நானும் கண்காட்சிக்கு போனேன்!
சக்தி உலகின் மின்னும் நட்சத்திரங்கள்
மேலேயுள்ள பதிவுகளின் தொடர்ச்சியாக இந்த இறுதிப் பகுதி.
இதுவரை பார்த்ததெல்லாம் - CSP, bio-mass, Geothermal - இப்படி எல்லாமே பெரிய அளவில் அரசால் அல்லது பெரிய நிறுவனங்களால் மட்டுமே செய்யக்கூடியவை. தனிநபர்களாக நாம் என்னென்ன செய்ய முடியும் என்றால், குப்பைகளைத் தரம் பிரித்தல், மறுசுழற்சி ஆகியவைதான் ஞாபகம் வரும்.
இதுதவிர, வசதி மற்றும் விருப்பப்பட்டவர்கள், தம் வீட்டையே ”பேணுதலான வீடு” - "Sustainable home" - ஆக மாற்றுவதுதான் பூமிக்குச் செய்யும் பேருபகாரம். அதற்காகச் செய்யவேண்டியவற்றில் சில:
* அலுவலகங்கள் மற்றும் வீட்டைக் கட்டும்போதே, வீட்டினுள்ளே வரும் வெளிச்சம் மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் முறையில் வீட்டை வடிவமைப்பது; அதனால் மின்சாரச் செலவை வெகுவாகக் குறைக்கலாம்.
* கூரைகளில் சோலார் பேனல்கள் வைப்பதன் மூலமா, நமக்குத் தேவையான மின்சாரத்தை இயற்கைக்கு ஊறு இல்லாத மின்சாரம் தயாரித்தல்;
* தண்ணீர் சூடாக்க சோலார் ஹீட்டர்;
* வீட்டில் வெளியேற்றப்படும் கழிவு நீரை, மறுசுழற்சி செய்து, தோட்டம், டாய்லெட்களில் பயன்படுத்துதல்.
அமீரகத்தில், இனி கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடமும், இதுபோன்று "sustainable"-ஆக இருக்கவேண்டுமென்று குறைந்தபட்ச விதிகள் (Estidama) ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இனி, சில குறிப்பிடத்தக்க-சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் குறித்துப் பார்ப்போம்.
தண்ணீர் சுத்திகரிப்பான்:
என்னதுன்னு புரியலையா... Water filter!! இப்ப புரியுதா?
இதிலே என்ன விசேஷம்னா, கரண்ட் தேவையில்லை என்பதுதான். இதில், கலங்கிய நீரை விட்டு, அத்தோடு கடல் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட ”coagulant" வகை பொடியைக் கலந்து அந்தத் தொட்டியை, கொடுக்கப்பட்டுள்ள கைப்பிடியின் உதவி கொண்டு நன்கு சுழற்றினால், நல்ல நீர் கிடைக்கும். இந்த ஃபில்டர், குறிப்பா, சுத்தமான குடிநீர் கிடைக்காத எமெர்ஜென்ஸி காலங்களில் மின்சாரமும் இல்லாத சமயத்தில் பயன்படும்னு சொல்றாங்க.

இதேபோல, சூரிய ஒளியால் செயல்படும் தண்ணீர் சுத்திகரிப்பானும் இருக்கிறது. இது, கடல்நீரைக் குடிநீராக்கும் முறையில் (desalination) முறையில் செயல்படுவதால், இதற்கு எந்தப் பொடியும் சேர்க்கத் தேவையில்லை. பூகம்பம், வெள்ளம் போன்ற சமயங்களில் மிகவும் பயன்படும்.
சென்ற மாதம், பேத்திக்கு பிரசவம் பார்க்க அமீரகம் வந்திருந்த பாட்டி ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் காலங்களில், பிரசவித்தவர்களுக்கு கொடுப்பதற்கான குடிநீரை மண்பானையில் வைத்து, அதில் சுட்ட செங்கலைப் போட்டு வைப்பார்களாம்.
கலங்கிய நீரில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைத்தால், நீர் தெளிவடைந்து சுத்தமாகும் என்று படித்த ஞாபகமும் வருகிறது.
கழிவு நீர் சுத்திகரிப்பான்: (Sewerage treatment)
5 பேர், 10 பேர், 20 பேர் உள்ள வீடுகளுக்கு ஏற்றவாறு சிறிய அளவுகளில் உள்ளது. மின்சாரம் தேவையில்லை. நுண்ணுரிகளைப் பயன்படுத்தி, இயற்கையான முறையில் செயல்படுவதால், எதுவும் சேர்க்க, எடுக்க தேவையில்லை.
OLED Light Panels:
கவனத்தை ஈர்த்த இன்னொரு பொருள், "OLED panels" எனப்படும் விளக்குகள். பல்புகள், ட்யூப் லைட்டுகள் இவையெல்லாம் தவிர்த்து, இப்போது அதிக மின்சார சேமிப்பிற்காக ஃப்ளூரஸண்ட் பல்புகள் பயன்படுத்துகிறோம். என்றாலும், இதன் ஆயுட்காலம் முடிந்ததும் இவற்றிலுள்ள பாதரசத்தினால் சுற்றுச்சூழலுக்கு உள்ள ஆபத்துகள் குறித்து பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.

இதைத் தவிர்க்க வந்திருப்பதுதான் OLED panels. பேருக்கேற்றபடி, இவை “பேனல்கள்” போலத்தான் இருக்கும்; இதன் விகுதி (thickness) 2.3 மில்லிமீட்டர்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எடை, வெறும் 107 கிராம்தான்!! இதிலுள்ள வாயுக்களால் வெளிச்சம் கிடைக்கிறதென்பதால், மிக நீஈஈண்ட ஆயுட்காலம். மின்சார சேமிப்பும் மிக அதிகம். சுவற்றில் பதிக்கும் வசதியால், வீட்டின் அழகும் கூடும்.
வழக்கமாக, விளக்குகளின் ஒளியில் நிறங்கள் வித்தியாசமாத் தெரியும். (கடையில் பார்த்த மயில் கழுத்து சேலை, வீட்டிலே வேற கலரில் இருக்குமே) ஆனால், இதில் அப்படி இல்லையாம். மெர்க்குரி கிடையாதென்பதால், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலில்லை.
இவைதவிர, எதிர்காலத்தில் (2050) வரவிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் என்று பார்த்தவைதான் வியப்புக்குரியவையாக இருந்தன. நம்மைத் தயார்ப்படுத்திக்குவோம்!!
1. எதிர்காலத்தில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, லேசர் கதிர்களால் மழைபெய்ய வைக்கப்படும். பம்புசெட், வாய்க்கா வரப்பு எல்லாம் கிடையாது. கூடவே, வாய்க்கா வரப்பு தகராறும் காணாமப் போயிடுமா?
2. வாகனங்கள் ஓடுவதற்கு, ஹைட்ரஜன் வாயு - மின்சாரம் - சூரிய சக்தி ஆகியவை தேவைப்படும்.
3. மனிதர்களுக்குத் தேவையான புரதச் சத்துக்களுக்காக, “சூப்பர் பீன்ஸ்” எனப்படும் “காய்கறி” பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும்.
4. ”நினைப்பது நடக்கும்”!! - நீங்கள் நினைத்தாலே அதைச் செயல்படுத்தும் கணிணிகள் கிடைக்கும். (ஹூம், இப்பவே கிடைச்சா, தினம் ரெண்டு பதிவு எழுதலாம்!!)
5. கேட்டால் கிடைக்கும்!!
நாம் கேட்பதை உடனே ”பிரிண்ட்” செய்து தரும் 3D printer உண்டு. என்னாது, பிரிண்டரைப் போய் பெரூசாச் சொல்லிகிட்டுன்னு நினைக்கிறீங்கதானே? இந்த பிரிண்டரில் வருவது காகிதம் அல்ல!! வீடும், உணவும், எலெக்ட்ரானிக் பொருட்களும்!! ஆமாம், நீங்க உங்க தேவைகளைச் சொன்னா அதைச் சரிவிகிதத்தில் கலந்து உணவாகவோ, வீடாகவோ, மொபைல் ஃபோனாகவோ ரெடிமேடாகப் பிரிண்ட் எடுத்துத் தந்துவிடும்!! என்னாங்க, “லூஸு” லைலாவைப் பாக்கிற மாதிரி பாக்குறீங்க? நானே திகைச்சுப் போய்த்தான் நின்னேன்.
6. நலந்தானா!!
உங்களின் விரலை மட்டும் வைத்துப் பரிசோதித்து, (ரத்தம் எடுக்காமலேயே) அதன் மூலம் உங்கள் டி.என்.ஏ. வரை ஆய்ந்து, முழு உடல்நல குறைபாடுகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்துகளைக் கலந்து தரும் “தானியங்கி மருந்தகம்” இருக்கும். இதற்குத் தேவையான சக்தி, சூரிய ஒளிமூலமோ, சுற்றுப்புறத்திலிருக்கும் ரேடியோ அலைகள் மூலமோ எடுத்துக்கொள்ளப்படும்.
7. எந்திரன் “தேனீ”:
சமீபத்தில் ஒரு பத்திரிகையில், தேனீக்கள் அருகி வருவதைப் பற்றி எழுதிருந்தாங்க. ரசாயன உரங்கள் ஒரு காரணம் என்றால், மொபைல் ஃபோன் மற்றும் அதன் டவர்கள்தான் மிக முக்கியக் காரணமாம். இவற்றினால் வரும் மின் அலைகளினால் தேனீக்கள், தம் தேனடைக்குச் செல்ல வழி தெரியாமல் குழம்பிப் போய்விடுகின்றனவாம். புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னாராம், “தேனீக்கள் இல்லையென்றால் மகரந்தச் சேர்க்கை இல்லை; மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் உணவு இல்லை; உணவு இல்லையென்றால் மனிதன் உட்பட்ட உயிரினங்களும் அடுத்த நான்கே வருடங்களில் இல்லாமல் போய்விடும்”!!
இதைப் படித்துக் கவலைப்பட்டேன். அடுத்த வாரமே “ரோபோ தேனீ”யைப் பார்க்க நேர்ந்தது. அதானே, விஞ்ஞானம் இருக்கும்போது, கவலை ஏன்! இந்தத் தேனீ, பெரும் பண்ணைகளில் வேலையாட்கள் பற்றாக்குறைக்குக் கைகொடுக்கும். மண்ணில் தண்ணீர் போதுமா, செடிகளில் வாட்டம் ஏன், என்ன சத்து குறைவு என்று பரிசோதித்து, அதற்கேற்ற உரங்களைத் தெளிப்பது, பூச்சிபொட்டுகளை அழிப்பது என்று எல்லாமே பார்த்துக் கொள்ளுமாம்.
8. விண் பறவை:
எதிர்காலத்தில், விமானப் பயணங்களின் நேரம், எரிபொருள் பயன்பாடு
இரண்டுமே வெகுவாகக் குறைக்கப்படும்படியான திட்டமிட்ட விமான வடிவமைப்புகள் இருக்கும். தற்கால விமானங்களில் பார்த்திருப்பீங்க, விமானத்தின் உடலும், இறக்கைகளும் தனித்தனியாகத் தெரியும். இதில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு முறை மாற்றம் செய்யும்போது, மேலே குறிப்பிட்ட இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். அதாவது, உடலோடு சேர்ந்த இறக்கைகள் இருந்தால், வேகம் அதிகரிக்க முடியும்.
எல்லா நாடுகளும் பயன்படுத்தும் விமானப்படை விமானங்களும், அதிவேக பயணிகள் விமானச் சேவை செய்து, தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள “கன்கார்ட்” வகை விமானங்களும், இந்த வடிவமைப்பைக் கொண்டவையே.
மேலும், பறவைகள் கூட்டமாக இடம்பெயரும்போது V வடிவில் செல்வதைப் பார்த்திருப்போம். காற்றின் தடையை எதிர்த்துச் செல்லவே இம்முறையில் பறக்கின்றன. இதேபோல, விமானங்கள் கூட்டாகச் சேர்ந்து பறந்தால், காற்றின் எதிர்ப்பு குறையும். இதன்மூலமும் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
பல விமானங்கள் சேர்ந்து ஒண்ணா ஒரே நேரத்தில பறக்கணும்னா, “துபாய், லண்டன், ஃப்ரான்ஸ், அம்மேரிக்கா, கன்னடா”ன்னு கூவிக்கூவி அழைச்சு டிக்கட் போட்டு, வண்டி - ஐ மீன், ஃப்ளைட்கள் நிரம்புன பிறகுதான் கிளம்புவாங்களோ? இருக்கும்.
இது தெரிஞ்சா, இனி அரசியல்வாதிகள், “கார்கள்” அணிவகுத்து வருவதுபோல, இனி “விமானங்கள்” அணிவகுக்க வருவாங்களோ!!

![]() |

|

Tweet | |||