Pages

டிரங்குப் பொட்டி - 3







“டிரங்குப் பொட்டி”ன்னு பேர் வச்சிருக்கோமே, அது என்ன, எப்படி இருக்கும்னே தெரியாத “யூத்”கள் இங்கே நிறையா இருக்காங்களே, அவங்களுக்காகவாவது டிரங்குப் பொட்டியோட ஒரு படம் போடணும்னு நினைச்சிட்டே இருக்கும்போது, ஒரு நாள் இங்க இருக்கிற “Emirates Heritage Village"க்குப் போனோம். அங்க அவங்க பழங்கால வாழ்க்கை முறையை விளக்கி மாதிரிகள் வச்சிருந்தாங்க. அதில இந்த டிரங்குப் பொட்டியும் இருந்துது. உடனே ஒரு படம் புடிச்சாச்சு உங்களுக்கெல்லாம் காமிக்க. நல்லாருக்கா? (படம் எடுத்தது எங்க ரங்ஸ். அவர் நல்லா படம் காட்டுவாருங்கோ.)

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

அமெரிக்காவுல கைதான டேவிட் ஹெட்லிக்கும் இந்தியாவில சில நடிகைகளுக்கும், இன்னும் சில பிரபலங்களுக்கும் தொடர்பு இருந்துதாம். பாவம், இன்னும் யார் தலையெல்லாம் உருளப்போகுதோ? யாரைப் பிடிச்சாலும், உடனே இவனுக்கு இன்னாரின்னாரோடல்லாம் தொடர்பு இருக்கு அப்படின்னு உறுதிப்படுத்துறதுக்கு முன்னாடியே நியூஸ் போட்டுர்றாங்க. இது பரபரப்பு ஏற்படுத்துறதுக்குப் பதிலா இப்பல்லாம் அடப்பாவமேன்னு பரிதாபத்தத்தான் ஏற்படுத்துது. பிரபலமா இருக்கிறதுக்காக, அவங்க கொடுக்கிற விலைகள்ல ஒண்ணு, போறவன், வர்றவன் எல்லாரோடயும் சிரிச்சி ஃபோட்டோ எடுத்துக்கறது. இந்த ஃபோட்டோ பின்னாட்கள்ல எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்தப் படலாம். ரசிகன்னு சொல்லி வர்ற ஒவ்வொருத்தன்கிட்டயும் ஜாதகமா கேட்டுகிட்டு இருக்க முடியும்?

அதே மாதிரி இப்பல்லாம், ”இந்த கொள்ளை/ கொலை/ குண்டுவெடிப்பு கேஸுல போலீஸ் இவங்களையெல்லாம் பிடிச்சிருக்காங்க” அப்படின்னு ஒரு நாலஞ்சு பேரை வரிசையா நிக்கவெச்சு டிவியில காட்டுவாங்க.முன்னெல்லாம் இந்த மாதிரி காட்டும்போது, ஒரு கோபம் வரும் அந்தக் குற்றவாளிங்களைப் பாக்கும்போது. ஆனா இப்ப? நிஜமா சொல்லுங்க, அவங்களையெல்லாம் பாக்கும்போது, அய்யோ, யாரு பெத்த புள்ளைகளோ, இவங்க மேல இன்னும் கண்டுபிடிக்காம இருக்க எந்தெந்த கேஸுங்களைப் போட்டு க்ளோஸ் பண்ணப்போறாங்களோன்னுதானே தோணுது?

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

போனவாரம் நம்ம பக்கத்து ஊருல (நாட்டுல!!) கருணாகரன் அய்யா உடல்நிலை ரொம்ப கவலைக்கிடமா இருந்துது. (இப்ப தேறிட்டார்). ரொம்ப சீரியஸ் அப்படின்னவுடனே, எதிர்க்கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் எதிர்கோஷ்டித் தலைவர்கள்னு எல்லாரும் போய் அவரைப் பாத்துட்டு வந்தாங்க. நம்ம ஊர்ல அப்படி ஒரு காட்சியை நினைச்சுக்கூடப் பாக்க முடியாது. அதே மாதிரி, மேடைகள்ல கேரள முதல்வர்ல ஆரம்பிச்சு, நடிகர்கள் வரை ஒருத்தர் விட்டு வைக்காம சகட்டுமேனிக்குக் கிண்டல் பண்ணி நடிச்சு காட்டுவாங்க. நம்ம ஊர்ல.. நீங்க வேற, நான் ஏதாவது சொல்லப்போக, அப்புறம் அபுதாபிக்கே ஆட்டோ அனுப்பப்போறாங்க!! நான் புள்ளகுட்டிக்காரிங்க, எனக்கெதுக்கு வம்பு..

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

போன வியாழக்கிழமை பஸ்ல ஏறும்போது, என்னோட ஒரு சீன நாட்டுப் பெண்ணும் ஏறினார். கையில் பெரிய லக்கேஜ், அவர் அப்போதுதான் ஊர்ல இருந்து வந்ததைக் காட்டியது. பஸ் கிளம்பிய பிறகு டிக்கெட் (2 திர்ஹம்) எடுக்க முனைந்தவரிடம் ஒரு நூறு திர்ஹம் நோட்டு மட்டுமே இருந்தது. டிரைவரும் சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு டிக்கெட்டைக் கையில் கொடுத்துவிட்டார். (இங்க டிரைவர், கண்டக்டர் எல்லாம் ஒரே ஆளுதான்). இவர் கைப்பையைப் போட்டுத் துழாவிக் கொண்டிருந்தார். நான் என்னிடம் இருந்த சில்லறையில் 2 திர்ஹமைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு நூறு திர்ஹம் நோட்டை என்னிடமும் நீட்ட, நான் சில்லறை இல்லை, பரவாயில்லை 2 திர்ஹம்தானே, வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவர் மீண்டும் கைப்பையைத் துழாவி. இரண்டு சீன பணத்தாட்களை (1 Yuan each) என் கையில் திணித்தார். மறுத்தும் கேட்கவில்லை. என் மகனின் நாணய சேமிப்பு (Numismatism) ஞாபகம் வர, மறுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, மீண்டும் துழாவி ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துத் திணித்தார். இப்போ மிகுந்த தர்மசங்கடமான நிலையில் நான் . கொடுத்ததோ வெறும் 2 திர்ஹம், இதற்கு இன்னும் என்னவெல்லாம் கொடுக்கப் போகிறாரோ என்று, பஸ்ஸில் இப்போ வேடிக்கைப் பொருள் அவரிலிருந்து, நானானேன். இது சரிவராது என்று அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பேசிக்கொண்டே வந்தேன். (பேச்சு சுவாரஸ்யத்தில் அதன்பிறகு கைப்பையைத் துழாவவில்லை). என் ஸ்டாப்பில் இறங்கப் போகையில் மீண்டும் ஒரு நூறு நன்றிகள் கூறி என் கை குலுக்கி அனுப்பி வைத்தார். அந்த 2 திர்ஹம் கொடுக்கும்போது இருந்த ஒரு சிறு கர்வம் அவரது நன்றியில் சுட்டெரிந்து போனது.

(அந்த டிக்கெட்டுக்கு காசு கொடுக்கவில்லையென்றாலும் டிரைவர் அவரை ஒன்றும் சொல்லி இருக்கப் போவதில்லை!!)

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

என்னவரைப் பற்றி நான்எழுதியிருந்த (நல்லவிதமாத்தான்!!) சில விஷயங்களைக் குறித்துப் பல ஆண் பதிவர்கள் ஆண்கள் சார்பாகக் கொதித்தெழுந்து விட்டார்கள், என்னவோ அவரை நான் கொடுமை செய்வது போல்!! விட்டா, சென்னையில இருக்கிற “ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில” புகார் செஞ்சுடுவாங்க போல்!! ஒரு சில உதாரணங்கள் சொன்னால் புரியும் யார் வில்லன் என்று!!

ஃபார்முலா 1 ரேஸ் நடந்த வெள்ளிகிழமை இங்க லீவு நாள். ஆனா அவர் (நான் தூங்கிகிட்டு இருக்கும்போதே) வேலைக்குப் போயிட்டார். நான் ஃபோன் செஞ்சு:
“என்னங்க, மத்தியானம் என்ன சமைக்கிறது”
”நான் மத்தியானம் சாப்பிட வரமாட்டேன்”
“இல்லைங்க மட்டன், கோழி, மீன் எதுவுமே வீட்டில இல்லைங்க, நீங்களும் ஒண்ணும் வாங்கித் தராம போயிட்டீங்க”
“அதான் நான் சாப்பிட வரமாட்டேன்னு சொல்றேன்ல”
”!!??!!??!!”

புரியுதுங்களா, அதாவது அவர் சாப்பிடலைன்னா, நாங்களும் சாப்பிடக்கூடாதாம்!! அப்புறம் என்ன செய்ய, சிம்பிளா முட்டை ஃப்ரைட் ரைஸும், ஆலு ஃபிரையும் செஞ்சு நானும் பிள்ளைகளும் சாப்பிட்டுகிட்டோம்.

இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா
சொல்றேன் !!

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

பதிவர் சிங்கை செந்தில்நாதன் இப்போ நல்லபடியா உடல் தேறி விட்டார் என்று அறிகிறேன். அவரின் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் கண்டேன். ஆனால் இன்னமும் அவர் உடல்நலம் பெற உதவுங்கள் என்ற வாசகங்கள் பலரின் பதிவுப் பக்கங்களிலிருந்து நீக்கப்படவில்லை. வலையை வலம் வரும் அவரின் கண்களில் இவை பட்டால் நல்லா இருக்காது இல்லையா?

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

ஊரிலிருந்து அம்மா, அப்பா, தங்கை, தங்கையின் 5 மாதக்குழந்தை ஃபரீஹா வந்திருக்கிறார்கள். பெருநாளைக்குப் பிறகு என் பெற்றோர் ஊர் போய் விடுவார்கள். ஃபரீஹா - the sweet bundle of joy!! எல்லோரும் குழந்தைகள் பெற்று வளர்த்து விட்டோம்; என் பெற்றோருக்கும் இது ஆறாவது பேரக்குழந்தை. ஆனாலும் யாருக்கும் ஃபரீஹாவைப் பார்க்க அலுப்பில்லை; சலிப்பில்லை. ஏதோ celebrity போல குடும்பத்தில் உள்ள எல்லாரும் நேற்று முழுதும் அவளைச் சுற்றித்தான்!! அவளது ஒவ்வொர் அசைவுக்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் சொல்லி... நாள் போனதே தெரியவில்லை. நான், என் தங்கைகள் முதல் எங்கள் வீட்டு வாண்டுகள் வரை சண்டை, என் கையில் தா, என் கையில் தா என்று!! அம்மாக்காரி பதறிவிட்டாள், கையையும் காலையும் பிச்சிருவீங்க போலருக்கே என்று. அவள் அப்பாதான் பாவம், எல்லாரும் எப்பக் கிளம்புவாங்க, பிள்ளையை எப்ப தூக்கிக் கொஞ்சலாம் என்று உட்கார்ந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து சேர்ந்திருக்க வேண்டியவர்கள், ஃபிளைட் technical snag காரணமாக சனிக்கிழமை காலைதான் வந்தார்கள். இன்னும் வரலையா என்று கேட்டவர்களிடம் ஃப்ளைட் லேட் என்றதும், ஏர் இந்தியாவா என்று கேட்டார்கள். இல்லை, இத்திஹாத் ஏர்வேஸ் என்றதும், இவங்களும் இப்படி ஆகிட்டாங்களா என்று பதில்.

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

இப்பவெல்லாம் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து விவரங்களை சேகரிப்பதாகச் செய்திகள் வந்தன. இன்று இந்தச் செய்தியும் பார்த்தேன். கனடா ஐ.பி.எம்.மில் வேலை செய்யும் அந்நாட்டுப் பெண் ஒருவர், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, நீண்ட கால விடுப்பு எடுத்திருக்கிறார். இன்ஷ்யூரன்ஸ் மூலம் இவ்விடுப்பிற்கான இழப்பீடும் பெற்று வந்தார்.

லீவெடுத்து சும்மா இருக்க முடியாமல், பாரிலும், டிஸ்கொதேவிலும் நண்பர்களோடு போட்ட ஆட்டத்தை ஃபேஸ்புக்கில் போட, அதைப் பார்த்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம், ஆட்டம் போட முடிகிறது, வேலைக்கு மட்டும் போக முடியலையா என்று இழப்பீட்டை நிறுத்தி விட்டது. டாக்டர்தான் என்னை அங்கேயெல்லாம் போய் ரிலாக்ஸ் செய்யச் சொன்னார் என்று பொண்ணும் போராட்டத்தில் இறங்கி இருக்குது.


அதனால, மக்களே, கவனமா இருங்க!!











Post Comment

38 comments:

ஸாதிகா said...

சீனர்கள் நன்றி தெரிவிப்பதில் வல்லவர்கள் என்று உங்கள் பதிவு மூலம் தெரிகின்றது.அது சரி,ஹுசைனம்மா,அந்த பிஸ்கட் பாக்கட்டை வாங்கிக்கொண்டீர்களா?இல்லையா? :-)

ஹுஸைனம்மா said...

முதல் வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா.

அதெல்லாம் வாங்காம விடுவோமா?

அக்கா, நீங்களும், நானும் இன்னை வலைச்சரம் பக்கத்துல இருக்கோம் பாத்தீங்களா?

Prathap Kumar S. said...

..அவர் நல்லா படம் காட்டுவாருங்கோ.)//
உங்க ரங்ஸ்ஸை கலாய்க்காம உங்களால ஒரு பதிவு கூட போடமுடியாதோ? பாவம்... பதிவுலேயே இந்த கதின்னா...

//இரண்டு சீன பணத்தாட்களை (1 Yuan each) என் கையில் திணித்தார். மறுத்தும் கேட்கவில்லை//

அதை நல்லாப்பாருங்க...டூப்ளிகேட்டா இருக்கப்போவுது..

//அதான் நான் சாப்பிட வரமாட்டேன்னு சொல்றேன்ல”
புரியுதுங்களா, அதாவது அவர் சாப்பிடலைன்னா, நாங்களும் சாப்பிடக்கூடாதாம்!! //
தப்புதப்பா புரிஞசுக்க கூடாது. நான் வரலை நீங்க எதையாச்சும் பண்ணி சாப்பிடுங்கன்னு அந்த அர்த்தத்தல தான் சொல்லிருப்பாங்க... குற்றம் கண்டுபிடிக்க இறங்கிட்டா எதுச்சொன்னாலும் குற்றமாத்ததான் தெரியும்...

இராகவன் நைஜிரியா said...

தங்களின் வலைப்பூவின் 25வது பின் தொடர்பவர் (Follower) என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்..

கிளியனூர் இஸ்மத் said...

டிரங்கு பொட்டி படம் நல்லா இருந்தது...அப்பல்லாம் சிங்கையிலிருந்து வரக்கூடிய டிரங்கு பொட்டி இன்னும் கலக்கலா இருக்கும்...உங்களின் அனுபவங்கள் எதார்த்தமாகவும் படிப்பதற்கு இனிமையாகவும் இருந்தது...வாழ்த்துக்கள்....

இராகவன் நைஜிரியா said...

// “இல்லைங்க மட்டன், கோழி, மீன் எதுவுமே வீட்டில இல்லைங்க, நீங்களும் ஒண்ணும் வாங்கித் தராம போயிட்டீங்க” //

என்னங்க இது கொடுமையா இருக்கு... ஒன்னுமே வாங்கி கொடுக்காம போயிட்டாரா.. அவர் வாங்கிக் கொடுக்கவில்லை என்றுச் சொல்றீங்களே, முதல்ல அவர்கிட்ட பணம் கொடுத்தீங்களா... பணம் முழுக்க உங்க கண்ட்ரோலில் வச்சு கிட்டு அவர் செய்யலை என்று குத்தம் சொன்னா எப்பூடி?

இராகவன் நைஜிரியா said...

// வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து சேர்ந்திருக்க வேண்டியவர்கள், ஃபிளைட் technical snag காரணமாக சனிக்கிழமை காலைதான் வந்தார்கள். இன்னும் வரலையா என்று கேட்டவர்களிடம் ஃப்ளைட் லேட் என்றதும், ஏர் இந்தியாவா என்று கேட்டார்கள். இல்லை, இத்திஹாத் ஏர்வேஸ் என்றதும், இவங்களும் இப்படி ஆகிட்டாங்களா என்று பதில். //

ஆமாங்க ... எமிரேட்ஸும் இப்படி ஆயிடுச்சுங்க..

போன தடவை இந்தியாவில் இருந்து திரும்பும் போது மண்ட காஞ்சுட்டேன்..

ஒரு இடுகை போடுமளவுக்கு விஷயம் இருக்குங்க..

இராகவன் நைஜிரியா said...

// லீவெடுத்து சும்மா இருக்க முடியாமல், பாரிலும், டிஸ்கொதேவிலும் நண்பர்களோடு போட்ட ஆட்டத்தை ஃபேஸ்புக்கில் போட, அதைப் பார்த்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம், ஆட்டம் போட முடிகிறது, வேலைக்கு மட்டும் போக முடியலையா என்று இழப்பீட்டை நிறுத்தி விட்டது. //

அவங்க கேட்டது கரெக்ட்தான்...

இதனால் அறியும் நீதி... லீவு போட்டுட்டு, எங்க வேண்டுமானாலும் போங்க, ஆனால் ஃபேஸ்புக்கில் போடாதீங்க

Menaga Sathia said...

உங்க அனுபவம் நல்லாயிருக்கு ஹூசைனம்மா.

அந்த சீனப்பெண் மனசுல நீங்க இடம்பெற்றுவிட்டார்..

இராகவன் நைஜிரியா said...

// ஹுஸைனம்மா Says:
22/11/09 16:45
முதல் வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா.

அதெல்லாம் வாங்காம விடுவோமா? //

சீனர்கள் நல்லவர்கள். வல்லவர்கள். ஆனா அவங்க கொடுத்த பிஸ்கெட், மேட் இன் சீனாவா இருந்தா, பார்த்துச் சாப்பிடுங்க..

pudugaithendral said...

டிரங்குபொட்டி படம் அருமை. ரங்க்ஸ்களுக்குத்தான்பா இங்க நிறைய்ய ஆதரவாளர்கள் கூட்டம். தங்க்ஸ்கள் நாம சேர்ந்து ஒரு குழு ஆரம்பிச்சு வெச்சுக்கணும். ஹஸ்பண்டாலஜி எழுதும் போது எல்லோரும் இருந்தாங்க. திரும்ப எல்லோரையும் கூப்பிட்டு கமிட்டி ஒண்ணு செஞ்சு வெச்சுக்குவோம்.

:))) உங்க பதிவு படிக்கும் போது பல கலக்கல் ஃப்லீங்க்ஸோட இருந்துச்சு.

S.A. நவாஸுதீன் said...

டிரங்குப் பெட்டி இன்னும் எங்க வீட்டில் 4 இருக்கு.

//(படம் எடுத்தது எங்க ரங்ஸ். அவர் நல்லா படம் காட்டுவாருங்கோ.)//

மச்சான் நீங்க அங்கே ரேஸ் பார்த்துகிட்டு இருக்கீங்க. இங்க உங்களை ரௌஸ் பண்ணிகிட்டு இருக்காங்க

Anonymous said...

ஐ! எவ்வளவு பெரிய ட்ரங்குப்பெட்டி!!! எனக்கு குட்டி குட்டியா டப்பாக்களை சேர்த்து வைக்கும் வினோத பழக்கம் ஒண்ணு இருக்கு..இந்த பெட்டிய பார்த்ததும் இதே மாதிரி குட்டியா கிடைக்குமான்னு ஆவலா இருக்கு...

அப்ப இந்த தடவை பெருநாள் ஜாலியா இருக்கும்ப்போல.. ஈத் முபாரக் லாத்தா!

S.A. நவாஸுதீன் said...

//அவங்களையெல்லாம் பாக்கும்போது, அய்யோ, யாரு பெத்த புள்ளைகளோ, இவங்க மேல இன்னும் கண்டுபிடிக்காம இருக்க எந்தெந்த கேஸுங்களைப் போட்டு க்ளோஸ் பண்ணப்போறாங்களோன்னுதானே தோணுது///

இது என்னமோ நிஜந்தான். எனக்கும் அப்படித்தான் தோனுது.

S.A. நவாஸுதீன் said...

போனவாரம் நம்ம பக்கத்து ஊருல (நாட்டுல!!) - நல்ல நக்கல். அவனுங்க அப்படித்தானே சொல்வானுங்க

S.A. நவாஸுதீன் said...

சைனீஸ் மரியாதையானவங்கதான்

S.A. நவாஸுதீன் said...

//ஃபார்முலா 1 ரேஸ் நடந்த வெள்ளிகிழமை இங்க லீவு நாள். ஆனா அவர் (நான் தூங்கிகிட்டு இருக்கும்போதே) வேலைக்குப் போயிட்டார்.//

அவர் காலைல டிஃபன் பண்ணாம வேலைக்கு போயிருக்கார் பாவம். அதை கேக்கலை. உங்களுக்கு மதியம் சாப்பாடு தான் பிரச்சனை. ஹ்ம்ம்

S.A. நவாஸுதீன் said...

மொத்ததில் கலகலப்பா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

அருமையா எழுதியிருக்கீங்க ஹீஸைனம்மா.

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் Says:
22/11/09 18:16
//ஃபார்முலா 1 ரேஸ் நடந்த வெள்ளிகிழமை இங்க லீவு நாள். ஆனா அவர் (நான் தூங்கிகிட்டு இருக்கும்போதே) வேலைக்குப் போயிட்டார்.//

அவர் காலைல டிஃபன் பண்ணாம வேலைக்கு போயிருக்கார் பாவம். அதை கேக்கலை. உங்களுக்கு மதியம் சாப்பாடு தான் பிரச்சனை. ஹ்ம்ம் //

என்னது இது.. அவர் காலையில் டிபன் பண்ணி வைக்காம போயிட்டாருன்னுதன் இந்த கோபம்... வலைப் பதிவுல போட்டு தாக்கிட்டாங்க

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் Says:
22/11/09 17:46
டிரங்குப் பெட்டி இன்னும் எங்க வீட்டில் 4 இருக்கு.

//(படம் எடுத்தது எங்க ரங்ஸ். அவர் நல்லா படம் காட்டுவாருங்கோ.)//

மச்சான் நீங்க அங்கே ரேஸ் பார்த்துகிட்டு இருக்கீங்க. இங்க உங்களை ரௌஸ் பண்ணிகிட்டு இருக்காங்க//

அட விடுங்கண்ணே.. அவர் அங்க சந்தோஷமா இருக்காரு.. அவரைப் போய் உசுப்பேத்திகிட்டு

பாவா ஷரீப் said...

பல்சுவை கலவைகள்
அருமை

http://karuvaachi.blogspot.com/

அ.மு.செய்யது said...

பஸ்ஸில் இப்போ வேடிக்கைப் பொருள் அவரிலிருந்து, நானானேன்.//

ஹா ஹா...படு சுவாரஸியமா எழுதுறீங்க...!!!!

வீட்டுக்கு புதுசா எதாவது நண்டு,சுண்டு வந்தாலே நேரம் போறதே
தெரியாது.

அப்புறம்,இந்த ஆர்குட்,ஃபேஸ்புக் தொல்ல தாங்க முடியல..எது
பண்ணாலும் மச்சி !!! போட்டோ எடுத்து ஆர்குட்ல அப்லோட்
பண்ணிடுவேன்னு பயபுள்ளங்க மெரட்ட ஆரம்பிச்சிடுதுங்க..!!!

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னம்மா. டிரங்குபொட்டிக்குள் இவ்வளவு விசயமிருக்கா..

கதபோல சோக்காகீது சுவாரசியமா படிச்சிகீன்னு கீரேன்..

தராசு said...

பொட்டி எல்லாம் நல்லாத்தான் இருக்குது.

//புரியுதுங்களா, அதாவது அவர் சாப்பிடலைன்னா, நாங்களும் சாப்பிடக்கூடாதாம்!! அப்புறம் என்ன செய்ய, சிம்பிளா முட்டை ஃப்ரைட் ரைஸும், ஆலு ஃபிரையும் செஞ்சு நானும் பிள்ளைகளும் சாப்பிட்டுகிட்டோம்//

பாவம் மனுஷன், லீவு நாள்லயும் வேலை செய்யணுமேன்னு நொந்துட்டு ஆபீஸ்ல உக்கார்ந்திருப்பாரு. ஆனா வீட்டுல இவ்வளவு வெரைட்டியா செஞ்சு சாப்ட்டுட்டு ரங்கமணிக மேல பாயற பாச்சலை பாருங்களேன். ஹுசைனப்பா, கொஞ்சம் சூதனமா இருங்கப்பு.

ஷாகுல் said...

டிரங்கு பெட்டி நல்லா இருக்குங்க

லெமூரியன்... said...

டிரங்கு பொட்டி இரண்டு இருக்குங்க எங்க வீட்ல..! :-)

சிங்கை நாதன்/SingaiNathan said...

//பதிவர் சிங்கை செந்தில்நாதன் இப்போ நல்லபடியா உடல் தேறி விட்டார் என்று அறிகிறேன். அவரின் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் கண்டேன்.//


அன்புள்ள ஹுஸைனம்மா
மிக்க நன்றி

நான் முதல் கட்ட சிகிச்சையில் மட்டுமே தேறிக்கொண்டு வருகிறேன்.இப்போது மாற்று இதயத்திற்கு காத்திருக்கிறேன்.

பதிவர்களின் அன்பிற்கும் பொருளுதவிக்கும் பிரார்த்தனைகளுக்கும் வெறும் நன்றிகள் மட்டுமே சொல்ல முடிகிறது.

அன்புடன்

சிங்கை நாதன்

ஹுஸைனம்மா said...

//சிங்கை நாதன்/SingaiNathan Says:

நான் முதல் கட்ட சிகிச்சையில் மட்டுமே தேறிக்கொண்டு வருகிறேன்.இப்போது மாற்று இதயத்திற்கு காத்திருக்கிறேன்.//

அறிவேன் செந்தில். இதுபோலவே அடுத்த சிகிச்சையிலும் இறையருளாலும், தன்னம்பிக்கையாலும் நிச்சயம் நல்லபடியாகத் தேறி வருவீர்கள். :-)

என் பதிவிலும் உங்களைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வருகைக்கு ரொம்ப நன்றி செந்தில்!!

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் Says:

உங்க ரங்ஸ்ஸை கலாய்க்காம உங்களால ஒரு பதிவு கூட போடமுடியாதோ? //

என்னால கண்டிப்பா முடியாது. கிடைக்கிற வாய்ப்பைத் தவற விடக்கூடாதில்ல...

//தப்புதப்பா புரிஞசுக்க கூடாது. ...... குற்றம் கண்டுபிடிக்க இறங்கிட்டா எதுச்சொன்னாலும் குற்றமாத்ததான் தெரியும்...//

என்னவரிடம் நான் வியப்பது இதைத்தான், எனது உறவினர்களிடம் மட்டுமல்ல, அவரது முகமறியாத உங்கள் எல்லாரிடமும் கூட ஆதரவு பெற்றுவிடுகிறார் பாருங்கள்!!


//இராகவன் நைஜிரியா Says:

தங்களின் வலைப்பூவின் 25வது பின் தொடர்பவர் (Follower) என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்..//

என் பதிவிலும் காலடி எடுத்து வைத்த பின்னூட்டப் புயலுக்கு என் நன்றிகள்!!

(ஒரு பின்னூட்டப் புயலை இழுத்தாச்சு கட்சிக்குள்ள. இன்னொரு புயல்தான் வராம ஆட்டங்காட்டுறாரு, எப்படி இழுக்கலாம்?)


//முதல்ல அவர்கிட்ட பணம் கொடுத்தீங்களா... //
ஆமால்ல, நான் இத யோசிக்கவே இல்ல.. இதுக்குத்தான் அனுபவசாலிகள் சகவாசம் வேணுங்கிறது....

// பிஸ்கெட், மேட் இன் சீனாவா இருந்தா, பார்த்துச் சாப்பிடுங்க..//
அதனாலத்தான் அத நினைவுப் பரிசா வச்சிருக்கேன்.. :-)

//அட விடுங்கண்ணே.. அவர் அங்க சந்தோஷமா இருக்காரு.. அவரைப் போய் உசுப்பேத்திகிட்டு//
அதுக்குத்தானே ஓவர்டைம்னு ஒரு கான்செப்டே இருக்கு இல்லீங்களா!?



//கிளியனூர் இஸ்மத் Says:
உங்களின் அனுபவங்கள் எதார்த்தமாகவும் படிப்பதற்கு இனிமையாகவும் இருந்தது...வாழ்த்துக்கள்...//

நன்றி அண்ணே!



//S.A. நவாஸுதீன் Says:

மச்சான் நீங்க அங்கே ரேஸ் பார்த்துகிட்டு இருக்கீங்க. இங்க உங்களை ரௌஸ் பண்ணிகிட்டு இருக்காங்க

அவர் காலைல டிஃபன் பண்ணாம வேலைக்கு போயிருக்கார் பாவம்.//

இன்னொரு ரசிகர், ஹூம்!!

//மொத்ததில் கலகலப்பா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்//

நன்றி நவாஸ்.



//செ.சரவணக்குமார் Says:

அருமையா எழுதியிருக்கீங்க ஹீஸைனம்மா.//

நன்றி சரவணக்குமார்.

ஹுஸைனம்மா said...

//கருவாச்சி Says:
பல்சுவை கலவைகள்
அருமை//

நன்றி கருவாச்சி.

//அ.மு.செய்யது Says:
23/11/09 10:14

ஹா ஹா...படு சுவாரஸியமா எழுதுறீங்க...!!!! //

நன்றி செய்யது.

//எது பண்ணாலும் மச்சி !!! போட்டோ எடுத்து ஆர்குட்ல அப்லோட் பண்ணிடுவேன்னு பயபுள்ளங்க மெரட்ட ஆரம்பிச்சிடுதுங்க..!!!//

அப்ப ஏதோ பண்ணிருக்கீங்க அப்படித்தானே?


//தராசு Says:

பொட்டி எல்லாம் நல்லாத்தான் இருக்குது.//

டேங்ஸ் தராஸ்!

//பாவம் மனுஷன், ... ஹுசைனப்பா, கொஞ்சம் சூதனமா இருங்கப்பு.//

நீங்க சூதானமா இருந்து தங்கமணிக்கு 10 விதிகள் போட்டீங்களே, அதன் விளைவுதான் உங்க அடுத்த பதிவே வரலையா இன்னும்?


//ஷாகுல் Says:

டிரங்கு பெட்டி நல்லா இருக்குங்க//

நன்றி ஷாஹுல்.


// லெமூரியன்... Says:

டிரங்கு பொட்டி இரண்டு இருக்குங்க எங்க வீட்ல..! :-)//

லெமூரியாக் கண்டத்து (காலத்து) ஆளில்லியா, அதனால ட்ரங்குப் பொட்டி இருக்கறதுல ஆச்சர்யமில்ல!! வருகைக்கு நன்றி.


//Mrs.Menagasathia Says:

உங்க அனுபவம் நல்லாயிருக்கு ஹூசைனம்மா.//

வருகைக்கு நன்றி மேனகா.


//புதுகைத் தென்றல் Says:

ரங்க்ஸ்களுக்குத்தான்பா இங்க நிறைய்ய ஆதரவாளர்கள் கூட்டம். தங்க்ஸ்கள் நாம சேர்ந்து ஒரு குழு ஆரம்பிச்சு வெச்சுக்கணும். ஹஸ்பண்டாலஜி எழுதும் போது எல்லோரும் இருந்தாங்க. திரும்ப எல்லோரையும் கூப்பிட்டு கமிட்டி ஒண்ணு செஞ்சு வெச்சுக்குவோம்.//

வாங்க அக்கா. நான் உங்க ரசிகையானதுக்கு முக்கிய காரணமே உங்க ஹஸ்பெண்டாலஜிதான்!! கண்டிப்பா கமிட்டி அமைக்கணும்க்கா.


//நாஸியா Says:

இந்த பெட்டிய பார்த்ததும் இதே மாதிரி குட்டியா கிடைக்குமான்னு ஆவலா இருக்கு... //

கடைகள்ல கிடைக்கும். தேடிப்பாருங்க.

// ஈத் முபாரக் லாத்தா!//

நன்றி நாஸியா. உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.


//அன்புடன் மலிக்கா Says:

கதபோல சோக்காகீது சுவாரசியமா படிச்சிகீன்னு கீரேன்..//

கவிஞரம்மா, தங்களின் கொஞ்சுதமிழ் மிக இனிமையாக இருக்கிறது. இவ்வினிய தமிழிலே கவிதை எழுதாதது ஏனோ?

ஹி..ஹி..

எம்.எம்.அப்துல்லா said...

சாரி ஃபார் லேட் கம்மிங் :)

ஹுஸைனம்மா said...

/எம்.எம்.அப்துல்லா Says:
23/11/09 16:09

சாரி ஃபார் லேட் கம்மிங் :)//

வந்தீங்களே, அதுவே போதும்!! டேங்ஸ்.

பீர் | Peer said...

சாரி ஃபார் லேட் கம்மிங் :) மீ டூ..
(அதுக்காக டேங் ஜூஸ் எல்லாம் வேணாம்)

>பரபரப்பு, பரிதாபம்<
>அவரிலிருந்து, நானானேன்< அசத்துறீங்க ஹூசைனம்மா,

ரங்ஸ் பாவம்.. ரொம்ப நல்லவர் போல :(

சிங்கை நாதன் பற்றி நானும் நினைத்துக்கொண்டிருந்த விஷயம் தான் எழுதியிருக்கீங்க. நண்பர் நிச்சயம் உடல் நலம் தேறிவருவார்.. இறைவனிடம் பிராத்திப்போம்.

ஹுஸைனம்மா said...

பீர் | Peer Says:

(அதுக்காக டேங் ஜூஸ் எல்லாம் வேணாம்)//

வேண்டாம்னா போங்க, எனக்கு ஒரு வேலை மிச்சம்.

//ரங்ஸ் பாவம்.. ரொம்ப நல்லவர் போல :( //

அப்ப நான் கெட்டவளா? :-(

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்ல தகவல்கள்,நன்றி அக்கா,ஈத் முபாரக்

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் காக்டெயில் :)

//“இல்லைங்க மட்டன், கோழி, மீன் எதுவுமே வீட்டில இல்லைங்க, நீங்களும் ஒண்ணும் வாங்கித் தராம போயிட்டீங்க”//

கடைக்கு கூட ஆண்களே போக வேண்டும் என்ற பெண்ணாதிக்கவாதி தொனி தெரிகிறதே? :)

//வலையை வலம் வரும் அவரின் கண்களில் இவை பட்டால் நல்லா இருக்காது இல்லையா?//

நல்லதொரு எண்ணம். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? க்ரேட்!

cheena (சீனா) said...

அன்பின் ஹூசைனம்மா

டிரங்குப்பெட்டி படம் சூப்பர்

அவரு நல்லாப் படங்காட்டுவாரா - உங்கள விடவா

பிரபலங்கள் த்ன் கூடப் படம் எடுத்துக் கொள்பவர்கள் யாரென்று கூடத் தெரியாமல் தான் சம்மதிக்கிறார்கள் - என்ன செய்வது ....

தமிழ் நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் நேரில் பார்க்கும் போது நட்புடன் பழகுவார்கள். அது நாகரீகம்

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைபவர்கள் நன்றிகளுக்கு உரியவர்கள் ஆகிறார்கள். அது தான் பிரதி பலன் எதிர்பாராத உதவி

முட்டை பிஃரைட் ரைஸ் ஆலி ப்ஃரை - சிம்பிளா - ம்ம்ம்ம்

நான் அறிந்த வரை சிங்கைப் பதிவர் சிங்கை நாதனுக்கு இன்னும் இதயம் மாற்றப் பட வில்லை. அவர் நலமாக இருக்கிரார். மாற்று இதயம் இன்னும் கிடைக்க வில்லை. மாற்றி இதயம் பொருத்த ஆகும் மருத்துவச் செலவுக்கான பணம் இப்பொழுது பத்திரமாக இருக்கிறது. ஆகவே ஹூஸைனம்மா கூறுவது போல அந்த வில்லைய உடனே எடுத்துடலாமே

விமானப் போக்குவரத்து பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் கால தாமதமாகத்தான் வருகிறது - என்ன செய்வது

மழலைச் செலவம் - கொஞ்சுவது அனைவருக்கும் பிடித்த ஒன்ரூ - தாய் மட்டும் தான் கவலைப்படுவாள் - அய்யொ குழந்தைக்கு மேல் வலிக்குமே இத்தனை பேர் கொஞ்சினால் என்று. தந்தையோ பாவம் போல் எப்பொழுது நமக்கு வாய்ப்பு வரும் என்று காத்திருப்பார்.

ஆமா நீங்க புள்ளகுட்டிக்காரியா

புள்ள இருக்கு குட்டி எங்கே

ம்ம்ம்ம் ஒரு மகிழ்ச்சியான செய்தி - நான் படித்த வரை எந்டஹ் ஒரு இடுகையிலும் சொற்பிழை எழுத்துப்பிழை தட்டச்சுப்பிழை என ஒன்று கூட கண்ணில் படவில்லை.

நல்வாழ்த்துகள் ஹூஸைனம்மா