சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரிட்டன் இளவரசி டயானாவின்
விவாகரத்திற்குப் பிறகு, அவர் பாகிஸ்தானிய மருத்துவர் ஒருவருடன்
நெருங்கிய நட்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், அவர்கள் பிரிந்தனர்.
அவராக விலகினாரா அல்லது செல்ல வைக்கப்பட்டாரா என்பது அறியப்படவில்லை.
பின்னர், எகிப்தின் பெரும்புள்ளி டோடி அல் ஃபயத்-உடன் நெருங்கிய நட்பு கொண்டார். அவரோடு காரில் செல்லும்போதுதான் விபத்தில் மரணித்தார். ஒரு முஸ்லிமுடனான அவரது நட்பு அரச குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படாததால் நடந்த “விபத்து” என்றும் சொல்லப்பட்டது!!
இதே போன்ற ஒரு வரலாறு சென்ற நூற்றாண்டிலும் பிரிட்டிஷ் அரச பரம்பரையில் உண்டு!! இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், 1887-ல், விக்டோரியா மகாராணியாரின் பொன்விழா கொண்டாட்டத்தில் அரண்மனையில் நடந்த வெகு பிரம்மாண்ட விருந்தில் உதவி புரிவதற்காக, இந்தியா மீது ஆர்வம் கொண்டிருந்த மகாராணியின் பிரத்யேக வேண்டுகோளின் பேரில் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரு பணியாளர்களில் ஒருவர் “அப்துல் கரீம்”.
நாளாவட்டத்தில், மகாராணியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றியதில், அவரது தனிச்செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார். 80+ வயது அரசிக்கும், 30+ வயது அப்துலுக்கும் இடையில் ஒரு அழகிய பாசமிகுந்த நட்பு மலர்கிறது. ஆனால், அதை அரண்மனைவாசிகள் கொச்சைப்படுத்திப் பார்க்கின்றனர். எதிர்ப்புகள் வந்த போதும், அவற்றைப் புறந்தள்ளி, தன்னை “மகாராணியாகப்” பார்த்து எட்டி நிற்காமல், சக மனுஷியாகப் பார்த்துப் பழகும் அப்துலுக்குப் பல சலுகைகள் அளிக்கிறார் மகாராணியார்.
எனினும் அவரது மரணத்திற்குப் பின்னர் அரண்மனையினர் அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். அவர்களின் நட்புக்கு சாட்சியான எல்லாவற்றையும் (கடிதங்கள், புகைப்படங்கள், டைரிகள்) தேடித்தேடி அழித்துவிடுகின்றனர்.
எனினும், 2003-ல் ஒரு பத்திரிகையாளரின் கண்ணில் ஒரு புகைப்படம் பட்டு, அதைத் தோண்டித் துருவியதில் இத்தனை விஷயமும் வெளியே வந்துள்ளன. அதை "Victoria and Abdul" என ஒரு திரைப்படமாகவும் எடுத்துவிட்டனர்!!
சில வருடங்களுக்கு முன் என் சின்னவன், ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, ”விக்டோரியா மகாராணிக்கு இந்தியான்னா ரொம்பப் பிடிக்குமாம்; அவங்கதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கணும் சொன்னாங்களாம்... நம்ம நாட்டுக்கு அப்படித்தான் சுதந்திரம் கிடைச்சிதாம்...” என்றான்.
இந்தப் பிண்ணனியெல்லாம் தெரியாததால், “போடா..... அதெல்லாம் கதையா இருக்கும்..” என்று அதை கண்டுக்கலை... இப்பத்தான் தெரியுது....
https://www.vanityfair.com/hollywood/2017/09/queen-victoria-and-abdul-real-story

|
Tweet | |||
1 comments:
எப்பவும் நட்பு அழகானது வலிமையானது
Post a Comment