Pages

நானும் இப்ப சீனியர் பதிவராக்கும்




ங்கிலத்தில் “Put yourself in their shoes” என்று சொல்வார்கள். நாம அம்மாவா ஆகும்போதுதான், நம்ம அம்மா நமக்கு சொன்ன அறிவுரையெல்லாம் புரியும். டீச்சராகும்போதுதான், நம்ம டீச்சரை படுத்துன பாடெல்லாம் புரியும்.

இந்த மாதிரி விளைவுகள் வரும்னு தெரிஞ்சாலும், அம்மாவாக, அப்பாவாக, டீச்சராக இருப்பதை மகிழ்ச்சியானதாகவே கொள்வோம்.  ஆனா,  ஒரு டவுட்டு: நான் வருங்காலத்தில் மாமியாராகப் போவதை நினைச்சா இப்பவேல்ல பயம்மா இருக்குது??!! 

மூணுமாசம் முன்னாடி, பிரசவித்திருந்த என் தங்கையைப் பார்க்க வந்த அவள் தோழி, என்னிடம், “உங்களைப் பத்தி இவ நிறைய சொல்லிருக்கா. நீங்க அவளுக்கு அக்காவேயில்லை; மாமியார்தான்!!!” என்று சொன்னாள். அவ்வ்வ்வ்வ்...!!!! தங்கச்சியே என்னை மாமியார் ரேஞ்சுக்கு ஆக்கிட்டா. நாளைக்கு மருமக என்ன சொல்வா(ங்க)ளோ!!

இத எதுக்குச் சொல்ல வந்தேன்.. ஆங்.. “in their shoes.."..  வலைப்பதிவு எழுத வந்த புதுசுல,  ஆர்வமா நிறைய கிறுக்கித் தள்ளுனதுண்டு. வாரத்துக்கு ரெண்டு, மூணு பதிவெல்லாம் போட்ட பொற்காலம் அது. (அப்ப நான் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிவிச்சுக்கிறேன்) .

அந்த சமயத்துல, நிறைய சீனியர் பதிவர்கள், ஒண்ணுமே எழுதாமே ப்ளாக்கை,  சும்மா தரிசுநிலம் மாதிரி போட்டு வச்சிருப்பாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியம் + கோவமா இருக்கும். “ச்சே, எழுதுறது எவ்வளவு இண்டெரெஸ்டிங்கா இருக்கு!! கருத்து சொல்ல விஷயத்துக்கா நாட்டுல பஞ்சம்?  மாற்றம் கொண்டு வரக்கூடிய எழுத்துத் தெறமையை இப்படி வீணாக்குறாங்களே”ன்னு நெனச்சிருக்கேன். அவங்க செய்யாதத, நாமளாவது செஞ்சுடணும்னு கீ-போர்ட் தேயுற அளவுக்கு எழுதித் தள்ளிருக்கேன். (சில ‘புரட்சிப்’ பதிவுகள் லிங்க் தரட்டுமா? சரி, சரி, இந்தப் பதிவை மட்டும் முழுசாப் படிச்சுடுங்க, ப்ளீஸ்!)

அப்புறம், அப்படியே கொஞ்ச நாள்ல, நானும் வாரம்-ஒரு-பதிவு ரேஞ்சுக்கு வந்துட்டேன். (இப்ப நான் வேலையை விட்டுட்டதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்லைன்னும் தெரிவிச்சுக்கிறேன்) . அப்புறம் அப்படியே கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாப் போனதுக்கப்புறம்தான் அந்த “சீனியர் பதிவர்களின்” நிலை புரிஞ்சுது.

எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலேன்னும் சொல்லிக்கலாம். அல்லது, நானும் இப்ப சீனியர் பதிவராக்கும்; அதனால்,  ‘பாஞ்சு நாள்’ நாராயணசாமி மாதிரி அடிக்கடி அறிக்கை விடாம, பிரதமர் மாதிரி ஓன்லி அவசியமான விஷயத்துக்குத்தான் பதிவு எழுதுவேன்னும் பெரும்மையாச் சொல்லிக்கலாம்.


ந்த ரெண்டு மாசத்துல, என் “ரீடரில்” 1000 பதிவுகளுக்கு மேல் சேந்துருச்சு. அத்தனையும் படிச்சு (அல்லது டெலீட் செய்து) முடிக்கவே ஒரு மாசமாகிடுச்சு. கண்ணில் படும் நல்ல வலைப்பூக்களையெல்லாம் ரீடரில் போட்டு வைத்து, இப்போ அது தூக்கமுடியாத ‘ட்ரங்குப்போட்டி’ மாதிரி கனமாகிடுச்சு. அதனால், சென்ற இரண்டு மூன்று  வாரங்களாக வலைச்சரத்தில் நல்ல அறிமுகங்கள் இருந்தும் சேமிக்கவில்லை. இருக்கிறதைப் படிக்கவே நேரத்தைக் காணோம்.

அதுவும் இப்ப ரீடரை திறக்கும்போதெல்லாம் “ஜூலை ஒன்றாம் தேதி முதல் ரீடர் இருக்காது”ன்னு கூகிள் பயங்காட்டுது. ரீடர் இல்லைன்னா என்ன செய்வேன்னு தெரியலை!!! ஏன்னா,  தெரிஞ்ச எல்லா வலைப்பூ முகவரிகளையும் அதில்தான் சேமித்து வச்சிருக்கேன். ரீடர் போச்சுன்னா, அதெல்லாமும் போச்சு! ரீடரை எப்படி back-up எடுக்கிறதுன்னு இதுவரை எந்த டெக்கி பக்கியும்... ஐ மீன், டெக்னிக்கல் பதிவரும் பதிவு எழுதுன மாதிரியும் தெரியலை!! ரீடர் போனா, அதுக்கு மாற்றா என்ன வரும்னும் ஒரு தகவலும் இல்லை.

கொஞ்ச நாள் ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்கினேன். ப்ளாக் மாதிரி ’உக்காந்து யோசிச்சு’ பெரிசா பதிவு எழுதணும், ஃபார்மட்டிங் செய்யணும்,  படங்கள் தேடிப் போடணும்கிற அவசியம் இல்லாததால, அடிக்கடி எழுத வசதியா இருந்தாலும்,  சில விஷயங்களுக்கு ஃபேஸ்புக்தான் பொருந்தும் என்றாலும், எனக்கு ஏத்த இடம் வலைப்பதிவுதான் என்று புரிஞ்சு, ‘தாய்வீட்டுக்கு’ திரும்பி வந்தாச்சு!!

 

திரும்பி வந்துட்டேனே தவிர, எழுதணும்னு உக்காந்தாலே உடனே மைண்ட் ‘ப்ளாங்க்’ ஆகிடுது. கிச்சன்ல சமைக்கும்போது அதை எழுதணும், இதை எழுதணும்னு  சரசரன்னு நினைவுகள் ஓடுது. ஆனா, கம்ப்யூட்டர் முன்னாடி வந்து உக்காந்தா ஒண்ணும் ஓடமாட்டேங்குது.  இதத்தான் “Writer's block"னு சொல்வாங்களோ?

ஆனா என்ன, கிச்சன்ல நிக்கும்போது ப்ளாக் எழுதறதப் பத்தி நினைக்கிறதால, கடகடன்னு சமைச்சு முடிச்சுடுறேன். ஆனா,  கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கும்போது, ‘மதியத்துக்குச் சமைக்கணுமே’ன்னு ஒரு டென்ஷன் எப்பவுமே அடினமசுல இருக்குறதாலத்தான் எழுத வரமாட்டேங்குதோ என்னவோ? 




 




(பின்குறிப்பு: ரீடரில் டவுன்லோட் செய்ய, ரீடரின் ‘Help’ பக்கத்துக்குச் சென்று, அங்கிருந்து ”How can I download my Reader data?” க்ளிக் செய்யவும்).

Post Comment

45 comments:

Flavour Studio Team said...

முடிவா இப்ப என்னதான் சொல்ல வரிங்க???( தல சுத்துற மாதிரி ஸ்மைலி ஏதும் இல்லையாப்பா ப்ளாக் ல??)

சாந்தி மாரியப்பன் said...

//கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கும்போது, ‘மதியத்துக்குச் சமைக்கணுமே’ன்னு ஒரு டென்ஷன் எப்பவுமே அடினமசுல இருக்குறதாலத்தான் எழுத வரமாட்டேங்குதோ என்னவோ?//

சமைக்கற டென்ஷன் மட்டுமா?.. அந்த நேரத்துலதான் ஊட்ல இருக்கற ஆளுகளுக்கெல்லாம் நம்ம கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்ன்னு தோணும். அப்றமென்ன?.. ஏறக்கட்ட வேண்டியதுதான். அவ்வ்வ்வ்வ்வ்வ்....

துளசி கோபால் said...

சீனியர் ஆனதுக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்:-))))))

ராஜி said...

சீனியர் அம்மாக்கு வாழ்த்துக்கள்

pudugaithendral said...

சேம் ப்ளட்.

இப்பல்லாம் இதைப்பத்தி எழுதினா ஓகேவா??? சில்லியா இருக்குமோன்னெல்லாம் தோணுது. முன்னெல்லாம் மனசுல ஒரு விஷயம் பட்டா மானிட்டர்ல வெச்ச கண்னு எடுக்காம டைப் அடிப்பேன். இப்ப என்னவோ ரொம்ப பிசி!! (மைண்ட்டும் தான்)

pudugaithendral said...

தொடர்வதற்கு

ஸாதிகா said...

சேம் ப்ளட்

கார்த்திக் சரவணன் said...

வாழ்த்துக்கள்.... நிறைய எழுதுங்கள்......

மாதேவி said...

வாழ்த்துகள்.:))

திண்டுக்கல் தனபாலன் said...

http://www.feedly.com/ - இதற்கு உடனே செல்லுங்கள்... உங்கள் Reader-இல் உள்ளதெல்லாம் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்... பல Reader-களை பரிசோதனை செய்த பின் இது தான் நன்றாக இருக்கிறது என்று எனது முடிவு... வேகம் விவேகம் தொடர் பதிவில் எழுத வேண்டும்... விரைவில் அதைப் பற்றி எழுதுகிறேன்... feedly - ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

dindiguldhanabalan@yahoo.com
09944345233

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் ஹூசைனம்மா.

கிரி said...

ஹீசைனம்மா கூகுள் ரீடருக்கு மாற்று பற்றி நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள். நீங்கள் நீண்ட நாட்கள் படிக்கவில்லை என்பதால் தவற விட்டு இருக்கலாம்.

என்னுடைய தளத்தில் இது பற்றி எழுதி இருந்தேன். முடிந்தவரை சீக்கிரம் மாற்றி விடுங்கள் http://www.giriblog.com/2013/04/replacement-for-reader.html

அன்புடன் சீசன்ஸ் said...

ஜூனியர் சொல்றேன் நீங்க எப்பொழுதும் சீனியர் பதிவர்தான் (வயதில் நான் சீனியர் )இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்

ஸ்ரீராம். said...

ஹிஹி.... நாங்க இன்னும் சீனியர் பதிவர் ஆகலை போல!


அட.... இதையே ஒரு பதிவாக்கிட்டீன்களே... கம்பியூட்டர் டேபிளில் ஸ்டவ் வைத்து சமையலும் கிச்சனில் கணினியையும் வைத்துப் பாருங்களேன்! :)))

ராமலக்ஷ்மி said...

ரீடருக்கு மாற்றாக Feedly இருக்கிறதே. கடந்த 3 மாதங்களாகப் பயன்படுத்தியும் வருகிறேன். ஜூலைக்குள் தாவி விடுங்கள்:)!

முதலிரண்டு வருடம் வாரம் ஒரு பதிவுதான். பிறகு 2,3 ஆயிற்று. இப்போது குறைந்து கொண்டு வருகிறது! ஆக, என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:)! குறிப்பாக இந்த முறை வந்த கைவலி சரியாக நாள் பிடித்ததில் கணினி முன் அதிகம் உட்காரவே பயமாக இருக்கிறது.

அ.மு.செய்யது$ said...

நாட்கள் ரொம்ப வேகமாக போகுது...நமக்கு ரொம்ப வயசாயிடுச்சோ !!!!

சீனியாராகுரது முக்கியமா ? சீரியஸா எழுதுறது முக்கியமா ? நீங்க சீரியஸாவும் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க...சமீபத்திய சில முக்கியமான பதிவுகள் வந்திருக்கு..நியூட்ரினோ கட்டுரை அருமை..

வெங்கட் நாகராஜ் said...

சீனியர் பதிவருக்கு இந்த ஜுனியரின் வாழ்த்துகள்! :)

நான் கூகிள் ரீடர் பயன்படுத்துவதில்லை. அதனால் இதுவரை பிரச்சனையில்லை. Feedly பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நீங்க சீனியர் தான் ஹுசைனம்மா. எல்லாப் பதிவுகளையும் பார்த்துப் பார்த்துதான் எழுதி இருக்கீங்க.
நாங்களும் இதெல்லாம் கடந்துதான் வந்திருக்கோம்.(
( வயசில சீனியர்)அதனால நோ வொர்ரீஸ்.
தானே அதே வேகம் திரும்பும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் சீனியர் பதிவர்தான் சந்தேகம் இல்லை.

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

‘பாஞ்சு நாள்’ நாராயணசாமி மாதிரி அடிக்கடி அறிக்கை விடாம, பிரதமர் மாதிரி ஓன்லி அவசியமான விஷயத்துக்குத்தான் பதிவு எழுதுவேன்னும் பெரும்மையாச் சொல்லிக்கலாம்.

வாழ்த்துகள்...

புதுகை.அப்துல்லா said...

இப்பத் தெரியுதா எங்கஷ்டம் :)))

கோமதி அரசு said...

சீனியர் பதிவருக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் சொன்னதில் சிலவற்றை அப்படியே வழி மொழியலாம் போல் இருக்கிறது.(உ.ம்) படித்து கருத்து சொல்ல நேரம் இல்லாமல் இருப்பது)
அருமையாக சொல்லிவிட்டீர்கள்.
நிறைய எழுதுங்கள்.

அப்பாதுரை said...

எல்லாத்தியும் படிக்குறப்ப எனக்கு என்னவோ உங்களைப் பத்தி ஒரு பயமா இருக்குதுங்க..

Prathap Kumar S. said...

நீங்கள் ஒரு சீனியர் பதிவர் மட்டுமல்ல ஒரு சீனியர் சிட்டிசன் என்பதையும் தங்களுக்கு இந்த தருணத்தில் நினைவூட்டிக்கொள்ள விரும்புகிறேன்...:)

Unknown said...

ஹா ஹா எழுதுங்க எழுதுங்க

Aashiq Ahamed said...

சலாம், முடிவா என்ன சொல்ல வரீங்க?

enrenrum16 said...

Yakka....let me give an excellent idea..when you are too busy to search for a theme. just open up some of the bulbs you got... there will be no scarcity of posts avvvvv....

பீர் | Peer said...

நீங்க ப்ரிண்ட் மீடியாவுக்கு தாவிட்ட 'சீனியர்'

பீர் | Peer said...

நீங்க ப்ரிண்ட் மீடியாவுக்கு தாவிட்ட 'சீனியர்'

இமா க்றிஸ் said...

;))))
நிச்சயம் நீங்க சீனியர் பதிவர்தான். வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

ஷர்மிளா - //முடிவா இப்ப என்னதான் சொல்ல வரிங்க//
அதைத் தெளிவா சொல்லிட்டா என்ன சுவாரசியம் ?அஞ்சாறுவாட்டி இந்தப் பதிவைப் படியுங்க. அப்புறமும் புரியலைன்னா, சொல்றேன். (எனக்கே புரியலை.... )

அமைதிக்கா - நான் வீட்ல ஆட்கள் இருக்க நேரம் எழுதுற ரிஸ்கே எடுக்க மாட்டேன். அப்ப எழுதுனா, அது கிரைம் ஸ்டோரியாகிடும்!! அவ்வ்வ்வ்.... ஸோ, ஒன்லி ரீடிங்தான் அப்ப!

துளசி டீச்சர் - நன்றி டீச்சர்.

ஹுஸைனம்மா said...

புதுகை தென்றல் - கரெக்டுங்க. ஒரு பதிவ எழுத எடுக்கிற நேரத்த விட, அதை வாசிச்சு, சொல்ல வந்ததைச் சரியாச் சொல்லிருக்கோமான்னு பார்க்கிற ப்ரூஃப் ரீடிங்குக்குத்தான் அதிக நேரமாகுது.

ராஜி - நன்றிங்க.

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

ஸ்கூல் பையன் - நன்றிங்க.

மாதேவி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

தி. தனபாலன் - ரொம்ப நன்றிங்க. நானும் இப்ப உஜாலாவுக்கு மாறிட்டேன்!!

ஸ்டார்ஜன் - நன்றிங்க. (என்னது, ஏதோ அவார்ட் கெடச்ச மாதிரி எல்லாரும் வாழ்த்துறாங்க?) :-))))

கிரி - ரொம்ப நன்றிங்க. ஆமாங்க, நேரமின்மையால் டெக்னிக்கல் பதிவுகளைப் படிக்காமல் தவிர்த்துவந்தேன். அதுல விட்டுட்டேன் போல. இப்ப படிச்சு மாத்திட்டேங்க. ஆரம்ப சிரமங்கள் இருக்கு, போகப் போகப் பழகிடும்னு நினைக்கீறேன். ரொம்ப நன்றிங்க.

முஹம்மது அலி ஐயா - மிக்க நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - உங்களுக்கென்ன, அஞ்சு பேர் இருக்கீங்க! ஒருத்தருக்கு போரடிச்சா இன்னொருத்தர்... ஹூம்...

//கம்பியூட்டர் டேபிளில் ஸ்டவ் வைத்து சமையலும் கிச்சனில் கணினியையும் வைத்துப் பாருங்களேன்//
ய்யேஏஏஏன்....???!!! அந்தா, இந்தான்னு இருக்கிறதை ஒரேயடியா இழுத்து மூடவச்சிடுவீங்க போல? :-))))))))

ஹுஸைனம்மா said...

ராமல்க்ஷ்மிக்கா - இப்போதான்க்கா தெரிஞ்சுகிட்டேன், ஃபீட்லி குறித்து. நாந்தான் ரொம்ப லேட்டு போல!

கைவலி - நானும் ஃபிஸியோதெரபி வரை போய் வந்தாச்சு. இப்பவும் இருக்கு. வீட்டில் சொல்லவே பயம், சொன்னால் முதல் அட்டாக் கம்ப்யூட்டர் மீதுதான்!! :-))))))

ஹுஸைனம்மா said...

அ.மு.செய்யது - தம்பி, நீங்கல்லாம் எனக்கு முன்னாடியே சீனியர்!!

நியூட்ரினோவுக்கு நன்றி.

//சீனியாராகுரது முக்கியமா ? சீரியஸா எழுதுறது முக்கியமா ?//
இது பாயிண்ட்டு!! ஆமா, தம்பிக்கும் இது பொருந்துமே? அப்பப்போ எழுதுங்களேன். மகனும் வளந்தாச்சுல்ல, இப்ப ஃப்ரீ டைம் கிடைக்க ஆரம்பிச்சிருக்குமே! :-))))

ஹுஸைனம்மா said...

வெங்கட் நாகராஜ் - நீங்க இன்னும் ஜூனியர்தான், ஆனா உங்க வீட்டம்மா உங்களவிட சீனியராகிட்டாங்க பதிவெழுதுவதில்!! :-))))

ரீடர் இல்லைன்னா, ப்ளாக் லிஸ்ட் மூலம் வருவீங்களா? அது கொஞ்சம் சிரமம்தான், ரீடர்/ஃபீட்லி பயன்படுத்துங்க, ரொம்ப இலகுவா இருக்கும்.

வல்லிம்மா - உண்மைதான், எல்லாருக்கும் ஒரு சீஸ்ன் மாதிரி இந்த "writer's block"! வீட்டில் பேரக்குழந்தைகளோடு பிஸியாருப்பீங்க இப்ப.

ஹுஸைனம்மா said...

முரளிதரன் - நன்றிங்க.

விஜி - நன்றிப்பா.

இராஜி மேடம் - நன்றிங்க.

அப்துல்லா - ஆனாலும், ‘அங்க’ எழுதுற தம்பி அப்டேட்ஸை ‘இங்கயும்’ காப்பி-பேஸ்டாவது பண்ணலாம்ல? :-))

ஹுஸைனம்மா said...

அப்பாதுரைஜி - உங்க பயம் நியாயமானதுதான்.

ரொம்ப புத்திசாலியா இருக்கிறவங்ககிட்டயும், அப்பப்போ ஒரு லூஸுத்தனம் தெரியும். முழு லூஸாவே இருக்கவங்ககிட்டயும் அரிதிலும் அரிதா எப்பவாவது ஒரு புத்திசாலித்தனம் வெளிப்படும். இதுல நான் எந்த வகைன்னு தெரியாம நீங்க பயப்படறது நியாயம்தான்! :-)))))))))))

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - ஆமாம்க்கா, எல்லாருக்கும் பின்னூட்டமிட முடியவில்லை.

பிரதாப்பு - சீனியர் சிட்டிஸனுக்குத்தான் நாட்டுல நெறயா சலுகை. ஸோ, ஐயம் ஹாப்பி ஆன் யுவர் கமெண்ட்!! :-))))

சக்கரகட்டி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஆஷிக் - ஸலாம். //முடிவா என்ன சொல்ல வரீங்க?//
ம்ம்ம்... நீங்க என்னவிட சீனியர்னு சொல்றேன்!! :-))))

என்றென்றும் 16 - ம்க்கும்.. அங்க என்னமோ பல்பே கிடைக்காத மாதிரிதான். இதிலெல்லாம் நாம ரியலி “ஸேம் ப்ளட்”தான்!!

ஹுஸைனம்மா said...

பீர் - ஆமாங்க, ஆ.வி. குமுதம், கல்கி, தினகரன், எல்லாத்திலயும் வாரம் ஒரு பக்கம் நான் எழுதுறேன். இணைய இதழ்களில் வேற எழுதிகிட்டிருக்கேன் பாருங்க.. க்ர்ர்ர்ர்ர்.... எல்லாரும் உங்கள மாதிரி பிரிண்டர்ஸ் ஆக முடியுமா? :-))))

இமா - ஹை, இமா!! (எப்பூடி? மறக்கமாட்டோம்ல)

Rafik said...

லேட்லி ரெட்.

பேஸ்புக் வந்ததற்குப் பிறகு பதிவுலகம் செத்துவிட்டது என்று சொன்னார்கள் சிலர்கள். ஆனால் இங்கே பதிவும் அதனடுய கமெண்ட்களும் உயிர்ப்புடன் தானே இருக்கிறது. குட் போஸ்ட்.

//சில ‘புரட்சிப்’ பதிவுகள் லிங்க் தரட்டுமா? // லிங்க்ஸ் ப்ளீஸ்..!

ஹுஸைனம்மா said...

@ரஃபீக்!!

////சில ‘புரட்சிப்’ பதிவுகள் லிங்க் தரட்டுமா? //
லிங்க்ஸ் ப்ளீஸ்..!//

அம்புட்டு மன உறுதியா உங்களுக்கு!! இதோ உங்களுக்காகவே ஸ்பெஷலா...

வரலாறும், பொறியலும் ...

செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ்