பதிவுலகில் காணாமப் போனவங்க நிறைய பேர், மறுபடி இப்ப வர ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கும், என் முந்தைய பதிவுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்குன்னு நம்புறேன்!!
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
ஊர்ல வெயில் காலமான ஏப்ரல், மே மாதங்களில் இங்க அவ்வளவா வெயில் இருக்காது. ஆனா, இந்த வருஷம் அப்பவே இங்கயும் கொளுத்தித் தள்ளிடுச்சு!! அங்க வெயில் குறைஞ்சு, மழை வர்ற நேரம் ஆகிடுச்சு; ஆனா, இங்க இன்னும் அனல் கூடிகிட்டிருக்கு!! வெளியில வேலை செய்றவங்களை நினச்சாத்தான் பாவமாருக்கு. இந்த மாசம் 15 தேதியிலிருந்தே மதிய இடைவேளை 3 மணிநேரம் (12 டூ 3) விடணும்னு சொல்லிருக்காங்க.
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
வெயில் காலம்னாலே, இங்க சின்னம்மை (Chicken pox) பரவும். ரெண்டு வருஷம் முன்னாடியே என் பசங்களுக்கு வந்திருச்சு. இதுல என்ன கொடுமைன்னா, ரெண்டு பேருக்குமே தடுப்பூசி போட்டிருந்தேன்!! தடுப்பூசி போட்டா, வராது; அப்படியே வந்தாலும் லேசாத்தான் வரும்னு சொல்லுவாங்க டாக்டர்ஸ். பத்து வருஷம் முன்னாடி தடுப்பூசி போட்ட பெரியவனுக்கு ரொம்ப லைட்டா வந்துது; ஒரு வருஷம் முன்னாடி போட்ட சின்னவனுக்கு நிறைய அள்ளிப் போட்டிருந்துது.
அப்போ, இணையத்துல அதப் பத்தி வாசிச்சப்போ ஒரு ஆச்சர்யமான தகவல் கிடைச்சுது!! அதாவது, சிக்கன் பாக்ஸ் எப்படி பரவுதுன்னு சொல்லுவாங்க? கொப்புளங்கள் காய்ஞ்சு, உதிரும்போதுதானே? அப்படி இல்லையாம்!! கொப்புளங்கள் வரும் முன்னேயான 4-5 நாட்களும், வரத் தொடங்கிய 4-5 நாட்களும்தான் பிறருக்குப் பரவுமாம்!! காய்ந்தபிறகுதான் பாதுகாப்பாம்; பரவாதாம்!! அதாவது, நமக்கு வந்திருக்குன்னு நமக்கு தெரியுமுன்னேயே, நாம் நம் மூச்சுக் காற்று மூலம் (தும்மல், இருமல்) பரப்பிவிடுகிறோமாம்!!
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
ஆனால், இப்படி குறையும் மரண விகிதத்தை ஈடுகட்டவோ என்னவோ, அமீரகத்தில் தற்கொலைகள் இந்தியர்களிடையே அதிகமாகியுள்ளன!! ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒரு இந்தியர் தற்கொலை செய்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம், தனியாக வசித்து வந்த ஆண்கள்தான் தற்கொலை செய்வதாக செய்திகள் வரும். ஆனால், இப்போது குடும்பத்தோடு இருப்பவர்களே, அதிலும் பெண்கள்கூட, தற்கொலை செய்கிறார்கள்!!
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
யோகாங்கிறது, உடலுக்கு மட்டுமில்ல, மனதுக்கும் வலிமை தரும் பயிற்சி. பல காலங்களாகத் தொடர்ந்து யோகா செய்துவருபவர்களுக்கு, நல்ல உடல்நலம் மற்றும் வலிமையோடு, அதிகமான மனவலிமையும், கட்டுப்பாடும் இருக்கும்னு சொல்லுவாங்க. பல யோகிகள் வார/மாதக்கணக்கா தவம் இருந்து அதை நிரூபிச்சிருக்காங்கன்னும் படிச்சிருக்கேன். ஆனா, தற்போது உண்ணாவிரதம் இருந்துவரும் பாபா ராம்தேவின் உடல்நிலை சீர்குறைந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுவயது முதலே யோகா செய்துவரும் அவரின் உடல் உறுதி இவ்வளவுதானா என்று கேள்வி வருகிறது. ஒருவேளை அவரின் மூப்பு காரணமா இருக்குமோ?
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
பாட்மிண்டன் விளையாட்டில், தற்போது மினி ஸ்கர்ட்தான் அணிந்து விளையாட வேண்டுமென்று புதிய விதிமுறையை சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு போன மாதம் வெளியிட்டது. நானும், ஒருவேளை, இலகுவாக விளையாடும் வசதிக்குன்னு இந்த விதிமுறை சொல்றாங்களோன்னு நினைச்சேன்!! ம்ம்.. நிறைய விளம்பரதாரர்களைக் கவரவும், பெண்மையை அழகாக வெளிப்படுத்தவும் (!!), டிவி ரேட்டிங்கைக் அதிகரிக்கவும்தானாம் இந்த நடைமுறை!!
போன வாரம் ஈரானின் பெண்கள் கால்பந்து அணியினரையும் முழு உடை அணிந்த (!!!) காரணத்தால் போட்டியில் பங்கேற்க தடை செஞ்சிருக்காங்க. அந்த அணியினர் வழக்கு தொடர்ந்திருக்காங்க.
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
என் சின்னவன், ஒரு வாரமா ரொம்ப சீரியஸா, “கிங் (king) ஆகிறது எப்படி?”னு கேட்டுகிட்டேயிருக்கான். அதுக்கு, ராஜாவுக்குப் புள்ளையா பிறக்கணும்டானு சொன்னா, ‘போம்மா, ஜோக் பண்ணாத. ராஜாவா ஆகிறதுக்கு என்ன படிக்கணும்?”னு கேக்கிறான்!! இவன், இவ்ளோ அப்பாவியான்னு நம்பமுடியலை!!
^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
|
Tweet | |||
30 comments:
அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?
]]
ஹா ஹா ஹா
சுவாரஸ்யம்.
// இவ்ளோ அப்பாவியான்னு //
உங்களை கலாய்க்கிறானாய் இருக்கும்:)!
நல்லா இருக்கு ...
எல்லாமே தேவையானதும் புதிதுமான செய்திகள்.வெட்டி ஆராய்ச்சியை சீக்கிரமாம் பதிவில போடுங்க.கடைசி....பாவம்.
ஆனாலும் கேள்வி ஆழம் !
சிக்கின் பொக்ஸ் ஒரு வாட்டி வந்தாலும் தான் திருப்ப வராதுன்னு சொல்லுறாங்க. வராமலா இருக்கு. வர முதல் காய்ச்சல் தூக்கி தூக்கி போடும். இங்க பாத்திருக்கேன். சிலருக்கு இரண்டு மூன்று பருக்கள் மட்டுமே போடும்.
தற்கொலை =(( ஏனுங்க அப்படி. கஷ்டத்தாலயா? கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு.
பாட்மின்டன் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல. ஆணுங்களோட சிக்ஸ் பாக்ஸை காட்டறதுக்கு மேற்சட்டை இல்லாமல் விளையாடட்டுமே. எதுக்கு எப்பவுமே பொண்ணுங்களத் தான் போகைப்பொருளாக காட்டணும். அதுவும் பிரான்சில்.
உங்க பையன் மாமஸ் மாதிரி அப்பாவி போல. போல என்ன, அப்படித் தான். ஹி ஹி.
///இவ்ளோ அப்பாவியான்னு நம்பமுடியலை!!///
இதுக்கு உங்க பிள்ளையை சொல்லி குற்றமில்லை. உங்களைத்தான் குறை சொல்லனும். இந்த காலத்தில் பிள்ளையை இப்படியா அப்பாவிதனமாகவா வளர்ப்பது.
//அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?//
உங்களுக்கு ரொம்பவே நக்கல், இருங்க "அம்மா "கிட்ட போட்டு கொடுக்குறேன்.நீங்க தமிழ் நாட்டுக்கு வந்துதானே ஆகனும்.
//நாலுமாசமா ஒரு (வெட்டி) ஆராய்ச்சி பண்ணினதுல, சில அரிய கண்டுபிடிப்புகள் செய்திருக்கேன். ///
எப்படி உடம்புபை பெருக்குவதுன்னா?
அடுத்த பதிவுல சொல்றேன்!!/
இப்படி சஸ்பன்ஸ்ல எங்களை தவிக்க விட்டு போயிட்டிங்களே மக்கா
பளபளக்குது டிரங்பொட்டி.
/// அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?///
இரவும் பகலும் மாறிமாறி வந்தால்தானே உலகமே இயங்குது. ஹிஹிஹி...
//"தடுப்பூசி போட்டா, வராது; அப்படியே வந்தாலும்........"//
வருவதற்கான வாய்ப்பு குறைவே தவிர முற்றிலும் நிறுத்தி விடும் என்று சொல்ல முடியாதே...
//"நாலுமாசமா ஒரு (வெட்டி) ஆராய்ச்சி பண்ணினதுல, ....."//
யாரை வெட்டி...?!
//"ராஜாவா ஆகிறதுக்கு என்ன படிக்கணும்......"/
:))
அது என்ன ஆராய்ச்சி ?? ஆவலுடன் இருக்கிறேன்.
அப்புறம் இந்த உடை விஷயம் , அவங்க அவங்க சுதந்திரம்னு விட்டுடனும். டென்னிஸ்ல அப்படித்தான ?
//அதுவும் பிரான்சில். //
illaiye
டிரங்கு பொட்டி இந்த முறை அம்சமாக உள்ளது.லின்க் எல்லாம் கொடுத்து மேலதிக தகவலை தெரிந்து கொள்ள முடிகின்றது.
இந்தியர்களின் தற்கொலை பலகாலமாக நடந்துகொண்டு வருகிறது, பாவம்.
சீக்கிரம் ஆராய்ச்சி பதிவ போடுங்க,ரொம்ப ஆவலா இருக்கு...
//பதிவுலகில் காணாமப் போனவங்க நிறைய பேர், மறுபடி இப்ப வர ஆரம்பிச்சிட்டாங்க//.
அப்படியா யாருங்க அது? சொன்னா தானே நாங்க தெரிஞ்சிக்க முடியும்
//சில அரிய கண்டுபிடிப்புகள் செய்திருக்கேன். அடுத்த பதிவுல சொல்றேன்!!//
We are Waiting.
டிரங்கு பெட்டி திறந்தால் நிறைய்ய புதுச் செய்திகள் கிடைக்கும். அது இந்த வாட்டியும் ஊர்ஜிதம் ஆகிடிச்சு.
ஹுசைனம்மா பையனா இப்புடிக் கேக்குறாங்க!!! நம்பவே முடியலயே! ;)
// ராஜாவா ஆகிறதுக்கு என்ன படிக்கணும்?”னு கேக்கிறான்!! //
ராஜாவாகுறதுக்கு பதிலா படிக்காமலேயே இருக்கலாம் :))
டிரங்குப்பெட்டியில் விதவிதமான செய்திகளோடு தான் கொண்டு வந்து இறக்கியிருக்கீங்க. உங்கள் கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறோம்.
சுவாரஸ்யமான தகவல்கள்.
//அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?//
இது செம. :)
//அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?//
அதுசரி எல்லாம் நான்போய் ஊரில் தங்களாமுன்னு நெனக்கிறப்பவா இப்படியெல்லாம் நடக்கனும்.[ அப்ப இருட்டுலயேதான் இருக்கனுமோ!] வாங்க நான் போனதும் மொதவேலையா இத அம்மாகிட்டசொல்லிக்கொடுக்கிறேன்
//அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?//
// ராஜாவா ஆகிறதுக்கு என்ன படிக்கணும்?”னு கேக்கிறான்!! //
என்ன சொன்னாலும் அம்மாவைப் பற்றி இப்படியும், மகனைப் பற்றி அப்படியும் செய்தி வெளியிட்டிருக்கக் கூடாது. ஸ்ஸ்ஸ் ரகசியம் காப்போர் சங்கம்!! :-))
பரவாயில்லையே ஒரு அலசு அலசிட்டிங்க, நல்ல பதிவு.
//இவன், இவ்ளோ அப்பாவியான்னு நம்பமுடியலை!!//
இந்த வார பல்பு.
சிக்கன் பாக்ஸ் மேட்டர் என்னை போன்ற நிறைய பேருக்கு புதுசா இருக்கு.
//நாலுமாசமா ஒரு (வெட்டி) ஆராய்ச்சி பண்ணினதுல//
ஆராய்ச்சியே வெட்டியா? அதுவும் அடுத்த பதிவுலயா? அப்ப பேசாம சம்மர் ஹாலிடேஸ் உட்ற வேண்டியதுதான்
//என் சின்னவன், ஒரு வாரமா ரொம்ப சீரியஸா, “கிங் (king) ஆகிறது எப்படி?”னு கேட்டுகிட்டேயிருக்கான். அதுக்கு, ராஜாவுக்குப் புள்ளையா பிறக்கணும்டானு சொன்னா, ‘போம்மா, ஜோக் பண்ணாத. ராஜாவா ஆகிறதுக்கு என்ன படிக்கணும்?”னு கேக்கிறான்!! இவன், இவ்ளோ அப்பாவியான்னு நம்பமுடியலை!!//
அவ்வ்வ்வவ்.. எப்புடியெல்லாம் கேள்வி கேக்குராய்ங்க..
தாய் போல பிள்ளை.. நீங்களும் அப்பாவியே தான் ஹூசைனம்மா :)
//ரெண்டு பேருக்குமே தடுப்பூசி போட்டிருந்தேன்!! தடுப்பூசி போட்டா, வராது; அப்படியே வந்தாலும் லேசாத்தான் வரும்னு சொல்லுவாங்க டாக்டர்ஸ். பத்து வருஷம் முன்னாடி தடுப்பூசி போட்ட பெரியவனுக்கு ரொம்ப லைட்டா வந்துது; ஒரு வருஷம் முன்னாடி போட்ட சின்னவனுக்கு நிறைய அள்ளிப் போட்டிருந்துது.//
அப்படியா? நானும் இந்த ஊசி பெரியவளுக்குப் போட்டிருக்கேன். சின்னவளுக்குப் போடறதா வேண்டாமா?
தீபா, தடுப்பூசி போட்டாலும், பலருக்கும் வரத்தான் செய்யுது. ஆனால், சிலருக்கு வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போடுவதில் பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கிறது. உயிருக்கு ஆபத்தில்லாத நோய் எனும் பட்சத்தில், தடுப்பூசி போடாமல் நோய் வந்து, அதன்மூலம் இயற்கையாக எதிர்ப்பு சக்தி உருவாகுவதே நல்லது என்பது பலரின் வாதம். மேலும், சின்னம்மை தடுப்பூசியின் அதிக விலையையும் சுட்டிக் காட்டுகிறார்கள் இவர்கள்.
தடுப்பூசியில் உள்ள நன்மை என்னவெனில், போட்டபின் வந்தாலும் பாதிப்பு அதிகம் இராது. போடவில்லையெனில், சந்தர்ப்பம் அறியாமல் - பரீட்சை, விசேஷ சமயங்களில் அல்லது வேறு பாதிப்பு இருக்கும் சமயத்தில் அம்மை வந்தால் - உடல்வேதனையோடு, மிகுந்த மனவேதனையும் இருக்கும். தொற்றுநோய் என்பதால், பெரும்பாலும் குழந்தைகள், தாய்மார் என குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து வந்தால் கவனிப்பதில் சிரமமும்கூட. வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு லீவு கிடைப்பதின் சிரமமும் தடுப்பூசி போடுவதற்கு ஒரு காரணி.
இவற்றையெல்லாம் யோசித்து, நான் என் பிள்ளைகள் இருவருக்கும் போட்டுவிட்டேன்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, தடுப்பூசி போட்டவருக்கு நோய் வராது; ஆனால், அவர் Carrier-ஆக இருப்பதிலிருந்து தடுக்காது.
எனக்கு தடுப்பூசி போடலை... இதுவரைக்கும் அம்மை நோய் தாக்கலை. ஒருதடவை வீட்டுல எல்லாருக்கும் வந்து எனக்கும் மட்டும் வரலை. இனி வர வாய்ப்பு இருக்கா?
ஆராயச்சி முடிவுகளை சீக்கிரமா வெளியிடுங்க....
வருகை புரிந்து, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!!
அனாமிகா - சிக்கன் பாக்ஸ் ஒருத்தருக்கு வாழ்க்கையில் ஒரே முறைதான் வரும். அப்படி இரண்டாம் முறை யாருக்கேனும் வந்து, மருத்துவரால் அது சிக்கன் பாக்ஸ்தான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதா - உங்களுக்குத் தெரிந்து, அப்படி இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்களேன். எனக்கு இது புது தகவல் - அதான் கேட்கிறேன்.
//உங்க பையன் மாமஸ் மாதிரி அப்பாவி போல// சின்னவன் அப்பா மாதிரி என்பதால்தான், என்னால் நம்ப முடியவில்லை!! ;-)))))
மோகன்குமார் - //அப்படியா யாருங்க அது? // வக்கீல் இல்லியா, அதான் ஆதாரமெல்லாம் கேக்குறீங்க. வந்தவங்கள்ல சில பேர், ஸாதிகா, புதுகைத் தென்றல், கோவை2தில்லி, இன்னும் வராதவங்க ரெண்டு பேர் பேரு சொல்றேன், தேடிக் கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க!! அமைதிச் சாரலும், அம்பிகாவும்!! :-))))
இமா - என் பையன்னா, நான் நம்பிடுவேன். அப்பாவோட கம்ப்ளீட் ஸெராக்ஸ் அவன், அதான் முடியல!! :-))))
அப்துல்லா - நலமா? ஆளையேக் காணோம்??
பிரதாப் - //ஒருதடவை வீட்டுல எல்லாருக்கும் வந்து எனக்கும் மட்டும் வரலை// ஹி.. ஹி.. விஷம், இன்னொரு விஷத்தை ஒண்ணும் பண்ணாதுல்ல. அதனாலயா இருக்கும்!! ;-)))))
Post a Comment