சவூதிக்கு ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்தபோது கிடைத்த சில சுவாரசியமான அனுபவங்கள். இங்கே பதிவாகத் தந்து பகிர்ந்து கொள்வதோடு, நினைவுப் பதிப்பாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று டூ-இன்-ஒன்னாக.....
(படங்கள்: கூகிளுக்கு நன்றி!!)
*^* மக்கா, மதீனா இரண்டு பள்ளிவாயில்களிலும் அனுதினமும் ஐந்து வேளைகளிலும் தொழுகை முடிந்தவுடன், ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. (இறந்தவர்களுக்கான பாவமன்னிப்பு வேண்டி நடத்தப்படும் சிறப்புத் தொழுகை ‘ஜனாஸாத் தொழுகை’ எனப்படும்.) அங்கிருந்த நாட்களில் ஒரு வேளைகூட மரணமடைந்தோருக்கான இத்தொழுகை நடத்தப்படாமல் இல்லை. வாழும் வாழ்க்கைக்கான தொழுகையும், மரணத்திற்கானத் தொழுகையும் அடுத்தடுத்து நடக்கும்போது வரும் உணர்ச்சிக் கலவைகளினூடே, ’ஒரு நாள் நமக்காகவும் இப்படி தொழுகை நடக்கும்’ என்ற நினைப்பும் தவறாமல் வரும்.
*^* மினாவில் ஒரு வயதான தம்பதியினர் என்னை மிகவும் கவர்ந்தனர். மனைவியால் நடக்கவோ, தரையில் கிடக்கவோ இயலாதென்பதால், ஹஜ்ஜின் ஐந்து நாளும் வீல்சேரிலேயேதான் இருந்தார். அவரது கணவர் அவரைவிட்டு நகராமல் அருகிலிருந்து கவனித்த விதம்... சொல்லிமுடியாது.
*^* பள்ளிவாசல்களில் மாடி ஏற வேண்டிய இடங்களிலெல்லாம் எஸ்கலேட்டர் எனப்படும் ‘தானியங்கிப் படிகள்’தான். வளரும் நாடுகளிலிருந்து வரும் பலருக்கும் அதை முறையாக உபயோகிக்கத் தெரிவதில்லை. வயதானவர்கள் பலர் தடுமாறி விழுவது வாடிக்கையாக இருக்கிறது.
*^* எங்கே பார்த்தாலும் ஜனத்திரள் என்பதால், கூட்டத்தில் யாரேனும் தொலைந்து போவதும், பின் அலைந்து திரிந்து தங்குமிடம் வந்து சேர்வதும் அவ்வப்போது நடக்கும். அதைத் தவிர்க்க, குழுவாகச் செல்பவர்கள் யூனிஃபார்ம் போல ஒரே நிற ஆடை அணிந்துகொள்வார்கள். வெள்ளைவெளெரென்ற கூட்டத்தின் நடுவே கண்ணைப் பறிக்கும் பளீர் நிறங்களில் அவ்வப்போது ஒரு கூட்டம் போவதை, மாடியிலிருந்து பார்க்க வெள்ளைத்தாளில் வர்ணத் தீற்றல்கள் போல, அழகாய் இருக்கும்.
*^* அதிலும், எப்பேர்ப்பட்டக் கூட்டமானாலும் இந்தோனேசியா, சீனா, புருனே போன்ற கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் மட்டும் ஒருவர்கூட பிரிந்துவிடவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் போட்டிருக்கும் ஒரே மாதிரியான கண்ணைப்பறிக்கும் பளீர்வண்ண உடை ஒரு காரணம் என்றாலும், இன்னொன்று, கூட்டத்தின் நடுவே ஒருவர் கையை ஒருவர் விடாமல், நெளிந்து நுழைந்து செல்வது. “நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள், அதைப் போலவே கூட்டத்தினுள் வளைந்து நுழைந்து நெளிந்து சென்றுவிடுகிறார்கள்” என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.
*^* எங்கள் குழுவில் அம்மா-மகள்-மருமகன் கொண்ட இன்னொரு தமிழ் குடும்பமும், நாங்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், எங்களிருவரையும் அக்கா-தங்கை என்றே நிறைய பேர் நம்பிவிட்டனர்!! என் மாமியாரை அவரது குடும்பமும் கவனித்துக் கொண்டது மிகவும் உதவியாக இருந்தது.
*^* நமக்குத்தான் பாகிஸ்தானியர்கள் எதிரி!! (& vice-versa) ஆனால், சவூதியினர், இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் ஒரே நாட்டு மக்கள் போலத்தான் பாவிக்கின்றனர்!! பள்ளிவாயில்களில் விளக்கப் பிரசங்கங்கள் நடத்தும்போதெல்லாம் இரு நாட்டினரையும் அழைத்து ஒன்றாகத்தான் வைத்து பிரசிங்கிக்கின்றனர். அதேபோல, மினா, அரஃபா என்ற இடங்களில் இரு நாட்டினரையும் (பெரும்பாலும்) ஒன்றாக ஒரே கேம்பில்தான் தங்க வைக்கின்றனர்.
(’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எதிர் துருவங்களான இரு குட்டி பத்மினிகளும் சண்டை போடும்போது, ஆசிரியர் ஒரே அறையில் போட்டு பூட்டி வைப்பாரே, அதுதான் ஞாபகம் வருது)
*^* அப்படி தங்கவைத்திருந்தபோது, பாகிஸ்தானியர்கள் நம்மைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், (தென்) இந்தியர்களால்தான் அவர்களைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை - காரணம், அவர்களின் (சீக்கியர்களைப் போன்ற) ஓங்குதாங்கான உடலமைப்பும், உறுதியும்!!
*^* சவூதி அரேபியர்களில்கூட சிலர் தற்போது ஓரளவு ஆங்கிலமும், சில ஹிந்தி வார்த்தைகளும் பேசுகின்றனர். பள்ளிவாசல்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நிற்பவர்கள் இந்திய பெண்களையும் “பாஜி” என்று அழகாக அழைத்து, “அந்தர் மகான் நஹி” என்று சொல்ல, நம் பெண்களோ முழிக்கின்றனர்!!
*^* எங்களை அழைத்துச் சென்ற தனியார் ஹஜ் நிறுவனம் சவூதி சென்றதும் எங்களைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கள் குழுவில் இருவருக்கு அரபி மொழி சரளமாகத் தெரிந்திருந்ததால், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் எங்களின் வசதிகளுக்கு நாங்களே ஏற்பாடு செய்துகொள்ள முடிந்தது.
*^* ஹஜ்ஜின் முக்கிய விதிகளில் ஒன்று, பெண்கள் தகுந்த ஆண்துணை இல்லாமல் வரக்கூடாது என்பது. ஆனால், தனியார் ஹஜ் நிறுவங்கள் இந்த விதியை மதிப்பதேயில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு, வயதான பெண்களையும் தனியாக அழைத்து வந்துவிடுகின்றனர்.
*^* எங்கள் குழுவிலும் அப்படியொருவர் முதிய பெண்மணி இருந்தார் - கீழக்கரை சாராம்மா. இன்னும் மறக்க முடிவில்லை. மிக ஏழையான அவரது ஹஜ் செலவுக்கே அவரது உறவில் ஒரு செல்வந்தர் உதவியதால், உடன் குடும்பத்தினர் யாரும் வர முடியாத நிலை. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கடும் மறதி உள்ள அவரை உடன் வந்த பயணிகளும் தம் பொறுப்பில் எடுக்கத் தயங்கினர். அடிப்படை ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதே பெரும்பாடாகி விட்டது. அதற்கு உதவியதும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சமையல்காரரும், மனிதாபிமானமுள்ள சக பயணிகளும்தான்!!
*^* எங்களை அழைத்துச் சென்ற நிறுவனம் செய்த பல குளறுபடிகள் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த சமையல்கார இளைஞர் சித்தீக், அவரது குழுவின் துணையோடு, எங்களுக்காக, தனிப்பட்ட முறையில் எடுத்த ரிஸ்க்குகள் பல. மறக்கமுடியாதவர்.
*^* சவூதியில் ஹஜ் காலத்தில் டாக்ஸி சார்ஜ் கன்னாபின்னாவென்று ஏறிவிடுகிறது. 5 - 10 ரியால் வாங்கற இடத்துல, 100 - 200 ரியால் கேக்கறாங்க!! ஏன்னு கேட்டா, இந்த நாலு மாசம்தான் எங்களுக்கு சீஸன், இப்ப சம்பாதிச்சாத்தான் உண்டுங்கிறாங்க. சவூதி அரசாங்கம் பஸ் சேவையை அதிகப்படுத்தினா நல்லாருக்கும். (அதுக்கும் அங்கே ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட்டோமில்ல!!) கடைகள், ஹோட்டல்களிலும் இதேபோல ரேட்டு எகிறிக்கிடக்கிறது.
*^* சென்னையிலிருந்து கிளம்பும்போது, விமானத்தில் எங்களோடு வரவேண்டிய ஒரு தனியார் ஹஜ் குழுவினர், விமானத்திற்கு "final boarding call" அறிவிப்பு பலமுறை வந்தபின்னும், ஏர்போர்ட்டில் நின்று கூட்டாகக் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். விமான நேரமும், தொழுகை நேரமும் முன்பே தெரியும். எனில், அதற்கேற்றாற்போல் சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; அல்லது, தாமதமாகிவிட்டால் விமானத்தில் இருந்தே தொழலாம் என்பதையாவது அறிந்திருக்க வேண்டும். பொதுச் சேவை நிறுவனங்களிடத்தில் ஒழுங்கை எதிர்பார்க்கும் நாமும் நம் கடமைகளில் உரிய முறையோடு இருத்தல் வேண்டாமா?
*^* மதீனாவில் பள்ளிவாசலைச் சுற்றிப் பரந்துகிடக்கும் திறந்தவெளி மைதான இடத்தில் நின்று தொழுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவ்விடங்களில் பகல் நேர வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, அரசு தற்போது மெகா சைஸ் குடைகளை அமைத்துள்ளது. இரவு நேரத்தில் ஒரு சாதாரணத் தூண் போல நிற்கும் இந்தக் குடைகள், காலை 6 மணியளவில் விரியும். ஒரு குடை 625 m² பரப்பளவிற்கு நிழல் தரும். இவை விரியும், சுருங்கும் விதத்தைப் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், ஸ்லோமோஷனில் நடக்கும் என்பதால் பார்க்கப் பொறுமையும் தேவை.
*^* குடை வெயிலிலிருந்து காக்கும். ஆனால், வெக்கையினால் வரும் புழுக்கத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? இதற்கும் தண்ணீரைப் பன்னிராகத் தெளிக்கும் ராட்சஸ ஃபேன்கள் அமைத்திருக்கிறார்கள்!!
*^* மில்லியன் கணக்கில் ஆட்கள் புழங்கினாலும், இரவில் சின்னக்கடைகள் அடைக்கப்படுவது இப்படித்தான்!! ஜஸ்ட் ஒரு பெட்ஷீட்!!
*^* கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்பே சின்னவன் ஒரே புலம்பல், “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்"னு. சென்னையில் அம்மாவிடம் என் சின்னவனை விட்டுட்டுப் கிளம்பினப்போவும் ஒரே அழுகை. திரும்பி வந்தபோது அவனைப் பார்த்த என் உறவினர் அடித்த கமெண்ட், “அவ்ளோ புலம்பி அழுதானே, நானும் அம்மாவக் காணாம ஒரு மாசத்துல புள்ளை ஏங்கிடுவானோன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா, பய அஞ்சு கிலோ வெயிட்டும் கூடி, பளபளன்னுல்ல இருக்கான்!!”
என் பதில்: “நான்தான் அவன் அப்படியே அவங்கப்பா மாதிரின்னு சொன்னேனே!!”
*^* ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சோகமாக இருந்த என்னிடம் ஏனென்று கேட்டார் என்னவர். ”ப்ச்... ஒரு மாசமா மணியடிச்சா சோறுன்னு இருந்தாச்சு. இனி நானே சமைக்கணுமேன்னு கவலையா இருக்கு”ன்னேன். “அத நான் சாப்பிடணுமே. என் நிலைமையை யோசிச்சிப் பாரு!!”
(படங்கள்: கூகிளுக்கு நன்றி!!)
*^* மக்கா, மதீனா இரண்டு பள்ளிவாயில்களிலும் அனுதினமும் ஐந்து வேளைகளிலும் தொழுகை முடிந்தவுடன், ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. (இறந்தவர்களுக்கான பாவமன்னிப்பு வேண்டி நடத்தப்படும் சிறப்புத் தொழுகை ‘ஜனாஸாத் தொழுகை’ எனப்படும்.) அங்கிருந்த நாட்களில் ஒரு வேளைகூட மரணமடைந்தோருக்கான இத்தொழுகை நடத்தப்படாமல் இல்லை. வாழும் வாழ்க்கைக்கான தொழுகையும், மரணத்திற்கானத் தொழுகையும் அடுத்தடுத்து நடக்கும்போது வரும் உணர்ச்சிக் கலவைகளினூடே, ’ஒரு நாள் நமக்காகவும் இப்படி தொழுகை நடக்கும்’ என்ற நினைப்பும் தவறாமல் வரும்.
*^* ஹஜ்ஜிற்குரிய ஐந்து நாட்களில், முதல் நாள் மக்கள் தங்கவைக்கப்படுவது ஏஸி, மெத்தை வசதியோடு கூடிய தீப்பிடிக்காத டெண்டுகளில். அடுத்த நாள், அரஃபா என்ற இடத்திலோ, மின்சார வசதி இல்லாத - ஷாமியானா வகை டெண்டுகள். அடுத்து, முஜ்தலிஃபா என்ற இடத்திலோ, அதுவும் கிடையாது. வானமே கூரை, பூமியே மெத்தை!! வசதிகள் படிப்படியாகக் குறைந்து வரும்போது, அதன்மூலம் கிட்டும் பாடங்கள் படிப்பினையாகும்.
![]() |
மினா - டெண்ட் நகரம்.. |
யாரோ.. |
*^* என் மாமியாரை வீல்சேரில் வைத்துக் கூட்டிப் போனதில் கிடைத்த அனுபங்கள் தனி. வீல் சேர் தள்ளி, முன்அனுபவமில்லாததால்(!!!) முதல் நாள் பலரின் காலில் இடித்துவிட்டு, அசடு வழிந்த அனுபவங்களும் உண்டு. அப்புறம் சுதாரிச்சுட்டோம்ல!! (வீல் சேர் காலில் இடித்தால், அடிபடுவது கரண்டைக் காலுக்குப் பின் உள்ள எலும்பில் என்பதால் பயங்கரமாய் வலிக்கும்#அனுபவம்) என் மாமியாரோ மிஞ்சிப் போனால் 45 கிலோதான் எடை இருப்பார். அவரை வைத்துத் தள்ளுவதே ஏற்றமான சில இடங்களில் சிரமமாக இருந்தது. ஆனால், மிக அதிக எடை கொண்டவர்களைச் சிலர் வீல் சேரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.
*^* பள்ளிவாசல்களில் மாடி ஏற வேண்டிய இடங்களிலெல்லாம் எஸ்கலேட்டர் எனப்படும் ‘தானியங்கிப் படிகள்’தான். வளரும் நாடுகளிலிருந்து வரும் பலருக்கும் அதை முறையாக உபயோகிக்கத் தெரிவதில்லை. வயதானவர்கள் பலர் தடுமாறி விழுவது வாடிக்கையாக இருக்கிறது.

*^* அதிலும், எப்பேர்ப்பட்டக் கூட்டமானாலும் இந்தோனேசியா, சீனா, புருனே போன்ற கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் மட்டும் ஒருவர்கூட பிரிந்துவிடவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் போட்டிருக்கும் ஒரே மாதிரியான கண்ணைப்பறிக்கும் பளீர்வண்ண உடை ஒரு காரணம் என்றாலும், இன்னொன்று, கூட்டத்தின் நடுவே ஒருவர் கையை ஒருவர் விடாமல், நெளிந்து நுழைந்து செல்வது. “நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள், அதைப் போலவே கூட்டத்தினுள் வளைந்து நுழைந்து நெளிந்து சென்றுவிடுகிறார்கள்” என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.
*^* எங்கள் குழுவில் அம்மா-மகள்-மருமகன் கொண்ட இன்னொரு தமிழ் குடும்பமும், நாங்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், எங்களிருவரையும் அக்கா-தங்கை என்றே நிறைய பேர் நம்பிவிட்டனர்!! என் மாமியாரை அவரது குடும்பமும் கவனித்துக் கொண்டது மிகவும் உதவியாக இருந்தது.
*^* நமக்குத்தான் பாகிஸ்தானியர்கள் எதிரி!! (& vice-versa) ஆனால், சவூதியினர், இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் ஒரே நாட்டு மக்கள் போலத்தான் பாவிக்கின்றனர்!! பள்ளிவாயில்களில் விளக்கப் பிரசங்கங்கள் நடத்தும்போதெல்லாம் இரு நாட்டினரையும் அழைத்து ஒன்றாகத்தான் வைத்து பிரசிங்கிக்கின்றனர். அதேபோல, மினா, அரஃபா என்ற இடங்களில் இரு நாட்டினரையும் (பெரும்பாலும்) ஒன்றாக ஒரே கேம்பில்தான் தங்க வைக்கின்றனர்.
(’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எதிர் துருவங்களான இரு குட்டி பத்மினிகளும் சண்டை போடும்போது, ஆசிரியர் ஒரே அறையில் போட்டு பூட்டி வைப்பாரே, அதுதான் ஞாபகம் வருது)
*^* அப்படி தங்கவைத்திருந்தபோது, பாகிஸ்தானியர்கள் நம்மைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், (தென்) இந்தியர்களால்தான் அவர்களைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை - காரணம், அவர்களின் (சீக்கியர்களைப் போன்ற) ஓங்குதாங்கான உடலமைப்பும், உறுதியும்!!
*^* சவூதி அரேபியர்களில்கூட சிலர் தற்போது ஓரளவு ஆங்கிலமும், சில ஹிந்தி வார்த்தைகளும் பேசுகின்றனர். பள்ளிவாசல்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நிற்பவர்கள் இந்திய பெண்களையும் “பாஜி” என்று அழகாக அழைத்து, “அந்தர் மகான் நஹி” என்று சொல்ல, நம் பெண்களோ முழிக்கின்றனர்!!
*^* எங்களை அழைத்துச் சென்ற தனியார் ஹஜ் நிறுவனம் சவூதி சென்றதும் எங்களைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கள் குழுவில் இருவருக்கு அரபி மொழி சரளமாகத் தெரிந்திருந்ததால், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் எங்களின் வசதிகளுக்கு நாங்களே ஏற்பாடு செய்துகொள்ள முடிந்தது.
*^* ஹஜ்ஜின் முக்கிய விதிகளில் ஒன்று, பெண்கள் தகுந்த ஆண்துணை இல்லாமல் வரக்கூடாது என்பது. ஆனால், தனியார் ஹஜ் நிறுவங்கள் இந்த விதியை மதிப்பதேயில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு, வயதான பெண்களையும் தனியாக அழைத்து வந்துவிடுகின்றனர்.
*^* எங்கள் குழுவிலும் அப்படியொருவர் முதிய பெண்மணி இருந்தார் - கீழக்கரை சாராம்மா. இன்னும் மறக்க முடிவில்லை. மிக ஏழையான அவரது ஹஜ் செலவுக்கே அவரது உறவில் ஒரு செல்வந்தர் உதவியதால், உடன் குடும்பத்தினர் யாரும் வர முடியாத நிலை. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கடும் மறதி உள்ள அவரை உடன் வந்த பயணிகளும் தம் பொறுப்பில் எடுக்கத் தயங்கினர். அடிப்படை ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதே பெரும்பாடாகி விட்டது. அதற்கு உதவியதும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சமையல்காரரும், மனிதாபிமானமுள்ள சக பயணிகளும்தான்!!
*^* எங்களை அழைத்துச் சென்ற நிறுவனம் செய்த பல குளறுபடிகள் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த சமையல்கார இளைஞர் சித்தீக், அவரது குழுவின் துணையோடு, எங்களுக்காக, தனிப்பட்ட முறையில் எடுத்த ரிஸ்க்குகள் பல. மறக்கமுடியாதவர்.
*^* சவூதியில் ஹஜ் காலத்தில் டாக்ஸி சார்ஜ் கன்னாபின்னாவென்று ஏறிவிடுகிறது. 5 - 10 ரியால் வாங்கற இடத்துல, 100 - 200 ரியால் கேக்கறாங்க!! ஏன்னு கேட்டா, இந்த நாலு மாசம்தான் எங்களுக்கு சீஸன், இப்ப சம்பாதிச்சாத்தான் உண்டுங்கிறாங்க. சவூதி அரசாங்கம் பஸ் சேவையை அதிகப்படுத்தினா நல்லாருக்கும். (அதுக்கும் அங்கே ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட்டோமில்ல!!) கடைகள், ஹோட்டல்களிலும் இதேபோல ரேட்டு எகிறிக்கிடக்கிறது.
*^* சென்னையிலிருந்து கிளம்பும்போது, விமானத்தில் எங்களோடு வரவேண்டிய ஒரு தனியார் ஹஜ் குழுவினர், விமானத்திற்கு "final boarding call" அறிவிப்பு பலமுறை வந்தபின்னும், ஏர்போர்ட்டில் நின்று கூட்டாகக் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். விமான நேரமும், தொழுகை நேரமும் முன்பே தெரியும். எனில், அதற்கேற்றாற்போல் சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; அல்லது, தாமதமாகிவிட்டால் விமானத்தில் இருந்தே தொழலாம் என்பதையாவது அறிந்திருக்க வேண்டும். பொதுச் சேவை நிறுவனங்களிடத்தில் ஒழுங்கை எதிர்பார்க்கும் நாமும் நம் கடமைகளில் உரிய முறையோடு இருத்தல் வேண்டாமா?
தூணும் நானே... |
![]() |
குடையும் நானே... |

|
Tweet | |||