Pages

நட்சத்திர வானில்...





திரையுலகில் நடிக்கத் தொடங்குமுன்பே சி.எம்., பி.எம். கனவுகள் கண்முன் வந்து நிற்பதுபோல, பதிவு எழுதத்துவங்கும் எல்லாருக்குமே நட்சத்திரமாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். என்ன ஒண்ணு, சிஎம் ஆகணும்னா,  பணம் நிறையச் சேர்ந்ததும், நாமே தேர்தலில் நின்றுகொள்ளலாம். ஆனால், நட்சத்திரமாவதற்கு திரட்டிகளே அழைப்பு விடுத்தால்தான் உண்டு.  அந்த வகையில் எனக்கும்(கூட) நட்சத்திர வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்மண நட்சத்திரமாக எனக்கு வாய்ப்பு தந்த தமிழ்மணத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்சத்திரமானால், குறைந்தபட்சம் தினமும் ஒரு பதிவு எழுதவேண்டும். பொதுவாக இது எளிதானதுபோல தோன்றினாலும், அடுத்தடுத்துப் பதிவெழுதுவது சிரமமானதே. நல்ல பதிவுகளாகத் தரவேண்டுமே. எனினும், இரண்டு-மூன்று வாரங்களுக்கு முன்பே அழைப்பு வந்துவிடுவதால் ஓரளவு திட்டமிட்டு, எழுதிவைத்துக் கொள்ளலாம். இது குறித்து “வீடு திரும்பல்” பதிவர் மோகன்குமார் கொடுத்திருந்த டிப்ஸ்கள்  மிக உதவியாக இருந்தன. சென்ற ஃபிப்ரவரி மாதம் “யுடான்ஸ்” நட்சத்திரமாக இருந்த அனுபவமும் கைகொடுத்தது.

தினம் ஒரு பதிவு என்பதால், ஒரே மாதிரியாக இல்லாமல், வெரைட்டியாக எழுதுவதுதான் அதிக வாசகர்களை ஈர்க்கும்.  ஆரம்பப் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள், பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.  தினமும்  பதிவெழுதுவதால், அதிக வாசகர்களைச் சென்றடையவில்லையோ என்று தோன்ற வைக்கும். 

நட்சத்திரமாக இருப்பதால் பொதுவாக வாசகர்கள் எண்ணிக்கை கூடத்தான் செய்யும்.  தினமும் நம் பதிவைத் தவறாமல் வாசித்தாலும், (வழக்கமாகப் பின்னூட்டமிடும்) எல்லாருக்கும் எல்லாப் பதிவுகளிலும் கருத்திட நேரம் இருக்காது. நண்பர்கள் சிலர் நட்சத்திரமாக இருந்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது. பதிவுகளை ரீடரில் சேர்த்துவைத்தாவது வாசித்துவிடலாம். பின்னூட்டம் எழுதுவதுதான் பெரிய வேலை. சிரமம் பாராமல், என் பதிவுகளுக்குத் தொடர்ந்து  பின்னூட்டமிட்டவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.

வாசிச்சவங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!  பதிவு-’உலக வரலாற்றில் முதல் முறையா’ எனக்கு முதல் இடம் கிடைக்குமளவு வாசகர்கள்!!  புகழனைத்தும் இறைவனுக்கே.


என் நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன், நீங்கள் நிதானமாக வாசிப்பதற்காக!! :-))) இவற்றை எல்லாரும் வாசித்து முடிக்கும்வரை அடுத்த பதிவு வராது என்பதை தெரிவித்து உங்களை ஆனந்த சாகரத்தில் அமிழ்த்துவதில் நானும் பேரானந்தம் கொள்கிறேன்!! (ஸ்ஸப்பா... சோடா எங்கேப்பா...)

மீண்டும் தமிழ்மணத்திற்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


Post Comment

24 comments:

ராமலக்ஷ்மி said...

நிறைவான வாரம். சிறப்பான பதிவுகள்.
வாழ்த்துகள் ஹுஸைனம்மா:)!

நட்புடன் ஜமால் said...

பதிவுகளை ரீடரில் சேர்த்துவைத்தாவது வாசித்துவிடலாம். பின்னூட்டம் எழுதுவதுதான் பெரிய வேலை.

hi he hi true :)

அப்பாதுரை said...

தூள் கிளப்பிட்டீங்க!

Avargal Unmaigal said...

இந்த வாரம்மட்டுமல்ல எல்லா வாரங்களிலும் எல்லார் மனதிலும் நட்சத்திரமாக திகழ எனது வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்

Seeni said...

vaazhthukkal!

துளசி கோபால் said...

இந்த தொகுப்பு ஐடியா நல்லா இருக்கே!!!! பேஷ் பேஷ்.

தேடி ஓடாம இங்கிருந்தே விட்டதைப் பிடிக்கலாம்:-))))

நல்ல கலவையான வாரமா இருந்துச்சுப்பா.

இனிய பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள். இதையே ஒரு பதிவாக்கியதற்கும் பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

நான் எல்லாவற்றையும் படித்து விட்டதால் நான் படிப்பதற்காகக் காத்திருக்க வேண்டாம். எனக்கு அடுத்த பதிவு நீங்கள் போட ஆரம்பிக்கலாம்! :))))

கீதமஞ்சரி said...

நல்ல திட்டமிடல். பாராட்டுகள் ஹூஸைனம்மா. முந்தைய பல பதிவுகளைத் தவறவிட்டுவிட்டேனே என்று நினைத்திருந்தேன். இப்போது படிக்க ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. படித்துவிட்டு வருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஒரு பதிவு படிக்கலைன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நிங்கள் நட்சத்திரப் பதிவாளர்என்று தெரியவே நேரமாகிவிட்டது.

மனம் நிறைந்த வாழ்த்துகள். ஹுசைனம்மா. உங்கள் நல்ல மனமும் இறைவனும் உங்களைக் காப்பார்கள்.

Admin said...

நட்சத்திர பதிவரானதற்கும், நம்பர் ஒன் பதிவர் ஆனதற்கும் வாழ்த்துக்கள் சகோ.!

:) :) :) (Note this smilies)

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா.

வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வலையுலக நடசத்திரம்,தங்கத்தாரகை,பெயர் சொல்லாமலே மகன் பெயரை வைத்தே காலத்தினை ஓட்டிக்கொண்டு இருக்கும் கில்லாடி தங்கை ஹுசைனம்மா வாழ்க வாழ்க!!


என் பதிவுகளுக்குத் தொடர்ந்து பின்னூட்டமிட்டவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.
///

ஹையா நனும் சிறப்பு நன்றியை எடுத்துக்கறேன்.

CS. Mohan Kumar said...

No: 1 pathivarukku vaazhthugal

மாதேவி said...

இனிய வாரம். வாழ்த்துகள்.

vimalanperali said...

வாழ்த்துக்கள்.

vanathy said...

இது தான் காரணமா? என்னடா வேகமா பதிவுகள் வருதே என்று நினைத்தேன். எந்த திரட்டியிலும் இணைக்காத காரணத்தினால் இதைப் பற்றி பெரிதாக எதுவும் விளங்கவில்லை.

RAMA RAVI (RAMVI) said...

//பதிவு-’உலக வரலாற்றில் முதல் முறையா’ //

ஹா..ஹா..

மிக அருமையான பதிவுகளை எழுதியிருக்கீங்க ஹுஸைனம்மா. நட்சத்திர பதிவுகளுக்கும், பதிவருக்கும் வாழத்துக்கள்.

Jaleela Kamal said...

தமிழ் மண முன்னனிக்கு வாழ்த்துக்கள்

எல்லா பதிவுகளும் கலக்கல்

வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா - நன்றி.

ஜமால் - பின்னூட்டம் மட்டுமல்ல, பின்னூட்டத்துக்கு பதில் சொலவதும் பெரீய்ய்ய வேலைதான், தெரியுமா? :-))))

அப்பாத்துரை - நன்றிங்க.

அவர்கள் உண்மைகள் - நன்றிங்க மனமார்ந்த வாழ்த்துக்கு.

ஹுஸைனம்மா said...

க்ரிஷி - நன்றி.

சீனி - நன்றி.

துளசி டீச்சர் - நமக்கே ஒரு சம்யம் என்னத்த எழுதினோம்னு பாக்கணும்னா, வசதியா இருக்குமே!! அதுக்காகவும்தான். நன்றி டீச்சர்.

ஸ்ரீராம் சார் - நன்றி சார். போனது ஜாலி டூரே ஆனாலும்கூட ஒரு அலுப்பு இருக்குமே, அது மாதிரி இதுவும். சலிப்பு தட்டிறக்கூடாதேன்னு!! :-))))

ஹுஸைனம்மா said...

கீதமஞ்சரி -மிகவும் நன்றிப்பா.

வல்லிமா - நிதானமா படிங்க. நேரம் கிடைக்கும்போது. பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி.

அப்துல் பாஸித் -
//Note this smilies//
- அப்படின்னா? உங்க கமெண்டை சீரியஸா எடுத்துக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா? :-))))))) (Note these smilies)

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - நன்றிக்கா. இன்ஷா அல்லாஹ், இன்னாரின் தாய் என்று அழைக்கப்படுமளவுக்குப் பிள்ளைகள் சிறப்புற வேண்டும் என்றுதானே எல்லாரும் விரும்புகிறோம்!! அதை நான் இப்போதே செய்கிறேன். பின்னாளில் திடீரென வேறு பெயரில் அழைக்க உங்களுக்குச் சிரமம் இருக்கக்கூடாதே என்று!! :-)))))

மோகன் - நன்றி.

மாதேவி - நன்றி.

விமலன் - நன்றி.

ஹுஸைனம்மா said...

வானதி - //என்னடா வேகமா பதிவுகள் வருதே// நாங்களும் அப்பப்ப ஸ்பீடாப் போவோம்ல!! :-))))

ராம்விக்கா - நன்றிக்கா.

ஜலீலாக்கா - நன்றிக்கா.

மனோ சாமிநாதன் said...

நட்சத்திரப்பதிவரானதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா!