”நாற்பதில்
நாய்க் குணம்” என்றொரு பழமொழி(!!!) உண்டு!! நாற்பது வயதில் வாழ்க்கையில் பல
சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், ஒருவரின் குணநலன்களில்
வரும் மாற்றங்களைக் குறிக்க இவ்வாறு கூறுவதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால்,
இப்பழமொழியின் சரியான பொருள் வேறு. ஒரு நாய் தூங்கும்போதுகூட விழிப்போடு
இருக்கும். மனிதர்களும், இதுவரை எப்படி இருந்தாலும், நாற்பது வயது முதல் அதிகபட்ச விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
என்பதையே இப்பழமொழி வலியுறுத்துகிறது என்ற விளக்கத்தை ஒரு தளத்தில் கண்டபோது
வியப்பு மேலிட்டது. உண்மைதானே!
ஆண்களுக்கு
மட்டுமல்ல, பெண்களுக்கும் 40-45 வயதுக்கு மேல்
உடல்நலம், குடும்பம்
இரண்டிலுமே மிகப் பெரும் சவால்கள் உண்டு.
உடல்நலம் என்று வரும்போது, வயதாவதின்
பலவீனங்கள் - கால், கை, முதுகு வலிகள் போன்றவற்றோடு, மெனோபாஸ்
பிரச்னைகளும் சேர்ந்து உடல் மற்றும் மனதை நலிவடையச் செய்யும்.
மெனோபாஸ் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். வழக்கமான ஒவ்வொரு மாதமும்
பீரியட்ஸ் சமயங்களில் வரும் மனநிலை மாற்றத்தையே
குடும்பத்தில் யாருமே அறிந்து, புரிந்து
கொள்வதில்லை. நிறைய பெண்களுக்கே அதைக் குறித்து தெரியாது!! அப்படியிருக்கும்போது,
மெனோபாஸினால் வரும் ஹார்மோன் பிரச்னைகள் எங்கே தெரிந்திருக்கும்??!!
குடும்பத்தில், சரியாக அந்த
காலகட்டத்தில்தான், அவர்களின்
பிள்ளைகள் டீனேஜில் அல்லது காலேஜில் இருப்பார்கள். டீனேஜ் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டாகும்
மனநிலை மாற்றத்தால், அவர்களில் சிலரும் தம் பங்குக்கு
தாயை வெறுப்பேற்றுவார்கள்.
சீக்கிரமே மணமுடித்த
பெண்களாயிருப்பின், அவர்களின் மகள்களுக்கும் திருமணம் முடித்து மாமியார்கள்
ஆகியிருப்பார்கள். மகளின் புதுவாழ்வு சீராக இருக்கவேண்டி, மகளின் புகுந்த வீட்டார்களிடம்
பணிந்து போக வேண்டிய அழுத்தத்திற்கும் ஆட்பட்டிருப்பார்கள்.
குடும்பத்தில் மாமனார்-மாமியாரும், முதுமையடைந்து, ‘இரண்டாம் குழந்தைப் பருவத்தை’ எட்டிப் பிடித்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு சிறு குழந்தையைப் போன்றே அவர்கள் மனநிலையும் மாறி விட்டிருப்பதால், அவர்களும் தம் பங்குக்கு பிடிவாதம், கோபம், அடம் பிடிக்கும் மனநிலையில் இருப்பார்கள். அவர்களுக்கென தனி சமையல், அவர்களின் உடல்நலன் பேணுதல், பராமரிப்பு என்ற
கூடுதல் சுமைகளும் பெண்களின் மீதே.
அதே
காலகட்டத்தில், தம் பெற்றோரும் முதுமையை எட்டியிருப்பார்கள் என்பதால், அவர்களுக்கும்
ஆதரவாக இருக்க வேண்டிய பொறுப்பும் பெண்கள் மீது உண்டு. ஆனால், மாமனார் – மாமியார்
அளவுக்குப் பெற்றவர்களை உடனிருந்து கவனிக்க முடியாத நிர்பந்தங்கள் உள்ள சிலருக்கு, கூடுதல்
மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
தவிர என்றுமே
குழந்தையாக இருக்கும் கணவனையும் கவனிக்க வேண்டும். கணவனோ 40-ன் நாய்க் குணத்தைக்
கடந்து “பேய்க் குணத்தின்” எல்லையான 50களில் இருப்பார். பிரஷர், ஷுகர் போன்றவை
எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ள அவரின் உடல்நலத்தைப் பேணும் பொறுப்போடு, உடல்
தேவைகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயம்.
ஒருவேளை வேலை
பார்க்கும் பெண் என்றால், அலுவலக வேலை, வீட்டு வேலை என்று இரண்டையும் செய்ய
வேண்டிய அதிகப் பொறுப்பும், குழந்தைகள் தம் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கமுடியாத
காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்வும், அவர்கள் சரியான நட்பு வட்டத்தில்
இருக்கிறார்களா என்ற படபடப்பும் உடல்-மனநலத்தைப் பாதிக்கும் சூழல்.
இப்படி,
பெண்ணின் வாழ்க்கையில் டீனேஜ் ஒரு முக்கியமான கட்டம் என்றால், அதைவிட மிகக்
கடினமான பருவம் நாற்பதுகள்தான். ஆங்கிலத்தில்
இதை Mid-life Crisis என்பார்கள்.
ஏன் பெண்ணுக்கு மட்டும் இது
கடினமான கட்டம்?
|
Tweet | |||
1 comments:
நல்ல கட்டுரை தேவையான ஒன்று.
Post a Comment