அப்போ:
”ஹை!! எவ்ளோ அழகான பட்டர்ஃப்ளைஸ்!! கலர் கலரா பறக்கிறதைப் பாக்கப் பாக்கப் பிடிச்சு வச்சுக்கணும்போல இருக்குல்லம்மா?”
“பார்க்ல நிறைய பூ இருக்குல்லடா. அதான் வருது. நம்ம வீட்டுத் தோட்டத்திலயும் செடியெல்லாம் வளந்து, நிறைய பூ வரும்போது இதே மாதிரி வீட்டுலயும் வரும். அப்போ பாத்துகிட்டே இருக்கலாம். வா போலாம்.”
இப்போ:
”ம்மா.. பாரேன், நீ சொன்ன மாதிரி நம்ம வீட்டுலயும் பட்டஃப்ளைஸ்!! சூப்பரா இருக்குல்ல?”
”அய்யோ, பட்டர்ஃப்ளையா? அதெல்லாம் செடியில இருக்க இலையில முட்டை போட்டுச்சுன்னா, கேட்டர்பில்லர் வந்து இலையை அரிச்சுடுமே!!”
(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)
அப்போ:
”ரோட்டோரமா இருக்க சின்னத் தோட்டம்னாலும், குருவி, புறா, மைனான்னு இந்த இடமே ஒரு ஹெவன்லியா இருக்கு இல்ல? இதுக்காகவே நம்ம வீட்டுல கார்டன் வைக்கணுங்க”.
இப்போ:
”இத்துணூண்டு இருக்க குருவிக்கு என்ன அறிவு பாரேன்? அரிசியைத் தின்னாம, கரெக்டா, அதுக்குத் தேவையான செடியில இலையைக் கொத்தித் திங்குது பாரேன்!!”
”அடடா, முந்தா நாள் போட்ட விதையில முளைச்ச மிளகா நாத்தைத் தின்னு நாசம் பண்ணுது. அதை ரசிச்சு வேற பாத்துகிட்டு. போய் விரட்டி விடுங்க. ஒரு சோளக்கொல்லை பொம்மை செஞ்சு வைக்காமச் சரியா வராது போல. அதுவரைக்கும், தினம் நீங்க இங்க வீட்டுக்குள்ள உக்காந்து படிக்கிற பேப்பரை தோட்டத்துல போய் உக்காந்து படிங்க, போங்க.”
(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)
அப்போ:
”அடேய்!! ஏண்டா செடியில இலையைப் பறிக்கிற?”
“சும்மாதான். அழகா இருக்கு. அதான் பிச்சு வச்சுக்கப் போறேன். ரோட்டுல இருக்க மரம்தானே? வீட்டுல இருக்க செடியப் பிச்ச மாதிரி சத்தம் போடுற?”
“எங்கேயானாலும், நமக்குத் தேவைப் படாத சமயத்துல, அநாவசியமா ஒரு இலையைக் கூடப் பறிக்கக்கூடாது. உன்னைக் கிள்ளினா வலிக்குதுல்ல? அதுமாதிரி செடிக்கும் இலையைப் பறிச்சா வலிக்கும், தெரியுதா?”
இப்போ:
”எம்மா, யம்மா!! ஏன் அந்தப் பூவையும், இலையையும் பிச்சுப் போடுற? அழகாத்தானே இருக்கு?”
”எல்லாம் எனக்குத் தெரியும். நீ போ. செடி உச்சியில பூ வந்துடுச்சுன்னா, அதுக்கு மேலே அவ்வளவா வளராது. கொஞ்சமெல்லாம் பக்கவாட்டுல இருக்க இலைகளப் பறிச்சு விட்டாத்தான், செடி உயரமா வளரும். இல்லன்னா, தண்டு ஸ்ட்ராங்காகாது.”
(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)
ஐஸ்கிரீம் சாப்பிடும் புல் புல்!!
இதுதான் நாங்க தோட்டம் வளர்க்கிற கதை!! போன வாரம் நான் பண்ணின ஆராய்ச்சி பத்தி சொல்லிருந்தேனே, அது இதான்:
குருவி/புறா/புல் புல்- ஆகியவைக்குப் பிடிச்சது:
தக்காளி, மிளகாய், வெந்தயக் கீரை, அரைக்கீரை செடிகளின் இலைகள்.
பிடிக்காதது:
வெண்டை, பாகற்காய், வேம்பு, முட்டைக்கோஸ் ஆகிய செடிகளின் இலைகள்.
ஆரோக்கியத்தின் ரகசியம்:
ஓமவல்லி, துளசி இலைகளைக் கபளீகரம் செய்வது!!
ஒரு மூணு மாசமா, நானும் செடியின் விதைகளைப் போடுறதும், நாத்து முளைக்கிறதும், முளைச்ச அடுத்த நாளே இலைகள் காணாமப் போறதும்.. நானும் மண்ணு சரியில்லியோ, வெயில் அதிகமோ, முந்தா நாள் அடிச்ச மணல்காத்துனாலயா, தண்ணி காணாதோ, இல்லை விதையே சரியில்லையோன்னு யோசிச்சு, யோசிச்சு, “தன் முயற்சியில் மனந்தளராத விக்கிரமனா” மறுபடி மறுபடி விதை விதைக்கிறதும், அது முளைச்சு காணாமப் போறதும்.. ஒருவழியா திருடனைப் பிடிச்சாச்சு!! குருவியும், புறாவும், மைனா போன்றிருக்கும் புல்புல் பறவையும்தான் ‘திருடர்கள்’!!
அடுத்து, செடிகளைப் பாதுகாக்க என்ன வழின்னு யோசிச்சப்போ, புலப்பட்ட ஒரே வழி, மேலே படத்தில்!! குருவி, புறாக்கள் போன்ற intruders-களிடமிருந்து மட்டுமில்லை, (பட்டர்ஃப்ளை போன்ற) அந்துப் பூச்சி, கருக வைக்கும் சுடுமணற்காற்று, அனலடிக்கும் 47 டிகிரி வெயில் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு பெற ஒரே வழி பர்தாதான்!! சர்வரோக நிவாரணி!! :-)))))))
|
Tweet | |||
42 comments:
அழகான பட்டர்ஃப்ளைஸ்!!!
excellent
பார்வைகளில் தான் எத்தனை வித்தியாசம்.... :) வேறுபட்ட சிந்தனை வந்து விடுகிறது....
படங்களும், பர்தா பாதுகாப்பும் நல்ல ரசனையைத் தெளிவாய் காட்டுகிறது.. :)
super idea! thanks for sharing.
வாழ்த்துக்கள்...
எங்க வீட்டுல பால்கனி இல்ல விண்டோல மல்லிகைசெடி வச்சி தினம் என் வீட்டுக்காரங்க தண்ணி ஊத்தி வளர்தாங்க.
புறாவுக்கு அது பிரியாணிமாதிரி இருந்திருக்கு ஒரு இலையைக் கூட விட்டுவைக்கல. உங்கள மாதிரிதான் பர்தா போட்டிருக்கோம் அதுதான் பாதுகாப்பு.
கரக்டாக சொன்னீங்க...உங்களுடைய பார்வைகள் சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...
இங்கேயும் இதே கதை தான்..ஒன்னு பறவைகள், bunny எதோவது வந்து சாப்பிட்டுவிட்டு போகுது..அல்லது அக்ஷதா குட்டியியே பிய்த்து போட்டுவிளையாடுகிறாள்...
ஹுசைனம்மா அப்போவும் இப்போவும் உள்ள எண்ணங்களைப்பார்க்கும் பொழுது வயதாகிக்கொண்டுள்ளது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.செடி வளர்ப்பதில் இவ்வளவு சிரத்தை எடுத்து இருக்கீங்க.அத்தனை ஆர்வமா?இங்கு எங்கள் வீட்டில் காம்பவுண்ட் ஓரமாக தொட்டிகளில் நிறைய பூ,குரோட்டன் செடிகள் நான் வளர்த்து வந்தாலும் இத்தனை சிரத்தை எடுத்ததில்லை.
சர்வரோக நிவாரணி - ஹா ஹா ஹா
விளங்குதுங்கோ
செடிகள் நன்கு வர பிரார்த்தனைகள்
செடிக்கு பர்தா சூப்பர்..
ஸலாம் சகோ.ஹுசைனம்மா.
ஏதோ சர்வேதேச அளவில் விருது வென்ற டாக்குமெண்டரி ஆர்ட் ஃபிலிம் பார்த்தது போல இருந்தது. முற்றிலும் வித்தியாசமான சிந்தனைகள். நல்ல ரசனை.
தன்னலப்பார்வை vs. சுயநலப்பார்வை...
இரண்டும் வெவ்வேறு துருவங்களை நோக்கியுள்ளனவே..!
ஆனால்...
ஆனால்...
ரெண்டுமே சரியாத்தானே இருக்கு..!?
இனி முனைவர் உசைனம்மான்னு கூப்பிடலாம் :)
பெண்களுக்கு பர்தா ஆண்களுக்கு...:)
பர்தா பாதுகாப்பு புதுசா இருக்கே
விவசாயி.. விவசாஆஆஆஆஆயி.. ஹூசைனம்மா வாழ்க..
ஹ்ம்.. பொதுவாக ஒன்னு சொல்லுறதுக்கும் அதுவே நமக்குன்னு வரும் போதும் எவ்வளவு மாற்றங்கள்.. அந்தந்தத் தொழில் புரிவோருக்கு அவரவருக்கான நியாயங்கள்..
நல்ல பகிர்வுங்க.
அன்பு ஹுசைனம்மா. இங்கயும் இதே போல
நெட் போட்டுக் காத்து வருகிறோம். முயல்கள் அணிலகளிடமிருந்து காப் பாரு வதற்காக.
பார்வைகள் மாறினாலும் மனம் ஒன்றுதான். இரண்டுமே இயற்கை வழி:).
அன்பு ஹுசைனம்மா. இங்கயும் இதே போல
நெட் போட்டுக் காத்து வருகிறோம். முயல்கள் அணிலகளிடமிருந்து காப் பாரு வதற்காக.
பார்வைகள் மாறினாலும் மனம் ஒன்றுதான். இரண்டுமே இயற்கை வழி:).
புதிய பாதுகாப்பு முறை! பறவைகளும் பாவம், நீங்களும் பாவம். அவை சாப்பிட தனியா கொஞ்சம் கீரை விதை போட்டுடறதுதானே...!
சகோதரி ஹுசைன்னம்மா,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு,
அழகா சொல்லிருக்கீங்க. வாழ்த்துக்கள்..
----
எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு பெற ஒரே வழி பர்தாதான்!! சர்வரோக நிவாரணி!! :-)))))))
-----
:)
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோதரர் நாஞ்சில் பிரதாப்,
உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
----
பெண்களுக்கு பர்தா ஆண்களுக்கு...:)
-----
ஆண்களுக்கும் பர்தா உண்டு. இன்னும் நம் பார்வைகளுக்கு, எண்ணங்களுக்கு, செவிகளுக்கு என்று அனைத்திற்கும் பர்தா உண்டு.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ஆஹா! இதான் விஷயமா! ;)
நல்ல ஐடியா ஹுஸைனம்மா. அப்பப்ப அப்டேட்ஸ் போடுங்க.
இங்கும் நர்சரி கார்டன் வைத்திருப்பவர்களும் இது போல் முற்றிலும் வலை அமைத்து தான் வைத்திருக்கிறார்கள்..
தினம் நீங்க இங்க வீட்டுக்குள்ள உக்காந்து படிக்கிற பேப்பரை தோட்டத்துல போய் உக்காந்து படிங்க, போங்க.”//ஆ.காரருக்கு தான் சோளக்காட்டு பொம்மை ப்ரமோஷனா????
சூப்பர் பர்தா ஐடியா! ஆனால், காற்றடிக்கும் போது பறந்து விடாதா??
//ஒரு சோளக்கொல்லை பொம்மை செஞ்சு வைக்காமச் சரியா வராது போல. அதுவரைக்கும், தினம் நீங்க இங்க வீட்டுக்குள்ள உக்காந்து படிக்கிற பேப்பரை தோட்டத்துல போய் உக்காந்து படிங்க, போங்க.//
உங்க பதிவை இனிமே ஆபீஸ்ல இருக்கோம் போது படிக்க கூடாது... சத்தமா சிரிச்சு எல்லாரும் "என்னாச்சு"னு கேக்கற மாதிரி ஆகி போச்சு...:))
Happy Gardening..:)
ஆக மொத்தம் செடிகளுக்கு கூட பர்தா போட்டுட்டீங்க. வாழ்க உங்கள் மார்க்கச்சேவை... :)))))))
அருமைங்க..
அப்போ இப்போ அசத்தல் அனுபவம் !
நன்றாக விளக்கி இருக்கிறீர்கள். செடியை வளர்ப்பதற்கு இவ்வளவு சிரத்தை எடுத்த உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக. வரும் காலங்களில் சகோதரர் முஹம்மது ஆஷிக் சொன்னது போல் மரம் வளர்ப்பதே அதிகரித்து வரும் வெயிலை கட்டுபடுத்தும். ஆகவே நாம் அனைவரும் மரம் வளர்ப்போம். அதை போன்ற சூழ்நிலை இல்லாதவர்கள் குறைந்தபட்சம் செடியாவது வளர்ப்போம்.
சமூக சூழலில் அக்கறை கொண்ட சகோதரிக்கும் அதை அனைவருக்கும் எடுத்து சொல்லிய விதத்திற்கும், அப்புறம் அந்த புல் போட்டோவிற்கும் நன்றி.
இரண்டு குருவி இருந்தா புல் புல், அப்போ மூனு இருந்தா? # டவுட். lol.
சர்வரோக நிவாரணி: சரியாக சொன்னீர்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்தால் சரி.செடிக்கா இப்படின்னா, ....
எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு பெற ஒரே வழி பர்தாதான்!! சர்வரோக நிவாரணி!! :-)))))))
வாழ்த்துக்கள்...
செடிகள் நன்கு வர பிரார்த்தனைகள்...
கீதா6 - நன்றி.
வெங்கட் நாகராஜ் - ஆமாங்க, சூழ்நிலைக்கேற்றவாறு மாறிவிடுகிறது பார்வை. நன்றீங்க.
கோவை2தில்லி- அவசியத்துக்கேற்றபடி ஐடியாக்கள் உருவாகிவிடுகின்றன ஆதி. நன்றி.
இஸ்மத் பாய் - மல்லிச்செடி இலை பிரியாணி போல இருக்குதா!! இலைகளைப் பறவைகள் சாப்பிடிவதைப் பாக்கும்போது அப்படித்தான் தோணுது.
தா ஆச்சல் - ஆமா, அங்க முயல்கள் தொல்லை உண்டு இல்லியா?
ஸாதிக்காக்கா - //பார்க்கும் பொழுது வயதாகிக்கொண்டுள்ளது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்// ஒத்துக்கிடவும் ஒரு மனசு வேணும்க்கா. உங்களுக்கு அது இருக்கிறது பாருங்க, பெரியவக்க பெரியவங்கதான்!! ஹா.. ஹா.. எப்பூடி?
இங்கேயும் அழகுச் செடிகள் கடகடன்னு வளருதுக்கா. ஆனாலும், நம்ம வளர்த்த செடியிலிருந்து காய் பறிச்சு சாப்பிடணும்கிற ஆசைதான் எனக்கு இத்தனை ஆர்வம் தருகிறதுக்கா. அமீரகத்தைவிட, சென்னை மண் நிச்சயம் அதிக வளமும், உயிர்ப்பு உடையதென்பதால் அங்கு வளர்ப்பது இத்தனை சிரமமாக இருக்காது என்று நினக்கிறேன். முடிந்தால் முயற்சி செய்யுங்கக்கா.
ஜமால் - பிரார்த்தனைகளுக்கு நன்றி. அபுதாபி பக்கம் வந்தாச் சொல்லுங்க.
அமுதா - நன்றிப்பா.
ஆஷிக் பாய் - ஸலாம். டாகுமெண்டரியா??? அவ்வ்வ்... ;-)))))) நன்றிங்க.
பிரதாப் - முனைவர் பட்டத்துக்கு நன்றி. ”ஆன்லைன் பல்கலைக்கழகம்” ஆரம்பிச்சிருக்கீங்க போல!!
//பெண்களுக்கு பர்தா ஆண்களுக்கு...//
அது எப்படிங்க அந்தப் பர்தாக்குள்ள இருக்கதெல்லாம் பெண் செடிகள்தான்னு சொல்றீங்க?? :-))))))))))))
ஆண்-பெண் எல்லாருக்கும் சேத்துதான் பர்தா - செடியானாலும், மனிதர்களானாலும்!!
எல் போர்ட் - வாங்க.. //அந்தந்தத் தொழில் புரிவோருக்கு அவரவருக்கான நியாயங்கள்..// அதேதான்... நன்றிங்க.
அக்பர் - நன்றி.
வல்லி மேடம் - எங்கேயானாலும், செடிகள் நல்லா ஊன்றி வளரும் வரை ஒரு பாதுகாப்பு தேவைப்படுது, இல்லையா? நீங்களும் அந்தச் செடிகளின் படங்கள் முடிஞ்சா போடுங்களேன். நன்றிம்மா.
ஸ்ரீராம் சார் - முதல்லயெல்லாம், இந்த இத்துணூண்டு பறவைகள் எவ்வளவு சாப்பிட்டுடப் போகுதுன்னு விட்டுட்டேன். அப்புறம் பார்த்தா... அசந்துட்டேன்!! தனியா அவைகளுக்கு கொஞ்சம் அரிசி போட்டு வைத்திருக்கிறேன். (ஆனா, அதை எறும்புகளும் பங்கு போடுது!!) இன்னும் நிறைய செடிகள் அவைகளுக்கு இருக்கின்றன ஸ்ரீராம் சார். மேலும், அந்துப் பூச்சிகளை அவை பறந்து பறந்து பிடிக்கும் அழகே தனி!!
எனினும், உங்க ஆலோசனைப்படி, இனி கடைக்குப் போகும்போது, அவைகளுக்குன்னு தனியா bird feeds வாங்கிப் போடறேன், இன்ஷா அல்லாஹ்.
ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். நன்றி!!
இமா - அதேதான் விஷயம்!! உங்களுக்குப் போட்டியா வந்துட்டேனா?? ;-)))))))
நாடோடி - ஆமாங்க, பொதுவா எல்லா நர்சரிகளிலும் இப்படித்தான் வச்சிருப்பாங்க. நன்றிங்க.
வானதி - நீங்கதான் முதல்ல மேட்டரை ”கப்”புனு பிடிச்சீங்க!! நானும் முதல்லருந்து யாராவது இந்த சோளக்கொல்லை மேட்டரை நோட் பண்றாங்களான்னு ஆசயா பாத்துட்டிருந்தேன். உங்க & அப்பாவியின் கமெண்ட் பாத்ததும் அப்படியொரு சந்தோஷம்!! ;-))))))))))
அப்புறம், அந்த நெட் பறக்காம இருக்க concrete blocks அதன்மேலே அங்கங்கே வச்சிருக்கேன். சில இடங்களில், பெரிய தண்ணீர் பாட்டிலும் வச்சிருக்கேன்.
அப்பாவி - பாம்பின் கால் பாம்பறியும்.. அதான் கரெக்டா பிடிச்சுட்டீங்க மேட்டரை!! ;-)))))
அன்னு - எங்கெங்க முடியுமா, அங்கங்க செய்துட வேண்டியதுதான் சேவையை!!
உழவன் - நன்றிங்க.
ஹேமா - நன்றிப்பா.
அபுநிஹான் - ஆமாங்க, எல்லாருமே முடிஞ்ச விதத்துல, செடிகள் வளர்க்கணும் கண்டிப்பா. புல் புல் - ஹி..ஹி..
இராஜேஸ்வரி - நன்றிங்க பிரார்த்தனைகளுக்கு.
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
விவசாயி..விவசாஆஆஆஆஆயி.. ஹூசைனம்மா வாழ்க// ரிப்பீட்ட்டு
//ஒரு சோளக்கொல்லை பொம்மை செஞ்சு வைக்காமச் சரியா வராது போல. அதுவரைக்கும், தினம் நீங்க இங்க வீட்டுக்குள்ள உக்காந்து படிக்கிற பேப்பரை தோட்டத்துல போய் உக்காந்து படிங்க, போங்க.// அப்ப உங்க ரங்க்ஸ் ஆபிஸ் விட்டு வர வரைக்கும் நீங்க உக்காந்திருப்பீங்களோ?! #டவுட்டு ;))
எங்கூட்லயும் துளசியையும், ரோஜாப்பூக்களையும் குருவிகள் வந்து சாப்பிடுது.. சரி போட்டும்ன்னு விட்டுடறதுதான் :-))
செடியெல்லாம் பார்க்கறப்ப ரொம்ப சந்தோஷமாருக்கு.. நல்லா வளர வாழ்த்துகள்.
இராஜ ராஜேஸ்வரி - நன்றிங்க.
என்றென்றும் 16 - அதானே, இந்த டவுட்டு இன்னும் ஆருக்கும் வர்லியேன்னு பாத்தேன்!!
அமைதிக்கா - செடி நல்லா வளந்தப்புறம், அதுக தின்னு மீதிதான் நமக்கு. ஆனா, செடிய வளரவே விடாம, விதை முளைக்கும்போதே தின்னு தீத்தா? அதுக்குத்தான், இந்த மூடாக்கெல்லாம்!! :-)))))
ஒரு செடியோ, தோட்டமோ, வைப்பதும் அதை பாதுகாப்பதும் எவ்வளவு கஷ்ட்ம் என்பதை நல்ல ரசனையாக விளக்கி உள்ளீர்கள்.
நான் உங்கள் பதிவில் கருத்திடுவது முதல் முறை,ஆனால் பதிவுகளை சில நாட்களாக படித்துவருகிரேன். வாழ்த்துக்கள்.
ஹாஹாஹா செடிகளுக்கும் பர்தா அணிவித்து பத்திரமாய் வளர்க்கும் என் அன்புத் தங்கை ஹுசைனம்மா வாழ்க வாழ்க..:)
அப்போவெல்லாம் மனசு மென்மையாக மட்டும் இருக்கும்போது இப்படித்தான் யோசிக்கும்.
அனுபவ அலைகள் அந்த மென்மையை அடித்துக்கொன்டு போன பிறகு மனசு இப்போவெல்லாம் இப்படித்தான் பிராக்டிகலாய் யோசிக்கும்! யதார்த்தம்தான் இது!
செடிகளுக்கு பர்தா பிரமாதம் ஹுஸைனம்மா!
அஸ்ஸலாமு அழைக்கும் நல்ல அருமையான பதிவு
ஒரு கவிஞ்சரும் தோட்டக்கலை நிபுணரும் கலந்த கலவை யான ஒருவர் எழுதிய வை போல் இருந்தது
Post a Comment