகை விட்டு நீக்கிவச்சாலும், லொள்ஸ் போகமாட்டேங்குது!!)
இமா
அனாமிகா
எல் போர்ட் - மரச்சாமான் ஆனாலும், பக்கவாட்டில் ஒளிந்துகொள்ளணும்; அடியில் அல்ல.
//போன் கூட அதுக்குதான் பண்ணியிருப்பார்// இருக்குமோ?? :-)))
மலிக்கா
அபுநிஹான்
ஸ்ரீராம் - இந்திய நிலைமைகள் தெரியும்தான். வாப்பா, 30-35 வருடங்கள் அரபுநாடுகளில் வேலை பார்த்துவிட்டு, தற்போது இந்தியாவில் அரசு நிறுவனத்தோடு இணைந்து இயங்கவேண்டிய ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதனால், லஞ்சம் தவிர்த்து வாழ்வதென்பது இந்தியாவில் எவ்வளவு சிரமம் என்று சொன்னாங்க.
ஜமால் - குஜராத் - கரெண்ட் இருக்கும்; உசிரு இருக்குமாமா?
ஸாதிகாக்கா
ஏஞ்சலின்
கீதாக்கா
தராசு - எல்லாருக்கும் ஜிபிஎஸ் மேட்டர்ல என்னா சந்தேகம் & சந்தோஷம்!! நிஜமா உண்மைதான். அவரென்ன தூக்கம் வர்றதுக்கா என் குரலைக் கேக்கறேனாரு? வர்ற தூக்கத்தை விரட்டத்தான் கேட்டதாச் சொன்னார். நம்புங்க!!
நாடோடி
கீதா ஆச்சல்
வித்யா மேடம்
டாக்டர் சார்
கோவை2தில்லி
எல்.கே. - பீஹார் குறித்த தகவலுக்கு நன்றி. ஊழல் சொத்து பறிமுதல் - ரொம்பவே நல்ல விஷயம்!!
அனைவருக்கும் நன்றி!!
Post a Comment