அப்படி இப்படின்னு கொஞ்சம் பெரிய லீவாப் போச்சுது இந்த முறை!! பெருநாள் நல்ல ஜாலியா இருந்துது. வெள்ளிக்கிழமை என்னோட சித்தி, மாமா பசங்க நாலுபேர் துபாய்லருந்து வந்திருந்தாங்க. பையன்க பேச்சுலர்ஸ்ங்கிறதுன்னால காலையில கொஞ்சம் நல்ல சமையல் செஞ்சிருந்தேன் . ஆப்பம், உறட்டி(அரிசிமாவு ரொட்டி), மட்டன் குழம்பு, பரோட்டா, பட்டர் சிக்கன், கிண்ணத்தப்பம், குலோப் ஜாமுன்னு வச்சதில பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அதுவும் ஆப்பத்தில முட்டை ஆப்பம், ஃபிளவர் ஆப்பமெல்லாம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஒரு வெட்டு வெட்டிட்டாங்க. பேச்சிலர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க இவங்கல்லாம் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் நல்லா கவனிப்பேன். பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதான்னு ஏங்கிக் கிடப்பாங்க.
மத்தியான சாப்பாடு தங்கச்சி வீட்டில. பிரியாணி கடையில வாங்கிகிட்டு, சைட் டிஷ்கள் வீட்டில செஞ்சுகிட்டோம். நல்லா ஃபுல் கட்டு கட்டினதுல வெளியே கிளம்பவே முடியல. பெருநாளும் அதுவுமா ஒரு இடத்துக்காவது போய்ட்டு வரலன்னா குத்தங்குறை எதுவும் வந்துடப்படாதேன்னு இரவு எட்டு மணிபோல மூணு கார்லஅபுதாபி கடற்கரை பார்க்குக்கு மட்டும் போய்ட்டு வந்தோம் !! போய் ஷட்டில், வாலிபால் விளையாடி என்ர்ஜியைச் செலவழிச்சுட்டு தங்கச்சி வீட்டுக்கு வந்து மறுபடியும் சாப்பாடு. இப்ப சிம்பிளா குபூஸ், எம்ப்ட்டி சால்னா (பிரியாணியோட கிடைச்சது), ஹமூஸ், முதப்பல்னு ஒருமாதிரி இந்திய, அரேபிய உணவுகளைக் கலந்துகட்டி அடிச்சோம். (ஹமூஸ்: சுண்டல்+எள் பேஸ்ட்; முதப்பல்: சுட்ட கத்தரிக்காய்+எள் பேஸ்ட்).
முந்தின நாள் சாப்பிட்டதுக்கு பேலன்ஸ் பண்றதுக்காக மறுநாள் வெறும் தயிர்சாதம் மட்டுமே!! அடுத்து 3 மணிக்கு கலீஃபா பார்க் போனோம். அங்க மீன்கள் காட்சியகமும், maritime museum-ம் அருமையா இருக்கு. பார்க் அனுமதிக் கட்டணம் 10 திர்ஹத்துல இருந்து இப்ப 1 திர்ஹம் ஆக்கிட்டாங்க, ரொம்ப ஆச்சர்யமா இருந்துது. அங்கயிருந்து 10 மணிக்கு பிட்ஸா ஹட் போயிட்டு வந்து லேட்டா தூங்கினதுல காலையில ரொம்பவே லேட்டா எழுந்ததினால (ஹேங் ஓவர்??!!) அன்னைக்கு ஆஃபிஸுக்கு கட் அடிச்சாச்சு. பின்ன, பசங்களுக்கும் அவருக்கும் பத்து நாள் லீவு. எனக்கு மட்டும் ஆஃபீஸ் வச்சா எப்படி? மெதுவா ஒரு பதினொரு, பன்னெண்டு மணிக்கு தோசை சாப்பிட்டுட்டு துபாய்க்கு வண்டி விட்டாச்சு. அமீரகத்துல இருந்துகிட்டு ஒரு நல்ல நாள், லீவு நாள் வந்தா துபாய் போகலன்னா அந்த லீவு லீவாவே இருக்காது; ஏதோ குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் இருந்துகிட்டே இருக்கும்.
அங்க ஸபீல் பார்க்குல புதுசா ஆரம்பிச்ச ”ஸ்டார் கேட்” போனோம். என்னன்னவோ விளம்பரம் பண்ணியிருந்தாங்க, ஆனா அவங்க வெப்சைட் பாத்தவுடனே புரிஞ்சிடுச்சி இதுவும் இன்னொரு ஃபன் சிட்டி தான்னு. (விளையாட்டு நகரம்) . தங்கச்சி மகன், மச்சான் மகள்ன்னு ஒரு கூட்டம் சேத்துகிட்டுப் போனோம். பெரிய ஏரியா, பணத்தை அள்ளி இறைச்சிருக்காங்க. முடி இருக்கறவ அள்ளி முடியுறா, நம்மால முடியுமா? நல்லா சுத்திப் பாத்துட்டு, அளவாச் செலவழிச்சுகிட்டோம். 10 நிமிஷ 3D படம், GO-KART, Mini go-kart, மேஜிக் ஷோ இந்த மாதிரிச் சில விஷயங்கள் நல்லா இருந்துது. Go-Kart போன பெரிய மகன் அன்னைக்கு முழுசும் வண்டி ஓட்டினவங்கள்ல, வேகமா ஓட்டி, முத அஞ்சு இடத்துக்குள்ள வந்திருந்தான். அவன்கூட ஓட்டினவங்கள்ல அவந்தான் ஃபர்ஸ்ட் (வேகத்துல). எல்லாத்தையும் புள்ளிவிவரத்தோட ஒரு கிராஃப் போட்டு அச்சடிச்சு கொடுக்குறாங்க. இன்னும் ஒருமாசத்துக்கு இது போதும் அவனுக்கு பேசித் தீர்க்க, அதுவும் ஆதாரத்தோட!!
துபாயில பார்க்லயும், முன்பு போயிருந்த தமிழ்ச்சங்க விழாவிலயும் ஜீன்ஸ், டாப்ஸ் போட்ட நிறைய தமிழ்ப் பெண்கள் பார்க்க முடிந்தது. எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை, கழுத்தில் விரல் தடிமனில், நீண்ட முறுக்குத் தாலிச் செயின்!! சென்டிமெண்ட்ஸ்?? அதிலும் தமிழ்ச்சங்க விழாவுல, அநேக ஆண்கள் கழுத்திலயும் மினுமினுத்தது.
துபாய்ல பொது இடங்கள்ல ஷேக் முஹம்மதுவின் (துபாய் ஆட்சியாளர் & அமீரகப் பிரதமர்) படம் வைக்கப்பட்டிருக்கும். இப்ப அதோடு ஷேக் கலீஃபாவின் படமும் (அபுதாபி ஆட்சியாளர் & அமீரக அதிபதி) சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.
வரும் புதன்கிழமை 2-ந் தேதி 38-ஆவது அமீரக தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காகவும், பெருநாளுக்காகவும் நாடு முழுதும் விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்னும் சிறப்பா இருக்கும். கண்டிப்பா அதப் பத்தியும் எழுதி உங்கள டரியலாக்குவேன்!!
|
Tweet | |||
20 comments:
// பையன்க பேச்சுலர்ஸ்ங்கிறதுன்னால காலையில கொஞ்சம் நல்ல சமையல் செஞ்சிருந்தேன் . //
அது நல்ல சமையல்னு நீங்க சொல்லுக்கூடாது..அதை சாப்பிட்டவங்கத்தான் சொல்லனும்.
//பேச்சிலர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க இவங்கல்லாம் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் நல்லா கவனிப்பேன். பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதான்னு ஏங்கிக் கிடப்பாங்க.//
சே... இப்படின்னு தெரிஞசிருந்தா... நானும் வந்திருப்பேனே...
பிரியாணி...போச்சே...
//தடிமனில், நீண்ட முறுக்குத் தாலிச் செயின்!! சென்டிமெண்ட்ஸ்?? அதிலும் தமிழ்ச்சங்க விழாவுல, அநேக ஆண்கள் கழுத்திலயும் மினுமினுத்தது. //
கடைசில பெண்களுக்கே உள்ள குணத்தை சொல்லிட்டீங்க... எப்பத்தான் மாறப்போறீங்களோ??? :-)
முதல் வருகைக்கு நன்றி பிரதாப்!!
//எப்பத்தான் மாறப்போறீங்களோ???//
என்ன மாறணும்? ஆணோ, பெண்ணோ, கண்ணில படறதைச் சொல்லத்தான் செய்வாங்க, இதில என்ன தப்பு?
//நானும் வந்திருப்பேனே...//
எப்ப வேணாலும் வரலாம், முன்னறிவிப்போடு!! (சொல்லாம வந்தா, ஹோட்டல் சாப்பாடுதான்)
தமிழிஷ் பட்டை வரமாட்டேங்குது. அந்தத் தளத்திலும் பிரச்னை போல இருக்கு. என்னன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
//முந்தின நாள் சாப்பிட்டதுக்கு பேலன்ஸ் பண்றதுக்காக மறுநாள் வெறும் தயிர்சாதம் மட்டுமே//
;-) :-) :-)
// தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்னும் சிறப்பா இருக்கும். கண்டிப்பா அதப் பத்தியும் எழுதி உங்கள டரியலாக்குவேன்!!//
ரைட்.. :)
//இப்ப அதோடு ஷேக் கலீஃபாவின் படமும் (அபுதாபி ஆட்சியாளர் & அமீரக அதிபதி) சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.
//
கடன் குடுத்து காப்பாத்திக்கிட்டு இருக்க புண்ணியவான்... படம் இல்லைன்னு கோவிச்சுக்கிட்டாருன்னா என்ன பண்ணுறது??
:))
//எம்.எம்.அப்துல்லா Says:
30/11/09 15:46
கடன் குடுத்து காப்பாத்திக்கிட்டு இருக்க புண்ணியவான்... படம் இல்லைன்னு கோவிச்சுக்கிட்டாருன்னா என்ன பண்ணுறது??//
அப்துல்லா, க.க.க.போ!!
//துபாயில பார்க்லயும், முன்பு போயிருந்த தமிழ்ச்சங்க விழாவிலயும் ஜீன்ஸ், டாப்ஸ் போட்ட நிறைய தமிழ்ப் பெண்கள் பார்க்க முடிந்தது. //
மலையாளிகள் துடைச்சு,வழிச்சி வச்சுட்டு போனதுக்கு அப்புறம் ஏதாவது மிச்சம்மீதி இருக்கான்னு பாக்க நம்ப ஆளுங்க இப்பத்தான் அங்க நிறையா போறாங்க.
//பேச்சிலர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க இவங்கல்லாம் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் நல்லா கவனிப்பேன். பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதான்னு ஏங்கிக் கிடப்பாங்க.//
எவ்ளோ நல்லவங்களா இருக்கீக..எங்களோட மனச புரிஞ்சுட்டு இருக்கீக...
//டரியலாக்குவேன்//
அவ்வ்வ்வ்வ்வ்...
//பேச்சிலர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க இவங்கல்லாம் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் நல்லா கவனிப்பேன். பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதான்னு ஏங்கிக் கிடப்பாங்க.//
கண்கள் பனிக்கின்றன.இதயம் நனைகின்றது.அவ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!!
அருகில் இருந்து பார்த்ததைப்போல் இருந்தது உங்கள் பதிவு.
//எம்.எம்.அப்துல்லா Says:
மலையாளிகள் துடைச்சு,வழிச்சி வச்சுட்டு போனதுக்கு அப்புறம் ஏதாவது மிச்சம்மீதி இருக்கான்னு பாக்க நம்ப ஆளுங்க இப்பத்தான் அங்க நிறையா போறாங்க.//
அப்துல்லா, இதில உள்குத்து எதுவும் இல்லையே? ஏன்னா, நாங்களும் இங்கதான் இருக்கோம்??!!
நீங்க சொன்னமாதிரி, அமீரகம் நல்லா செழிப்பா இருக்கும்போதே மலையாளிகள் அனுபவிச்சுட்டுப் போயிட்டாங்க.
டுபாய்ல என்ன நடக்குதுன்னு ஒரு பதிவு போடுவீங்களா?
very intersting .....
லீவு முடிஞ்சு வந்தாச்சு. குட்.
பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்
லேட்டா வந்ததுக்கு மன்னிக்கனும். பெருநாள் வாழ்த்துக்கள்.
கலகலப்பான பதிவு. இங்கதான் கறி வைக்க ஃப்ரிட்ஜ்ல இடமில்லை. 3 பேருக்கு 4 ஆடு இருக்கு. இந்த மாதம் முழுவதும் சூட்டுக்கறியும், மிளகுக்கறியும், மட்டன் கடாயுமாவே இருக்கும். அதை நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அப்துல்லா, இதில உள்குத்து எதுவும் இல்லையே? ஏன்னா, நாங்களும் இங்கதான் இருக்கோம்??!! //
சத்தியமா உள்குத்து இல்லை லாத்தா. வேதனையைச் சொன்னேன்.
அன்பின் ஹூஸைனம்மா
விடுமுறை நல்ல முறையில் சுற்றத்துடன் கழிந்ததா - பெருநாள் - தியாகத்திருநாள் மகிழ்ச்சியாகச் சென்றது நன்று - நலலா சாப்பிட்டு நல்லா ஊர் சுற்றி நல்லா செலவழிச்சு எல்லாரும் நல்லா மகிழ்ச்சியா இருந்தாங்கல்ல - அது போது - இறைவனுக்கு நன்றி
நல்வாழ்த்துகள்
இப்படி ஒரு அக்கா எனக்கு இல்லையேன்னு வருத்தமா இருக்கிறது. இப்படியெல்லாம் எழுதி எங்களை ஏங்க வைக்காதிங்க. நான் தமிழ் வலைப்பக்கத்திற்கு புதுசு. அதனால்தான் இப்போது பதில் எழுதுகின்றேன். வாழ்த்துக்கள்.
Post a Comment