Pages

ரசிப்பும் ருசிப்பும் வியப்பும்.....




செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...

இந்தப் பாடலை ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது...  அதிலும், அதில் வரும்... 

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்  போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்”

போன்ற உருவகங்கள்...  அதுவரை இதுபோல யோசித்திராதவர்களைக்கூட, அதன்பிறகு இயற்கையில்  காணும் எல்லாவற்றையும்  கலைக்கண்ணோடு பார்க்க வைக்கும்! 

மரம், மலை, மலர், மழை, மேகம், மருண்டோடும் மான்... 
இப்படி எதுவானாலும் அதன் அழகை ரசிப்பது என்பது அனைவரும் விரும்பிச் செய்யும் ஒன்று.

இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவே பல இடங்களுக்கும் சுற்றுலா செல்லும் வழக்கமும் நம்மிடத்தில் உண்டு!!

அழகில் லயித்து ரசிக்கும் ஒரு சாமான்யன், ஒரு கவிஞனாக மாறி அதைக்  கவிதையாக வடிப்பதும்,  கலைஞனாக  புகைப்படங்களில் பதிவு செய்வதும் ரசிப்புக் கலையின்  அடுத்த கட்டங்கள். 

இயற்கை அழகும், அது தூண்டிவிடும் ரசிப்புத் தன்மையும் ஒரு  சாதாரணமானவனையும்கூட கலைஞனாக மாற்றிவிடக்கூடிய அளவுக்கு வலிமையானவை!! 

சரி.... எல்லாவற்றையுமே இப்படியே ரசித்துக் கொண்டிருந்தால் மட்டுமே போதுமா? அதற்காகத்தான் - அதற்கு மட்டும்தான்-  அவை படைக்கப்பட்டிருக்கிறதா? கண்களால்  ரசிக்க மட்டும்தானா?  

அழகை ரசிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், அந்த ரசனை நம்மை அதன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறதா? 
மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்கவும் கேட்கவும் வைக்கும் அழகும், இனிமையும்  அதன் அடுத்த கட்டமான சிந்தனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா? 

நாம் ரசிக்கும் அந்தப் படைப்பைக் குறித்துச்  சிந்திக்க வேண்டாமா? அதன் படைப்பின் பிரம்மாண்டம், துல்லியம், நுணுக்கம், நோக்கம், செயற்பாடுகள், பயன்கள், விளைவுகள் நம்மை அதிர வைக்க வேண்டாமா?  

படைப்பே இப்படி அதிர வைக்கிறதென்றால், அதைப்  படைத்தவன் எப்பேர்ப்ட்டவனாக இருப்பான்?

சிந்தித்திருக்கிறோமா? அல்லது அழகில் மட்டுமே மயங்கி மதிமறந்துவிட்டோமா?

ண்ணீரில்லாமல் மீன் உயிர் வாழுமா என்ன? "தரையில் துடிக்கும் மீன் போல..." என்று உவமானம் சொல்லப் படித்திருக்கிறோமே...  அப்படிஎன்றால், நீரில்லாவிட்டால் மீன் இறந்துவிடும் என்றுதானே அர்த்தம்? ஆனால், தரையிலும் மீன்கள் தண்ணீரின்றி வாழும். வீடியோ பாருங்கள். Lungfish வகை மீன் 3- 7 வருடங்கள்  வரை தாக்குப் பிடிக்குமாம்!!



மீபத்தில் ஒரு இளைஞனுக்கு, காது சரியாகக் கேட்பதில் பிரச்னை இருந்ததால், காது கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அதைப் பயன்படுத்த மறுத்துவிட்டான். காரணம்?

அதிகச் சத்தமாகக் கேட்கிறதாம்!! அதற்கு மெலிதாகக் கேட்பதே பரவாயில்லை என்று சொல்லிவிட்டான்.   :-(

தே சமயத்தில் கிடைத்த இன்னொரு தகவல் இன்னமும் ஆச்சரியப்படுத்தியது.

சிறு வயது முதல் காது கேட்காத ஒரு பெண், பல வருடங்கள் கழித்து கனடாவில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். தலைக்குள் ஒரு கருவியை வைக்கிறார்கள்.

இப்போது அவருக்கும் அதே போல பிரச்னை! என்னவென்றால், நுண்ணிய ஓசைகளும் பெரிதாகக் கேட்கின்றனவாம். ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினால், அந்த எழுதும் ஓசை கூட கேட்கிறதாம். பத்தாவது மாடியில் இருக்கும்போது, கீழே செல்லும் வண்டிகளின் சப்தம் கேட்கிறதாம்!! இன்னும் பலப்பல....

அந்த இளைஞனாவது கருவியைக் கழட்டிப் போட்டு விட்டான். இப்பெண்ணுக்கோ தலைக்குள் கருவி!! எத்தனை முறை அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

//The secondary function of the auditory ossicles is the attenuation of sound waves #to_control_the_volume_of_sounds_reaching_the_inner_ear. A pair of skeletal muscles, the tensor tympani and stapedius, contract to reduce the vibration of the malleus and stapes in response to loud sounds. Sound attenuation is very important in daily life by limiting the sounds produced during chewing and the sound of one’s own voice while talking.//
http://www.innerbody.com/anato…/skeletal/head-neck/bones-ear

விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், எத்தனையெத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும், இறைவனின் படைப்பின் துல்லியத்தை விஞ்ஞானத்தால் அடைய முடியாது!!

67:23. (நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் #செவிப்புலனையும்#பார்வைகளையும் #இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.

அதன் நுட்பத்தை, பிரம்மாண்டத்தை உணர்ந்தால் மட்டுமே, நன்றி உடையவர்களாக இருக்க முடியும்!!


அழகை ரசித்து ருசிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.  ரசிப்பவனால்தான்   அதனைப் படைத்தவனை நேசிக்கவும் முடியும்.

Post Comment

2 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான தகவல்கள்.

நிலாமகள் said...

அழகான பதிவு! படைத்தவனை வியந்து போற்றுவதற்கும் அவனருள் வேண்டும்:)
'அவனருளாலே அவன்தாள் வணங்கி...' என்கிறார்களே...