நான் கல்லூரியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது “பார்ட்-டைம் லெக்சரர்ஸ்" என்று ஒவ்வொரு துறையிலும், அப்போத்தான் படிச்சு முடிச்சு வேலைக்குச் சேந்த ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். பேருதான் பார்ட்-டைம், ஆனா வேலை ஃபுல் டைம்தான், அதுவும், நாங்கல்லாம் ஜூனியர்ஸ் என்பதால் எக்ஸ்ட்ராவாவும் வேலை செய்ய வேண்டி இருக்கும். ஹெச்.ஓ.டி. & அஸோஸியேட் ப்ரொஃபஸர்ஸ்களோட பேப்பர் வொர்க்ஸ், கிளாஸ் ரீப்ளேஸ்மெண்ட், யுனிவர்சிடி எக்ஸாம் பேப்பர் கரெக்ஷன், இப்படி எப்பவும் பிஸிதான். வேறு வேலை கிடைக்கும்வரை ஒரு ஸ்டாப்-கேப் அரேஞ்ச்மெண்டாகச் சிலரும், எப்படியும் வேலை பெர்மெனெண்டாகிவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் என்று இந்த வேலையில் தொடர்ந்து கொண்டிருந்தனர். அந்தக் குழுவில் நானும்.
எங்கள் கம்ப்யூட்டர் துறை இருந்த கட்டிடத்தில்தான் ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், கணக்கு துறைகளும் இருந்ததால் (துறைன்னா சட்டுனு ஆற்றுத்துறை, படித்துறை ஞாபகம் வருதா உங்களுக்கு? எனக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை... ஹி..ஹி.. ) அங்கே இருக்கும் எல்லா ‘யூத்’துகளும் - அதான் பார்ட்-டைம் லெக்சரர்ஸ் - எல்லாம் ஒண்ணா சேந்து ஒரே ஜமாதான்!! நான் கல்லூரியில் படிச்ச காலத்தைவிட, அதிகம் அனுபவிச்ச காலம்னும் சொல்லலாம். படிச்சு முடிச்சு பட்டதாரி ஆகிட்டதால் கிடைச்ச கூடுதல் ‘சுதந்திரம்’ பிளஸ் சொந்தக் கால்ல நிக்கிறோம்கிற நெனப்பும் (அந்தச் சம்பளம் ஒரு மாசம் (அப்பத்திய) வாடகைக்குக்கூட வராதுன்னாலும்) சேந்து ஒரு பறக்கற உணர்வுதான் எப்பவும். இதே உணர்வு கொண்ட நாங்க எல்லாரும் ஒரு குரூப்பாச் சேந்து பண்ணுன அலப்பறைகள் இருக்கே... எங்க ஸ்டாஃப் ரூமைப் பாத்து (கேட்டு), நிறைய பேர் ஸ்டூடன்ட்ஸ் டைனிங் ரூம்னு ஏமாந்துபோனது ஞாபகம் வருது!! அது ஒரு இரண்டாவது கல்லூரிக்காலம்!!
google.com
அந்தக் குழுவுல நான், பூரணி, சங்கரி, ஜாய், ஜானகி, ஷபீனாவும்தான் பிரதானம். இதில பூரணி ரொம்ப ரொம்ப அப்பாவி; வெறும் சாட்சியா மட்டுமே இருந்தா. இருந்தாலும், கலா போல எங்களை ஒதுக்கவில்லை. கலாவும் யூத்துதான்னாலும், எங்களுக்கே பாடம் எடுத்த சீனியர்ங்கிறதாலயும், “அய்யோ, எனக்கு இன்னும் கல்யாணமாகிலேயே”ன்னு எப்பவும் புலம்பறதாலயும் நாங்க சேத்துக்கிறதில்லை. அத்தோட, நாங்களும் ‘அடக்கமான’ பொண்ணுக இல்லைங்கிறதால, அவங்களும் வந்து சேர மாட்டாங்க!!
“மேம், கல்யாணமானா ஃப்ரீடம் போயிடும்; அதனால ஜாலியா லைஃபை எஞ்சாய் பண்ணுங்க”ன்னு சொன்னா, “எங்க பெரிப்பா பொண்ணு என் வயசைவிட குறைவுதான்; ஆனா, அவளுக்கே கல்யாணமாகிடுச்சு”ன்னு பதிலுக்குப் புலம்புவாங்க. ரொம்பக் கடுப்பாருந்தாலும், அவங்க வறுமையான மற்றும் பொறுப்புகள் அதிகமான குடும்பப் பிண்ணனி தெரிஞ்சதால, பாவமாகவும் இருக்கும்.
அப்புறம் கல்யாணமானதும் அதிகமான வீட்டுப் பொறுப்புகளால புலம்பல். அப்புறம் குழந்தை உண்டானதும் பெரிப்பா பொண்ணுக்கு ஆம்பளைப் பிள்ளை பிறந்திருக்கு, எனக்கும் ஆண்குழந்தை பிறக்கணுமேன்னு புலம்பல்... அங்க வேலைபாத்த ரெண்டு வருஷமும் இவங்கதான் எங்களுக்கு டிவி சீரியல்!!
பசங்க யாரும் இந்த வாத்தியார் வேலைக்கு வர்றதில்லை. தப்பித் தவறி வந்தவங்களும் ரெண்டு மாசத்துக்கு மேலே தாங்க மாட்டாங்க; பின்ன, முன்வினை தன்னைச் சுட ஆரம்பிப்பதைத் தாங்க முடியுமா?
அப்பத்தான் இங்லீஷ் டிபார்ட்மெண்டில ரோஸலின் வந்து சேந்தாங்க. ‘ங்க’வுக்குக் காரணம், வயசு ஒண்ணுரெண்டுதான் முன்னபின்னன்னாலும், ஓங்கி வளர்ந்த உயரமும், ஒரு ஹெ.ஓ.டி.க்கு இருக்கவேண்டிய அதிகாரமான குரலும் கூட. ஆனாலும், உங்களுக்குக் கொஞ்சம் கூட பயம் வராது அவங்களைப் பாத்தா, உடனே ஒரு சிநேகமான சிரிப்பு வந்துடும். அவ்வளவு கலகலப்பு. எங்க (கொள்ளை) கூட்டத்துக்கு தலைவி பொறுப்பு எடுத்துகிட்டப்புறம் அட்டகாசங்கள் தாங்க முடியாத அளவு போக ஆரம்பிச்சுச்சு.
அவங்கமேல மதிப்பு வர இன்னொரு காரணம், அப்பவே எம்.ஃபில். முடிச்சிருந்தாங்க. அடுத்து பி.ஹெச்.டி. பண்ணவும் ரெடியாகிட்டிருந்தாங்க. இத்தனைக்கும் திருநெல்வேலியில ஒரு கடைக்கோடி கிராமம்தான் சொந்த ஊர். ஆனா, அவங்களுக்கு அது பெரிய விஷயமே இல்லை. அவங்க அக்கா ரெண்டு பேரும் ஏற்கனவே இன்னொரு கல்லூரியிலும், ஸ்கூலிலும் டீச்சர்ஸா இருந்தாங்க. அடுத்து, மாணவர்களோட அவங்க பழகற விதம். சின்ன வயசு டீச்சர்ஸ்கிட்ட இது ஒரு அனுகூலம். டீச்சர்ஸ்கிட்ட ஸ்டூடண்ட்ஸ் நல்லா ஜோவியலா பேசத் தயங்கமாட்டாங்க. சில பிரச்னைகளை மனம்விட்டுச் சொல்வாங்க. நமக்குத் தெரிஞ்ச ஆலோசனைகளைச் சொல்லமுடியும். காதுகொடுத்தும் கேட்பாங்க, சீனியர் ஸ்டாஃபைப் போல அலட்சியப் படுத்த மாட்டாங்க இந்த வகையில ஜாய்க்குத்தான் ஸ்டூடண்ட் ஃபேன்ஸ் நிறைய.
பொதுவாவே, அந்தக் கல்லூரியில கிராமத்தைச் சேந்த பசங்கதான் அதிகம் இருப்பாங்கங்கிறதால, திடீர்னு எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்துல படிக்க வேண்டி வந்ததும் மிரண்டுபோய் இருப்பாங்க. அதில, இங்க்லீஷ் சப்ஜெக்ட் வேற, வழக்கமான லெட்டர் ரைட்டிங், எஸ்ஸே, காம்ப்ரிஹென்ஷன்னு இல்லாம ரொம்ப டெக்னிக்கல் ஓரியண்டடா இருக்கவும் பயந்து நடுங்கிடுவாங்க. அந்தப் பயத்தைப் போக்க ஆங்கில ஆசிரியர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்தாத்தான் முடியும். அந்த வகையில ரோஸலினும், அவங்க துறைத் தலைவர் செல்லப்பா சாரும் பாராட்டப்பட வேண்டியவங்க.
இதுபோல ஆங்கிலத்துல படிக்கக் கஷ்டமாருக்குன்னு காலேஜுக்குப் போகமாட்டேன்னு சொன்ன ஒரு ஸ்டூடண்டை நானும் சேந்து எடுத்துச் சொல்லி, என் பழைய புக்ஸ் & நோட்ஸெல்லாம் கொடுத்து, இப்ப அவரும் ஒரு காலேஜுல லெக்சரரா இருக்கார்!! (நேரம்!!)
எங்க குரூப்ல இருந்தவங்க எல்லாருமே நல்லா படிச்சவங்க. ரொம்ப விவரம் தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாதுன்னாலும், ப்ளஸ்-மைனஸ்களை யோசிச்சு செயல்படக்கூடிய அளவுக்கு அறிவுள்ளவங்கதான். இதிலே ரோஸி பாக்கிறதுக்கு அம்மா மாதிரி இருக்கதுனாலயும், எங்க எல்லாரையும்விட பெரிய படிப்பு படிச்சதாலயும் அவங்ககிட்டதான் முதல் ஆலோசனை கேட்போம். நல்ல ஐடியாஸ் கிடைக்கும்.
இப்படி போயிட்டிருக்க சமயத்துல, எங்களைப் போலவே, ஃபிஸிக்ஸ் டிபார்ட்மெண்டில அக்பர் அலினு ஒருத்தர், எம்.ஃபில். பண்ணவர், பார்ட்-டைமாச் சேந்தார்.
-- கதை ரொம்பப் பெரிசு. மிச்சத்தை ஞாயிறு தொடர்கிறேன்.
|
Tweet | |||
40 comments:
ஹ்ம்ம் இப்படி சஸ்பென்ஸ் வெச்சிட்டீங்களே . நாங்கள் படிச்சது தனியார் கல்லூரி அங்க நான் சேர்ந்தப்ப இருந்த லெக்சரர் எல்லோரும் இளம் வயதினர்தான். (ஆங்கிலம் தமிழ் தவிர்த்து ). இன்று வரை அவர்களிடம் என் நட்பு தொடர்கிறது
சொந்த கதைகளை படிக்கும் பொழுது கதை பெரிதாக தெரியாது பசுமையான நினைவுகள் தான் நம் கண் முன்னே வரும்... அப்படி தான் எனக்கு வருகிறது மீதியினை சீக்கரம் எழுதுங்க... படிக்க ஆர்வமாக இருக்கேன்...
//அந்தப் பயத்தைப் போக்க ஆங்கில ஆசிரியர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்தாத்தான் முடியும். அந்த வகையில ரோஸலினும், அவங்க துறைத் தலைவர் செல்லப்பா சாரும் பாராட்டப்பட வேண்டியவங்க. //
உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியவர்கள் தான்.
இது தான் பல கல்லுரிகள்ள பிரச்சனையே. ஆங்கிலம் என்றால் எதிரியின் மொழி என்றே பெரும்பாலும் புரிந்து வைத்திருக்கிற, பயம் காட்டி வைக்கப்பட்டிருக்கிற தமிழ் மீடியம் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு தகுந்த ஆதரவுமின்மையால் +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களாக இருந்தாலும் கல்லுரியில் சற்று பின்னடைந்து போவதை பார்க்க முடிகிறது.
கதை நல்லா தான் போயிக்கிட்டு இருக்கு. ஆனா அப்பாவி தொடர் கதை (ராஜேஷ் குமார்)ரேஞ்சுக்கு தொடரும் லாம் போட்டு இருக்கீங்களே, அடுத்த பகுதியில முடிஞ்சிருமா??
சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...
ஏங்கா. அடப்பாவிக்கு எதிரா நீங்களும் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்லாத் தான் அலப்பறை பண்ணி இருக்கீங்க. தெய்வமே, நீங்க தான் எங்களுக்கெல்லாம் குரு இனிமேல். வீட்ல திட்டினா, உங்க புளொக் பக்கம் கை காட்டிடுவன். நீங்களாச்சு அம்மாவாச்சு. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
நீங்க இட்லிமாமி ஊரா? சும்மா தான் கேட்டேன்
கல்யாணம் தருகிற பொறுப்புகள் இல்லாத நிலையில் கல்லூரியில் ஆசிரியர் வேலை என்பது என்ன ஒரு சொர்க்கம்....ம்ம்ம்ம்..அதெல்லாம் ஒரு காலம்...
கொசுவர்த்தி சுத்த வச்சதுக்கு நன்றி..
ம்ம் அப்பறம் ??
ஸலாம் உண்டாவதாக சகோ.ஹுசைனம்மா...
நல்ல பகிர்வு. எனக்கும் இதுபற்றிய கல்லூரி ஞாபகங்கள் வந்துவிட்டன.
//பசங்க யாரும் இந்த வாத்தியார் வேலைக்கு வர்றதில்லை. தப்பித் தவறி வந்தவங்களும் ரெண்டு மாசத்துக்கு மேலே தாங்க மாட்டாங்க;//---உண்மைதான்.
ஆனால், காரணம் என்ன..?
யூஜிசி பே ஸ்கேலில் ஒரே ஒரு வகுப்பறையை சிலமணிநேரங்கள் கட்டிக்காக்கும் ஒரு கல்லூரி பேராசிரியருக்கு, இருபத்திநான்குமணிநேரமும் மாவட்டத்தையே கட்டிக்காக்கும் கலெக்டரை விட அதிக சம்பளம்.
பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்ஃபில், பிஹெச்டி எல்லாம் படித்துவிட்டு முப்பது வயதில் யுஜிசி சம்பள கனவுடன் வேலைக்கு சேர்ந்தால் வெறும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் தந்தால்..?
இதுவரை படிப்பிற்காக பல லட்சங்களை செலவழித்திருப்பார்கள். பொதுவாக பெண்ணிடம் அதை குடும்பம் திரும்ப எதிபார்ப்பது இல்லை. ஆனால், ஆணிடம்... அவர் தங்கைகளின் திருமணம், தம்பிகளின் படிப்பு, குடும்பம் அனைவரும் வாழ வீடு, அப்பா-அம்மா மருத்துவ செலவு, வீட்டு வாடகை, உணவு, உடை, பொருள்கள் வாங்க... என அனைத்திற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இவர்... அம்மா நகை, அப்பா பென்ஷன், தாத்தா நிலம் என்று ரெண்டு மூன்று லட்சத்தை முழுங்கிவிட்டு இரண்டாயிரம் மட்டுமே சம்பாரித்தால்..?
மேலும், பெண் சம்பாரிக்க வில்லை என்றாலும் திருமணம் நடப்பதில் எந்த பாதிப்பும் தாமதமும் வராது. ஆனால், ஆண் குறைவாக சம்பாரித்தாலும் கூட திருமணம் என்பது ஒரு கனவுதான் என்றாகிவிடும்.
எனக்கு பிஎஸ்சி வகுப்பு எடுத்த, காரைக்குடி செக்ரியில் பிஹெச்டி முடித்த 31 வயது பேராசிரியருக்கு இரண்டாயிரம்தான் சம்பளம். ஆனால், பிஎஸ்சி முடித்தவுடன் ஒரு உரத்தொழிற்சாலையில் டெக்னிசியனாக சேர்ந்த 20 வயது பொடிப்பயலுக்கு எட்டாயிரம் சம்பளத்துடன்... அக்காமொடேஷன், தண்ணீர் சப்ளை, மின்சார சப்ளை, உணவு, மருத்துவம் பைக்குக்கு பெட்ரோல், தோட்டத்திற்கு போட உரம் என எல்லாம் ஃப்ரீ..!
இப்படித்தான் நம் சமூகம் தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மாற்றம் வேண்டும் சகோ.
நீங்களும் ஆசிரியப்பணியில் இருந்திருக்கீங்களா!!! வெரிகுட்.
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்
இரண்டாவது கல்லூரிக்காலமும் ரொம்ப நல்லா இருந்திருக்கும் போல உங்களுக்கு! தொடருங்கள். :)
சூப்பர் ஆ இருக்கு ஞாயிறு கிழமைக்காக வைடிங்
நீங்க லெக்சரரா?? நம்பவே முடியல்ல ஹூசைனம்மா...ம்ம் விறுவிறுப்பான எழுத்துநடை...அடுத்தபகுதி ஞாயிற்றுக்கிழமையா?? காத்திருப்போம்...
அங்க வேலைபாத்த ரெண்டு வருஷமும் இவங்கதான் எங்களுக்கு டிவி சீரியல்!!
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
கலகலப்பாக போகுது..... தொடர்ந்து அசத்துங்க!
எங்களைப் போலவே, ஃபிஸிக்ஸ் டிபார்ட்மெண்டில அக்பர் அலினு ஒருத்தர், எம்.ஃபில். பண்ணவர், பார்ட்-டைமாச் சேந்தார்
விளக்கம் ப்ளீஸ் :P
ஹை ஆசிரியரா? சூப்பர்.அருமையான தொடர்..
சம்பவமே இனிமேல்தானா... தொடர்பதிவா என்ன...!
என்ன திடீர்னு ஒரு "நாப்பது" வருசம் பின்னாடி போய்ட்டிங்க....:)) ப்ளாக் அன்ட் ஒயிட் படம்னாலும் இன்ட்ரஸ்டிங்காத்தான் இருககு :)))
கொசுவத்தி நல்லா இருக்கு :) அப்ப நல்ல வாலாத் தான் இருந்திருக்கீங்க :) மீதியையும் சீக்கிரம் எழுதுங்க..
நல்லா இல்லை, நல்லா இல்லை, நல்லா இல்லை. ;))) இப்படி பாதியில நிறுத்துறது. கெதியா மீதியைப் போட்டுருங்க ஹுஸைன்.
சுவாரஸ்யமான அனுபவங்கள்தான் உங்களோடது.. பசங்க உங்களை, அதாவது லெக்சரர்களை ராகிங் செஞ்ச அனுபவம் இருக்கா :-)))
/நாங்கல்லாம் ஜூனியர்ஸ் என்பதால் எக்ஸ்ட்ராவாவும் வேலை செய்ய வேண்டி இருக்கும். ஹெச்.ஓ.டி. & அஸோஸியேட் ப்ரொஃபஸர்ஸ்களோட பேப்பர் வொர்க்ஸ், கிளாஸ் ரீப்ளேஸ்மெண்ட், யுனிவர்சிடி எக்ஸாம் பேப்பர் கரெக்ஷன், இப்படி எப்பவும் பிஸிதான்./ இப்படியும் சொல்லலாம்... எடுபிடி வேலை பார்த்தேன்னும் சொல்லலாம்..ஹி..ஹி..
தொடர்கதை நல்லாருக்கு...
செல்லப்பா சார் என்னானார்? :-)
சுவாரஸ்யம். தொடருங்கள்...
பழைய நினைவுகள் நல்லா இருக்கு. மீதியையும் எழுதுங்க. ஆவலா இருக்கு படிக்க.
தொடருங்கள்...
ஆஹா...யாரது அந்த அக்பர்..
என்ன ஹுஸைனம்மா...நீங்க தான் இதுவரை தொடரும் போடாமல் இருந்திங்க...இப்ப நீங்களுமா...
"அங்க வேலைபாத்த ரெண்டு வருஷமும் இவங்கதான் எங்களுக்கு டிவி சீரியல்!!"
வழக்கம்போல நகைச்சுவை இழையோட சுவையான மலரும் நினைவுகள்! இளமையும் துடிப்பும் மிக்க பெண்கள் கூட்டு சேர்ந்தால் அங்கே குதூகலத்திற்கு கேட்கவா வேண்டும்?
கல்லூரி காலக் கதை நல்லாத்தான் போகுது.. தொடருங்கள்..
பார்ட்-டைம் லெக்சரர்ஸ் அனுபவம் உண்டா?அதானே பார்த்தேன்.:-))))))))
//என்ன திடீர்னு ஒரு "நாப்பது" வருசம் பின்னாடி போய்ட்டிங்க....:)) ப்ளாக் அன்ட் ஒயிட் படம்னாலும் இன்ட்ரஸ்டிங்காத்தான் இருககு :))/ என்ன ஹுசைனம்மா,நாஞ்சிலார் சொல்வது உண்மையா?
வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html
எல்.கே.
சிநேகிதி
அபுநிஹான்
மோகன்குமார்
புதுகைத் தென்றல் - நம்பமுடியலை இல்ல? ;-)))
கோவை2தில்லி
சௌம்யா
மேனகா - நீங்களுமா? :-)))
சித்ரா
அமுதா
ஸ்ரீராம் சார்
எல் போர்ட்
அக்பர்
வானதி
மாதேவி
கீதா ஆச்சல்
மனோ அக்கா
நாடோடி
ஆனந்தி
அனைவருக்கும் நன்றி!!
அனாமிகா - அப்பாவியோட இதுக்குப் போட்டி போடவே முடியாது!!
பாசமலர் - ஆமா, பொறுப்புகள் இல்லாத காலம்கிறதால ரொம்ப மகிழ்ச்சியா இருந்துது.
ஸாதிகாக்கா - //அதானே பார்த்தேன்// - ஏங்க்கா?
இமா - இது வேற பாடங்கள் இமா!! அங்க போல கிராஃப்ட் வொர்க்கெல்லாம் எனக்கு வராது!! ;-))))))
பீர் - செல்லப்பா சார் என்னவானார்னு தெரியலையே? ஊருக்குப் போனாத்தான் விசாரிக்கணும். ஆனா, கதையில் அவர் இனி வரமாட்டார். சாரி!!
பிரதாப் - “நாப்பது வருசம் பின்னாடி” - என்னை எவ்வளவுக்கெவ்வளவு வயசானவரா நீங்க நினைக்கிறீங்களோ அவ்வளவு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். இந்த வகையில் அவ்வையார் கருத்துதான் என்னோடதும்!!
(ஸாதிகாக்கா, நோட் திஸ் பாயிண்ட் ;-))) )
ஜமால் - என்ன விளக்கம் வேணும்னு புரியலையே? எங்கள்ல ரோஸியும், அக்பர் அலியும்தான் எம்.ஃபில். பண்ணவங்க. மீதி எல்லாரும் UGதான்.
ஆஷிக் - உங்க கருத்து முழுமையா சரியில்லைங்கிறது என் கருத்து. அரசு கல்லூரிகளில் பார்ட்-டைமா ஆரம்பநிலையில் சேருகிறவர்களுக்கு சம்பளம் ரொம்பக் கம்மி என்பது உண்மைதான். ஆனா, முழுதகுதிகளோட (மாஸ்டர் டிகிரி, எம்.ஃபில்/பி.ஹெச்.டி) முறையா சேர்ந்தா கிடைப்பது பெரிய சம்பளம் மட்டுமில்லை, சலுகைகளும்!! அதிலயும், தற்காலங்களில் ஆள் பற்றாக்குறை காரணமா, தனியார் (இஞ்சினியரிங்) கல்லூரிகளில் ஆரம்பத்துலயே நல்ல சம்பளம் தர்றாங்க. அதே சமயம், பல தனியார் கம்பெனிகளில் புதியவர்களுக்கு ஆரம்பநிலை சம்பளம் என்பது ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கு.
உரத்தொழிற்சாலை என்பது கொஞ்சம் ரிஸ்கியான பணி என்பதால், சம்பளமும், சலுகைகளும் அதிகமாக இருக்கத்தான் செய்யும், ஆயில் ஃபீல்ட் மற்றும் மிலிட்டரி போல. என் கல்லூரித் தோழர்கள் பலரும் இப்பவும் ஆசிரியப் பணியில் இருக்காங்க.
போட்டதும் படிச்சிட்டேன்
ஆனா கமெண்ட் தான் போட முடியல
//நாஞ்சிலாருக்கு நக்கல் பாரு//
அபப்டியே எழுதும் போது இனிமையா இருந்து இருக்குமே
Post a Comment